கிறிஸ்தவ பெண்கள்—வேலை செய்யுமிடத்தில் உத்தமத்தைக் காத்துக்கொள்ளுதல்
“சில சமயங்களில் [வேலை செய்யுமிடத்தில்] மன இறுக்கம் சகித்துக்கொள்ள முடியாதபடி அத்தனை அதிகமாக உள்ளது” என்பதாக வேலை செய்யும் ஒரு பெண் சொன்னாள். உற்பத்தி செய்வதற்கான அழுத்தம், மறைவான அவதூறான போட்டி மனப்பான்மை, கண்டிப்பான மேற்பார்வையாளர்கள், ஒரே விதமான வேலையின் சலிப்பு—அநேக வேலைகளைச் சுவையற்றதாகச் செய்யும் காரியங்களில் இவை சிலவாக இருக்கின்றன. வெகு சில வேலைகளில் தானே விளம்பரதாரர் வாக்களிக்கும் கவர்ச்சியையும் கிளர்ச்சியையும் ஒரு பெண்ணாக இருந்தால், உங்கள் வேலையில் நீங்கள் வெற்றி காண முயல வேண்டும்.
ஆனால் இப்படியாகச் சொல்லுகையில், நாங்கள் வருவாய் பெருக்கத்தைப் பற்றி குறிப்பிடவில்லை. வேலைசெய்யுமிடமானது, உங்களுடைய கிறிஸ்தவ உத்தமத்தன்மை பரிசோதிக்கப்படும் ஒரு செயற்களமாக இருக்கிறது! நீங்கள் உங்கள் பணியை ஆற்றும் முறையும், பாழாக்குகிற போட்டி மனப்பான்மையான ஆவியைத் தவிர்ப்பதும், ஒழுக்க சம்பந்தமான அத்துமீறல்களை எதிர்ப்பதும், நீங்கள் தெய்வீக நியமங்களுக்கு எந்த அளவுக்கு உண்மையுள்ளவர்களாக இருக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்துகிறது. யெகோவாவின் தயவை பெற்றுக்கொள்ள. வேலை செய்யும் பெண் சங்கீதக்காரன் சொன்னதுபோல சொல்லக்கூடியவர்களாக இருக்கவேண்டும்: “நான் என் உத்தமத்திலே நடக்கிறேன்.”—சங்கீதம் 26:1.
அதை செய்ய பைபிள், உங்களுக்கு உதவி செய்கிறது. உதாரணமாக இரக்கமற்ற போட்டியில் இறங்குவதற்கு தூண்டப்படுகையில் அல்லது உங்களுடைய குடும்ப உத்தரவாதங்கள், பைபிள் படிப்பு, கிறிஸ்தவக் கூட்டங்கள் மற்றும் ஊழியத்தோடு ஒப்பிடுகையில், உங்கள் உத்தியோகத்துக்கு அதிக முக்கியத்துவத்தைக் கொடுக்க தூண்டப்படுகையில் சாலொமோன் ராஜாவின் வார்த்தைகளை நீங்கள் நினைவு கூறக்கூடும்: “மனுஷன்படும் எல்லாப் பிரயாசமும் பயன்படும் எல்லாக் கிரியையும் அயலானுடைய பொறாமைக்கு ஏதுவாயிருக்கிறதை நான் கண்டேன்; இதுவும் மாயையும் மனதுக்குச் சஞ்சலமுமாயிருக்கிறது.” (பிரசங்கி 4:4) உலகப் பிரகாரமான வேலையை இவ்விதமாக நோக்குவது, தீவிர ஆசைகளைத் தவிர்க்கிறது அல்லது தணிக்கிறது வேலையைக் குறித்ததில் சரியான நோக்குநிலையைக் கொண்டிருக்க, ஆவிக்குரிய காரியங்களுக்கு அடுத்த இடத்தில் அதை வைப்பதற்கு உங்களுக்கு உதவிசெய்கிறது.—மத்தேயு 6:33.
