-
நோவாவின் பேழையும் கப்பல் வடிவமைப்பும்விழித்தெழு!—2007 | ஜனவரி
-
-
துன்மார்க்கத்தில் திளைத்திருந்த இந்தப் பூமியைத் தண்ணீரினால் துடைத்தழிக்க கடவுள் தீர்மானித்திருந்ததை ஆதியாகமப் புத்தகத்திலுள்ள பதிவு காட்டுகிறது. இந்தப் பெருவெள்ளத்திலிருந்து தப்பிப்பதற்கு ஒரு பேழையைக் கட்டும்படி நோவாவிடம் கடவுள் சொன்னார். அதன் மூலம் அவரையும் அவர் குடும்பத்தையும் எல்லாவித மிருகங்களையும் பாதுகாக்கும்படி கூறினார். 300 முழ நீளம், 50 முழ அகலம், 30 முழ உயரமுள்ள பேழையைக் கட்டும்படி உத்தரவிட்டார். (ஆதியாகமம் 6:15) அது தோராயமாக, சுமார் 134 மீட்டர் நீளம், 22 மீட்டர் அகலம், 13 மீட்டர் உயரம் இருந்திருக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டிருக்கிறது.a பேழையின் மொத்த எடை சுமார் 40,000 கன சதுரமாக இருந்தது. ஆகவே, இது இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் அளவு, கிட்டத்தட்ட ஆடம்பர டைட்டானிக் கப்பல் இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் அளவுக்கு இருந்தது.
-
-
நோவாவின் பேழையும் கப்பல் வடிவமைப்பும்விழித்தெழு!—2007 | ஜனவரி
-
-
காற்றடித்தாலும் அலையடித்தாலும் கவலையில்லை
பேழையின் நீளம் அதன் அகலத்தைவிட ஆறு மடங்கு அதிகமாகவும் அதன் உயரத்தைவிட பத்துமடங்கு அதிகமாகவும் இருந்தது. இன்றைய கப்பல்களின் அநேகம் கிட்டத்தட்ட இந்தப் பேழையின் விகிதாச்சாரத்திலே கட்டப்படுகின்றன. அவற்றின் நீளமும் அகலமும் தண்ணீரைக் கிழித்துச் செல்வதற்குத் தேவையான ஆற்றலுக்கு ஏற்ப தேர்ந்தெடுக்கப்படுகின்றன. நோவாவின் பேழை நீரை கிழித்துக்கொண்டு செல்ல தேவையில்லை, மிதந்தால் மாத்திரம் போதும். அது சுலபமாக மிதந்திருக்குமா?
காற்றையும் அலைகளையும் கப்பல் தாக்குப்பிடிக்கிற தன்மையையே ஆங்கிலத்தில் “ஸீ கீப்பிங் பிஹேவியர்” என்கிறார்கள். இதுவும் கப்பலின் நீளத்தையும் அகலத்தையும் உயரத்தையும் பொருத்தே இருக்கிறது. மழைக் கொட்டோ கொட்டென்று கொட்டி, வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியதாக பைபிள் சொல்கிறது; அதோடு, கடவுள் காற்றை வீசச் செய்ததாகவும் அது சொல்கிறது. (ஆதியாகமம் 7:11, 12, 17-20; 8:1) அப்போது காற்றும் அலையும் எவ்வளவு ஆக்ரோஷமாக தங்கள் கைவரிசையைக் காட்டின என்பதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. ஆனால், காற்று மற்றும் அலையின் வேகமும் போக்கும் இன்று போலவே அன்றும் அவ்வப்போது மாறிக்கொண்டே இருந்திருக்கலாம். காற்று வீசும் திசைக்கு எதிர் திசையிலேயே வழக்கமாக அலைகள் அடிக்கும். நெடுநேரமாக கடுங்காற்று வீசும்போது ஆளையே விழுங்கிவிடும் அளவுக்கு இராட்சத அலைகள் அடுத்தடுத்து மேல் எழும்பும். அதோடு, நிலநடுக்கத்தால் பயங்கரமான அலைகள் ஏற்பட்டிருக்கலாம்.
சரியான அளவுகளில் பேழை துல்லியமாகக் கட்டப்பட்டிருந்ததால் அது மூழ்கிவிடாமல் மிதந்தது. ஆக்ரோஷ அலைவீசும் கடல்களில் பயணிக்கும்போது அதன் முன்பக்கம் நீரில் மூழ்கி விடாமல் இருக்கும் விதத்திலும் அது கட்டப்பட்டிருந்தது. ஒவ்வொரு அலையும் பேழையின் முனைகளை கன்னாபின்னாவென்று தூக்கி மீண்டும் நீரில் அமிழ்த்தும்போது உள்ளே இருந்த மக்களுக்கும் மிருகங்களுக்கும் அதிக அசெளகரியம் ஏற்பட்டிருக்கும். இப்படி அலைகள் கப்பலைத் தூக்கியடிக்கும்போது கப்பல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. பெரிய அலைகள் வந்து ஒரே சமயத்தில் கப்பலின் இருமுனைகளையும் தூக்கினால் கப்பலின் நடுப்பகுதி மூழ்காமல் தாக்குப்பிடிப்பதற்கு அது உறுதியாக இருக்க வேண்டும். எனினும், ஒரு பெரிய அலை கப்பலின் நடுப்பகுதியைத் தூக்கியடிக்குமானால் அதன் முகப்பும் பின்புறமும் தண்ணீருக்குள் மூழ்கிவிடலாம். 10-க்கு ஒன்று என்ற விகிதத்தில் பேழையின் நீளத்தையும் உயரத்தையும் அமைக்கும்படி நோவாவிடம் கடவுள் கூறினார். இந்த விகிதாச்சாரமே கடுமையான அலைகளை சமாளிக்க வல்லது என்பதைக் கப்பல் கட்டுபவர்கள் பின்பு தங்கள் கசப்பான அனுபவத்திலிருந்து கற்றுக்கொண்டார்கள்.
-