மனிதவர்க்க மரபினர்கள்
சொற்பொருள் விளக்கம்: இங்கே பயன்படுத்தியிருக்கிறபடி, மரபு என்பது பரம்பரையாய்ச் சுதந்தரிக்கக்கூடியவையும், தெளிவான தனி மனித மாதிரியாக அந்தத் தொகுதியைப் பிரித்துவைப்பதற்குப் போதியவையுமான சில ஒன்றிணைந்த உடற்சாயல்களைத் தனிச்சிறப்பான அளவுகளில் கொண்டிருக்கும் ஒரு மனிதவர்க்கப் பிரிவைக் குறிக்கிறது. எனினும், மரபினர்கள் கலப்பு மணம்செய்து இனப்பெருக்கம் செய்யக்கூடியது அவர்கள் உண்மையில் ஒரே “வகையினரே,” எல்லாரும் மனிதக் குடும்பத்தின் அங்கத்தினரேயெனக் காட்டுகிறது. ஆகையால் பல்வேறு மரபினர்களும் மனிதவர்க்கத்தில் கூடியதாயுள்ள மொத்த மாறுபாட்டின் வெறும் முகப்புப் பகுதியினரேயாவர்.
இந்தப் பல்வேறு மரபினர்கள் எங்கிருந்து வந்தனர்?
ஆதி. 5:1, 2; 1:28: “தேவன் மனுஷனைச் சிருஷ்டித்த நாளிலே அவனைத் தேவசாயலாக உண்டாக்கினார். அவர்களை ஆணும் பெண்ணுமாகச் சிருஷ்டித்து, அவர்களை ஆசீர்வதித்து, அவர்களைச் சிருஷ்டித்த நாளிலே அவர்களுக்கு மனுஷர் [அல்லது, மனிதவர்க்கம்] என்று பேரிட்டார்.” “தேவன் அவர்களை நோக்கி: நீங்கள் பலுகிப் பெருகி, பூமியை நிரப்[புங்கள்] . . . என்று சொல்லி, தேவன் அவர்களை ஆசீர்வதித்தார்.” (இவ்வாறு மனிதவர்க்கத்தினர் யாவரும் அந்த முதல் மனித ஜோடியான, ஆதாம் ஏவாளின் சந்ததியார்.)
அப். 17:26: “மனுஷஜாதியான சகல ஜனங்களையும் அவர் [கடவுள்] ஒரே இரத்தத்தினாலே [ஆதாமிலிருந்து] தோன்றப்பண்ணி, பூமியின்மீதெங்கும் குடியிருக்கச் செய்”தார். (ஆகையால், எந்த மரபினர் ஒரு தேசத்தை உண்டுபண்ணினாலும், அவர்கள் எல்லாரும் ஆதாமின் சந்ததியாரே.)
ஆதி. 9:18, 19: “பேழையிலிருந்து புறப்பட்ட நோவாவின் குமாரர், சேம் காம் யாப்பேத் என்பவர்களே. . . . இம்மூவரும் நோவாவின் குமாரர்; இவர்களாலே பூமியெங்கும் ஜனங்கள் பரம்பினார்கள்.” (நோவாவின் நாளில் தேவபக்தியற்ற உலகத்தை பூகோள ஜலப்பிரளயத்தைக்கொண்டு கடவுள் அழித்தப் பின்பு, பூமியின் புதிய ஜனத்தொகையினர் இன்று அறியப்பட்டுள்ள எல்லா மரபினர்களும் உட்பட, நோவாவின் மூன்று குமாரரிலிருந்தும் அவர்களுடைய மனைவிகளிலிருந்தும் தோன்றினார்கள்.)
ஆதாமும் ஏவாளும் வெறும் உருவகமான (கற்பனையுருவான) ஆட்களா?
இந்தக் கருத்தை பைபிள் ஆதரிக்கிறதில்லை; “ஆதாமும் ஏவாளும்,” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.
ஒரே குடும்பமே இருந்ததெனில் காயீன் தன் மனைவியை எங்கிருந்து அடைந்தான்?