ஆனால் உலகப்பிரகாரமான வேலையில் கவனக்குறைவாக இருப்பதை இது அர்த்தப்படுத்துகிறதா? நிச்சயமாக இல்லை. ஏனென்றால் பைபிள் சோம்பேறித் தனத்தைக் கண்டனம் செய்கிறது. (நீதிமொழிகள் 19:15) “உங்கள் பிரயாசத்தின் பலனை அநுபவிப்பதைப்” பற்றி அது பேசுகிறது. (பிரசங்கி 2:24) மேலுமாக ஒருவருடைய குடும்பத்தை பராமரிப்பது கடவுளால் கொடுக்கப்பட்ட ஓர் உத்தரவாதமாக இருக்கிறது. (1 தீமோத்தேயு 5:8) ஆகவே அந்த உத்தரவாதத்தை நிறைவேற்றுவது நமக்கு பிடித்தமாக இல்லாத உலகப் பிரகாரமான ஒரு வேலையைச் செய்வதை அர்த்தப்படுத்துமேயானால், கொலோசெயர் 3:24-லுள்ள பைபிள் வார்த்தைகளைச் சிந்தித்துப் பாருங்கள்: “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல் யெகோவாவுக்கென்றே மனப்பூர்வமாய்ச் செய்யுங்கள்.” ஊதிய உயர்வு அல்லது பதவி உயர்வின் தூண்டுதலைக் காட்டிலும், ஒருவர் “யெகோவாவுக்கென்று” செய்வதாக தன்னைக் கருதும்போது திறமையோடு செய்வதற்கு அது சக்திவாய்ந்த ஒரு தூண்டுதலாக இருக்கிறது.
“முரட்டு குணமுள்ள எஜமான்கள்
சாலி என்ற பெயருள்ள ஒரு பெண் சொல்லுகிறாள்: “என்னுடைய மேற்பார்வையாளர் எப்போது பார்த்தாலும் என்னை கண்காணித்துக் கொண்டே இருப்பது போல நான் உணருகிறேன். அவர் ஒருபோதும் ஒரு நல்லவார்த்தை எவரிடமும் பேசுவதில்லை.” முரட்டு குணமுள்ள அல்லது முன்கோபமுள்ள ஒரு எஜமானின் கீழ் வேலை செய்வது. விசேஷமாக ஒருவர் வேலைக்குப் புதிதாக இருக்கையில் அதேவிதமாக ஏமாற்றத்தைத் தருவதாக இருக்கக்கூடும்—1 பேதுரு 2:18.
வேலையிலிருந்து நின்று விடுவது பொருளாதார ரீதியில் சாத்தியமற்றதாக இருக்கக்கூடும். இதன் காரணமாக—ஆண்களும் பெண்களுமாகிய வேலையாட்கள்—“கீழ்ப்படிந்திருங்கள்” என்ற பைபிளின் ஆலோசனையைப் பின்பற்றுவதே மிகச் சிறந்ததாக இருக்கக்கூடும். (1 பேதுரு 2:18 வஞ்சப்புகழ்ச்சியாக அல்லது அவமரியாதையாகப் பேசி சச்சரவை பெரிதாக்குவதற்குப் பதிலாக “எதிர்த்துப் பேசாமல் எல்லாவற்றிலும் [எஜமானருக்கு] பிரியமுண்டாக நடந்துகொள்ள” முயற்சி செய்யுங்கள். (தீத்து 2:9, 10) இப்படிப்பட்ட தன்னடக்கம், உங்கள் வேலையை நீங்கள் இழப்பதையும்கூட தடைசெய்யக்கூடும். சாலொமோன் சொன்னான்: “அதிபதியின் [அதிகாரத்திலுள்ள ஒருவர்] கோபம் உன்மேல் எழும்பி பெரிய குற்றங்களையும் அமர்த்திப்போடும்.”—பிரசங்கி 10:4.
முரட்டு சுபாவமுள்ள பணி ஏவுநரின் பொறுமையின் மைக்குப் பதிலாக சாந்தமாயும், நியாயமற்ற கோரிக்கைகளுக்கு பதிலாக கனிவாகவும் செயல்படுகையில் அவருக்கு அது தலைக்குனிவை ஏற்படுத்தக்கூடும். (நீதிமொழிகள் 15:1, கொலோசெயர் 4:6) உங்கள் திறமையையும் நம்பத்தக்க தன்மையையும் நீங்கள் நிரூபிக்கையில், உங்களிடமாக அவருடைய மனநிலை படிப்படியாக மாறிவிடக்கூடும். இல்லையென்றால் கடவுள் உங்கள் கிறிஸ்தவ நடத்தையைக் குறித்து மகிழ்ச்சியடைகிறார் என்பதை அறிந்தவர்களாய், “நீடிய பொறுமையோடிருப்பதை”விட செய்வதற்கு ஒன்றுமில்லை—யாக்கோபு 5:7, 8.
