வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை வல்லரசுகள் தாக்குகின்றன
இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யத்தின் தலைநகரம் சமாரியா; இந்நகரை பொ.ச.மு. 740-ல் அசீரியர் கைப்பற்றினர். இதனால், இஸ்ரவேலர் கொடூரமான வல்லரசின் ஆதிக்கத்திற்குள் வந்தனர். மெசொப்பொத்தாமியா சமவெளிகளின் வடகோடியில், வளமான பிறைப்பிரதேசத்தில் ஓடும் பெரிய நதிகளில் ஒன்றான டைக்ரிஸ் நதியருகே அசீரியா அமைந்திருந்தது. அசீரியாவின் முக்கிய பட்டணங்களான நினிவேயையும் காலாகுவையும் நிம்ரோது நிறுவியிருந்தான். (ஆதி 10:8-12) மூன்றாம் சல்மனாசார் காலத்தில், அசீரிய பேரரசு மேற்கு நோக்கி விரிவடைந்தது, அதாவது நீர்வளமும் நிலவளமும் நிறைந்த சீரியா மற்றும் வடக்கு இஸ்ரவேல் பகுதிகள் வரை பரந்திருந்தது.
பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள அரசனாகிய மூன்றாம் திகிலாத்பிலேசரின் (பூல்) காலத்தில் இஸ்ரவேலை அசீரியா ஒடுக்க ஆரம்பித்தது. அவனுடைய படையெடுப்பால் தெற்கேயிருந்த யூதாவும் பாதிப்புக்குள்ளானது. (2இரா 15:19; 16:5-18) காலப்போக்கில், அசீரியாவின் பொங்கி எழுந்த ‘தண்ணீர்கள்’ யூதாவுக்குள் புகுந்து, கடைசியில் அதன் தலைநகரான எருசலேமையும் எட்டியது.—ஏசா 8:5-8, NW.
அசீரிய அரசன் சனகெரிப் பொ.ச.மு. 732-ல் யூதாவின் மீது படையெடுத்தான். (2இரா 18:13, 14, NW) யூதாவின் 46 பட்டணங்களை அவன் சூறையாடினான்; ஷெஃபிலாவில் போர் நடவடிக்கைகளுக்கு சாதகமான இடத்தில் அமைந்திருந்த லாகீசும் அவற்றில் ஒன்று. வரைபடம் காட்டுகிறபடி, அவனுடைய சேனைகள் எருசலேமை சுற்றி தென்மேற்கே அணிவகுத்து வந்து யூதாவின் தலைநகரை வளைத்தன. எசேக்கியாவை “கூண்டில் அடைத்த பறவை போல” கைதியாக்கியதாக தன் சரித்திரப் பதிவுகளில் சனகெரிப் பெருமையாக எழுதினான். ஆனால் சனகெரிப்பின் போர் வீரர்களை கடவுளுடைய தூதன் சம்ஹாரம் செய்த விவரம் அசீரியரின் பதிவேடுகளில் குறிப்பிடப்படவில்லை.—2இரா 18:17-36; 19:35-37.
அசீரிய வல்லரசின் நாட்கள் முடிவுக்கு வரவிருந்தன. மேதியர்கள்—இன்று ஈரான் அமைந்துள்ள மலைப்பாங்கான பீடபூமியில் அதிகமாக வாழ்ந்து வந்தவர்கள்—அசீரிய படையில் மீதமிருந்த படைவீரர்களோடு போரிட ஆரம்பித்தார்கள். இதனால், மேற்கத்திய மாகாணங்களின் மீது அசீரியா தொடர்ந்து கவனம் செலுத்த முடியாமல் போனது; அந்த மாகாணங்களும் கலகம் செய்ய ஆரம்பித்தன. இதற்கிடையே பாபிலோனியரின் ஆதிக்கம் வலுப்பெற்று வந்தது, அஷூர் பட்டணத்தையும்கூட இவர்கள் கைப்பற்றினார்கள். பொ.ச.மு. 632-ல், பாபிலோனியரும் மேதியரும் கருங்கடலின் வடக்குப் பகுதியைச் சேர்ந்த போர் வெறியரான சீத்தியரும் கூட்டுச் சேர்ந்து ‘இரத்தப்பழிகளின் நகரமாகிய’ நினிவேயை அழித்துப் போட்டார்கள். இப்படியாக நாகூம், செப்பனியா தீர்க்கதரிசனங்கள் நிறைவேறின.—நாகூ 3:1; செப் 2:13.
