-
மத்தேயு 22:31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 இறந்தவர்கள் உயிரோடு எழுப்பப்படுவது சம்பந்தமாகக் கடவுள் உங்களுக்குச் சொன்னதை நீங்கள் வாசித்ததில்லையா?
-
-
மத்தேயு ஆராய்ச்சிக் குறிப்புகள்—அதிகாரம் 22பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
-
-
உயிரோடு எழுப்பப்படுவது: மத் 22:23-க்கான ஆராய்ச்சிக் குறிப்பைப் பாருங்கள்.
கடவுள் . . . சொன்னதை: சுமார் கி.மு. 1514-ல் மோசேயிடம் யெகோவா பேசியதைப் பற்றி இயேசு இங்கே சொல்கிறார். (யாத் 3:2, 6) அந்தச் சமயத்தில், ஆபிரகாம் இறந்து 329 வருஷங்களும், ஈசாக்கு இறந்து 224 வருஷங்களும், யாக்கோபு இறந்து 197 வருஷங்களும் ஆகியிருந்தன. ஆனாலும், ‘நான் அவர்களுடைய கடவுளாக இருந்தேன்’ என்று யெகோவா சொல்லவில்லை. ‘நான் அவர்களுடைய கடவுளாக இருக்கிறேன்’ என்றுதான் சொன்னார்.—மத் 22:32.
-