ஒழுக்கத்தில் கற்புள்ளவர்களாய் நிலைத்திருத்தல்
உத்தமத்தன்மை கிறிஸ்தவ ஒழுக்கத்தையும்கூட உட்பட்டிருக்கிறது. லேடீஸ் ஹோம் ஒரு கட்டுரை பின்வருமாறு எச்சரித்தது: “அனைவருமே நன்றாக உடுத்திக்கொண்டு, நன்றாக தங்களை நடத்திக்கொண்டு, ஒன்றாகச் சேர்ந்து நேரத்தை செலவழித்து, பொதுவான இலக்குகளை நாடும்படியாக எதிர்பார்க்கப்படுகின்றன அலுவலகத்தில் பால் வளர்ச்சி நிறைந்த ஒரு சூழ்நிலை உருவாவது எளிதாக இருக்கிறது.” அலுவலக காதல் விவகாரங்கள் அடிக்கடி அடிப்படும் பேச்சாக இருக்கிறது. வேலையில் ஆண்களோடு கொள்ளும் தொடர்பை தொழிலளவில் வைத்துக்கொள்ளுங்கள். காதல் உணர்ச்சிகளை கிளறி விடக்கூடிய சம்பாஷணைகளை தவிர்த்துவிடுங்கள் நீங்கள் வேசி மார்க்கத்துக்கு விலகியிருக்க வேண்டுமென்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது”—1 தெசலோனிக்கேயர் 4:3, 4.
ஆனால் சில சமயங்களில் பெண்கள், பழங்காலம் முதற்கொண்டே இருந்துவரும் பிரச்னைக்கு பலியாட்களாக இருக்கிறார்கள்: பால் சம்பந்தமாக நச்சரிக்கப்படுகிறார்கள். போவாஸ் என்ற பெயர் கொண்ட மனிதன் அவனுடைய வயலில் வேலை செய்துகொண்டிருந்த ரூத் என்னும் பெண்ணை எவரும் “தொடாதபடிக்கு” தன்னிடம் வேலை பார்த்து வந்த வாலிபர்களுக்கு கட்டளையிட்டதாக பைபிள் நமக்குச் சொல்லுகிறது. “உழவுத் தொழிலாளிகள் பெண்களை இப்படிப்பட்ட கீழ்த்தரமான கேலிப்பேச்சுகளால் தாக்கும் பழக்கமுள்ளவர்களாய்” இருந்ததைப்பற்றி பைபிள் அறிஞர் ஜான் P. லான்ஜ் பேசுகிறார். (ரூத் 2:9) இன்றைய எஜமானர்களில் சிலர் தங்களிடம் வேலைப் பார்க்கும் பெண்களை பாதுகாக்க முயற்சித்தாலும், (ஐக்கிய மாகாணங்களில்) வேலை செய்யும் பெண்களில் 40-85 சதவிகிதத்தினர் ஏதாவது ஒரு வகையான பால் சம்பந்தமான நச்சரிப்புக்கு உள்ளாகும் நிலையில் இருந்திருக்கிறார்கள்.
உதாரணமாக, வேலரி என்ற பெயர் கொண்ட ஓர் இளம் பென் ஒரு காரியதரிசியாக பணி புரிந்து வந்தாள். அவ்வப்போது அவளுடைய எஜமான்—அவளைவிட மூன்று மடங்கு வயதில் மூத்த எஜமான்—அவளுடைய உடையைப் பற்றி ஏதாவது அத்துமீறி பேசுவார், ஒரு சமயம் கீழ்த்தரமான படங்களை அவள் பார்க்கும்படியாகச் செய்ய முயற்சி செய்திருக்கிறார். கடைசியாக ஒரு நாள் அவளை தன்னுடைய அலுவலகத்துக்குள் அழைத்து. “உன் வேலையை காப்பாற்றிக்கொள்வதற்கு என்னுடைய சில ஆசைகளுக்கு நீ இணங்க வேண்டும்” என்பதாகச் செய்ய மறுத்தாள்.
