-
அவள் புத்தியோடு நடந்துகொண்டாள்காவற்கோபுரம்—2010 | ஜனவரி 1
-
-
ஒரு கருத்தில், இந்தக் கொடிய தவறைச் சரிசெய்வதற்காக அபிகாயில் செய்த முதல் காரியத்தை நாம் ஏற்கெனவே பார்த்தோம். அவளுடைய கணவன் நாபாலைப் போல் அல்லாமல், அவள் காதுகொடுத்துக் கேட்பதற்கு மனமுள்ளவளாய் இருந்தாள். அந்த இளம் வேலைக்காரன் நாபாலைக் குறித்து இவ்வாறு சொன்னான்: “இவரோ, ஒருவரும் தம்மோடே பேசக்கூடாதபடிக்கு, பேலியாளின் மகனாயிருக்கிறார்.”c (1 சாமுவேல் 25:17) நாபால் தன்னைப் பெரிய ஆளாக நினைத்ததுதான் மற்றவர்கள் பேசியதைக் காதுகொடுத்துக் கேளாமல் போனதற்குக் காரணம். இப்படித் தலைக்கனம் பிடித்தவர்களை இன்றும்கூட சர்வசாதாரணமாகக் காண முடிகிறது. ஆனால், அபிகாயில் காதுகொடுத்துக் கேட்பாள் என்பதை அந்த இளைஞன் அறிந்திருந்தான்; அதனால்தான் அந்தப் பிரச்சினையைப் பற்றி சொல்ல அவளிடம் சென்றான்.
-
-
அவள் புத்தியோடு நடந்துகொண்டாள்காவற்கோபுரம்—2010 | ஜனவரி 1
-
-
c ‘பேலியாளின் மகன்’ என்று அந்த இளைஞன் குறிப்பிட்ட வார்த்தையின் அர்த்தம், எதற்கும் உதவாதவன். பிற பைபிள் மொழிபெயர்ப்புகள், நாபால் “யாருடைய பேச்சையும் கேட்காதவன்” என்ற விளக்கத்தை இந்த வாக்கியத்தில் சேர்த்திருக்கின்றன; அதன் முடிவில், “அவனிடம் பேசி எந்தப் பிரயோஜனமும் இல்லை” என்றும் குறிப்பிடுகின்றன.
-