உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • இன்பமான ஒரு பரதீஸில் மகத்தான மனித எதிர்பார்ப்புகள்
    காவற்கோபுரம்—1990 | மார்ச் 1
    • 2 “தேவனாகிய கர்த்தர் [யெகோவா, NW] வெளியின் சகலவித மிருகங்களையும், ஆகாயத்தின் சகலவிதப் பறவைகளையும் மண்ணினாலே உருவாக்கி, ஆதாம் அவைகளுக்கு என்ன பேரிடுவான் என்று பார்க்கும்படி அவைகளை அவனிடத்தில் கொண்டுவந்தார்; அந்தந்த ஜீவஜந்துக்கு ஆதாம் எந்தெந்தப் பேரிட்டானோ அதுவே அதற்குப் பேராயிற்று. அப்படியே ஆதாம் சகலவித நாட்டு மிருகங்களுக்கும், ஆகாயத்துப் பறவைகளுக்கும், சகலவிதக் காட்டுமிருகங்களுக்கும் பேரிட்டான்.”—ஆதியாகமம் 2:19, 20.

      3. ஆதாமின் பங்கிலும் மிருக சிருஷ்டிகளின் பங்கிலும் அங்கு ஏன் பயமிருக்கவில்லை?

      3 மனிதன் குதிரையை சஸ் என்றும், காளையை ஷார் என்றும், செம்மறியாட்டை சே என்றும், வெள்ளாட்டை எஸ் என்றும், பறவையை ஆஃப் என்றும், புறாவை யோனா என்றும், மயிலை டக்கி என்றும், சிங்கத்தை அரியே அல்லது அரி என்றும், கரடியை டாட் என்றும், வாலில்லாக் குரங்கை காஃப், என்றும் நாயை கீலவ் என்றும் சர்ப்பத்தை நாக்காஷ் என்றும் அழைத்தான்.a ஏதேன் தோட்டத்திலிருந்து வெளியே பாய்ந்து வந்த ஆற்றினிடமாக அவன் சென்றபோது, அவன் மீனைப் பார்த்தான். மீனுக்கு டாக்கா என்ற பெயரை அவன் கொடுத்தான். ஆயுதமின்றியிருந்த மனிதன் வீட்டு மிருகமாகவும் காட்டு மிருகமாகவும் இருந்த இந்த மிருகங்களைப் பார்த்து அல்லது பறவைகளைப் பார்த்து பயப்படவோ அல்லது அவை இவனைப் பார்த்து பயப்படவோ இல்லை. அவை அவனை இயல்புணர்ச்சியால் தங்களுக்கு மேம்பட்டவனாக, ஓர் உயர்வான உயிர் வகையாக அடையாளங்கண்டு கொண்டன. அவை கடவுளால் உயிரைப் பரிசாகப் பெற்ற கடவுளுடைய சிருஷ்டிப்புகளாக இருந்தன. மனிதனுக்கு அவைகளைக் காயப்படுத்தவோ அவைகளின் உயிரைக் கொல்லவோ எந்த ஆசையும் அல்லது மனச்சாய்வும் இருக்கவில்லை.

      4. அனைத்து மிருகங்களுக்கும் பறவைகளுக்கும் ஆதாம் பெயரிட்டதன் சம்பந்தாக நாம் என்ன ஊகித்துக்கூற முடியும்? இது என்ன வகையான ஓர் அனுபவமாக இருந்திருக்க வேண்டும்?