இத்தகைய மானக்கேடான நடத்தை பல்வகை வடிவங்களில் இருக்கலாம். நியு ஸ்டேட்ஸ்மென் என்ற பிரிட்டிஷ் பத்திரிகை இவ்வாறு சொல்லுகிறது: “காம கண்ணோடு பார்ப்பது, கிள்ளுவது, அனாவசியமாக உடலில் உராய்வது மற்றும் தவறான பேச்சு ஆக பல வடிவங்களில் அது இருக்கலாம்.” ஒழுக்கங்கெட்ட காரியத்தில் ஈடுபடுவதற்கான அழுத்தம், அநேகமாக செல்லப் பெயர்களால் [தேவனே, காதலியே] அழைக்கப்படுவது போல அத்தனை தந்திரமானதாகவோ அல்லது மூடிமறைக்காமல் நேரடியாக அதில் ஈடுபடுவதற்கு அழைக்கப்படுவதுபோல வெளிப்படையானதாகவோ அல்லது மூடிமறைக்காமல் நேரடியாக அதில் ஈடுபடுவதற்கு அழைக்கப்படுவதுபோல வெளிப்படையானதாகவோ இருக்கலாம். சில பெண்கள் வேலையை இழந்துவிட நேரிடுமோ என்ற பயத்தில் தொல்லைகளைச் சகித்துக்கொள்கிறார்கள். வெகு சிலப் பெண்கள் இவ்விதமாக அவர்களுக்குக் கிடைக்கும் கவனத்தில் பெருமைக் கொள்வதையும் சுற்றாய்வுகள் காண்பிக்கின்றன.
ஆனால் எதிர்பாலர் காண்பிக்கும் கவனம் மகிழ்ச்சியைத் தருவதாக இருந்தாலும், அத்துமீறிய நெருக்கமான பழக்கமே அநேகமாக கற்பழிப்பு விளையாட்டில் முதல் படியாக இருக்கிறது. இதன் காரணமாகவே, இது உங்களுடைய உத்தமத்தின் மீது கொண்டுவரப்படும் தாக்குதலாகவும் உங்கள் கிறிஸ்தவ பெருந்தன்மைக்கு கேடு விளைவிப்பதாகவும் இருக்கிறது.—1 கொரிந்தியர் 6:18
தடுப்பு நடவடிக்கைகள்
“ஞானம் உன் இருதயத்தில் பிரவேசித்து . . .நல்யோசனை உன்னைக் காப்பாற்றும், பகுத்துணர்வு உன்னைப் பாதுகாக்கும்.” (நீதிமொழிகள் 2:10, 11) ஆகவே உங்களை பாதுகாத்துக்கொள்ள நடைமுறையான ஞானத்தையும் பகுத்துணர்வையும் நீங்கள் எவ்விதமாக பயன்படுத்தலாம்? டயனா என்ற பெயருள்ள வேலைபார்க்கும் ஒரு பெண் சொல்கிறாள்: “நான் யெகோவாவின் சாட்சிகளில் ஒருத்தி என்பதை வேலை செய்யுமிடத்தில் தெரிவித்து விடுகிறேன்.” (மத்தேயு 5:16) உங்களுக்கு உயர்ந்த ஒழுக்க தராதரங்கள் இருப்பதை ஆண்கள் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் உங்களிடம் உயர்ந்த ஒழுக்க தராதரங்கள் இருப்பதை ஆண்கள் தெரிந்துகொள்ளும்போது அவர்கள் உங்களிடம் நெருங்க மாட்டார்கள்.
பெட்டி என்ற பெயருள்ள பகுத்துணரும் ஆற்றலுள்ள பெண் மற்றொரு முன் எச்சரிக்கையான நடவடிக்கையை எடுக்கிறாள். அவள் சொல்லுகிறாள்: “என்னோடு வேலை பார்ப்பவர்களோடு கூட்டுறவுக் கொள்வதைக் குறித்து நான் அதிக ஜாக்கிரதையாக இருக்கிறேன். ஏனென்றால் அவர்களுடைய ஒழுக்கங்கள் என்னுடையதைப் போல் இல்லை.” (1 கொரிந்தியர் 15:33) இது உடன் வேலை செய்பவர்களிடமிருந்து விலகிக் கொண்டு விடுவதையோ அல்லது பகைமை உணர்ச்சியைக் காண்பிப்பதையோ அர்த்தப்படுத்துவதில்லை. ஆனால் கிறிஸ்தவர்களுக்கு அருவருப்பான விஷயங்களைக் குறித்து அவர்கள் பேசுவதில் விடாப்பிடியாக இருக்கையில் அங்கிருந்து போய்விட தயங்காதீர்கள். (எபேசியர் 5:3, 4) இப்படிப்பட்ட ஒழுக்கயீனமான பேச்சை நீங்கள் செவிகொடுத்து கேட்டுக்கொண்டிருப்பது அவர்கள் நெருங்குகையில் நீங்கள் அதை ஏற்றுக்கொள்வீர்கள் என்ற அபிப்பிராயத்தை கொடுக்கக்கூடும்.
