பைபிளில் இருக்கும் புதையல்கள் | நீதிமொழிகள் 12–16
தங்கத்தைவிட ஞானம் மேலானது
அச்சடிக்கப்பட்ட பிரதி
கடவுள் தரும் ஞானம் ஏன் அதிக மதிப்புள்ளது? ஏனென்றால், அது நம் உயிரைப் பாதுகாக்கிறது, கெட்ட வழியில் போகாமல் இருக்க உதவுகிறது. நாம் ஞானமுள்ள நபர் என்பது நம் பேச்சிலும், நடத்தையிலும் நாம் காட்டும் குணங்களிலும் தெரியும்.
அகம்பாவத்தை தவிர்க்க ஞானம் உதவும்
ஞானத்தின் ஊற்று யெகோவாதான் என்று ஞானமுள்ள ஒருவருக்கு நன்றாக தெரியும்
வாழ்க்கையில் அதிகம் சாதித்தவர்களும் நிறைய பொறுப்புகள் இருப்பவர்களும் அகம்பாவத்தையும் தலைக்கனத்தையும் தவிர்க்க வேண்டும்
நல்ல வார்த்தைகளை பேச ஞானம் உதவும்
ஞானமுள்ள ஒருவர் மற்றவர்களிடம் இருக்கும் நல்லதை பார்த்து அவர்களை பற்றி நல்லதையே பேசுவார்
ஞானமுள்ள ஒருவரின் பேச்சு நல்லதை செய்ய மற்றவர்களை தூண்டும்... தேன் போல் இனிக்கும்... யாரையும் புண்படுத்தாது