      4 நாட்டு மிருகங்களும் காட்டு மிருகங்களும் ஆகாயத்துப் பறவைகளும் எவ்வளவு காலமாக மனிதனுக்குக் காட்டப்பட்டது என்பது குறித்து பதிவு நமக்குச் சொல்வதில்லை. அவை அனைத்தும் தெய்வீக வழிநடத்துதல் மற்றும் ஏற்பாட்டின் கீழ் செய்யப்பட்டன. ஆதாம் ஒவ்வொரு மிருகத்தையும் அதன் தனித்தன்மையான பழக்க வழக்கங்களையும் உருவமைப்பையும் கூர்ந்து கவனித்து, ஆராய்வதற்கு நேரத்தை எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்; பின்னர் அவன் விசேஷமாக அதற்குப் பொருந்தக்கூடிய ஒரு பெயரைத் தெரிந்தெடுப்பான். இது கணிசமானக் காலப் பகுதிக் கடந்துபோவதை அர்த்தப்படுத்தக்கூடும். இவ்விதமாக, இந்தப் பூமியிலுள்ள உயிரினங்களோடு, அதன் அநேக வகைகளோடுகூட, அறிமுகமாவது ஆதாமுக்கு அதிக அக்கறையூட்டும் அனுபவமாக இருந்தது. இந்த உயிரினங்களின் ஒவ்வொரு வகையின் வேறுபாட்டையும் காண்பது அதிகமான மனதின் திறமையையும் பேச்சாற்றலையும் கேட்பதாயிருந்தது.

  • இன்பமான ஒரு பரதீஸில் மகத்தான மனித எதிர்பார்ப்புகள்
    காவற்கோபுரம்—1990 | மார்ச் 1
    • 7 கிளர்ச்சியூட்டும் அந்தச் சிருஷ்டிப்பின் பதிவுக்காக ஆதாம் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பான். அது அநேக காரியங்களுக்கு விளக்கமளித்தது. அதன் சொல்வடிவிலிருந்து, மனிதனுடைய அதிகக் குறுகிய 24 மணிநேர நாளைக் குறிப்பதற்காக நான்காவது சிருஷ்டிப்பு நாளில் கடவுள் ஆகாயவிரிவிலே இரண்டு பெரிய சுடர்கள் தோன்றும்படி செய்ததற்கு முன்பாக, கடவுளுடைய கணக்கீட்டு முறைப்படி அவர் நாட்கள் என்பதாக அழைத்தது, மூன்று நீண்ட காலப் பகுதிகள் என்பதை அவன் அறிந்து கொண்டான். பூமியில் மனிதனின் இந்தக் குறுகிய நாள், பெரிய சுடர் மறைவதிலிருந்து அது அடுத்து இறங்கிவரும் வரையாக கணக்கிடப்பட்டது. வருடக்கணக்கான காலங்கள் தனக்கிருக்கப் போவதையும்கூட அவன் உணர்ந்தவனாக, உடனடியாக தன் வாழ்க்கையின் வருடங்களைக் கணக்கிட ஆரம்பித்திருப்பான் என்பதில் சந்தேகமில்லை. ஆகாயவிரிவிலிருந்த பெரிய சுடர் இதைச் செய்வதற்கு அவனுக்கு உதவி செய்யும். ஆனால் கடவுளுடைய சிருஷ்டிப்பின் நீண்ட நாட்களைப் பொறுத்தவரையில், முதல் மனிதன் தான் கடவுளுடைய ஆறாவது பூமிக்குரிய சிருஷ்டிப்பு நாளிலிருந்ததை உணர்ந்துகொண்டான். நிலத்தில் நடமாடும் அந்த எல்லா மிருகங்களும் பின்னர் மனிதனும் தனித்தனியாக சிருஷ்டிக்கப்பட்ட ஆறாவது நாளின் முடிவைப் பற்றி எதுவும் இன்னும் அவனிடம் சொல்லப்படவில்லை. இப்பொழுது அவன் தாவர உயிரும் கடல்வாழ் உயிரும் பறவைகளும் நிலத்தில் நடமாடும் மிருகங்களும் சிருஷ்டிக்கப்பட்ட வரிசை கிரமத்தை புரிந்துகொள்வான். ஆனால் ஆதாம் ஏதேன் தோட்டத்தில், அவன்தானே பூமிக்குரிய பரதீஸில் மனிதனுக்குரிய கடவுளுடைய அன்புள்ள நோக்கத்தின் முழுமையான, நிறைவான வெளிக்காட்டாக இருக்கவில்லை.

