யோபு சகித்திருந்தார்—நாமும் சகித்திருக்க முடியும்!
“இதோ! சகித்திருக்கிறவர்களை சந்தோஷமுள்ளவர்களென்கிறோமே!”—யாக்கோபு 5:11, NW.
1. வயதான ஒரு கிறிஸ்தவன் தனக்கு வந்த சோதனைகளைப் பற்றி என்ன சொன்னார்?
‘சாத்தான் என்னைப் பிடித்துவிட பின்தொடருகிறான்! யோபு உணர்ந்தவிதமாகவே நான் உணருகிறேன்!’ தன்னுடைய உணர்ச்சிகளை இப்படிப்பட்ட வார்த்தைகளில் A. H. மேக்மில்லன் யெகோவாவின் சாட்சிகளுடைய தலைமைக் காரியாலயத்திலிருந்த தன்னுடைய நெருங்கிய நண்பனிடம் வெளிப்படுத்தினார். சகோதரர் மேக்மில்லன் தன்னுடைய பூமிக்குரிய வாழ்க்கையை 89-வது வயதில் ஆகஸ்ட் 26, 1966-ல் முடித்தார். தன்னைப் போன்ற அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களின் உண்மையுள்ள ஊழியத்துக்கு நற்பலன் “அவர்களோடே கூடப்போம்,” என்பதை அவர் அறிந்திருந்தார். (வெளிப்படுத்துதல் 14:13) ஆம், அவர்கள் பரலோகத்தில் சாவாமையுள்ள வாழ்க்கைக்கு உயிர்த்தெழுப்பப்படுவதன் மூலம் எந்த தடங்கலும் இல்லாமல் யெகோவாவின் சேவையைத் தொடர்ந்து செய்வர். சகோதரர் மேக்மில்லன் அந்த வெகுமதியைப் பெற்றுக்கொண்டதற்காக அவருடைய நண்பர்கள் களிகூர்ந்தார்கள். என்றாலும் பூமியில் அவருடைய வாழ்க்கையின் கடைசிநாட்களில் உடல் நலப் பிரச்சினை உட்பட பல்வேறு சோதனைகள் அவரை நெருக்கித் தாக்கின. இவை கடவுளிடமாக அவருடைய உத்தமத்தை முறித்துப்போடுவதற்கு சாத்தானுடைய முயற்சிகளாக இருப்பதை வெகுவாக உணரும்படி அவரைச் செய்தன.
2, 3. யோபு யார்?
2 சகோதரர் மேக்மில்லன் யோபுவைப் போலவே தான் உணர்ந்ததாகச் சொன்னபோது, அவர் விசுவாசத்தின் பெரிய பரீட்சைகளைச் சகித்திருந்த ஒரு மனிதனைப் பற்றி குறிப்பிட்டுக்கொண்டிருந்தார். யோபு “ஊத்ஸ் தேசத்திலே” வாழ்ந்துவந்தார். இது ஒருவேளை வடக்கு அரேபியாவில் இருந்திருக்கக்கூடும். நோவாவின் குமாரனாகிய சேமின் வம்சத்தில் வந்த இவர் யெகோவாவின் வணக்கத்தாராக இருந்தார். யோசேப்பின் மரணத்துக்கும் மோசே தன்னை உத்தமனாக நிரூபித்ததற்கும் இடைப்பட்ட ஏதோ ஒரு காலத்தில் யோபுவுக்குச் சோதனைகள் நிகழ்ந்திருக்கவேண்டும். அந்தக் காலப்பகுதியில் பூமியில் தேவ பக்தியில் எவருமே யோபுவுக்கு நிகராக இருக்கவில்லை. யெகோவா யோபுவை குற்றமற்றவனாக, உத்தமனாக, தேவ பயமுள்ளவனாக கருதினார்.—யோபு 1:1, 8.
