“நம்முடைய தேவனாகிய யெகோவாவையே சேவிப்போம்”
“நானும் என் வீட்டாருமோவென்றால், யெகோவாவையே சேவிப்போம்.”—யோசுவா 24:15.
யோசுவா புத்தகத்தின் கிளர்ச்சியூட்டும் சம்பவங்கள், “உலகத்தின் முடிவு காலத்திலுள்ள” நம்மை உற்சாகப்படுத்துவதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் “நமக்கு போதனையாகவும்” “திருஷ்டாந்தங்களாக” இருப்பதற்காகவும் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. (ரோமர் 15:4; 1 கொரிந்தியர் 10:11) பொறுமை, விசுவாசம், கீழ்ப்படிதல் போன்ற தெய்வீக குணாதிசயங்கள் உயர்த்திக் காண்பிக்கப்பட்டிருக்கின்றன. “விசுவாசத்தினாலே எரிகோ பட்டணத்தின் மதில்கள் ஏழு நாள் சுற்றிவரப்பட்டு விழுந்தது. விசுவாசத்தினாலே ராகாப் என்னும் வேசி வேவுகாரரைச் சமாதானத்தோடே ஏற்றுக்கொண்டு கீழ்ப்படியாதவர்களோடேகூடச் சேதமாகாதிருந்தாள்.” (எபிரெயர் 11:30, 31) அப்பொழுது வாழ்ந்த யோசுவா, ராகாப் இன்னும் மற்ற உண்மையுள்ளவர்களின் விசுவாசம் இன்று கடவுளுடைய வேலையை செய்து முடிக்கும் பொருட்டு, பலங்கொண்டு திடமனதாயிருக்க நம்மை தூண்ட வேண்டும்.—யோசுவா 10:25; யோவான் 4:34.
2 ஆயி பட்டணத்தின் முடிவான வெற்றிக்குப் பின்பு, உபாகமம் 27:1 -28:68-ல் பதிவு செய்யப்பட்டுள்ள விவரமான கட்டளைகளுக்கு யோசுவா கவனத்தைச் செலுத்தினான். ஏபால் மலையில், முழு கற்களால் ஒரு பலிபீடத்தைக் கட்டி, பின்வரும் கட்டளையை நிறைவேற்றினான்: “சமாதான பலிகளையும் இட்டு, உன் தேவனாகிய யெகோவாவுடைய சந்நிதியில் புசித்துச் சந்தோஷமாயிருக்கக்கடவோம்.” நினைவுச் சின்னமாக மற்ற கற்களும் எழுப்பப்பட்டு, அவைகள் சாந்து பூசப்பட்டு, நியாயப்பிரமாண வார்த்தைகள் அவைகளின்மேல் எழுதப்பட்டன. பின்னர் கோத்திரங்கள் இரண்டாக பிரிக்கப்பட்டு, “சாபங்கூறப்படும் பொருட்டு ஏபால் மலையில்” ஒரு தொகுதியும் கெரிசீம் மலையில் “ஜனங்களை ஆசீர்வதிக்கும்படி” மற்றொன்றுமாக நின்றார்கள். அப்பொழுது லேவியர் உரத்த சத்தமிட்டு கீழ்ப்படியாமைக்கான சாபங்களை எடுத்துச் சொன்னார்கள். அதற்கு ஜனங்களெல்லாரும், “ஆமென்” என்று சொன்னார்கள். பின்னர் கீழ்ப்படிதலுக்கான ஆசீர்வாதங்களை அவர்கள் எடுத்துச் சொன்னார்கள். ஆனால் இஸ்ரவேலர் நியாயப்பிரமாண வார்த்தைகளையெல்லாம் கைக்கொள்ளத் தவறி, யெகோவா தேவனின் மகத்துவமும் பயங்கரமுமான நாமத்துக்கு பயப்படாதிருப்பார்களேயானால், அவர்களுக்கு சாபம் வந்து சேரும்!—யோசுவா 8:32-35.
3 இஸ்ரவேலர் தொடர்ந்து நியாயப்பிரமாண வார்த்தைகளுக்கொல்லாம் கீழ்ப்படிந்திருந்தார்களா? அடிக்கடி மோசேயும் பின்னால் யோசுவாவும் புத்தி சொல்லிக் கொண்டிருந்த போதிலும், அவர்கள் மிக மோசமாக தவறினார்கள். இன்று இதில் என்ன வல்லமையான ஒரு பாடம் நமக்கு இருக்கிறது! இடைவிடாத எச்சரிப்புகளின் மத்தியிலும், கடவுள் தேவைப்படுத்தும் காரியங்களை அவமதித்து, ‘தங்களுக்கு பிரியமானபடி செய்து கொண்டு’ ஆனாலும் தப்பிப்பிழைக்க முடியும் என்பதாக சிந்திக்கும் சிலர் இப்பொழுதும் இருக்கிறார்கள். எத்தனை மூடத்தனமான ஒரு எண்ணமாக அது இருக்கிறது! அன்று இஸ்ரவேலரின் அனுபவங்களைக் குறிப்பிட்டு பேசுகையில் பவுல் இவ்விதமாகச் சொன்னான்: “இப்படியிருக்க, தன்னை நிற்கிறவனென்று எண்ணுகிறவன் விழாதபடிக்கு எச்சரிக்கையாயிருக்கக்கடவன்.”—1 கொரிந்தியர் 10:12; பிரசங்கி 2:13.