ஆரானில் அசீரியாவின் இறுதி மூச்சு நின்றது. கங்கணம் கட்டிக்கொண்டு வந்த பாபிலோனியர்களால் தாக்கப்பட்ட அசீரியர்கள், எகிப்து உதவிக்கு வரும் வரை தாக்குப்பிடிக்க முயன்றனர். ஆனால், பார்வோன் நேகோ வடக்கு நோக்கி வரும் வழியில் மெகிதோவிலே யூதேயாவின் ராஜாவாகிய யோசியா அவரோடு போரிட்டார். (2நா 35:20) இந்தத் தடங்கலை சமாளித்து கடைசியாக ஆரானுக்கு நேகோ போய் சேர்ந்தபோது காலம் கடந்துவிட்டிருந்தது, ஆம், அசீரிய வல்லரசு அதற்குள் முறியடிக்கப்பட்டிருந்தது.
பாபிலோனிய வல்லரசு
“தொங்கும் தோட்டம்” என்றதும் எந்த நகரம் உங்கள் ஞாபகத்திற்கு வரும்? பாபிலோனே உங்கள் ஞாபகத்திற்கு வரும், இதுவே பாபிலோனிய வல்லரசின் தலைநகரம்; இது இறக்கைகளையுடைய சிங்கமாக ஒரு தீர்க்கதரிசனத்தில் வருணிக்கப்பட்டுள்ளது. (தானி 7:4) செல்வத்திற்கும் வாணிகத்திற்கும் மத வளர்ச்சிக்கும் ஜோதிட வளர்ச்சிக்கும் பெயர்போன நகரமாக விளங்கியது. தெற்கு மெசொப்பொத்தாமியாவில் ஐப்பிராத்து, டைக்ரிஸ் நதிகளுக்கு மத்தியில் சதுப்பு நிலப்பகுதிகளில் இந்த வல்லரசு மையம் கொண்டிருந்தது. ஐப்பிராத்து நதியின் இருகரைகளிலும் இந்நகரம் அமைந்திருந்தது. அதன் மதிற்சுவர்களைப் பார்த்தபோது யாரும் அதை எளிதில் வெல்ல முடியாதென்றே தோன்றியது.
வடக்கு அரபி தேசத்தின் பாறைகள் நிறைந்த பாலைவனத்தின் வழியே வியாபார மார்க்கங்களை பாபிலோனியர் ஏற்படுத்தினர். ஒரு கட்டத்தில், அரசனாகிய நபோனிடஸ் பாபிலோனை ஆளும் பொறுப்பை பெல்ஷாத்சாரிடம் ஒப்படைத்துவிட்டு தேமாவுக்கு சென்று அங்கு தங்கினார்.
கானான் மீது பாபிலோன் மூன்று முறை படையெடுத்தது. பொ.ச.மு. 625-ல், கர்கேமிசில் எகிப்தியர்களை நெபுகாத்நேச்சார் முறியடித்தார். அதற்கு பின்பு, பாபிலோனியர் தெற்கே ஆமாத்துக்கு முன்னேறி சென்று, பின்வாங்கி ஓடிய எகிப்தியரை அங்கே மீண்டும் முறியடித்தனர். பின் அங்கிருந்து கடற்கரை வழியாக கீழே எகிப்தின் நதிப் பள்ளத்தாக்கு வரை சென்றனர்; செல்லும் வழியில் அஸ்கலோனை அழித்தனர். (2இரா 24:7; எரே 47:5-7) இந்தப் படையெடுப்பின்போது யூதா பாபிலோனின் கைப்பாவை ஆனது.—2இரா 24:1.