      முதல் மனுஷியை சிருஷ்டித்தல்

      8, 9. (எ) மிருக சிருஷ்டிப்புகளைப் பற்றியதில் பரிபூரண மனிதன் எதை கவனித்தான்? ஆனால் தன்னைக் குறித்ததில் அவன் என்ன முடிவுக்கு வந்திருந்தான்? (பி) பரிபூரண மனிதன் துணைக்காகக் கடவுளிடம் கேட்காதிருந்தது ஏன் பொருத்தமாக இருந்தது? (சி) முதல் மனித மனைவியின் சிருஷ்டிப்பைப் பைபிள் பதிவு எவ்விதமாக விவரிக்கிறது?

      8 பரிபூரண மனதுடனும், கூர்ந்தாராயும் திறமையுடனும் முதல் மனிதன், பறவை மற்றும் மிருகங்களின் உலகில், ஆணும் பெண்ணுமிருப்பதையும் அவைகள் தங்களுக்குள் ஜாதியை இனப்பெருக்கம் செய்ததையும் பார்த்தான். ஆனால் மனிதனுடைய காரியத்தில் அப்போது அவ்விதமாக இருக்கவில்லை. கூர்மையாக இதை நோக்கியது, தோழமையை அனுபவித்துக் களிக்கும் விருப்பத்தை அவனில் ஏற்படுத்தினால், மிருகங்களின் உலகில், வாலில்லா குரங்குகளின் மத்தியிலும்கூட பொருத்தமான ஒரு துணையை அவன் காணவில்லை. தனக்கு ஒரு துணை இல்லை என்ற முடிவுக்கு ஆதாம் வந்திருக்க வேண்டும். ஏனென்றால் அவ்விதமாக ஒன்று இருந்திருந்தால், கடவுள் இந்தத் துணையை அவனிடம் அழைத்து வந்திருக்கமாட்டாரா? மனிதன் அந்த எல்லா மிருக ஜாதிகளிலிருந்தும் தனியாக சிருஷ்டிக்கப்பட்டு, அவன் வித்தியாசமாக இருக்கும்படியாக திட்டமிடப்பட்டான்! அவன் காரியங்களைத் தானாக தீர்மானித்து, தன்னுடைய சிருஷ்டிகராகிய கடவுளிடம் ஒரு துணையைத் துடுக்காக கேட்கக் கூடாதவனாக இருந்தான். பரிபூரண மனிதன் முழு காரியத்திலும் கடவுளையே நம்பியிருக்க அனுமதிப்பது பொருத்தமாக இருந்தது. ஏனென்றால், அதற்குப் பின் உடனடியாகவே கடவுள் இந்த நிலைமையைப் பற்றிய தன்னுடைய சொந்த தீர்மானத்துக்கு வந்திருந்தார். இதைக்குறித்தும், இப்பொழுது என்ன நடந்தது என்பதையும் பற்றி பதிவு நமக்குச் சொல்வதாவது:

      9 “ஆதாமுக்கோ ஏற்ற துணை இன்னும் காணப்படவில்லை. அப்பொழுது தேவனாகிய யெகோவா ஆதாமுக்கு அயர்ந்த நித்திரையை வரப்பண்ணினார், அவன் நித்திரையடைந்தான்; அவர் அவன் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து, அந்த இடத்தைச் சதையினால் அடைத்தார். தேவனாகிய யெகோவா தாம் மனுஷனில் எடுத்த விலா எலும்பை மனுஷியாக உருவாக்கி, அவளை மனுஷனிடத்தில் கொண்டு வந்தார். அப்பொழுது ஆதாம்: ‘இவள் என் எலும்பில் எலும்பும், என் மாம்சத்தில் மாம்சமுமாய் இருக்கிறாள்; இவள் மனுஷனில் எடுக்கப்பட்டபடியினால் மனுஷி என்னப்படுவாள்’ என்றான். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். ஆதாமும் அவன் மனைவியுமாகிய இருவரும் நிர்வாணிகளாயிருந்தும், வெட்கப்படாதிருந்தார்கள்.”—ஆதியாகமம் 2:20–25.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்