4 கடவுளுடைய ஜனங்களில் சிலர், கொடுக்கப்படும் எச்சரிப்புகளில் குறைகண்டுபிடித்து, மறுபடியும் மறுபடியும் அதே காரியத்தை கேட்டு சலிப்படைவதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் இவர்கள் தாமே, அநேகமாக சாத்தானின் கண்ணியில் விழுவதற்கு முதலானவர்களாக இருக்கிறார்கள். ஆவியால் ஏவப்பட்ட உபாகமம் என்ற பைபிள் புத்தகத்தில் (எபிரேயுவில் Mish-neh’ hat-te-rah’, இதன் பொருள் நியாயப்பிரமாணத்தின் மறுபகர்ப்பு) முக்கியமாக மோசே கொடுத்த நான்கு பேச்சுகள் இடம் பெறுகின்றன. ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட யெகோவாவின் நியாயப்பிரமாணங்களுக்கு அவர்கள் கீழ்ப்படிந்திருக்க வேண்டும் என்பதை இது இஸ்ரவேலருக்கு தெளிவாக்கியது. “ஆசீர்வாதங்களை”ப் பற்றி பேசியபோது பயன்படுத்தியதைக் காட்டிலும் கீழ்ப்படியாமையையும் அதன் விளைவாக வரும் “சாபங்களையும்” குறித்து எச்சரிப்பதில் மோசே நான்கு மடங்கு அதிகமான வார்த்தைகளை பயன்படுத்தினான். ஏபால் மலையின் மேல் யோசுவா மறுபடியுமாக இஸ்ரவேலரிடம் அவர்கள் கீழ்ப்படிய வேண்டும் என்பதைக் குறித்து எச்சரித்தான். “இடுக்கமான வாசல் வழியாய் உட்பிரவேசிக்க” பிரயாசப்படுவது எவ்வளவு முக்கியமானது என்பதை இது நமக்கு சுட்டிக்காட்டுகிறதல்லவா?—மத்தேயு 7:13, 14, 24-27; 24:21, 22.
5 இப்பொழுது முடிவாக உச்சக்கட்டத்தினிடமாக காரியங்கள் வளர்ந்துவந்தன. “மகா உபத்திரவம்” ஆரம்பமாகும்போது பொய்மதம் பாழாக்கப்பட போகிற விதமாகவே, எரிகோ பட்டணத்தின் வாசல் அழிக்கப்பட்டுவிட்டது, ஆயி வீழ்ந்துவிட்டது. ஆனால் இப்பொழுது, “யோர்தானுக்கு இப்புறத்திலேயே மலைகளிலும் பள்ளத்தாக்குகளிலும் லீபனோனுக்கு எதிரான பெரிய சமுத்திரத்தின் கரையோரமெங்குமுள்ள ஏத்தியரும் எமோரியரும் கானானியரும் பெரிசியரும், ஏவியரும் எபூசியருமானவர்களுடைய சகல ராஜாக்களும் . . . ஒருமனப்பட்டு, யோசுவாவோடும் இஸ்ரவேலரோடும் யுத்தம்பண்ண ஏகமாய்க் கூடினார்கள்.” (யோசுவா 9:1, 2) நவீன நாளில் இதற்கு இணையாக, இப்பொழுது பூமியின் தேசங்கள் ஐக்கிய நாடுகள் என்றழைக்கப்படும் ஒன்றில் ஒன்றாகச் சேர்ந்து குழுவாக தங்களை அமைத்துக் கொண்டிருப்பதை நாம் பார்க்கிறோம். அவர்கள் தங்களுடைய சொந்த நிபந்தனைகளின் பேரில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் அடைய முயற்சித்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்கள் “யெகோவாவுக்கு விரோதமாகவும் அவர் அபிஷேகம் பண்ணினவருக்கு [பெரிய யோசுவாவுக்கு] விரோதமாகவும் ஏகமாய் ஆலோசனை பண்ணி”யிருக்கிறார்கள். (சங்கீதம் 2:1, 2) இதன் விளைவு என்னவாக இருக்கும்?
