பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 17-23
அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினால் அதை இழந்துவிடுவோம்
எசேக்கியா ராஜாவின் அரண்மனை அதிகாரியாக செப்னா இருந்திருக்கலாம். ராஜாவுக்கு அடுத்து அவருக்குத்தான் அதிகாரம் இருந்தது, அதனால் அவர் அதிகாரத்தை சரியாகப் பயன்படுத்த வேண்டியிருந்தது.
யெகோவாவுடைய மக்களை கண்ணும் கருத்துமாக கவனித்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு செப்னாவுக்கு இருந்தது
அவன் சுயநலமாக நடந்துகொண்டான்; தனக்கு புகழ் சேர்க்க ஆசைப்பட்டான்
செப்னாவுக்கு பதிலாக எலியாக்கீமை யெகோவா நியமித்தார்
‘தாவீதுடைய வீட்டின் திறவுகோல்,’ எலியாக்கீமுக்கு கொடுக்கப்பட்டது, அது அவருக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தையும் பொறுப்பையும் குறித்தது
யோசித்துப் பாருங்கள்: மற்றவர்களுக்கு பிரயோஜனமான விதத்தில் செப்னா அவருடைய அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்தியிருக்கலாம்?