தொழிலளவிலான ஒரு தோற்றத்தை காத்துக்கொள்வதும்கூட அனாவசியமான பார்வையை தடை செய்வதாக இருக்கும். மேலுமாக பைபிள் பெண்களை “தகுதியான வஸ்திரத்தினாலும், நாணத்தினாலும் தெளிந்த புத்தியினாலும் அலங்கரித்துக்” கொள்ளும்படியாகச் சொல்லுகிறது. (1 தீமோத்தேயு 2:10; நீதிமொழிகள் 7:10 வேறுபடுத்திப் பார்க்கவும்) வேலையில் பால் சம்பந்தமான நச்சரிப்பு என்ற புத்தகம் இவ்விதமாகச் சொல்லுகிறது: “காமத்தைத் தூண்டும் உடை, அதாவது இறங்கிய கழுத்து சட்டைகள்; மெல்லிய உடைகள்; மிகவும் தூக்கலான அரைப்பாவாடைகள், பளப்பளப்பான முக ஒப்பனைகள்—வேலை செய்யும் இடத்துக்கு உரியவை அல்ல. . .நீங்கள் கண்கவர்ந்து ஈர்க்காதவகையில் உடுத்திக்கொள்வதை தெரிந்துகொண்டால், தொழிலுக்கேற்ப உருவத்தை உருவாக்குவதற்கான உங்கள் வாய்ப்புகள் அதிகமாக இருக்கும்.”
கடைசியாக, பகுத்துணர்வுள்ள ஒரு பெண் ஆபத்தை விளைவிக்கக்கூடிய நிலைமைகளைத் தவிர்க்கிறாள். மது அருந்துவதற்கான ஒரு அமைப்போ அல்லது எந்தக் காரணமுமின்றி வேலை நேரம் முடிந்தபின் இருப்பதற்கான அழைப்போ ஒரு கண்ணியாக இருக்கக்கூடும். (2 சாமுவேல் 13:1-14 ஒப்பிடவும்) “விவேகி ஆபத்தைக் கண்டு மறைந்துகொள்ளுகிறான்” என்கிறது ஞானமுள்ள ஒரு நீதிமொழி.—நீதிமொழிகள் 22:3.
நச்சரிப்பை நிறுத்துவது
வேலை செய்யுமிடத்திலுள்ள எல்லா ஆண்களின் சிந்தனையையும் சீராக்கிவிட முடியும் என்றோ நீண்டகாலமாகவே ஆழமாக பதிந்துவிட்ட நடத்தை மாதிரிகளை மாற்றிட முடியும் என்றே நினைப்பது நடைமுறைக்கு ஒத்துவராது. (எரேமியா 13:23 ஒப்பிடவும்) அதிக கலகலப்பாக பழகும் சுபாவமுள்ள எல்லா ஆண்களுக்குமே “விபசார மயக்கம் நிறைந்த கண்களிரு”ப்பதாக முடிவு செய்வதும் நியாயமற்றதாக இருக்கும். (2 பேதுரு 2:14) ஆனால் அத்துமீறிய நெருக்கமான பழக்கம் தெளிவாக இருந்தால், உறுதியான நிலைநிற்கையை எடுங்கள்.
சாலொமோன் ஓர் இளம் பெண்ணிடமாக அனாவசியமான காதல் கோரிக்கைகள் செய்தபோது அவள் பேசாமல் இருந்துவிடவில்லை. அவன் சொன்ன முகப்புகழ்ச்சிக்கு, தாழ்மையான மேய்ப்பனிடமாக தனக்கிருந்த பிறழாத நேசத்தையே வெளியிட்டு அவள் பதிலளித்தாள். சாலொமோன் அவளை அடைய எடுத்த முயற்சிகளுக்கு அவள் இணங்கிவிட மறுத்துவிட்டிருந்ததன் காரணமாக, “நான் மதில்தான்” என்று அவளால் சொல்ல முடிந்தது.—உன்னதப்பாட்டு 8:10.