அறிவோடு செயல்படுவது
6 அவர்களுக்கு முன்னால் ராகாப் செய்ததுபோலவே, இஸ்ரவேலாக இல்லாத மற்றவர்களும் இப்பொழுது உயிரோடே தப்பிப் பிழைப்பதில் அக்கறை காண்பிக்க ஆரம்பித்தார்கள். இவர்கள் எபூசாகிய எருசலேமுக்கு வடக்கே இருந்த பெரிய பட்டணமாகிய கிபியோனின் குடிகளாக இருந்தார்கள். இவர்கள் யெகோவாவின் மகத்தான செயல்களைப் பற்றி கேள்விப்பட்டிருந்தார்கள். யெகோவாவின் நிபந்தனைகளின் அடிப்படையில் சமாதானத்தையும் பாதுகாப்பையும் நாட அவர்கள் தீர்மானித்தார்கள். ஆனால் எவ்விதமாக? உலர்ந்ததும் பூசணம் பூத்ததுமான அப்பத்தையும் பழைய இரட்டுப் பைகளையும், பீறலும் பொத்தலுமான பழைய திராட்ச ரசத்துரத்திகளையும் எடுத்துச் சென்ற, பழைய வஸ்திரங்களையும் பழுதுபார்க்கப்பட்ட பழைய பாதரட்சைகளையும் தரித்த மனிதர்களை கில்காலிலிருந்த இஸ்ரவேலரின் பாளயத்துக்கு அனுப்பினார்கள். யோசுவாவிடம் இந்த மனிதர்கள், “உம்முடைய தேவனாகிய யெகோவாவுடைய நாமத்தின் பிரஸ்தாபத்தைக் கேட்டு, உமது அடியாராகிய நாங்கள் வெகுதூர தேசத்திலிருந்து வந்தோம்; அவருடைய கீர்த்தியைக் கேள்விப்பட்டோம்” என்றார்கள். இதைக்கேட்டபோது, “யோசுவா அவர்களோடே சமாதானம் பண்ணி, அவர்களை உயிரோடே காப்பாற்றும் உடன்படிக்கையை அவர்களோடே பண்ணினான்.”—யோசுவா 9:3-15.
7 என்றபோதிலும் இஸ்ரவேலர் வெகு சீக்கிரத்திலேயே கிபியோனியர்கள் உண்மையில் தங்கள் நடுவே குடியிருக்கிறவர்கள் என்பதை கேள்விப்பட்டார்கள்! அவர்களுடைய சூழ்ச்சி ஏற்பாட்டை இப்பொழுது யோசுவா எவ்விதமாக கருதினான்? அவர்களுக்கு அவன் ஏற்கெனவே செய்துகொடுத்திருந்த ஆணையை கனம்பண்ணி, ‘சபையார் எல்லாருக்கும் விறகு வெட்டுகிறவர்களாகவும் தண்ணீர் எடுக்கிறவர்களாகவும் இருக்கும்படி’ அவர்களை அனுமதித்தான்.—யோசுவா 9:16-27; உபாகமம் 20:10, 11-ஐ ஒப்பிடவும்.
8 பின்னால் யெகோவாவின் ஆலயத்தில் சேவை செய்த நிதனீமியரில் அநேகர் பெரும்பாலும் கிபியோனிய மரபில் பிறந்தவர்களாக இருந்தார்கள். ஆகவே கிபியோனியர்கள் இப்பொழுது, “இரவும் பகலும் அவருடைய ஆலயத்திலே அவரை சேவிக்கும்” “திரளான கூட்டமாகிய ஜனங்களுக்கு” முன்நிழலாக இருந்தார்கள். (வெளிப்படுத்தின விசேஷம் 7:9, 15) கானானைப்போன்ற ஒரு உலகில் வாழ்ந்து வந்தாலும் இவர்கள் இருதயத்தில் “உலகத்தின் பாகமாக இல்லாதிருக்கிறார்கள்.” முற்காலங்களில், கிறிஸ்தவ மண்டல சர்ச்சுகளில் காணப்படுவது போல “பூசணம் பூத்த” ஆவிக்குரிய உணவிலேயே திருப்தியடைய வேண்டியவர்களாக இவர்கள் இருந்திருக்கிறார்கள். இவர்களிடம் சந்தோஷத்தின் “திராட்ச ரசம்” இருக்கவில்லை. கடவுளுடைய ஜனங்களின் கூட்டுறவில் வந்தபோது, தம்முடைய சாட்சிகளின் மூலமாக யெகோவா மகத்தான செயல்களை நடப்பிப்பதை இவர்கள் கண்டு உணர்ந்திருக்கிறார்கள். புதிய ஆளுமையைத் தரித்த யெகோவாவின் மனத்தாழ்மையுள்ள ஊழியர்களென புதிதாக அடையாளம் கண்டு கொள்ளப்படும்படி அவர்கள் தங்களுடைய கந்தலான ‘வஸ்திரங்களை’ மாற்றிக்கொள்வதற்காக சாத்தானிய உலகிலிருந்து நீண்ட தூர பயணத்தை செய்து வந்திருக்கிறார்கள்.—யோவான் 14:6; 17:11, 14, 16; எபேசியர் 4:22-24.
