பூஜைக் கம்பம்
அஷேரா என்ற எபிரெய வார்த்தை, (1) கருவளத்துக்கான கானானியப் பெண் தெய்வம் அஷேராவின் அடையாளமான பூஜைக் கம்பத்தை, அல்லது (2) அஷேராவின் உருவத்தைக் குறிக்கலாம். இந்தக் கம்பங்கள் செங்குத்தாக நிறுத்தப்பட்டன; இவற்றின் சில பகுதிகள் மரத்தால் செய்யப்பட்டிருந்தன. இவை செதுக்கப்படாத கம்பங்களாகவோ மரங்களாகவோ இருந்திருக்கலாம்.—உபா 16:21; நியா 6:26; 1ரா 15:13.