சித்திரவதைக் கம்பம்
இதற்கான கிரேக்க வார்த்தை ஸ்டவ்ரஸ். செங்குத்தான கம்பம் என்பது இதன் அர்த்தம். இப்படிப்பட்ட கம்பத்தில்தான் இயேசு கொல்லப்பட்டார். கிறிஸ்து வருவதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு பொய் மதங்கள் சிலுவையை ஒரு மத சின்னமாகப் பயன்படுத்தின. ஆனால், ஸ்டவ்ரஸ் என்ற கிரேக்க வார்த்தை சிலுவையைக் குறிக்கிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. “சித்திரவதைக் கம்பம்” என்ற வார்த்தை, ஸ்டவ்ரசின் முழு அர்த்தத்தையும் தருகிறது. ஏனென்றால், இயேசு தன்னுடைய சீஷர்கள் அனுபவிக்கவிருந்த சித்திரவதையையும், கஷ்டத்தையும், அவமானத்தையும் பற்றிக் குறிப்பிட்டபோது ஸ்டவ்ரஸ் என்ற வார்த்தையைத்தான் பயன்படுத்தினார். (மத் 16:24; எபி 12:2)—மரக் கம்பம் என்ற தலைப்பைப் பாருங்கள்.