அமைப்பின் ஆதரவு
9 கிபியோனின் குடிகள் இஸ்ரவேலோடே சமாதானம் பண்ணியதை, எருசலேம் ராஜாவாகிய அதோனிசேதேக் கேள்விப்பட்டபோது, “கிபியோன், ராஜதானி பட்டணங்களில் ஒன்றைப்போல் பெரிய பட்டணமாயும், . . . அதின் மனுஷரெல்லாரும் பலசாலிகளாயிருந்தபடியினாலும் அவன் மிகவும் பயந்தான்.” அவன் நான்கு வேறு ராஜாக்களை தன்னோடு சேர்த்துக்கொண்டு, அவர்களுடைய சேனைகளோடு கிபியோனை முற்றுகையிட்டான். உடனடியாக கிபியோனியர் யோசுவாவிடம், “சீக்கிரமாய் எங்களிடத்தில் வந்து, எங்களை ரட்சித்து, எங்களுக்குத் துணைச் செய்யும்” என்று மன்றாடினார்கள். உடனடியாக யோசுவா உதவிக்கு வந்தான். யெகோவா, “அவர்களுக்குப் பயப்படாயாக; உன் கைகளில் அவர்களை ஒப்புக்கொடுத்தேன்; அவர்களில் ஒருவரும் உனக்கு முன்பாக நிற்பதில்லை” என்பதாகச் சொல்லி அவனுக்கு மீண்டும் உறுதியளித்தார். யோசுவாவும் அவனுடைய யுத்த வீரர்களும், சத்துருவை முழுவதும் எதிர்பாராத வகையில் முறியடிக்க “இரா முழுவதும்” நடந்து வந்தார்கள்.—யோசுவா 10:1-9.
10 அந்த ஐந்து ராஜாக்களைப் போல, இன்று அரசாங்கத்தின் சில தலைவர்கள், அவர்களுடைய ஜனங்களில் அநேகர்—“யுத்த வீரர்களும்”கூட, பெரிய யோசுவாவின் பக்கமாகவும் நீதியான அவருடைய உலக ராஜ்யத்தின் பக்கமாகவும் தங்களுடைய நிலைநிற்கையை எடுப்பதை பார்த்து கோபங்கொள்கிறார்கள். தேசங்கள் இடைவிடாமல் ஒன்றோடொன்று மோதிக்கொண்டும் யுத்தம் செய்துகொண்டுமிருந்தாலும், தேசீய எல்லைக்கோடுகளை கொண்டிருக்க வேண்டும் என்பதாக இந்த ஆட்சியாளர்கள் நினைக்கிறார்கள். ஆகவே சமாதானத்தை நேசிக்கும், “திரளான கூட்டமாகிய ஜனங்களுக்கு” ஆவிக்குரிய உணவை தடை செய்யவும், இந்த உணவை அவர்கள் உட்கொள்ளும் இடமாகிய கூட்டங்களை தடை செய்யவும், ஆவிக்குரிய விஷயங்களைக் குறித்து மற்றவர்களிடம் பேசுவதை நிறுத்திவிடவும் முயற்சி செய்கிறார்கள். ஆனால் இந்த நவீன கால கிபியோனியர்கள் ஆவிக்குரிய இஸ்ரவேலோடு பற்றுமாறாமல் நிலைத்திருந்து “உங்களோடே கூடப்போவோம்” என்று சொல்லுகிறார்கள்.—சகரியா 8:23; அப்போஸ்தலர் 4:19, 20; 5:29-ஐ ஒப்பிடவும்.
11 “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” உதவிக்காக தங்களுடைய “தாய்” அமைப்பிடமாக வேண்டிக்கொள்ளும்போது, இது உடனடியாகவும், நல்ல அளவிலும் கொடுக்கப்படுகிறது. யெகோவாவின் சாட்சிகள் காரியங்களை சுறுசுறுப்பாக செய்து முடிப்பதை அநேக மற்ற வழிகளிலும் காண முடிகிறது—இயற்கையின் நாச வேலைகளுக்குப் பின்னர் நிவாரண நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்வதிலும், “போஜனத்தை” பகிர்ந்ததளிப்பதற்காக, தேவைப்படும் ராஜ்ய மன்றங்கள் மற்றும் மாநாடு இடங்கள் ஆகியவற்றை கட்டுவதிலும் இதைக் காணமுடிகிறது, நியு யார்க்கிலுள்ள யாங்கி விளையாட்டரங்கில் கடந்த ஜூன் மாதம் ஒரு மாநாடு திட்டமிடப்பட்டிருந்தபோது, சுத்தம் செய்ய வாலண்டியர்களின் ஒரு படை, தளக்கட்டு பந்தாட்டத்துக்குப் பின்பு நள்ளிரவில் உள்ளே புகுந்தது. அதை தொடர்ந்து வந்த நான்கு நாட்களின்போது, இருந்ததைவிட, அது முன்னொருபோதும் அத்தனை துப்புரவாக காணப்பட்டது கிடையாது. நற்செய்தியை பிரசங்கிப்பதன் சம்பந்தமாக ஏற்படும் நெருக்கடிகளைக் கையாளவும்கூட யெகோவாவின் சாட்சிகளுடைய பொறுப்புள்ள மூப்பர்கள் விரைவாக நடவடிக்கை எடுக்கிறார்கள்.—பிலிப்பியர் 1:6, 7.