3 ‘கிழக்கத்திப் புத்திரர் எல்லாரிலும் பெரியவனாக,’ யோபுவுக்கு அநேக வேலைக்காரர் இருந்தார்கள், அவருடைய கால்நடைகளின் எண்ணிக்கை 11,500-ஆக இருந்தது. ஆனால் ஆவிக்குரிய செல்வங்களே அவருக்கு மிக அதிக முக்கியத்துவமுடையனவாக இருந்தன. இன்றுள்ள தேவ பக்தியுள்ள தகப்பன்மாரைப் போல, யோபு தன்னுடைய ஏழு குமாரர்களுக்கும் மூன்று குமாரத்திகளுக்கும் யெகோவாவைப் பற்றி போதித்திருக்க வேண்டும். அவர்கள் அவருடைய வீட்டில் இனிமேலும் வாழ்ந்து கொண்டில்லாமல் இருந்தபோதிலும், அவர்கள் பாவம் செய்ய நேரிடலாம் என்பதற்காக அவர்களுக்காகப் பலிகளைச் செலுத்துவதன் மூலம் குடும்பத்துக்கு ஆசாரியனாக செயல்பட்டு வந்தார்.—யோபு 1:2-5.
4. (அ) துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள் யோபுவைப் பற்றி ஏன் சிந்திக்கவேண்டும்? (ஆ) யோபுவைக் குறித்ததில், நாம் என்ன கேள்விகளைச் சிந்திப்போம்?
4 துன்புறுத்தப்படும் கிறிஸ்தவர்கள் பொறுமையோடு சகித்திருப்பதற்காக தங்களைத்தாங்களே பலப்படுத்திக்கொள்வதற்கு சிந்திக்கவேண்டிய ஒருவர் யோபு ஆவார். “இதோ, [சகித்திருப்பவர்களை, NW] பாக்கியவான்களென்கிறோமே! யோபின் [சகிப்புத்தன்மையைக் குறித்து, NW] கேள்விப்பட்டிருக்கிறீர்கள்; கர்த்தருடைய செயலின் முடிவையும் கண்டிருக்கிறீர்கள்; கர்த்தர் மிகுந்த உருக்கமும் இரக்கமுமுள்ளவராயிருக்கிறாரே,” என்பதாக சீஷனாகிய யாக்கோபு எழுதினார். (யாக்கோபு 5:11) யோபுவைப் போலவே, அபிஷேகம் செய்யப்பட்ட, இயேசுவை பின்பற்றுவோருக்கும் இந்நாளைய ‘திரள் கூட்டத்தாருக்கும்’ விசுவாசத்தின் சோதனைகளை வெற்றிகரமாக சமாளிப்பதற்கு சகிப்புத்தன்மை தேவையாக இருக்கிறது. (வெளிப்படுத்துதல் 7:1-9) ஆகவே என்ன சோதனைகளை யோபு சகித்திருந்தார்? அவை ஏன் சம்பவித்தன? அவருடைய அனுபவங்களிலிருந்து நாம் எவ்வாறு பயனடையலாம்?
கொழுந்துவிட்டெறியும் ஒரு விவாதம்
5. யோபுவுக்குத் தெரியாமலே, பரலோகத்தில் என்ன நடந்துகொண்டிருந்தது?
5 யோபுவுக்குத் தெரியாமலே, மிகப் பெரிய ஒரு விவாதம் பரலோகத்தில் எழுப்பப்பட இருந்தது. ஒரு நாள் ‘தேவபுத்திரர் கர்த்தருடைய சந்நிதியில் வந்து நின்றார்கள்.’ (யோபு 1:6) கடவுளுடைய ஒரே பேறான குமாரனாகிய வார்த்தை அங்கே இருந்தார். (யோவான் 1:1-3) மேலுமாக நீதியுள்ள தூதர்களும் கீழ்ப்படியாத ‘தேவபுத்திரரும்’கூட அங்கிருந்தார்கள். (ஆதியாகமம் 6:1-3) சாத்தானும் அங்கே இருந்தான், ஏனெனில் ராஜ்யம் 1914-ல் ஸ்தாபிக்கப்பட்ட பின்புதானே பரலோகத்திலிருந்து அவன் தள்ளப்படுவான். (வெளிப்படுத்துதல் 12:1-12) யோபுவின் நாளில், சாத்தான் கொழுந்துவிட்டெறியும் ஒரு விவாதத்தை எழுப்ப இருந்தான். அவருடைய எல்லா படைப்புகளின் மேலும் யெகோவா அரசாட்சிசெய்ய உரிமையுடையவரா என்பதைக் குறித்து சந்தேகத்தை வெளிப்படுத்த இருந்தான்.
