உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எழுதப்பட்டுள்ள விஷயங்களுக்கு கவனம் செலுத்துவீர்களா?
    காவற்கோபுரம் (படிப்பு)—2017 | மார்ச்
    • 12 எசேக்கியாவுக்கு எப்படித் தலைக்கனம் வந்தது என்பதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை. அவருக்குத் தலைக்கனம் வந்ததால், “கடவுள் செய்த உதவிக்கு அவர் நன்றி காட்டவில்லை.” ஒருவேளை, அசீரியர்களை ஜெயித்ததாலோ, தன்னை யெகோவா குணப்படுத்தியதாலோ எசேக்கியாவுக்குத் தலைக்கனம் வந்திருக்கலாம். அவருக்கு இருந்த செல்வச் செழிப்பும் பேர் புகழும்கூட அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். முழு இதயத்தோடு அவர் யெகோவாவுக்குச் சேவை செய்திருந்தாலும், ஒரு சமயத்தில் அவர் தலைக்கனத்தோடு நடந்துகொண்டது யெகோவாவுக்குப் பிடிக்கவில்லை. ஆனால், பிறகு எசேக்கியா “தாழ்மையாக நடந்துகொண்டார்.” அதனால், யெகோவா அவரை மன்னித்தார்.—2 நா. 32:25-27; சங். 138:6.

  • எழுதப்பட்டுள்ள விஷயங்களுக்கு கவனம் செலுத்துவீர்களா?
    காவற்கோபுரம் (படிப்பு)—2017 | மார்ச்
    • 14 “கொடுக்கப்பட்ட எல்லா வேலைகளையும் செய்து முடித்த பின்பு, ‘நாங்கள் ஒன்றுக்கும் உதவாத அடிமைகள்; செய்ய வேண்டிய கடமையைத்தான் செய்தோம்’ என்று சொல்லுங்கள்” என்று இயேசு சொன்னதை நாம் எப்போதும் ஞாபகத்தில் வைக்க வேண்டும். (லூக். 17:10) எசேக்கியாவுக்குத் தலைக்கனம் வந்தபோது, யெகோவா தனக்கு எப்படியெல்லாம் உதவி செய்தார் என்பதை அவர் மறந்துவிட்டார். நாம் நன்றாகப் பேச்சு கொடுத்ததற்காக யாராவது நம்மைப் பாராட்டினால், நாம் எப்படித் தாழ்மையாக நடந்துகொள்ளலாம்? யெகோவா நமக்குச் செய்திருப்பதை ஆழமாக யோசித்துப் பார்க்க வேண்டும். அவரைப் பற்றியும், அவர் நமக்கு எப்படியெல்லாம் உதவி செய்திருக்கிறார் என்பதைப் பற்றியும் நாம் மற்றவர்களிடம் சொல்ல வேண்டும். அவர் நமக்கு பைபிளையும், அவருடைய சக்தியையும் கொடுத்ததால்தான் நம்மால் நன்றாகப் பேச்சு கொடுக்க முடிந்தது!

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்