பைபிளில் இருக்கும் புதையல்கள் | சங்கீதம் 135–141
யெகோவா நம்மை அற்புதமாக படைத்திருக்கிறார்
யெகோவாவின் நல்ல குணங்களைப் பற்றி படைப்புகளில் இருந்து தாவீது தெரிந்துகொண்டார். அதை பற்றி ஆழமாக யோசித்து பார்த்தார். யெகோவாமீது முழு நம்பிக்கை வைத்து அவருக்கு சேவை செய்தார்.
யெகோவாவின் படைப்புகளைப் பற்றி ஆழமாக யோசித்து பார்த்ததால் தாவீது அவரை இப்படி புகழ்ந்தார்:
“நான் பிரமிக்கத்தக்க அதிசயமாய் உண்டாக்கப்பட்டபடியால், உம்மைத் துதிப்பேன்”
“நான் ஒளிப்பிடத்திலே உண்டாக்கப்பட்டு, பூமியின் தாழ்விடங்களிலே விசித்திர விநோதமாய் உருவாக்கப்பட்டபோது, என் எலும்புகள் உமக்கு மறைவாயிருக்கவில்லை”
“என் கருவை உம்முடைய கண்கள் கண்டது; என் அவயவங்களில் ஒன்றாகிலும் இல்லாதபோதே அவைகள் அனைத்தும் . . . உமது புஸ்தகத்தில் எழுதியிருந்தது”