6. சாத்தான் என்ன செய்ய முயற்சி செய்துகொண்டிருந்தான், அவன் யெகோவாவை எவ்வாறு பழிதூற்றினான்?
6 “நீ எங்கேயிருந்து வருகிறாய்?” என்று யெகோவா கேட்டார். சாத்தான், “பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன்,” என்று பதிலளித்தான். (யோபு 1:7) அவன் யாரையாவது விழுங்க வகைதேடிக்கொண்டிருந்தான். (1 பேதுரு 5:8, 9) யெகோவாவைச் சேவிக்கும் தனிநபர்களின் உத்தமத்தை முறித்துப்போடுவதன் மூலம், அன்பினால் தூண்டப்பட்டு எவருமே கடவுளுக்கு முழுமையாக கீழ்ப்படியமாட்டார்கள் என்பதாக நிரூபிக்க சாத்தான் முயற்சி செய்வான். இந்த விவாதத்தைக் குறித்து பேசுபவராக, யெகோவா சாத்தானை இவ்விதமாக கேட்டார்: “என் தாசனாகிய யோபின்மேல் கவனம் வைத்தாயோ? உத்தமனும், சன்மார்க்கனும், தேவனுக்குப் பயந்து, பொல்லாப்புக்கு விலகுகிறவனுமாகிய அவனைப் போலப் பூமியில் ஒருவனும் இல்லை.” (யோபு 1:8) யோபு தன்னுடைய அபூரணத்தைக் கவனத்தில் எடுத்துக்கொண்ட தெய்வீக தராதரங்களைப் பூர்த்திசெய்தார். (சங்கீதம் 103:10-14) ஆனால் சாத்தான் சுருக்கென்று இவ்வாறு பதிலளித்தான்: “யோபு விருதாவாகவா தேவனுக்குப் பயந்து நடக்கிறான்? நீர் அவனையும் அவன் வீட்டையும் அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சுற்றி வேலியடைக்கவில்லையோ? அவன் கைகளின் கிரியையை ஆசீர்வதித்தீர்; அவனுடைய சம்பத்து தேசத்தில் பெருகிற்று.” (யோபு 1:9, 10) இவ்விதமாக பிசாசு, எவருமே யெகோவா எப்படிப்பட்டவராக இருக்கிறாரோ அதற்காக அவரை நேசித்து அவரை வணங்குவது இல்லை என்பதாகவும் அவரைச் சேவிப்பதற்காக அவர் லஞ்சம் கொடுப்பதாகவும் மறைமுகமாக சுட்டிக்காட்டுவதன் மூலம் அவரைப் பழிதூற்றினான். யோபு அன்பினால் தூண்டப்பட்டு அல்ல, தன்னலமான இலாபத்திற்காகவே கடவுளைச் சேவித்தான் என்று சாத்தான் குறிப்பிட்டான்.
சாத்தான் தாக்குகிறான்!
7. பிசாசு எவ்வகையில் கடவுளுக்குச் சவால் விட்டான், யெகோவா எவ்வாறு பிரதிபலித்தார்?
