-
தேவதூதர்கள் யார்?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
5. ஆவியுலகத் தொடர்பை விட்டொழியுங்கள்
சாத்தானும் பேய்களும் யெகோவாவின் எதிரிகள், நமக்கும் எதிரிகள்தான். லூக்கா 9:38-42-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பேய்கள் மக்களை என்ன செய்கின்றன?
நாம் பேய்களுக்கு இடம் கொடுத்து வீண் வம்பை விலைக்கு வாங்கக் கூடாது. உபாகமம் 18:10-12-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பேய்கள் என்னென்ன விதங்களில் நம்மை சிக்கவைக்க முயற்சி செய்கின்றன? பேய்களோடு தொடர்புகொள்ளும் என்னென்ன பழக்கங்கள் உங்கள் பகுதியில் இருக்கின்றன?
ஆவியுலகத் தொடர்பை நாம் விட்டொழிக்க வேண்டுமென்று யெகோவா சொல்வது உங்களுக்கு நியாயமாகப் படுகிறதா? ஏன்?
வீடியோவைப் பார்த்துவிட்டு, கீழே இருக்கும் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
பலேசாவுடைய குழந்தையின் கையில் கட்டப்பட்ட தாயத்து ஆபத்தானது என்று நீங்கள் நினைக்கிறீர்களா? ஏன்?
பேய்களுடைய பிடியிலிருந்து தப்பிப்பதற்கு பலேசா என்ன செய்ய வேண்டியிருந்தது?
உண்மையான கிறிஸ்தவர்கள் எப்போதுமே பேய்களுக்கு இடம் கொடுத்ததில்லை. அப்போஸ்தலர் 19:19-ஐயும் 1 கொரிந்தியர் 10:21-ஐயும் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
ஆவியுலகத் தொடர்போடு சம்பந்தப்பட்ட ஏதாவது ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் அதை ஏன் உடனடியாக ஒழித்துக்கட்ட வேண்டும்?
-
-
இறந்தவர்களின் நிலைமை என்ன?இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
-
-
2. இறந்தவர்களின் நிலைமையைத் தெரிந்துகொள்வதால் என்ன நன்மை?
நிறைய பேர் சாவை நினைத்துப் பயப்படுகிறார்கள், இறந்தவர்களை நினைத்தும் பயப்படுகிறார்கள்! ஆனால், மரணத்தைப் பற்றி பைபிள் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொண்டால் உங்களுக்கு ரொம்ப ஆறுதலாக இருக்கும். “சத்தியம் உங்களை விடுதலையாக்கும்” என்று இயேசு சொன்னார். (யோவான் 8:32) ஒருவர் இறந்த பிறகு அவருடைய ஆத்துமா மட்டும் தொடர்ந்து வாழ்வதாக சில மதங்கள் சொல்கின்றன. ஆனால், பைபிள் அப்படிச் சொல்வதில்லை. இறந்தவர்கள் எந்த வேதனையையும் அனுபவிப்பது இல்லை. அதோடு, அவர்களுக்கு எதுவுமே தெரியாது என்பதால் அவர்களால் நமக்கு எந்தக் கெடுதலும் செய்ய முடியாது. அதனால், அவர்களை சாந்தப்படுத்துவதற்காக நாம் எதையும் செய்ய வேண்டியது இல்லை, அவர்களை வணங்க வேண்டியதும் இல்லை. சொல்லப்போனால், இறந்தவர்களுக்காகச் செய்யப்படும் பிரார்த்தனைகளால் ஒரு பிரயோஜனமும் இல்லை.
இறந்தவர்களோடு தங்களால் பேச முடியும் என்று சிலர் சொல்கிறார்கள். ஆனால், அது எப்படி முடியும்? நாம் ஏற்கெனவே பார்த்தபடி, இறந்தவர்களுக்கு “எதுவுமே தெரியாது.” அதனால், இறந்தவர்களிடம் பேசுவதாகச் சொல்கிறவர்கள் உண்மையில் இறந்தவர்கள்போல் நடிக்கும் பேய்களிடம் பேசிக்கொண்டிருக்கலாம். இந்த உண்மையைத் தெரிந்துகொள்வது பேய்களிடமிருந்து நம்மைப் பாதுகாக்கிறது. பேய்களோடு தொடர்பு வைத்துக்கொள்வது நமக்கு ஆபத்தானது என்று யெகோவாவுக்குத் தெரியும். அதனால், அப்படிச் செய்யக் கூடாதென்று நம்மை எச்சரிக்கிறார்.—உபாகமம் 18:10-12-ஐ வாசியுங்கள்.
-