ஆதி. 3:20: “ஆதாம் தன் மனைவிக்கு ஏவாள் என்று பேரிட்டான்; ஏனெனில், அவள் ஜீவனுள்ளோருக்கெல்லாம் தாயானவள்.” (ஆகையால் மனிதர் எல்லாரும் ஆதாம் ஏவாளின் சந்ததியாயிருப்பர்.)
ஆதி. 5:3, 4: “ஆதாம் நூற்று முப்பது வயதானபோது, தன் சாயலாகத் தன் ரூபத்தின்படியே ஒரு குமாரனைப் பெற்று, அவனுக்குச் சேத் என்று பேரிட்டான். ஆதாம் சேத்தைப் பெற்றபின், எண்ணூறு வருஷம் உயிரோடிருந்து, குமாரரையும் குமாரத்திகளையும் பெற்றான்.” (காயீன் ஆதாமின் குமாரரில் ஒருவன், ஆதாமின் குமாரத்திகளில் ஒருத்தி காயீனின் மனைவியாகியிருக்கவேண்டும். அக்கால மனித சரித்திரத்தில் மனிதரின் வாழ்க்கை நீடிப்பு குறித்துக் காட்டுகிறபடி, மனிதர் இன்னும் மிக மேம்பாடுள்ள உடல் நலத்தையும் பலத்தையும் கொண்டிருந்தபோது, நெருங்கிய உறவினரை மணம் செய்வதன் விளைவாய் ஊறுபாடுகள் சந்ததிக்குக் கடத்தப்படுவது அதிகமாயில்லை. எனினும், மனிதசரித்திரத்தில் ஏறக்குறைய 2,500 ஆண்டுகளுக்குப் பின்பே, மனிதவர்க்கத்தின் உடல்நிலை மிகவும் மோசமானபோது, யெகோவா, நெருங்கிய உறவினரை மணஞ்செய்வதைத் தடுத்து நிறுத்தும் சட்டங்களை இஸ்ரவேல் ஜனத்துக்குக் கொடுத்தார்.)
ஆதி. 4:16, 17: “காயீன் கர்த்தருடைய சந்நிதியைவிட்டுப் புறப்பட்டு, ஏதேனுக்குக் கிழக்கான நோத் என்னும் தேசத்தில் குடியிருந்தான். காயீன் தன் மனைவியை அறிந்தான் [“பாலுறவுகொண்டான்,” NW; “தன் மனைவியோடு சயனித்தான்,” NE]; அவள் கர்ப்பவதியாகி, ஏனோக்கைப் பெற்றாள்; அப்பொழுது அவன் ஒரு பட்டணத்தைக் கட்டி, அந்தப் பட்டணத்துக்குத் தன் குமாரனாகிய ஏனோக்குடைய பேரை இட்டான்.” (காயீன், தன் மனைவி வேறொரு குடும்பத்திலிருந்து வந்ததுபோல், தான் ஓடிப்போன நாட்டில் அவளை முதலாவது சந்திக்கவில்லை என்பதைக் கவனியுங்கள். அதற்கு மாறாக, ஒரு குமாரனைப் பிறப்பிக்க அங்கே அவன் அவளோடு பாலுறவு கொண்டான்.)
பல்வேறு மரபுப் பண்புகளின் தோற்றத்தை எது விளக்குகிறது?
“இன்று வாழும் எல்லா மனிதரும், ஹோமோசப்பியன்ஸ் என்ற ஒரே உயிரினத்துக்குரியவர்கள், ஒரு பொது மூதாதையிலிருந்து வந்தவர்கள். . . . மனிதருக்கிடையேயுள்ள உயிர்நுண்ம வேறுபாடுகள் பரம்பரை உடல்கட்டமைப்பிலுள்ள வேறுபாடுகளின் மற்றும் பிறப்பு மூலத்துக்குரிய உள்ளார்ந்த ஆற்றலின்பேரில் சுற்றுப்புற பாதிப்பின் காரணத்தினாலாகும். பெரும்பான்மையான காரியங்களில், அந்த வேறுபாடுகள் இந்த இரண்டு காரணத் தொகுதிகளின் செயலெதிர்ச்செயலின் காரணமாயுண்டானவை. . . . ஒரு மரபுக்குள்தானே அல்லது ஜனத்தொகைக்குள்தானேயுள்ள தனித்தனி ஆட்களுக்கிடையே ஏற்பட்டிருக்கும் வேறுபாடுகள் மரபுகளுக்கிடையே அல்லது ஜனத்தொகைகளுக்கிடையேயுள்ள சராசரி வேறுபாடுகளைப்பார்க்கிலும் பெரும்பாலும் மிகுதியாயிருக்கின்றன.”—UNESCO என்பதால் கூட்டப்பட்ட சர்வதேச விஞ்ஞானிகளின் குழு, மரபின்பேரில் கூற்று என்பதில் குறிப்பிட்டது (நியு யார்க், 1972, மூன்றாவது பதிப்பு), ஆஷ்லி மான்டகு, பக். 149, 150.