பொ.ச.மு. 618-ல் யூதாவின் ராஜா யோயாக்கீம் கலகம் செய்தார். அப்போது, யூதாவுக்கு எதிராக அண்டை தேசத்து படைகளை பாபிலோன் அனுப்பியது. அதோடு, பாபிலோனிய துருப்புகளும் எருசலேமை முற்றுகையிட்டு அதைக் கீழ்ப்படுத்தின. கொஞ்ச காலத்திற்குள் சிதேக்கியா ராஜா எகிப்துடன் கூட்டுச் சேர்ந்தான். இது யூதாவுக்கு எதிராக பாபிலோனியர்களை பெரும் ஆவேசத்துடன் வெகுண்டெழச் செய்தது. இதனால் அவர்கள் மீண்டும் படையெடுத்து வந்து யூதாவின் பட்டணங்களை அழித்துப்போட ஆரம்பித்தனர். (எரே 34:7) முடிவில் நெபுகாத்நேச்சார் தன் படைகளை எருசலேமுக்கு திருப்பி, பொ.ச.மு. 607-ல் அதை வென்றார்.—2நா 36:17-21; எரே 39:10.
[பக்கம் 23-ன் பெட்டி]
இந்தக் காலப்பகுதியில் எழுதப்பட்ட பைபிள் புத்தகங்கள்:
ஓசியா
ஏசாயா
மீகா
நீதிமொழிகள் (ஒரு பகுதி)
செப்பனியா
நாகூம்
ஆபகூக்
புலம்பல்
ஒபதியா
எசேக்கியேல்
1 & 2 இராஜாக்கள்
எரேமியா
[பக்கம் 23-ன் தேசப்படம்]
(முழு வடிவத்திலுள்ள படத்திற்கு புத்தகத்தைப் பார்க்கவும்)
பாபிலோனிய/அசீரிய பேரரசுகள்
அசீரிய பேரரசு
B4 மோப் (நோப்)
B4 சோவான்
B5 எகிப்து
C2 சீப்புரு (கித்தீம்)
C3 சீதோன்
C3 தீரு
C3 மெகிதோ
C3 சமாரியா
C4 எருசலேம்
C4 அஸ்கலோன்
C4 லாகீஸ்
D2 ஆரான்
D2 கர்கேமிஸ்
D2 அர்பாத்
D2 ஆமாத்
D3 ரிப்லா
D3 சீரியா
D3 தமஸ்கு
E2 கோசான்
E2 மெசொப்பொத்தாமியா
F2 மின்னி
F2 அசீரியா
F2 கார்ஸபாட்
F2 நினிவே
F2 காலாகு
F2 அஷூர்
F3 பாபிலோனியா
F3 பாபிலோன்
F4 கல்தேயா
F4 ஏரேக்
F4 ஊர்
G3 சூசான்
G4 ஏலாம்
பாபிலோனிய பேரரசு
C3 சீதோன்
C3 தீரு
C3 மெகிதோ
C3 சமாரியா
C4 எருசலேம்
C4 அஸ்கலோன்
C4 லாகீஸ்
D2 ஆரான்
D2 கர்கேமிஸ்
D2 அர்பாத்
D2 ஆமாத்
D3 ரிப்லா
D3 சீரியா
D3 தமஸ்கு
D5 தேமா
E2 கோசான்
E2 மெசொப்பொத்தாமியா
E4 அரபி தேசம்
F2 மின்னி
F2 அசீரியா
F2 கார்ஸபாட்
F2 நினிவே
F2 காலாகு
F2 அஷூர்
F3 பாபிலோனியா
F3 பாபிலோன்
F4 கல்தேயா
F4 ஏரேக்
F4 ஊர்
G3 சூசான்
G4 ஏலாம்
[மற்ற இடங்கள்]
G2 மேதியா
முக்கிய சாலைகள் (புத்தகத்தைப் பார்க்கவும்)
[நீர்நிலைகள்]
B3 மத்தியதரைக் கடல் (பெருங்கடல்)
C5 செங்கடல்
H1 காஸ்பியன் கடல்
H5 பெர்சிய வளைகுடா
[நதிகள்]
B5 நைல்
E2 ஐப்பிராத்து
F3 டைக்ரிஸ்
[பக்கம் 22-ன் படம்]
லாகீஸ் குன்று
[பக்கம் 22-ன் படம்]
பண்டைய மெகிதோவின் மாதிரி
[பக்கம் 23-ன் படம்]
பாபிலோனிய தொங்கும் தோட்டத்தின் ஓவியம்