-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 9பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
பலியை அல்ல, இரக்கத்தைத்தான்: ஓசி 6:6-ல் உள்ள இந்த வார்த்தைகளை இயேசு இரண்டு தடவை (இங்கும் மத் 12:7-லிலும்) மேற்கோள் காட்டினார். சுவிசேஷ எழுத்தாளர்களில் மத்தேயு மட்டும்தான் இந்த மேற்கோளையும், இரக்கம் காட்டாத அடிமையைப் பற்றிய உவமையையும் பதிவு செய்திருக்கிறார்; இவர் மக்களால் இழிவாகக் கருதப்பட்ட வரி வசூலிப்பவர், பிற்பாடு இயேசுவின் நெருங்கிய நண்பராக ஆனவர். (மத் 18:21-25) பலி மட்டுமல்ல, இரக்கமும் அவசியம் என்று இயேசு திரும்பத் திரும்ப வலியுறுத்தியதை மத்தேயுவின் சுவிசேஷம் சிறப்பித்துக் காட்டுகிறது.
-