“மரபு என்பது, தொடக்கத்தில் மனித இனம் பூகோளத்தில் பரவினபோதும் அதைப் பின்தொடர்ந்தும் பிரிய நேரிட்டு ஓரளவு ஒதுக்கநிலைக்குள்ளான உயிர்ம இணைமரபுக்கீற்று பொதுச் சேர்மங்களில் ஒன்றேயாகும். பெரும்பாலும் பூமியின் ஐந்து பெரிய கண்டங்களின் பரப்பெல்லைகள் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு மரபு தோன்றியுள்ளது. . . . இந்தச் சரித்திர நிலைமாற்றத்தின்போது மனிதன் நிச்சயமாகவே பரம்பரைவழியில் பிரிந்தனர், பூர்வ நிலப்பகுதி மரபினரில் இன்று மீந்துள்ளதிலிருந்த இந்தப் பிரிந்த நிலையின் விளைவுகளை நாம் அளவிட மற்றும் ஆராய முடியும். நாம் எதிர்பார்க்கக்கூடியபடி, வெவ்வேறு திசைகளில் பிரிந்துசென்ற இது உறவின் தொலையளவு ஒதுக்கநிலையோடு தொடர்புடையதாய்த் தோன்றுகிறது. உலகமெங்கும் ஒதுக்கநிலைக்குள்ளான உயிர்ம இணைமரபுக்கீற்று பொது சேர்மங்களில் ஆயிரக்கணக்கான ஜனத்தொகைகள் வளர்ச்சித்தடை நிலைக்குட்பட்டதுடன் மரபு உருவாகுதல் நடைபெற்றபோது, நாம் இப்பொழுது காணும் உயிர்ம இணைமரபுக்கீற்று பொதுமுறை வேறுபாடுகள் நிலைநாட்டப்பட்டன. மனிதவர்க்கத்தினரின் ஒவ்வொரு தொகுதியும் வெளிப்புறத்தில் வேறுபட்டுத் தோன்றுகிறதெனினும் இந்த வேறுபாடுகளின் உட்புறத்திலோ மூலாதார ஒரேவகையான தன்மையே உள்ளதாயிருப்பது நம்மை எதிர்ப்படுகிற புதிராகும்.” (பண்பின் மரபுத்தொடர்பும் மனித வாழ்க்கையும், நியு யார்க், 1963, H. L. கர்ஸன், பக். 151, 154, 162, 163) (இவ்வாறு மனிதசரித்திரத்தின் தொடக்கத்தில், ஜனங்களின் ஒரு தொகுதி மற்றவர்களிலிருந்து தொடர்பில்லாமல் தனிப்படுத்தப்பட்ட நிலைக்குள்ளாகி அந்தத் தொகுதிக்குள்ளேயே மணம் செய்துவந்தபோது, அவர்களுடைய சந்ததியில் சில தனிமாதிரியான மரபுவழிப் பண்பியல் சார்ந்த சாயல்களின் ஒருங்கிணைபுகள் அவர்களுடைய சந்ததியில் முனைப்பாய் ஊன்றித்தோன்றின.)
கறுப்பர் சபிக்கப்பட்டவரென பைபிள் கற்பிக்கிறதா?
