கடவுளுடைய ஜனங்கள் தாயகம் திரும்புகின்றனர்
இன்றைய ஈரான் அமைந்திருக்கும் பீடபூமியை இரண்டு முக்கிய மலைத்தொடர்கள் சூழ்ந்துள்ளன. எல்பர்ஸும் (காஸ்பியன் கடலுக்கு தெற்கே) ஸாக்ராஸுமே (பெர்சிய வளைகுடாவை நோக்கி தென் கிழக்கே) இந்த மலைத்தொடர்கள். இவை செழிப்பான நீண்ட பள்ளத்தாக்குகளால் பிரிக்கப்பட்டிருக்கின்றன; இப்பள்ளத்தாக்குகளின் சரிவுகளில் மரங்கள் அடர்த்தியாக காணப்படுகின்றன. இங்கு மிதமான தட்பவெப்பம் நிலவுகிறது. ஆனால் காற்று பலமாக வீசும் உயர்ந்த, வறண்ட சமவெளிகளில் குளிர்காலத்தில் கடுங்குளிர் இருக்கும். இப்பீடபூமியின் அருகே அமைந்த பாலைவனத்தில் மக்கள் ஆங்காங்கே குடியிருக்கின்றனர். மெசொப்பொத்தாமியாவுக்கு கிழக்கேயுள்ள இந்த பகுதியிலிருந்துதான் மேதிய-பெர்சிய வல்லரசு உருவானது.
அந்தப் பீடபூமியின் வடக்குப் பகுதியே மேதியரின் மையமாக இருந்தது; என்றாலும் பிற்பாடு அவர்கள் அர்மீனியாவுக்கும் சிலிசியாவுக்கும் பரவிச் சென்றனர். ஆனால் டைக்ரிஸ் பள்ளத்தாக்கின் கிழக்கேயிருந்த அந்தப் பீடபூமியின் தென்மேற்கு பகுதியோ பெர்சியரின் மையமாக இருந்தது. பொ.ச.மு. ஆறாம் நூற்றாண்டின் மத்திபத்தில், கோரேசுவின் ஆட்சியில் இந்த இரு ராஜ்யங்களும் இணைந்து மேதிய-பெர்சிய உலக வல்லரசாக உருவானது.
பொ.ச.மு. 539-ல் பாபிலோனை கோரேசு கைப்பற்றினார். அவரது பேரரசு கிழக்கே இந்து தேசம் வரையிலும் விஸ்தரிக்கப்பட்டது. மேற்கே எகிப்தும் இன்றைய துருக்கியும் அதன் எல்லைக்குள்ளானது. ‘வெகு மாம்சம் தின்ற’ இரத்தவெறி பிடித்த “கரடி” என மேதிய-பெர்சிய வல்லரசை தானியேல் வருணித்தது பொருத்தமானதே. (தானி 7:5) கோரேசு மனிதநேயமும் பெருந்தன்மையுமுள்ள ஆட்சியை நிறுவினார். அவர் தன் பேரரசை மாகாணங்களாகப் பிரித்தார். அவை ஒவ்வொன்றும் ஒரு தேசாதிபதியால்—பொதுவாக ஒரு பெர்சியரால்—ஆளப்பட்டது. ஆனால் அவருக்கு கீழேயிருந்த உள்ளூர் ஆட்சியாளர் ஒருவருக்கு ஓரளவு அதிகாரம் இருந்தது. அப்பேரரசின் கீழிருந்த எல்லா இனத்தாரும் தங்கள் தங்கள் சம்பிரதாயங்களையும் மதங்களையும் தொடர்ந்து பின்பற்றுவதற்கு ஊக்குவிக்கப்பட்டார்கள்.
