-
மத்தேயு 18:34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
34 அவருக்கு அவன்மேல் பயங்கர கோபம் வந்ததால், எல்லா கடனையும் அடைக்கும்வரை அவனைச் சிறைக்காவலர்களிடம் ஒப்படைத்தார்.
-
-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 18பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
சிறைக்காவலர்களிடம்: சிறைக்காவலர்கள் என்பதற்கான கிரேக்க வார்த்தை, பஸானிஸ்டெஸ். இதன் அடிப்படை அர்த்தம், “வதைக்கிறவர்கள்.” ஒருவேளை, சிறைக்காவலர்கள் கைதிகளைப் பெரும்பாலும் கொடூரமாகத் துன்புறுத்தியதால் இந்த வார்த்தை அவர்களுக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கலாம். ஆனால், சிறைக்காவலர்களைப் பொதுப்படையாகக் குறிப்பதற்கும் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டது. சிறைக்காவலர்கள் கைதிகளைச் சித்திரவதை செய்தார்களோ இல்லையோ, அவர்களைச் சிறையில் அடைத்ததே அவர்களை வதைப்பதுபோல் இருந்ததாகக் கருதப்பட்டிருக்கலாம்.—மத் 8:29-க்கான ஆராய்ச்சிக் குறிப்பில் “எங்களைப் பாடுபடுத்த” என்ற தலைப்பைப் பாருங்கள்.
-