இந்த எண்ணம் ஆதியாகமம் 9:25-ஐ தவறாகப் புரிந்துகொள்வதன்பேரில் ஆதாரங்கொண்டிருக்கிறது, அங்கே நோவா பின்வருமாறு சொல்வதாகக் குறிப்பிட்டுள்ளது: “கானான் சபிக்கப்பட்டவன், தன் சகோதரரிடத்தில் அடிமைகளுக்கு அடிமையாயிருப்பான்.” இதைக் கவனமாய் வாசியுங்கள்; இது தோல் நிறத்தைப்பற்றி ஒன்றும் சொல்கிறதில்லை. இந்தச் சாபம் ஏனெனில், காமின் குமாரன் கானான், சபிக்கப்படுவதற்குத் தகுதியான மிக வெறுப்பூட்டும் ஏதோ செயலை நடப்பித்ததாகத் தெரிகிறது. ஆனால் கானானின் சந்ததியார் யாவர்? கறுப்பர் அல்லர், மத்தியதரைக் கடலுக்குக் கிழக்கே வாழ்ந்துகொண்டிருந்த வெளுத்தத் தோல்நிற ஜனங்களேயாவர். அவர்களுடைய மிக மோசமான நடத்தை, பேய்த்தன சடங்குகள், விக்கிரகாராதனை, மற்றும் பிள்ளைகளைப் பலியிடுதல் ஆகியவற்றின் காரணமாக, அவர்கள் தெய்வீகத் தண்டனைத்தீர்ப்பின்கீழ் வந்தனர். இந்தக் கானானியர் குடியிருந்த தேசத்தைக் கடவுள் இஸ்ரவேலருக்குக் கொடுத்தார். (ஆதி. 10:15-19) கானானியர் எல்லாரும் அழிக்கப்படவில்லை; இந்தச் சாபத்தின் நிறைவேற்றமாகச் சிலர் கட்டாய உழைப்புக்குட்படுத்தப்பட்டனர்.—யோசுவா 17:13.
நோவாவின் எந்தக் குமாரனின் தலைமுறையில் இந்தக் கறுப்பர் வந்தனர்? “கூஷுடைய [காமின் குமாரரில் மற்றொருவனுடைய] குமாரர், சேபா, ஆவிலா, சப்தா, ராமா, சப்திகா என்பவர்கள்.” (ஆதி. 10:6, 7) பின்னால் கூஷைக் குறிப்பிடும் பைபிள் குறிப்புகள் பொதுவாய் எத்தியோப்பியாவுக்கு ஒத்திருக்கிறது. ஆப்பிரிக்காவின் கிழக்குப் பாகத்தில் பெரும்பாலும் எத்தியோப்பியாவுக்கு அருகில் இருந்த மற்றொரு ஜனத்தை பின்னால் குறிக்கையில் சேபா பயன்படுத்தியுள்ளது.—ஏசா. 43:3, NW வசனக்குறிப்பு பைபிளில் அடிக்குறிப்பு.
எல்லா மனிதரும் கடவுளுடைய பிள்ளைகளா?
கடவுளுடைய பிள்ளைகளாயிருப்பது அபூரண மனிதரான நமக்குப் பிறப்பினால் உரிமையளிக்கப்பட்ட ஒன்றல்ல. ஆனால் நாம் எல்லாரும் ஆதாமின் சந்ததியார், ஆதாம் பரிபூரணனாய்ச் சிருஷ்டிக்கப்பட்டபோது “கடவுளின் குமாரன்” ஆக இருந்தான்.—லூக்கா 3:38, தி.மொ.
அப். 10:34, 35, தி.மொ.: “கடவுள் பட்சபாதமுள்ளவரல்ல . . . அவருக்குப் பயந்திருந்து நீதியைச் செய்கிறவன் எந்த ஜாதியானாயினும் அவர் அங்கிகாரத்துக்குரியவன்.”
யோவான் 3:16, தி.மொ.: “கடவுள் தமது ஒரேபேறான குமாரனில் விசுவாசமாயிருக்கிறவன் எவனும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனைப் பெறும்படி அவரைத் தந்தருளி, இவ்வளவாய் உலகத்தில் அன்புகூர்ந்தார்.” (கடவுளுடன், ஆதாம் இழந்த வகையான உறவை நம்மில் எவராயினும் பெறுவதற்கு அவரில் உண்மையான விசுவாசத்தைச் செயலில் காட்டுவது தேவைப்படுகிறது. இந்தச் சிலாக்கியம் எல்லா மரபினரான ஜனங்களுக்கும் திறந்திருக்கிறது.)
