உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • இந்த வாரம்
மே 12-18
கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்—2025 | மே

மே 12-18

நீதிமொழிகள் 13

பாட்டு 34; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. ‘பொல்லாதவனின் விளக்கை’ பார்த்து ஏமாந்துவிடாதீர்கள்

(10 நிமி.)

பொல்லாதவர்களுக்கு எதிர்காலமே இல்லை (நீதி 13:9; it-2 பக். 196 பாரா. 2-3)

கெட்டதை நல்லதாகக் காட்டும் ஆட்களோடு பழகாதீர்கள் (நீதி 13:20; w12 7/15 பக். 12 பாரா 3)

நீதிமான்களை யெகோவா ஆசீர்வதிக்கிறார் (நீதி 13:25; w04 7/15 பக். 31 பாரா 6)

படங்களின் தொகுப்பு: சாட்சியாக இல்லாத ஒரு நபரின் தவறான முடிவுகளும் சில சாட்சிகளின் சரியான முடிவுகளும் ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன. 1. ஒரு நபர் ஒரு கிளாஸ் மதுபானத்தைக் கையில் வைத்துக்கொண்டு நைட் கிளப்பில் நடனம் ஆடுகிறார். 2. பிறகு, அவருக்கு உடம்பு சரியில்லாமல் போய் மருந்து எடுத்துக்கொள்கிறார். 3. சகோதர சகோதரிகள் சாயங்காலத்தில் வெளியே சந்தோஷமாகப் பொழுதைக் கழிக்கிறார்கள். எல்லாரும் ஒன்றாகச் சேர்ந்து பாட்டு பாடிக்கொண்டும், நடனம் ஆடிக்கொண்டும், சாப்பிட்டுக்கொண்டும் இருக்கிறார்கள். 4. அடுத்த நாள், அவர்கள் ஊழியத்துக்குப் போகிறார்கள்.

உலக ஆசைகளைத் தேடிப் போகிறவர்கள் ஓகோவென்று வாழ்வதுபோல் தெரியலாம். ஆனால், அது உண்மையில்லை. யெகோவாவின் விருப்பத்தைச் செய்கிறவர்கள்தான் ரொம்பச் சந்தோஷமாகவும் திருப்தியாகவும் வாழ்கிறார்கள்

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 13:24—தவறாகக் காண்பிக்கப்படும் அன்பைப் பற்றி பைபிள் என்ன எச்சரிப்பைக் கொடுக்கிறது? (it-2 பக். 276 பாரா 2)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 13:1-17 (th படிப்பு 10)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். சமீபத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேச ஆரம்பியுங்கள். பிறகு, அந்த நபருக்கு இன்னும் அதிக பொருத்தமாக இருக்கிற ஒரு வசனத்தை பைபிளிலிருந்து காட்டுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 5)

5. பேச ஆரம்பிப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. கூட்டத்துக்கு ஒருவரை அழையுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 3)

6. பேச்சு

(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 9—பொருள்: பெற்றோரை மதித்து அவர்களுக்குக் கீழ்ப்படியும் பிள்ளைகளுடைய வாழ்க்கை நன்றாக இருக்கும். (th படிப்பு 16)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 77

7. “நீதிமானின் விளக்கு பிரகாசமாக ஒளிவீசும்”

(8 நிமி.) கலந்துபேசுங்கள்.

கடவுளுடைய வார்த்தையில் அளவில்லாத அறிவும் ஞானமும் புதைந்திருக்கின்றன. அதன் வெளிச்சத்தில் நாம் நடந்தால், அதாவது அதன் ஆலோசனைகளின்படி நாம் வாழ்ந்தால், வெற்றியும் சந்தோஷமும் நம்மைத் தேடி வரும். இதையெல்லாம் உலகத்தால் தரவே முடியாது.

“தன்னிடம் இல்லாத ஒன்றை இந்த உலகத்தால் கொடுக்க முடியாது” வீடியோவிலிருந்து ஒரு காட்சி. சகோதரி கயினான்சினா புல்வெளியில் உட்கார்ந்து வானத்தைப் பார்த்துக்கொண்டிருக்கிறார்.

தன்னிடம் இல்லாத ஒன்றை இந்த உலகத்தால் கொடுக்க முடியாது என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • “நீதிமானின் விளக்கு” ‘பொல்லாதவனின் விளக்கைவிட’ ரொம்ப மேலானது என்பதை சகோதரி கயினான்சினாவின் அனுபவம் எப்படிக் காட்டுகிறது?—நீதி 13:9

இந்த உலகக் காரியங்களைப் பற்றி பகல் கனவு கண்டுகொண்டு நேரத்தை வீணடிக்காதீர்கள். யெகோவாவுக்குச் சேவை செய்வதற்காக நீங்கள் எடுத்த முடிவுகளை நினைத்து கவலைப்பட்டுக்கொண்டும் இருக்காதீர்கள். (1யோ 2:15-17) அதற்குப் பதிலாக, உங்களுக்குக் கிடைத்திருக்கிற “அறிவுதான் ஈடில்லாத செல்வம்” என்று புரிந்துகொண்டு அதற்கே எப்போதும் முக்கியத்துவம் கொடுங்கள்.—பிலி 3:8.

குடும்ப வழிபாட்டுக்கு ஐடியா:

சத்தியம் வாழ்க்கையையே மாற்றுகிறது என்ற வீடியோ தொடரில் இருக்கும் ஒன்று அல்லது இரண்டு வீடியோக்களை அவ்வப்போது பாருங்கள். சத்தியம் மதிப்புள்ளது என்பதை அந்த வீடியோக்கள் எப்படிக் காட்டுகின்றன என்று கவனியுங்கள்.

8. சபைத் தேவைகள்

(7 நிமி.)

9. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 26 பாரா. 9-17

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 43; ஜெபம்

பொருளடக்கம்
காவற்கோபுரம் (படிப்பு)—2025 | மார்ச்

படிப்புக் கட்டுரை 10: மே 12-18, 2025

 8 யெகோவாவையும் இயேசுவையும் போல யோசியுங்கள்

கூடுதலாக படிக்க

மற்ற கட்டுரைகள்

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்