இஸ்ரவேலுக்காக யெகோவா யுத்தம் பண்ணுகிறார்
12 ஆனால் இப்பொழுது கிபியோனைப் பாருங்கள். யெகோவா சத்துருக்களை கலங்கப்பண்ணுகிறார். இஸ்ரவேலர் மகா சங்காரமாக மடங்கடித்து அவர்களை துரத்தி முறிய அடிக்கிறார்கள். வானத்திலிருந்து என்ன விழுவதை நாம் பார்க்கிறோம்? பெரிய கற்கள்! இஸ்ரவேல் புத்திரர் பட்டயத்தால் கொன்றவர்களைப் பார்க்கிலும், கல் மழையினால் செத்தவர்கள் அதிகமாயிருந்தார்கள். இப்பொழுது கவனித்துக் கேளுங்கள். யோசுவா யெகோவாவை நோக்கிப் பேசி, பின்பு “இஸ்ரவேலின் கண்களுக்கு முன்பாக” என்ன சொல்லுகிறான்? இதுவே: “சூரியனே நீ கிபியோன் மேலும் சந்திரனே நீ ஆயலோன் பள்ளத்தாக்கின் மேலும், தரித்து நில்லுங்கள்.” மற்றொரு ஆச்சரியமான அற்புதம்! கடவுளுடைய நீதியை முழுமையாக சரிக்கட்டும் மட்டும் “ஒரு பகல் முழுதும்” சூரியன் அந்த யுத்த களத்தை ஒளிப்பெறச் செய்கிறது. அந்த அற்புதத்தை யெகோவா எவ்விதமாக நடப்பித்தார் என்று தர்க்கம் பண்ணுவது நமக்குரியதல்ல. அவர் எவ்விதமாக தம்முடைய நான்காவது சிருஷ்டிப்பு “நாளில்” இரண்டு பெரிய சுடர்களையும் பிரகாசிக்கும்படி ‘உண்டாக்கினார்’ என்பதைக் குறித்து நாம் சந்தேகமெழுப்பாதிருப்பது போலவே இதுவும் இருக்கிறது. (ஆதியாகமம் 1:16-19; சங்கீதம் 135:5, 6) பதிவு தெளிவாக இருக்கிறது: “இப்படி யெகோவா ஒரு மனிதனுடைய சொல் கேட்ட அந்நாளையொத்த நாள் அதற்கு முன்னுமில்லை அதற்குப் பின்னுமில்லை; யெகோவா இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணினார்.”—யோசுவா 10:10-14.
13 ஐந்து ராஜாக்களும் சங்கரிக்கப்படுவது முடிவான போர் நடவடிக்கைகளின் உச்சகட்டமாக இருக்கிறது. இந்த சமயத்தில் யோசுவா அவனுடைய யுத்த மனுஷரின் அதிபதிகளை நோக்கி: “நீங்கள் பயப்படாமலும் கலங்காமலும் பலத்துத் திடமனதாயிருங்கள்; நீங்கள் யுத்தம் பண்ணும் உங்கள் சத்துருக்களுக்கொல்லாம் யெகோவா இப்படியே செய்வார்” என்றான். கானானின் ஏழு ராஜாக்களின் விஷயத்தில் இது ஏற்கெனவே உண்மையாக இருந்தது நிரூபிக்கப்பட்டுவிட்டது. மற்றொரு முழு எண்ணிக்கையான 24 ராஜ்யங்கள் முறியடிக்கப்படுகையில் இது தொடர்ந்து உண்மையாகவே இருக்கிறது. 6 வருட கால யுத்தம் ஓய்ந்த பின்னரே தேசம் அமைதலாயிருக்கிறது.—யோசுவா 10:16-25; 12:7-24.
14 இன்று, அர்மகெதோனின் முடிவான யுத்தத்தை நாம் எதிர்படுகையில், யோசுவாவும் அவனுடைய யுத்த வீரரும், இஸ்ரவேலின் பெரிய பாளயம் முழுவதும் இருந்ததுபோல பலங்கொண்டவர்களாக இருப்போமாக. பல இலட்சக்கணக்கான இஸ்ரவேலரை, தீங்கு எதுவும் ஏற்படாத வண்ணம் யெகோவா வாக்குப் பண்ணப்பட்ட தேசத்தினுள் கொண்டு வந்தததுபோலவே, தைரியமுள்ள தம்முடைய பல லட்சக்கணக்கான ஜனங்களை அர்மகெதோனினூடாக, தம்முடைய புதிய ஒழுங்குக்குள் கொண்டுவருவதில் மேலுமாக பிரமிக்கத்தக்க அற்புதங்களை அவர் செய்வார் என்று நாம் நம்பிக்கையோடிருக்கலாம்.—வெளிப்படுத்தின விசேஷம் 7:1-3, 9, 14: 19:11-21; 21:1-5.