1 யோவான் 3:10: “இதினாலே தேவனுடைய பிள்ளைகள் இன்னாரென்றும், பிசாசின் பிள்ளைகள் இன்னாரென்றும் வெளிப்படும்; நீதியைச் செய்யாமலும் தன் சகோதரனில் அன்புகூராமலும் இருக்கிற எவனும் தேவனால் உண்டானவனல்ல.” (ஆகையால் கடவுள் எல்லா மனிதரையும் தம்முடைய பிள்ளைகளாகக் கருதுகிறதில்லை. ஆவிக்குரிய நோக்குநிலையில், கடவுள் கண்டனஞ்செய்வதை அறிந்தும் வேண்டுமென்றே பழக்கமாய்ச் செய்வோர் பிசாசைத் தங்கள் பிதாவாகக் கொண்டிருக்கின்றனர். யோவன் 8:44-ஐ பாருங்கள். எனினும், உண்மையான கிறிஸ்தவர்கள் தெய்வீகப் பண்புகளைப் பிரதிபலிக்கின்றனர். இவர்களுக்குள் ஒரு வரம்புக்குட்பட்ட எண்ணிக்கையானோரைக் கிறிஸ்துவுடன் பரலோகத்தில் அரசராக ஆளும்படி கடவுள் தெரிந்தெடுத்திருக்கிறார். இவர்களைத் தம்முடைய “பிள்ளைகள்” அல்லது தம்முடைய “புத்திரர்” என கடவுள் குறிப்பிட்டுப் பேசுகிறார். மேலுமான விவரங்களுக்கு “மறு பிறப்பு” என்ற முக்கிய தலைப்பின்கீழ்ப் பாருங்கள்.)
ரோமர் 8:19-21: “தேவனுடைய புத்திரர் வெளிப்படுவதற்குச் சிருஷ்டியானது மிகுந்த ஆவலோடே காத்துக்கொண்டிருக்கிறது. . . . சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும்.” (“தேவனுடைய புத்திரர்” பரலோக வாழ்க்கையைப் பெற்றப் பின், கிறிஸ்துவின் வழிநடத்துதலின்கீழ் மனிதவர்க்கத்தின் சார்பில் உடன்பாடான நடவடிக்கை எடுப்பவராய் ‘வெளிப்படுகையில்’ மனிதவர்க்கத்துக்கு விடுதலை வரும். [“சிருஷ்டி” என்று வேதவசனத்தில் குறிப்பிட்டிருக்கிற] பூமியிலுள்ள உண்மையுள்ளவர்கள் மனித பரிபூரணத்தை அடைந்து, சர்வலோக அரசராக யெகோவாவுக்கு அசைக்கமுடியாத உண்மைத்தவறாமையை மெய்ப்பித்துக் காட்டினபின்பு, அவர்களும் அப்பொழுது கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மேன்மையான உறவை அனுபவித்து மகிழ்வர். எல்லா மரபினர்களின் ஜனங்களும் இதில் பங்குகொள்வார்கள்.)
எல்லா மரபினர்களின் ஜனங்களும் சகோதரர் சகோதரிகளாக என்றாவது உண்மையில் ஒற்றுமைப்படுத்தப்படுவார்களா?
தம்முடைய உண்மையான சீஷர்களாக இருக்கப்போகிறவர்களுக்கு இயேசு: “நீங்கள் எல்லாரும் சகோதரர்,” என்று சொன்னார். (மத்தேயு 23:8, தி.மொ.) பின்னால் அவர் மேலும் சொன்னதாவது: “நீங்கள் ஒருவரிலொருவர் அன்புள்ளவர்களாயிருந்தால், அதினால் நீங்கள் என்னுடைய சீஷர்களென்று எல்லாரும் அறிந்துகொள்வார்கள்.”—யோவான் 13:35.
