-
உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!காவற்கோபுரம் (படிப்பு)-2019 | பிப்ரவரி
-
-
3. (அ) உத்தமம் என்றால் என்ன? (ஆ) அதன் அர்த்தத்தைப் புரிந்துகொள்ள எந்த உதாரணங்கள் உதவுகின்றன?
3 முழுமனதோடு யெகோவாமீது அன்பு காட்டுவதும், அவரோடு முறிக்கமுடியாத ஒரு பந்தத்தை வைத்துக்கொள்வதும், எப்போதும் அவருக்குப் பிரியமானதைச் செய்வதும்தான் உத்தமம்! இப்படிச் செய்வதன் மூலம் கடவுளுடைய ஊழியர்கள் உத்தமத்தைக் காட்டுகிறார்கள். இப்போது, உத்தமம் என்ற வார்த்தை பைபிளில் எப்படிப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று பார்க்கலாம். “உத்தமம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை, நிறைவான, குறையில்லாத அல்லது முழுமையான ஒன்றைக் குறிக்கிறது. உதாரணத்துக்கு, இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு மிருக பலிகளைச் செலுத்தும்போது, அவை குறையில்லாதவையாக இருக்க வேண்டும் என்று திருச்சட்டம் சொன்னது.b (அடிக்குறிப்பைப் பாருங்கள்.) (லேவி. 22:21, 22) காலோ காதோ கண்ணோ இல்லாத ஒரு மிருகத்தை அல்லது நோய் பிடித்த ஒரு மிருகத்தை அவர்கள் பலி செலுத்த முடியாது. அந்த மிருகம் முழுமையானதாகவும் நோயில்லாததாகவும் இருக்க வேண்டும் என்று யெகோவா எதிர்பார்த்தார்; அதை அவர் ரொம்ப முக்கியமானதாக நினைத்தார். (மல். 1:6-9) யெகோவா ஏன் இப்படி எதிர்பார்த்தார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. இதை யோசித்துப்பாருங்கள். அழுகிப்போன பழத்தையோ, சில பக்கங்கள் இல்லாத புத்தகத்தையோ, சில பாகங்கள் இல்லாத கருவியையோ நாம் வாங்குவோமா? நிச்சயம் வாங்க மாட்டோம். நாம் வாங்குகிற பொருள்கள் நிறைவானவையாக, குறையில்லாதவையாக அல்லது முழுமையானவையாக இருக்க வேண்டும் என்று நாம் எதிர்பார்ப்போம். நம்முடைய அன்பையும் உண்மைத்தன்மையையும் பொறுத்தவரை யெகோவாவும் அதைத்தான் எதிர்பார்க்கிறார். அது நிறைவானதாக, குறையில்லாததாக அல்லது முழுமையானதாக இருக்க வேண்டும்!
-
-
உங்கள் உத்தமத்தைக் காத்துக்கொள்ளுங்கள்!காவற்கோபுரம் (படிப்பு)-2019 | பிப்ரவரி
-
-
b “குறையில்லாத” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரெய வார்த்தை, மிருகத்தைப் பற்றிக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. இது, மனிதர்களைப் பற்றிக் குறிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் “உத்தமம்” என்ற வார்த்தையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது.
-