-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
ரோம அரசனுக்கு: நே.மொ., “சீஸருக்கு.” இயேசு இந்தப் பூமியில் ஊழியம் செய்தபோது ரோமப் பேரரசராக இருந்தவர் திபேரியு. ஆனால் சீஸர் என்ற வார்த்தை, ஆட்சியில் இருந்த அரசரை மட்டுமே குறிக்கவில்லை. அந்த வார்த்தை, ரோம அரசாங்கத்தையும் அது நியமித்த பிரதிநிதிகளையும்கூட குறித்திருக்கலாம். அவர்களை ‘உயர் அதிகாரத்தில் இருக்கிறவர்கள்’ என்று பவுல் குறிப்பிட்டார்; அவர்களை ‘ராஜா’ என்றும், ராஜாவின் ‘ஆளுநர்கள்’ என்றும் பேதுரு குறிப்பிட்டார்.—ரோ 13:1-7; 1பே 2:13-17; தீத் 3:1; சொல் பட்டியலில் “சீஸர்” என்ற தலைப்பைப் பாருங்கள்.
வரி: நே.மொ., “தலைவரி.” இது வருஷா வருஷம் செலுத்தப்பட்ட வரி. அநேகமாக, ஒரு தினாரியுவாக, அதாவது ஒருநாள் கூலியாக, இது இருந்திருக்கலாம். மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பெயர்ப்பதிவு செய்யப்பட்ட எல்லாரிடமிருந்தும் இந்தத் தொகையைத் தலைவரியாக ரோமர்கள் வசூலித்தார்கள்.—லூ 2:1-3.
-