ஊழியத்தில் நம் திறமைகளை மெருகூட்ட... சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும் நோக்கத்தோடு பேச்சை ஆரம்பியுங்கள்
ஏன் முக்கியம்? வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது நிறைய வீடுகள் பூட்டியிருப்பதைப் பார்க்கிறோம். அந்த வீட்டில் இருக்கும் நபர்களை நாம் பஸ்சில்... ரயிலில்... மருத்துவமனையில்... பள்ளியில்... வேலை செய்யும் இடத்தில்... என வித்தியாசமான இடங்களில் பார்க்கலாம். எல்லோருக்கும் நாம் சத்தியத்தைச் சொல்ல வேண்டும் என்று யெகோவா விரும்புகிறார். (1 தீ. 2:3, 4) சந்தர்ப்ப சாட்சி கொடுக்க வேண்டுமென்றால் நாம்தான் முதலில் பேச்சை ஆரம்பிக்க வேண்டும்.
இந்த மாதம் முயன்று பாருங்கள்:
ஒரு வாரத்தில் ஒருவரிடமாவது சந்தர்ப்ப சாட்சி கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு பேச்சை ஆரம்பியுங்கள்.