-
மத்தேயு 6:16பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 நீங்கள் விரதம் இருக்கும்போது,+ வெளிவேஷக்காரர்களைப் போல் முகத்தைச் சோகமாக வைத்துக்கொள்ளாதீர்கள்; தாங்கள் விரதம் இருப்பது மற்றவர்களுக்குத் தெரிய வேண்டும் என்பதற்காக அவர்கள் தங்களுடைய முகத்தை அவலட்சணமாக வைத்துக்கொள்கிறார்கள்.*+ உண்மையாகவே உங்களுக்குச் சொல்கிறேன், மனுஷர்களிடமிருந்து கிடைக்கிற புகழைத் தவிர வேறெந்தப் பலனும் அவர்களுக்குக் கிடைக்காது.
-
-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 6பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
விரதம்: அதாவது, “குறிப்பிட்ட சமயத்துக்கு எந்த உணவும் சாப்பிடாமல் இருப்பது.” (சொல் பட்டியலைப் பாருங்கள்.) விரதம் இருக்கும்படி இயேசு தன் சீஷர்களுக்குக் கட்டளை கொடுக்கவே இல்லை. இந்தப் பழக்கத்தை அடியோடு தவிர்க்க வேண்டுமென்றும் சொல்லவில்லை. திருச்சட்டத்தைக் கடைப்பிடித்த நேர்மையான யூதர்கள், யெகோவாவுக்கு முன்பாக தங்களைத் தாழ்த்தி, விரதம் இருந்து, பாவம் செய்வதைவிட்டு மனம் திருந்தியதைக் காட்டினார்கள்.—1சா 7:6; 2நா 20:3.
அவர்கள் தங்களுடைய முகத்தை அவலட்சணமாக வைத்துக்கொள்கிறார்கள்: வே.வா., “அவர்கள் தங்களுடைய முகத்தை அசிங்கமாக்குகிறார்கள் (அடையாளம் தெரியாதபடி ஆக்குகிறார்கள்).” முகம் கழுவாமலோ தலை வாராமலோ இருப்பதன் மூலமும், தங்கள் தலைகளில் சாம்பலைத் தூவுவதன் அல்லது தடவுவதன் மூலமும் அவர்கள் இப்படிச் செய்திருக்கலாம்.
-