நம்முடைய தீர்மானம்
15 90 வயதை இப்பொழுது நெருங்கி வந்துகொண்டிருந்த போதிலும், யோசுவா மற்றொரு பிரமாண்டமான ஒரு வேலையை எதிர்பட்டான். தேசத்தை இஸ்ரவேல் கோத்திரங்களுக்கு பங்கிட்டு கொடுக்கும் வேலையாக அது இருந்தது. இஸ்ரவேலருக்கு வாழ்க்கை சுலபமானதாகிவிடும் என்பதை இது அர்த்தப்படுத்தவில்லை. உண்மையில், காலேப், ஏனாக்கு என்ற பலவான் வாழ்ந்துவந்த எபிரோன் பிரதேசத்தை கேட்டான்; கடைசியாக விடப்பட்டுள்ள யெகோவாவின் சத்துக்களையும் துரத்திவிடுவதில் தொடர்ந்து அவன் பிரயாசப்பட விரும்பினான். பூமியின் மீது கிறிஸ்து ஆயிரம் வருடங்கள் ஆட்சி செய்யும்போது, மனித சத்துருக்கள் இருப்பார்கள் என்பதை இது அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் அங்கு செய்வதற்கு வேலை இருக்கும் புதிய ஒழுங்குமுறையில் நாம் சுலபமான சோம்பேறித்தனமாக வாழ்க்கையை எதிர்பார்க்கக்கூடாது. “புதிய பூமி”யில் தங்களுடைய பொறுப்புகளை பெற்றுக்கொண்ட பிறகு, கர்த்தருடைய “வேறே ஆடுகள்” பூமியை அழகுபடுத்தி அதை சொல்லர்த்தமாகவே ஒரு பரதீஸாக மாற்றும் பிரமாண்டமான திட்டத்தில் அவர்களுக்கு அதிக வேலை இருக்கும்.—யோசுவா 14:6-15; மாற்கு 10:29, 30; ரோமர் 12:11.
16 யோசுவா தேசத்தின் பகுதிகளை நியமிக்கையில், யோர்தானுக்கு ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று என்பதாக லேவியர்களின் ஆறு பட்டணங்களை “அடைக்கலப் பட்டணங்களாக” இருக்கும்படி ஒதுக்கி வைத்தான். அறியாமல் கைப்பிசகாய் கொலை செய்தவன், ஓடிப் போவதற்காக, அவனை காப்பாற்றுவதற்கு இது யெகோவாவின் ஏற்பாடாக இருந்தது. இப்படிப்பட்ட கொலைக்காரன் கடவுளுக்கு முன்பாக தனக்கு சுத்தமான மனசாட்சி இருப்பதை நிரூபிக்க வேண்டியவனாக இருந்தான். பிரதான ஆசாரியன் மரிக்கும் வரையாக அந்த பட்டணத்தில் தங்கியிருப்பதன் மூலம் இதை அவன் செய்தான். அதேவிதமாகவே, இரத்தப்பழி நிறைந்த இந்த உலகத்தோடு முந்தின நாட்களில் கூட்டுறவு வைத்திருந்ததன் காரணமாக, “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” இன்று கடவுளோடு ஒரு நல்ல நிலைநிற்கையை கொண்டிருக்க நாட வேண்டும். தங்களுடைய பாவங்களை அறிக்கைச் செய்து, மனந்திரும்பி, குணப்பட்டு யெகோவாவுக்கு ஒப்புக்கொடுத்து தண்ணீர் முழுக்காட்டுதலை பெற்றுக்கொள்வதன் மூலம் அந்த நல்ல மனசாட்சியை அவர்கள் அடைகிறார்கள். பின்பு அவர்கள் அந்த நிலையை காத்துக்கொள்ள வேண்டும். இயேசு தம்முடைய ஆயிரம் வருட ஆட்சியின் முடிவில் தம்முடைய பிரதான ஆசாரியரின் வேலையின் சம்பந்தமாக அடையாளமாக மரிக்கும் வரையாக “திரளான கூட்டமாகிய ஜனங்கள்” “பட்டணத்தில்” தங்கியிருக்க வேண்டியதாக இருக்கிறது.—யோசுவா 20:1-9; வெளிப்படுத்தின விசேஷம் 20:4, 5; 1 கொரிந்தியர் 15:22, 25, 26.