இந்தக் கொள்கையின்படி, மெய் வணக்கத்தை மீண்டும் ஸ்தாபிக்கவும் எருசலேமை மறுபடியும் கட்டவும் திரும்பிச் செல்வதற்கு யூதர்களை கோரேசு அனுமதித்தார். இதைத்தான் எஸ்றாவும் நெகேமியாவும் விவரித்திருக்கிறார்கள். திரும்பிச் சென்ற பெருந்திரளான யூதர்கள் எந்தப் பாதையில் சென்றிருப்பார்கள் என நினைக்கிறீர்கள்? ஐப்பிராத்து வழியாக கர்கேமிசுக்கு ஆபிரகாம் பயணித்த வழியிலா அல்லது தத்மோர் மற்றும் தமஸ்கு வழியாக குறுக்குப் பாதையிலா? பைபிள் அதைப் பற்றி சொல்வதில்லை. (பக்கங்கள் 6, 7-ஐக் காண்க.) காலப்போக்கில், அந்தப் பேரரசின் மற்ற பாகங்களில்கூட, அதாவது நைலின் கழிமுகப் பகுதியிலும் தெற்கே தொலை தூர இடங்களிலும்கூட யூதர்கள் குடியேறினார்கள். யூதரில் கணிசமான எண்ணிக்கையினர் பாபிலோனிலேயே தங்கிவிட்டார்கள். இதன் காரணமாகவே, பல நூற்றாண்டுகளுக்கு பிற்பாடு அப்போஸ்தலனாகிய பேதுரு பாபிலோனுக்கு விஜயம் செய்திருக்கலாம். (1பே 5:13) ஆம், அதற்கு பின்வந்த கிரேக்க மற்றும் ரோம பேரரசுகளின் காலத்தில் யூதர்கள் பல இடங்களில் பரவியிருந்ததற்கு மேதிய-பெர்சிய பேரரசு ஒரு காரணம்.
மேதிய-பெர்சியர் பாபிலோனை வென்ற பின்பு, அந்நகரை நிர்வாக மையமாக பயன்படுத்தினர். அந்நகரில் கோடை காலத்தில் வெப்பம் கடுமையாக இருந்தது. பூர்வ ஏலாமியரின் தலைநகரமாய் விளங்கிய சூசான் அதன் ராஜதானி பட்டணங்களில் ஒன்றாக இருந்தது. பிற்பாடு, பெர்சிய அரசன் அகாஸ்வேரு (முதலாம் சஷ்டா) எஸ்தரை ராணியாக தேர்ந்தெடுத்தது இங்குதான்; அவரது பரந்த சாம்ராஜ்யத்திலிருந்து கடவுளுடைய ஜனங்களை துடைத்தழிப்பதற்கு போடப்பட்ட சதித்திட்டம் முறியடிக்கப்பட்டதும் இங்குதான். மேதிய-பெர்சியாவின் மற்ற இரு தலைநகரங்கள்: அக்மேதா (கடல் மட்டத்திலிருந்து 1,900 மீட்டருக்கும் அதிகமான உயரத்தில் அமைந்துள்ளது, கோடையில் இப்பகுதி இதமாக இருக்கும்); பஸார்கடி (அதே உயரத்தில் தென்கிழக்கே ஏறக்குறைய 650 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது).
இந்த உலக வல்லரசு எப்படி முடிவுக்கு வந்தது? அதன் ஆதிக்கம் கொடிகட்டி பறந்த சமயத்தில், கிரேக்கர்கள் வடமேற்கு எல்லையில் கலகங்களை தூண்டிவிடவே மேதிய-பெர்சியா அதற்கு எதிராக செயல்பட்டது. அப்போது கிரேக்கு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்ட சிற்றரசுகளாக பிரிவுற்றிருந்தது, ஆனால் பெர்சிய படைகளை எதிர்ப்பதில் அவை கைகோத்துக் கொண்டு மாரத்தான் மற்றும் சாலமியில் பெர்சிய படைகளை முறியடித்தன. இந்த வெற்றி, ஒருங்கிணைந்த கிரேக்கை மேதிய-பெர்சியாவுக்கு மேலாக உயர்த்துவதற்கு அடித்தளம் போட்டது.
