பைபிளில் இருக்கும் புதையல்கள் | பிரசங்கி 7–12
“நீ உன் வாலிபப்பிராயத்திலே உன் சிருஷ்டிகரை நினை”
இளம் வயதிலேயே மகத்தான ‘சிருஷ்டிகரை நினைக்க’ உங்கள் திறமைகளை பயன்படுத்தி அவருக்கு சேவை செய்யுங்கள்
வயதான காலத்தில் வரும் சவால்களை பற்றி சாலொமோன் ராஜா கவிதை நடையில் சொல்கிறார்
வசனம் 3, NW: ‘ஜன்னல் வழியாகப் பார்க்கிற பெண்களுக்கு எல்லாமே இருட்டாகத் தெரியும்’
கண் பார்வை மங்கிவிடுவதை குறிக்கிறது
வசனம் 4, NW: ‘பாடல் சத்தமெல்லாம் அடங்கிவிடும்’
காது சரியாக கேட்காமல் போவதை குறிக்கிறது
வசனம் 5, NW: ‘பசியைத் தூண்டுகிற பழத்தைச் சாப்பிட்டால்கூட பசியெடுக்காது’
சாப்பிட தோன்றாததை குறிக்கிறது