பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 38–42
சோர்ந்துபோகிறவர்களுக்கு யெகோவா சக்தி கொடுக்கிறார்
மேலே எழும்பும் ‘தெர்மல்’ என்ற வெப்பக் காற்றைப் பயன்படுத்தி, ஒரு கழுகால் ரொம்ப நேரம் வானத்தில் பறக்க முடியும். வெப்பக் காற்றலைகளைக் கண்டுபிடித்த உடனே கழுகு அந்த காற்றலைகளுக்குள்ளே வட்டமிடுகிறது. அந்த வெப்பக் காற்று மேலே செல்லச் செல்ல அது கழுகை மேலே கொண்டுபோகிறது. ஒரு குறிப்பிட்ட உயரத்தை எட்டிய பிறகு கழுகு அடுத்த வெப்பக் காற்றுக்குள் போகிறது. இப்படி திரும்பத் திரும்ப செய்கிறது
மிகக் குறைவான சக்தியைப் பயன்படுத்தி கழுகு வானத்தில் பறப்பதுபோல் நம்மாலும் கடவுள் கொடுக்கும் சக்தியைப் பயன்படுத்தி அவருடைய சேவையை தொடர்ந்து செய்ய முடியும்