கேள்விப் பெட்டி
◼ முன்னேறி வருகிற பைபிள் மாணவருக்கு எவ்வளவு காலத்துக்குப் படிப்பு நடத்த வேண்டும்?
முன்னேறி வருகிற பைபிள் மாணவருக்கு... பைபிள் உண்மையில் என்ன கற்பிக்கிறது? மற்றும் கடவுளது அன்பில் நிலைத்திருங்கள் என இரண்டு புத்தகங்களையும் முடிக்கும்வரை தொடர்ந்து பைபிள் படிப்பு நடத்துவது நல்லது. இந்த இரு புத்தகங்களையும் படித்து முடிப்பதற்குமுன் அவர் ஞானஸ்நானம் எடுத்துவிட்டாலும் அவருக்குத் தொடர்ந்து படிப்பை நடத்த வேண்டும். இவ்வாறு நடத்தும்போது, படிப்பு நடத்தப்படுகிற நேரத்தை அறிக்கை செய்யலாம்; அதை மறுசந்திப்பாகவும் பைபிள் படிப்பாகவும் அறிக்கை செய்யலாம். அந்த படிப்புக்கு நம்மோடு வந்து கலந்துகொள்கிற பிரஸ்தாபியும் மணிநேரத்தை அறிக்கை செய்யலாம்.—ஏப்ரல் 2010 நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 6-ஐப் பாருங்கள்.
நம்முடைய பைபிள் மாணவர்கள் சத்தியத்தில் உறுதியாக வேரூன்றும்வரை அவர்களுக்கு படிப்பு நடத்துவது முக்கியம். கிறிஸ்துவில் “வேரூன்றியவர்களாகவும்” “விசுவாசத்தில் பலப்படுகிறவர்களாகவும்” இருந்தால்தான் வரவிருக்கிற சோதனைகளை அவர்களால் வெற்றிகரமாகச் சமாளிக்க முடியும். (கொலோ. 2:6, 7; 2 தீ. 3:12; 1 பே. 5:8, 9) அதோடு, மற்றவர்களுக்குத் திறம்பட்ட விதத்தில் கற்பிக்க, அவர்களுக்கு ‘சத்தியத்தைப் பற்றிய திருத்தமான அறிவும்’ தேவை. (1 தீ. 2:4) எனவே, இந்த இரண்டு புத்தகங்களிலிருந்தும் படிப்பு நடத்துவதன் மூலம், ‘வாழ்வுக்கு வழிநடத்தும் பாதையில்’ உறுதியாய் நிற்க நாம் அவர்களுக்கு உதவி செய்கிறோம்.—மத். 7:14.
ஒருவர் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தகுதி பெற்றுவிட்டார் என முடிவுசெய்வதற்கு முன்பு, அவர் அடிப்படை போதனைகளைத் தெளிவாகப் புரிந்திருக்கிறாரா, அவற்றின்படி வாழ்ந்து வருகிறாரா என மூப்பர்கள் நிச்சயப்படுத்திக்கொள்ள வேண்டும். குறிப்பாக, முதல் புத்தகத்தை படித்து முடிக்காத ஒருவர் ஞானஸ்நானம் எடுக்க விரும்பினால், அவருடன் கலந்தாலோசிக்கும் மூப்பர்கள் அவர் தகுதிபெற்றிருக்கிறாரா இல்லையா என்பதைக் கவனமாகச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். ஒருவர் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தகுதிபெறவில்லை என்றால், அவர் முன்னேற்றம் செய்வதற்குத் தேவையான உதவிகளை மூப்பர்கள் அளிக்க வேண்டும்; அப்படிச் செய்தால், அவர் எதிர்காலத்தில் ஞானஸ்நானம் பெறுவதற்குத் தகுதி பெற முடியும்.—கடவுளுடைய சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல், பக்கங்கள் 217-218.
[பக்கம் 2-ன் சிறுகுறிப்பு]
நம்முடைய பைபிள் மாணவர்கள் சத்தியத்தில் உறுதியாக வேரூன்றுவது முக்கியம்