-
கடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள்இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
-
-
18. (அ) ஆமானுக்கு முன்னால் தலைவணங்க மொர்தெகாய் ஏன் மறுத்தார்? (அடிக்குறிப்பையும் காண்க.) (ஆ) இன்று விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் மொர்தெகாயின் முன்மாதிரியை எப்படிப் பின்பற்றுகிறார்கள்?
18 ஆமான் என்பவனுக்கு அகாஸ்வேருவின் அரசவையில் உயர் பதவி அளிக்கப்பட்டது. அரசர் அவனுக்கு அந்தச் சாம்ராஜ்யத்தில் தனக்கடுத்த அந்தஸ்தைக் கொடுத்தார்; அவனைப் பிரதம மந்திரியாக நியமித்து, தனது முக்கிய ஆலோசகராக வைத்துக்கொண்டார். இந்த அதிகாரியின் முன்னால் அனைவரும் தலைவணங்க வேண்டும் என்று ஆணையும் பிறப்பித்தார். (எஸ்தர் 3:1-4) அந்த அரசாணை மொர்தெகாய்க்கு ஒரு பிரச்சினையாக உருவெடுத்தது. அரசருடைய ஆணைக்குக் கீழ்ப்படிய விரும்பினார், ஆனால் அது கடவுளுடைய ஆணையை மீறாத பட்சத்தில் மட்டுமே! பைபிள் சொல்கிறபடி, ஆமான் ஒரு ஆகாகியன். அப்படியென்றால் அவன் அமலேக்கிய அரசனாகிய ஆகாகின் வம்சத்தில் வந்தவன். இந்த ஆகாகைத்தான் சாமுவேல் தீர்க்கதரிசி வெட்டிப்போட்டிருந்தார். (1 சா. 15:33) அமலேக்கியர் மிகவும் பொல்லாதவர்கள், அதனால் யெகோவாவுக்கும் இஸ்ரவேலருக்கும் எதிரிகள்; அடியோடு அழிக்கப்பட வேண்டுமெனக் கடவுளால் கண்டனம் செய்யப்பட்டவர்கள்.c (உபா. 25:19) அப்படியிருக்கும்போது உண்மையுள்ள யூதன் இந்த அமலேக்கியனுக்கு முன்னால் எப்படித் தலைவணங்க முடியும்? இந்த விஷயத்தில் மொர்தெகாய் உறுதியாய் இருந்தார். இந்நாள்வரை விசுவாசமுள்ள ஆண்களும் பெண்களும் இதேபோன்ற உறுதியுடன் இருக்கிறார்கள்; ஆம், உயிரையே பணயம் வைக்க வேண்டியிருந்தாலும், ‘மனிதர்களுக்குக் கீழ்ப்படிவதற்குப் பதிலாக, கடவுளுக்கே கீழ்ப்படிய வேண்டும்’ என்ற நியமத்தைப் பின்பற்றுகிறார்கள்.—அப். 5:29.
-
-
கடவுளுடைய மக்களுக்காகத் துணிந்து செயல்பட்டாள்இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
-
-
c அமலேக்கியரில் ‘மீதியாயிருந்தவர்கள்’ எசேக்கியா ராஜாவின் நாட்களிலேயே அழிக்கப்பட்டுவிட்டார்கள்; அதிலும் கடைசியாக எஞ்சிய சிலரில் இந்த ஆமான் ஒருவனாக இருந்திருக்கலாம்.—1 நா. 4:43.
-