-
இறந்த பிறகு என்ன நடக்கிறது?—பைபிள் தரும் பதில்காவற்கோபுரம் (பொது)—2017 | எண் 4
-
-
பைபிள் சொல்லும் உண்மை
மனிதன் படைக்கப்பட்டதைப் பற்றி ஆதியாகமம் புத்தகம் இப்படிச் சொல்கிறது: “கடவுளாகிய யெகோவா மனிதனை உருவாக்கத் தொடங்கினார். நிலத்திலிருந்து மண்ணை எடுத்து, ஓர் உடலை உருவாக்கி, மூக்கில் உயிர்மூச்சை ஊதினார். அப்போது அவன் உயிருள்ள மனிதன் ஆனான்.” “உயிருள்ள மனிதன்” என்ற வார்த்தை நெஃபெஷ்a என்ற எபிரெய வார்த்தையிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதன் நேரடி அர்த்தம் “சுவாசிக்கும் உயிரினம்.”—ஆதியாகமம் 2:7.
கடவுள் ஆதாமுக்கு “உயிர்மூச்சை” கொடுத்தபோது, அவன் உயிருள்ள மனிதன் ஆனான் என்று பைபிள் சொல்கிறது. ஆதாமைப் படைக்கும்போது அவனுக்குள் அழியாத ஆத்துமா என்ற ஒன்றை கடவுள் வைத்ததாக எந்தப் பதிவும் இல்லை. அதனால்தான் “அழியாத ஆத்துமா” என்ற வார்த்தை பைபிளில் எங்கேயும் இல்லை.
-
-
இறந்த பிறகு என்ன நடக்கிறது?—பைபிள் தரும் பதில்காவற்கோபுரம் (பொது)—2017 | எண் 4
-
-
a நெஃபெஷ் என்ற வார்த்தையை சில பைபிள் மொழிபெயர்ப்புகள் இப்படி மொழிபெயர்த்திருக்கின்றன: “உயிர் உள்ளவன்” என்று பொது மொழிபெயர்ப்பு சொல்கிறது. “உயிர்பெற்றான்” என்று ஈஸி டு ரீட் வர்ஷன் சொல்கிறது. “ஜீவாத்துமாவானான்” என்று தமிழ் O.V. சொல்கிறது.
-