17 தம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலை யெகோவா எத்தனை அதிசயமாக ஆசீர்வதித்திருந்தார்! வழி கடினமாகவும் சோதனைகள் அனேகமாகவும் இருந்தன. ஆனால் கடைசியாக அவர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்திற்குள் வந்து அங்கு குடியேறிவிட்டிருந்தார்கள். யெகோவாவுக்கு நன்றி உணர்வால் அவர்களுடைய இருதயங்கள் எவ்வளவாக பொங்கி வழிந்திருக்க வேண்டும்! நம்முடைய கடவுளுக்கு உண்மையுள்ளவர்களாக நிரூபிப்பதில், “புதிய பூமியையும்” ஒரு பகுதியாக கொண்டிருக்கும் அவருடைய புதிய ஒழுங்கினுள் பிரவேசிக்கையில் அதேவிதமான சந்தோஷத்தை நாம் கொண்டிருக்கலாம். ஆம் யோசுவாவின் நாளில் உண்மையாக இருந்தது போலவே, நம்முடைய விஷயத்திலும் அது உண்மையாக இருக்கும்: “யெகோவா இஸ்ரவேல் குடும்பத்தாருக்குச் சொல்லியிருந்த நல்வார்த்தைகளிலெல்லாம் ஒரு வார்த்தையும் தவறிப் போகவில்லை; எல்லாம் நிறைவேறிற்று. (யோசுவா 21:45) அதில் மகிழ்ச்சியான ஒரு பங்கை நீங்கள் கொண்டிருப்பீர்களாக!
18 கடைசியாக, 110 வயதாக இருக்கையில், யோசுவா இஸ்ரவேலின் மூப்பரை கூடிவரப்பண்ணினான். ஆபிரகாமின் காலம் முதற்கொண்டு அந்நாள் வரையாக யெகோவா தம்முடைய உண்மையுள்ள ஜனங்களை ஆசீர்வதித்திருக்கும் அற்புதமான விதத்தை அவர்களுக்கு அவன் மீண்டும் எடுத்துரைத்தான். யெகோவா இப்பொழுது அவர்களிடம் பின்வருமாறு சொன்னார்: நீங்கள் பண்படுத்தாத தேசத்தையும், நீங்கள் கட்டாத பட்டணங்களையும் உங்களுக்குக் கொடுத்தேன், அவைகளில் குடியிருக்கிறீர்கள்; நீங்கள் நடாத திராட்சத் தோட்டங்களின் பலனையும் ஒலிவத் தோப்புகளின் பலனையும் புசிக்கிறீர்கள்.” இந்த ஏராளமான ஏற்பாடுகளின் காரணமாக, இஸ்ரவேலர் நிச்சயமாகவே எல்லா காலத்திலும் “யெகோவாவுக்குப் பயந்து, அவரை உத்தமமும் உண்மையுமாய்ச் சேவிக்க” விரும்புவார்கள். இந்த பூமிக்காக யெகோவாவின் மகிமையுள்ள புதிய ஒழுங்கை முன்னோக்கி பார்க்கும்போது நிச்சயமாகவே நாம் ஒவ்வொருவரும் அதே போன்ற விருப்பத்தை உடையவர்களாக இருக்க வேண்டும்.—யோசுவா 24:13, 14.
19 பின்பு யோசுவா ஜனங்களிடம் பின்வருமாறு தெளிவாக பேசினான்: “யெகோவாவைச் சேவிக்கிறது உங்கள் பார்வைக்கு ஆகாததாய்க் கண்டால், பின்னை யாரைச் சேவிப்பீர்கள் என்று இன்று தெரிந்து கொள்ளுங்கள். . . . நானும் என் வீட்டாருமோவென்றால் யெகோவாவையே சேவிப்போம்.” இந்த வார்த்தைகளை தனிப்பட்டவர்களாக நாம் ஒவ்வொருவரும், நம்முடைய சபைகளும், உலகளாவிய “தேவனுடைய வீட்டாரும்” எதிரொலிக்க முடியுமா? நிச்சயமாகவே முடியும்! (எபேசியர் 2:19) யோசுவாவின் நாளிலிருந்த ஜனங்கள் அவனுக்கு இவ்விதமாக பதிலளித்தார்கள்: “நம்முடைய தேவனாகிய யெகோவாவையே சேவித்து, அவர் சத்தத்திற்கே கீழ்ப்படிவோம்!” (யோசுவா 24:15, 24) ஆனால் பின்னான வருடங்களில் அவர்கள் அவ்விதமாகச் செய்யத் தவறியது வருத்தத்திற்குரியதாகும். அவ்விதமாகச் செய்யத் தவறியவர்களைப் போல இருக்க நாம் விரும்பமாட்டோம். நாம் யோசுவாவையும் அவன் வீட்டாரையும்போல, காலேபைப் போல கிபியோனியர்களைப் போல, ராகாபைப் போல இருக்க விரும்புகிறோம். ஆம், “நாம் யெகோவாவையே சேவிப்போம்.” இதை நாம் தைரியமாகவும் எதுவுமே “நம்முடைய கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பைவிட்டு நம்மைப் பிரிக்க மாட்டாதென்ற” முழு நிச்சயத்தோடும் செய்வோமாக.—ரோமர் 8:39. (w86 12/15)
யோசுவா புத்தகத்திலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்
◻ மீண்டும் மீண்டும் சொல்லப்படும் அறிவுரைகளிலிருந்து பயனடைவதைப் பற்றி?