7 “ஆனாலும் உம்முடைய கையை நீட்டி அவனுக்கு உண்டானவையெல்லாம் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்,” என்று சாத்தான் சொன்னான். இப்படிப்பட்ட அவமதிப்பான சவாலுக்கு கடவுள் எவ்விதமாக பதிலளிப்பார்? “இதோ, அவனுக்கு உண்டானவையெல்லாம் உன் கையிலிருக்கிறது; அவன்மேல் மாத்திரம் உன் கையை நீட்டாதே,” என்று யெகோவா சொன்னார். யோபு பெற்றிருந்த அனைத்துமே ஆசீர்வதிக்கப்பட்டு, மிகுதியாக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டிருந்தன என்பதாக பிசாசு சொன்னான். யோபு துன்பமனுபவிக்க கடவுள் அனுமதிப்பார், ஆனால் அவனுடைய சரீரம் தொடப்படக்கூடாது. தீமைசெய்ய தீர்மானித்தவனாய், சாத்தான் கூட்டத்திலிருந்து புறப்பட்டுசென்றான்.—யோபு 1:11, 12.
8. (அ) யோபு என்ன பொருள் சம்பந்தமான இழப்புகளை அனுபவித்தார்? (ஆ) “தேவனுடைய அக்கினி” பற்றிய உண்மை என்னவாக இருந்தது?
8 விரைவில், சாத்தானுடைய தாக்குதல் ஆரம்பமானது. யோபுவின் வேலைக்காரர்களில் ஒருவன் இந்தக் கெட்ட செய்தியைக் கொண்டுவந்தான்: “எருதுகள் உழுகிறபோது, கழுதைகள் அவைகளின் பக்கத்திலே மேய்ந்துகொண்டிருக்கையில், சபேயர் அவைகள்மேல் விழுந்து, அவைகளைச் சாய்த்துக்கொண்டுபோனார்கள்; வேலையாட்களையும் பட்டயக்கருக்கினால் வெட்டிப்போட்டார்கள்.” (யோபு 1:13-15) யோபுவின் சொத்தைச் சுற்றியிருந்த வேலி நீக்கப்பட்டாயிற்று. அநேகமாக உடனடியாக, பிசாசின் வல்லமை நேரடியாக பயன்படுத்தப்பட்டது, ஏனென்றால் மற்றொரு வேலைக்காரன் வந்து இவ்விதமாக தெரிவித்தான்: “வானத்திலிருந்து தேவனுடைய அக்கினி விழுந்து, ஆடுகளையும் வேலையாட்களையும் சுட்டெரித்துப்போட்டது.” (யோபு 1:16) தம்முடைய சொந்த ஊழியக்காரன்மீதுகூட இப்படிப்பட்ட ஒரு பெருந்துன்பத்தைக் கடவுள் கொண்டுவருவதாக அவரை அதற்குப் பொறுப்புள்ளவராகத் தோன்ற செய்வது எத்தனை கொடூரமானது! மின்னல் வானத்திலிருந்து வருவதால், யெகோவா எளிதில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கமுடியும், ஆனால் உண்மையில் அந்த அக்கினி பேய்த்தனமான ஊற்றுமூலத்திலிருந்து வந்தது.
9. பொருளாதார நாசம் எவ்வாறு கடவுளோடுள்ள யோபுவின் உறவைப் பாதித்தது?
9 சாத்தான் தாக்குதலைத் தொடர்ந்தபோது, கல்தேயர் வந்து ஒட்டகங்களைப் பிடித்து அவற்றை ஓட்டிக்கொண்டு போனார்கள் என்றும் மற்ற எல்லா வேலையாட்களையும் கொன்றுபோட்டார்கள் என்றும் மற்றொரு வேலைக்காரன் வந்து தெரிவித்தான். (யோபு 1:17) யோபு இப்படிப்பட்ட பொருளாதார நாசத்தை அனுபவித்தபோதிலும், இது கடவுளோடுள்ள அவருடைய உறவை அழித்துப்போடவில்லை. யெகோவாவிடமாக உங்களுடைய உத்தமத்தை முறித்துக்கொள்ளாமல் அதிகமான பொருள் சம்பந்தமான நஷ்டங்களை நீங்கள் சகித்துக் கொள்வீர்களா?