[பக்கம் 25-ன் பெட்டி]
செருபாபேலின் தலைமையில், கிட்டத்தட்ட 50,000 இஸ்ரவேல் ஆண்கள் எருசலேமுக்குத் திரும்பிச் சென்றபோது (தேர்ந்தெடுத்த மார்க்கத்தைப் பொறுத்து) 800 முதல் 1,600 கிலோமீட்டர் வரை பயணித்தனர். அவர்கள் கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்ப்பட்டனர். ஏனெனில் அவர்களது தேசம் 70 ஆண்டுகளாக பாழாய் கிடந்திருந்தது. தாயகம் திரும்பியவர்கள் பலிபீடத்தைக் கட்டி, அதில் யெகோவாவுக்கு பலிகளை செலுத்தி மெய் வணக்கத்தை மீண்டும் ஸ்தாபிக்க ஆரம்பித்தனர். பொ.ச.மு. 537 இலையுதிர் காலத்தில் அவர்கள் கூடாரப் பண்டிகையை கொண்டாடினர். (எரே 25:11; 29:10) அதற்குப்பின், யெகோவாவின் ஆலயத்திற்கு அஸ்திவாரம் போட்டனர்.
[பக்கம் 25-ன் பெட்டி]
இந்தக் காலப்பகுதியில் எழுதப்பட்ட பைபிள் புத்தகங்கள்:
தானியேல்
ஆகாய்
சகரியா
எஸ்தர்
சங்கீதம் (ஒரு பகுதி)
1 & 2 நாளாகமம்
எஸ்றா
நெகேமியா
மல்கியா
[பக்கம் 24-ன் தேசப்படம்]
மேதிய-பெர்சிய பேரரசு
A2 மக்கெதோனியா
A2 திரேஸ்
A4 சிரேனே
A4 லீபியா
B2 பைசான்டியம்
B2 லிடியா
B3 சர்தை
B4 மோப் (நோப்)
B4 எகிப்து
B5 நோஅம்மோன் (தீப்ஸ்)
B5 செவெனே
C3 சிலிசியா
C3 தர்சு
C3 இஸஸ்
C3 கர்கேமிஸ்
C3 தத்மோர்
C3 சீரியா
C3 சீதோன்
C3 தமஸ்கு
C3 தீரு
C4 எருசலேம்
D2 பேசிஸ்
D2 அர்மீனியா
D3 அசீரியா
D3 நினிவே
D4 பாபிலோன்
E3 மேதியா
E3 அக்மேதா
E3 ஹிர்கேனியா
E4 சூசான் (சூஷா)
E4 ஏலாம்
E4 பஸார்கடி
E4 பெர்சிபோலிஸ்
E4 பெர்சியா
F3 பார்த்தியா
F4 டிரான்ஜியேனா
G2 மரகன்டா (சமர்கன்ட்)
G3 சாக்டியானா
G3 பாக்டிரியா
G3 ஆரியா
G4 அரகோஸா
G4 ஜட்ரோஸா
H5 இந்து தேசம்
[மற்ற இடங்கள்]
A2 கிரேக்கு
A3 மாரத்தான்
A3 அத்தேனே
A3 சாலமி
C1 சீத்தியா
C4 ஏலாத் (ஏலோத்)
C4 தேமா
D4 அரபி தேசம்
[மலைகள்]
E3 எல்பர்ஸ் மலைகள்
E4 ஸாக்ராஸ் மலைகள்
[நீர்நிலைகள்]
B3 மத்தியதரைக் கடல் (பெருங்கடல்)
C2 கருங்கடல்
C5 செங்கடல்
E2 காஸ்பியன் கடல்
E4 பெர்சிய வளைகுடா
[நதிகள்]
B4 நைல்
C3 ஐப்பிராத்து
D3 டைக்ரிஸ்
H4 சிந்து
[பக்கம் 24-ன் படம்]
கோரேசுவின் துருப்புகள் பாபிலோனை சென்றடைய ஸாக்ராஸ் மலைகளை கடக்க வேண்டியிருந்தது
[பக்கம் 25-ன் படம்]
மேலே: அனைத்து தேசங்களின் நுழைவாயில், பெர்சிபோலிஸ்
[பக்கம் 25-ன் படம்]
உள்படம்: பஸார்கடியிலுள்ள கோரேசுவின் சமாதி