◻ நவீன கால கிபியோனியர்களைக் குறித்து அக்கறையாய் இருப்பது பற்றி?
◻ யெகோவா எவ்விதமாக அர்மகெதோனில் யுத்தம் செய்வார் என்பதைப் பற்றி?
◻ ஒரு “அடைக்கலப்பட்டணத்துக்கு” ஓடிப்போக வேண்டிய அவசியத்தைப் பற்றி?
◻ நாம் யாரை சேவிப்போம் என்பதை தெரிந்து கொள்வதைப் பற்றி?
[கேள்விகள்]
1. யோசுவா புத்தகம் எவ்விதமாக நம்மை உற்சாகப்படுத்தவும் பாதுகாக்கவும் உதவியாக இருக்கிறது,
2. (எ) கொடுக்கப்பட்ட கடைசி விவரத்துக்கும்கூட யோசுவா எவ்விதமாக கீழ்ப்படிதலை காண்பித்தான்? (பி) ஏபால் மற்றும் கெரிசீம் மலைகளில் என்ன நடந்தது?
3, 4. (எ) இஸ்ரவேலரின் போக்கு இன்று நமக்கு என்ன வல்லமையான பாடத்தை அளிக்கிறது? (பி) மறுபடியுமாக அதே காரியத்தை கேட்பதைக் குறித்து நாம் ஏன் ஒருபோதும் சலிப்படையக்கூடாது? (சி) “இடுக்கமான வாசல்” வழியாய் உட்பிரவேசிப்பதற்கு தேவைப்படுவது என்ன?
5. இப்பொழுது இஸ்ரவேலை என்ன கூட்டுக்குழு எதிர்த்து வந்தது? இதற்கு இணையாக என்ன நிலைமையை நாம் இன்று பார்க்கிறோம்?
6, 7. (எ) கிபியோனியர்கள் எதில் அக்கறை காண்பித்தார்கள்? என்ன சூழ்ச்சி முறையை அவர்கள் மேற்கொண்டார்கள்? (பி) யோசுவா இந்த காரியத்தின் பேரில் எவ்விதமாக முடிவு எடுத்தான்?
8. என்ன விதங்களில் கிபியோனியர் “திரளான கூட்டமாகிய ஜனங்களுக்கு” முன்நிழலாக இருக்கிறார்கள்?
9. (எ) அடுத்ததாக என்ன நெருக்கடி நிலை ஏற்பட்டது? (பி) யோசுவா எவ்விதமாக பிரதிபலித்தான்? அவன் என்ன உறுதியளிக்கப்பட்டான்?
10. (எ) இன்று என்ன விதமான நடவடிக்கை, கிபியோனின் முற்றுகைக்கு இணையாக இருக்கிறது, (பி) நவீன நாளைய கிபியோனியர்கள் வெளியிடும் தீர்மானம என்னவாக இருக்கிறது?
11. யெகோவாவின் சாட்சிகள் இன்று நெருக்கடிகளை எவ்விதமாக கையாளுகிறார்கள்?
12. கிபியோனியர்களை பாதுகாப்பதற்காக, இஸ்ரவேலுக்காக யுத்தம் பண்ணுகையில், யெகோவா என்ன அற்புதத்தை நடப்பிக்கிறார்?
13. யோசுவா எவ்விதமாக மேலுமாக தன்னுடைய அதிபதிகளை உற்சாகப்படுத்துகிறான்? இதன் முடிவான விளைவு என்ன?
14. என்ன மனநிலையோடும் நம்பிக்கையோடும் நாம் அர்மகெதோனை எதிர்பட வேண்டும்?
15. கடவுளுடைய புதிய ஒழுங்கில் என்ன விதமான பொறுப்புகளை “வேறே ஆடுகள்” எதிர்பார்க்கலாம்?
16. யெகோவாவின் “அடைக்கலப் பட்டண” ஏற்பாடுகள் இன்று எதற்கு படமாக இருக்கின்றன?
17. இன்று என்ன சந்தோஷமான விளைவை நாம் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்?
18. (எ) இஸ்ரவேலின் மூப்பர்களுக்கு யோசுவா மீண்டும் எடுத்துரைத்தது என்ன? (பி) யெகோவாவின் புதிய ஒழுங்கின் சம்பந்தமாக நாம் என்ன விருப்பத்தை உடையவர்களாக இருக்க வேண்டும்?
19. (எ) யோசுவா இப்பொழுது என்ன தெரிவை ஜனங்களுக்கு முன்பாக வைத்தான்? அவர்கள் எவ்விதமாக பதிலளித்தார்கள்? (பி) நாம் யாரைப் போலிருக்க வேண்டும்? (சி) நாம் என்ன தெரிவை செய்ய வேண்டும்? என்ன தீர்மானத்தோடு?