அதிகமான சோக சம்பவங்கள் தாக்குகின்றன
10, 11. (அ) யோபுவின் பத்து பிள்ளைகளுக்கு என்ன சம்பவித்தது? (ஆ) யோபுவின் பிள்ளைகளுடைய அவலமான மரணத்துக்குப் பின்பு, அவர் யெகோவாவை எவ்வாறு கருதினார்?
10 பிசாசு யோபுவைத் தாக்குவதை முடித்துக்கொள்ளவில்லை. மற்றொரு வேலைக்காரன் பின்வருமாறு தெரிவித்தான்: “உம்முடைய குமாரரும் உம்முடைய குமாரத்திகளும், தங்கள் மூத்த சகோதரன் வீட்டிலே புசித்துத் திராட்சரசம் குடிக்கிறபோது, வனாந்தர வழியாய்ப் பெருங்காற்று வந்து, அந்த வீட்டின் நாலு மூலையிலும் அடிக்க, அது பிள்ளைகளின் மேல் விழுந்ததினால் அவர்கள் இறந்துபோனார்கள்; நான் ஒருவன்மாத்திரம் தப்பி, அதை உமக்கு அறிவிக்கும்படி வந்தேன்.” (யோபு 1:18, 19) தவறாக தகவல் அறிந்தவர்கள் அந்தக் காற்றினால் ஏற்பட்ட சேதம் ‘கடவுளுடைய செயல்’ என்பதாக சொல்லக்கூடும். என்றாலும், பேய்களின் வல்லமை யோபுவை அவருடைய உணர்ச்சிகள் விசேஷமாக மென்மையாக இருந்த இடத்தைத் தாக்கியது.
11 துயரத்தால் ஆட்கொள்ளப்பட்டவராய், யோபு ‘தன் சால்வையைக் கிழித்து, தன் தலையைச் சிரைத்து, தரையிலே விழுந்து பணிந்துகொண்டான்.’ என்றாலும், அவருடைய வார்த்தைகளைச் செவிகொடுத்துக் கேளுங்கள்: “கர்த்தர் கொடுத்தார், கர்த்தர் எடுத்தார்; கர்த்தருடைய நாமத்துக்கு ஸ்தோத்திரம்.” பதிவு கூடுதலாக இவ்வாறு சொல்கிறது: “இவையெல்லாவற்றிலும் யோபு பாவஞ்செய்யவுமில்லை, தேவனைப்பற்றிக் குறைசொல்லவுமில்லை.” (யோபு 1:20-22) சாத்தான் மறுபடியுமாக தோற்றுப்போனான். கடவுளுடைய ஊழியர்களாக நாம் இழப்பையும் துக்கத்தையும் அனுபவித்தால், அப்பொழுது என்ன? யெகோவாவிடமாக தன்னலமற்ற பக்தியும் அவரில் நம்பிக்கையும், யோபுவைப் போல உத்தமத்தைக் காப்பவர்களாக சகித்திருக்க நமக்கு உதவிசெய்யும். அபிஷேகம் செய்யப்பட்டவர்களும் பூமிக்குரிய நம்பிக்கையுடைய அவர்களுடைய தோழர்களும் நிச்சயமாகவே யோபுவின் சகிப்புத்தன்மைப் பற்றிய இந்தப் பதிவிலிருந்து ஆறுதலையும் பலத்தையும் பெறமுடியும்.
விவாதம் சூடுபிடிக்கிறது
12, 13. பரலோகத்தில் மற்றொரு கூட்டத்தில், சாத்தான் என்ன கேட்டுக்கொண்டான், கடவுள் எவ்வாறு பிரதிபலித்தார்?