மனித அபூரணங்கள் இருப்பினும், அந்த ஒருமைப்பட்ட உணர்ச்சி பூர்வக் கிறிஸ்தவர்களுக்குள் நடைமுறை மெய்ம்மையாயிருந்தது. அப்போஸ்தலன் பவுல் பின்வருமாறு எழுதினான்: “யூதனென்றும் கிரேக்கனென்றுமில்லை, அடிமையென்றும் சுயாதீனனென்றுமில்லை, ஆணென்றும் பெண்ணென்றுமில்லை; நீங்களெல்லாரும் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒன்றாயிருக்கிறீர்கள்.”—கலா. 3:28.
மரபு வேறுபாடுகளால் கெடுக்கப்படாத கிறிஸ்தவ சகோதரத்துவம் இந்த 20-ம் நூற்றாண்டில் யெகோவாவின் சாட்சிகளுக்குள் நடைமுறை மெய்ம்மையாயிருக்கிறது. U.S. கத்தோலிக் பத்திரிகையில் எழுத்தாளர் உவில்லியம் உவேலன் பின்வருமாறு கூறினார்: “[யெகோவாவின் சாட்சிகளின் அமைப்பின்] மிக அதிக கவர்ச்சிகரமான தனிப்பண்புகளில் ஒன்று அதன் மரபினர்களின் சமத்துவ பாரம்பரிய நடத்தைப்போக்கென நான் நம்புகிறேன்.” ஆக்ஸ்ஃபர்ட் பல்கலைக்கழக மனித-சமுதாய ஆராய்ச்சி நிபுணர் பிரையன் உவில்சன், ஆப்பிரிக்காவிலுள்ள யெகோவாவின் சாட்சிகளைப்பற்றி விரிவான ஆராய்ச்சி செய்தபின் கூறினதாவது: “சாட்சிகளே, தாங்கள் புதிதாய்ச் சேர்க்கும் தங்கள் சொந்த ஆட்களுக்குள் அவர்கள் குலமரபு வேறுபாட்டுணர்ச்சிகளை அகற்றிப்போடும் வேகத்தில் வேறு எந்தத் தொகுதியைப் பார்க்கிலும் பெரும்பாலும் அதிக வெற்றிகரமானவர்கள்.” 123 நாடுகளிலிருந்துவந்த சாட்சிகளின் சர்வதேச கூட்டம் ஒன்றின்பேரில் அறிக்கைசெய்து, தி நியு யார்க் டைம்ஸ் பத்திரிகை சொன்னதாவது: “சாட்சிகள் தங்கள் எண்ணிக்கைகளினால் மட்டுமல்ல, தங்கள் பல்வேறு வகையாலும் (எல்லா வாழ்க்கைநிலையிலுமுள்ள ஜனங்கள் அடங்கியவர்கள்), தங்கள் மரபு தற்பெருமையுணர்ச்சியற்றத் தன்மையாலும் (சாட்சிகளில் பலர் நீக்ரோக்கள்) மற்றும் தங்கள் அமைதியான, ஒழுங்குள்ள நடத்தையாலும் நியு யார்க் மக்கள் மனதைக் கவர்ந்தார்கள்.”
சீக்கிரத்தில் கடவுளுடைய ராஜ்யம், யெகோவா தேவனையும் தங்கள் உடன்தோழரான மனிதரையும் உண்மையாய் நேசியாத எல்லாரையும் உட்பட, இந்தத் தற்போதைய தெய்வபக்தியற்றக் காரிய ஒழுங்குமுறையை அழித்துவிடும். (தானி. 2:44; லூக்கா 10:25-28) தப்பிப்பிழைப்போர் “சகல ஜாதிகளிலும் கோத்திரங்களிலும் ஜனங்களிலும் பாஷைக்காரரிலுமிருந்து வந்த” ஆட்களாயிருப்பரென கடவுளுடைய வார்த்தை வாக்குக்கொடுக்கிறது. (வெளி. 7:9) உண்மையான கடவுளை வணங்குவதாலும், இயேசு கிறிஸ்துவில் கொண்டுள்ள விசுவாசத்தாலும், ஒருவருக்கொருவர் கொண்டுள்ள அன்பாலும், அவர்கள் உண்மையாய் ஒன்றுசேர கவர்ந்திழுக்கப்பட்டு, உண்மையில் ஒன்றுபட்ட மனிதக் குடும்பமாயிருப்பர்.