அதே விதமான உறுதியை காண்பியுங்கள். அநேகமாக இந்த அத்துமீறல்களை, பின்வருமாறு சொல்வதன் மூலம் முளையிலேயே கிள்ளிவிட முடியும். “தயவுசெய்து தொடாதீர்கள்;” “என் பெயரால் என்னை கூப்பிடுங்கள்” அல்லது “இந்த விதமான விளையாட்டெல்லாம் எனக்கு பிடிக்காது.” ஒரு கிறிஸ்தவப் பெண், ஒன்றுக்கும் மேற்பட்ட சமயங்களில், வெறுமென, “அதை நிறுத்திவிடுங்கள்” என்று சொல்லியிருக்கிறாள். எந்த சமயத்திலும் உங்களுடைய ‘இல்லை’ என்ற பதில் ‘இல்லை’ என்பதையே அர்த்தப்படுத்துவதை தெளிவாக்கிவிடுங்கள். (மத்தேயு 5:37 ஒப்பிடவும்) பலவீனமான அல்லது தெளிவில்லாத ஒரு பதில், இதைச் செய்ய முயற்சி செய்பவரை மேலும் கடினமாக முயற்சி செய்யவே உற்சாகப்படுத்துவதாக இருக்கக்கூடும்.
நீங்கள் விவாகமானவராக இருந்தால், உங்களுடைய எண்ணங்களை உங்கள் கணவரோடு பகிர்ந்துகொள்வது பொருத்தமாக இருக்கும். நிலைமையை எவ்விதமாக சமாளிப்பது என்பது பற்றி அவரிடம் சில நடைமுறையான யோசனைகள் இருக்கலாம். வேலையை மாற்றிக்கொள்வதே சிறப்பானதாக தோன்றினால் கடவுளுடைய இந்த வாக்குத்தத்தத்தை நினைவில் கொள்ளுங்கள்: “நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை.”—எபிரெயர் 13:5.
உங்கள் வேலையும் உங்கள் உத்தமத்தன்மையும்
உலகப்பிரகாரமான ஒரு வேலை அநேகமாக அவசியமானதாக இருந்தாலும், உங்களுடைய கிறிஸ்தவ உத்தமத்தன்மைக்கு அவை சில சமயங்களில் அச்சுறுத்தலாக இருக்கக்கூடும். இதன் காரணமாகவே மத்தேயு 10:16-லுள்ள இயேசுவின் வார்த்தைகள் வெகு பொருத்தமானவையாக உள்ளன: “சர்ப்பங்களைப் போல வினாவுள்ளவர்களும் புறாக்களைப் போலக் கபடற்றவர்களுமாய் இருங்கள்.”
வேலை செய்யுமிடத்தில் கிறிஸ்தவ உத்தமத்தைக் காத்துக்கொள்வது எளிதல்ல. ஆனால் அது கூடிய காரியமாகும். யெகோவாவின் சாட்சிகளின் மத்தியிலுள்ள ஆயிரக்கணக்கான பெண்கள், பைபிளின் புத்திமதியைப் பின்பற்றுவதன் மூலம் இதைக் செய்கிறார்கள். பைபிள் படிப்பு, ஜெபம், கிறிஸ்தவ கூட்டங்கள், ராஜ்ய பிரசங்கிப்பு வேலை இன்னும் மற்ற தெய்வீக நடவடிக்கைகளின் மூலமாக தங்களை ஆவிக்குரிய வகையில் பலமுள்ளவர்களாக வைத்துக்கொள்கிறார்கள். இதன் விளைவாக எந்த ஊதிய உயர்வும் கொடுக்க முடியாத ஒன்றை அனுபவித்துக் களிக்கிறார்கள். அது யெகோவாவின் தயவு தங்களுக்கிருப்பதை அறிந்திருப்பதே ஆகும். அவருடைய வார்த்தை பின்வரும் வாக்கை நமக்குக் கொடுக்கிறது: “உத்தமமாய் நடக்கிறவன் பத்திரமாய் நடக்கிறான்.”—நீதிமொழிகள் 10:9. (W87 3/11)
[பக்கம் 7-ன் படம்]
வேலை செய்யுமிடத்தில் உத்தமத்தைக் காத்துக்கொள்வதற்கு:
உடன்வேலை செய்பவர்களோடு கூடிமகிழ்வதைக் குறித்து ஜாக்கிரதையாயிருங்கள்
அடக்கமான உடையினால் உங்களை அலங்கரித்துக்கொள்ளுங்கள்
உங்களுக்கு உயர்ந்த ஒழுக்க தராதரங்கள் இருப்பது அவர்களுக்கு தெரிந்திருக்கட்டும்