பாடம் 16
உதவி ஊழியர்கள் என்னென்ன வேலைகளை செய்கிறார்கள்?
சபையில் இருக்கிற வேலைகளை கவனிப்பதற்கு ‘கண்காணிகளும் உதவி ஊழியர்களும்’ இருப்பார்கள் என்று பைபிள் சொல்கிறது. (பிலிப்பியர் 1:1) அதேபோல், இன்று ஒவ்வொரு சபையிலும் சிலர் கண்காணிகளாகவும் அதாவது மூப்பர்களாகவும், சிலர் உதவி ஊழியர்களாகவும் இருக்கிறார்கள். இப்போது, உதவி ஊழியர்கள் நமக்காக என்னென்ன வேலைகளைச் செய்கிறார்கள் என்று பார்க்கலாம்.
மூப்பர் குழுவுக்கு உதவியாக இருக்கிறார்கள். உதவி ஊழியர்கள் யெகோவாவுடைய சேவைக்கு முதலிடம் கொடுக்கிறார்கள், நம்பகமானவர்களாக, பொறுப்பாக வேலை செய்கிறவர்களாக இருக்கிறார்கள். சபையில் அடிக்கடி செய்ய வேண்டிய சில முக்கியமான வேலைகளையும் செய்கிறார்கள். அதனால், சபைக் கூட்டங்களை நடத்துவதற்கும் சபையில் இருப்பவர்களை உற்சாகப்படுத்துவதற்கும் மூப்பர்களால் நிறைய நேரம் செலவழிக்க முடிகிறது.
சபைக்காக நிறைய உதவிகளைச் செய்கிறார்கள். கூட்டத்துக்கு வருகிறவர்களை அன்பாக வரவேற்று உட்கார வைக்கிறார்கள், மைக்-ஐ ரெடி செய்வது, இசையை போடுவது போன்ற வேலைகளை செய்கிறார்கள். மற்றவர்களுக்கு தேவையான புத்தகங்களை எடுத்துக் கொடுக்கிறார்கள், சபையின் கணக்குவழக்கைப் பார்த்துக்கொள்கிறார்கள், எங்கே ஊழியம் செய்ய வேண்டும் என்று சபையில் இருக்கிறவர்களுக்கு சொல்கிறார்கள். ராஜ்ய மன்றத்தை சுத்தமாக வைப்பதற்கு, பழுது பார்ப்பதற்கு உதவியாக இருக்கிறார்கள். வயதானவர்கள் யாருக்காவது உதவி செய்யச் சொல்லி மூப்பர்கள் சொன்னால் உடனே செய்கிறார்கள். கொடுத்த வேலையை சந்தோஷமாக செய்வதால் எல்லாருடைய மதிப்பையும் பெறுகிறார்கள்.—1 தீமோத்தேயு 3:13.
மற்றவர்களுக்கு நல்ல உதாரணமாக இருக்கிறார்கள். பைபிளில் சொல்லியிருக்கிற நல்ல குணங்களை இவர்கள் காட்டுகிறார்கள். அதனால்தான், உதவி ஊழியர்களாக சேவை செய்கிறார்கள். கடவுள்மீது எங்களுக்கு இருக்கும் நம்பிக்கையைப் பலப்படுத்தும் விதத்தில் சபைக் கூட்டங்களில் சில பகுதிகளை நடத்துகிறார்கள். இவர்கள் ஊழியத்தை சுறுசுறுப்பாக செய்வதைப் பார்த்து, நாங்களும் சுறுசுறுப்பாக ஊழியம் செய்கிறோம். மூப்பர்களோடு சேர்ந்து இவர்கள் சேவை செய்வதால் சபையில் எல்லாரும் சந்தோஷமாகவும் ஒற்றுமையாகவும் இருக்க முடிகிறது. (எபேசியர் 4:16) காலப்போக்கில் இவர்களும் மூப்பர்களாக ஆக முடியும்.
எப்படிப்பட்டவர்கள் உதவி ஊழியர்களாக இருக்க முடியும்?
உதவி ஊழியர்கள் எப்படி சபைக்கு உதவியாக இருக்கிறார்கள்?