12 யெகோவா விரைவில் மற்றொரு கூட்டத்தைப் பரலோக மன்றங்களில் கூட்டினார். யோபு பிள்ளையற்றவராக, தரித்திரராக, கடவுளால் தண்டிக்கப்பட்டவராக தோற்றமளித்தார், ஆனால் அவருடைய உத்தமத்தன்மை கெடாமல் இருந்தது. நிச்சயமாகவே, கடவுளுக்கும் யோபுவுக்கும் எதிரான சாத்தானுடைய குற்றச்சாட்டுகள் பொய்யாக இருந்தன என்பதை அவன் ஒப்புக்கொள்ளப்போவதில்லை. யெகோவா விவாதத்தைச் சாத்தானுக்கு வெட்கத்தை ஏற்படுத்தும் ஒரு முடிவுக்குக் கொண்டுவருவதற்காக பிசாசுடன் பேச்சைத் திறம்பட வழிநடத்துகையில் ‘தேவ புத்திரர்’ விவாதங்களையும் எதிர்விவாதங்களையும் கேட்க இருந்தனர்.
13 பதிலுரைக்கும்படியாக சாத்தானை அழைத்து யெகோவா இவ்விதமாகக் கேட்டார்: “நீ எங்கேயிருந்து வருகிறாய்?” பதில் என்னவாக இருந்தது? “பூமியெங்கும் உலாவி, அதில் சுற்றித்திரிந்து வருகிறேன்.” யெகோவா மறுபடியுமாக இன்னும் தன்னுடைய உத்தமத்தை உறுதியாக காத்துக்கொண்டிருந்த தம்முடைய குற்றமற்ற, நேர்மையுள்ள, தேவ பயமுள்ள ஊழியக்காரனாகிய யோபுவினிடமாக கவனித்தைத் திருப்பினார். பிசாசு பதிலளித்தான்: “தோலுக்குப் பதிலாகத் தோலையும், தன் ஜீவனுக்குப் பதிலாகத் தனக்கு உண்டான எல்லாவற்றையும் மனுஷன் கொடுத்துவிடுவான். ஆனாலும் நீர் உம்முடைய கையை நீட்டி, அவன் எலும்பையும் அவன் மாம்சத்தையும் தொடுவீரானால், அப்பொழுது அவன் உமது முகத்துக்கு எதிரே உம்மைத் தூஷிக்கானோ பாரும்.” ஆகவே கடவுள் சொன்னார்: “இதோ, அவன் உன் கையிலிருக்கிறான்; ஆகிலும் அவன் பிராணனைமாத்திரம் தப்பவிடு.” (யோபு 2:2-6) பாதுகாப்பான எல்லா வேலிகளையும் யெகோவா இன்னும் அகற்றிவிடவில்லை என்பதை மறைமுகமாக குறிப்பிடுகிறவனாய், சாத்தான் யோபுவின் எலும்புக்கும் மாம்சத்துக்கும் தீங்குசெய்யும்படியாக கேட்டான். பிசாசு, யோபுவை கொலை செய்ய அனுமதிக்கப்பட மாட்டான்; ஆனால் சரீர நோய் அவருக்கு வலியை உண்டாக்கி இரகசியமான பாவங்களுக்காக கடவுளிடமிருந்து தண்டனை அனுபவிப்பது போல அவருக்குத் தோன்றச் செய்யும் என்பதைச் சாத்தான் அறிந்திருந்தான்.
14. சாத்தான் யோபுவை எதனால் வாதித்தான், துன்பப்பட்ட அவருக்கு ஏன் எந்த மனிதனாலும் விடுதலையை அளிக்கமுடியவில்லை?
14 அந்தச் சபையிலிருந்து வெளியேற்றப்பட்டவனாய், சாத்தான் கொடூரமான ஒரு மகிழ்ச்சியோடு அங்கிருந்து புறப்பட்டான். அவன் யோபுவை “உள்ளங்கால் தொடங்கி அவன் உச்சந்தலைமட்டும் கொடிய பருக்களால்” வாதித்தான். சாம்பலில் உட்கார்ந்து ஒரு ஓட்டை எடுத்து, தன்னைச் சுரண்டிக்கொண்ட போது என்னே உச்ச அளவான வேதனையை யோபு அனுபவித்தார்! (யோபு 2:7, 8) சாத்தானிய வல்லமையினால் அது உண்டானதால், எந்த மனித மருத்துவராலும் இந்தப் பயங்கரமான வேதனைநிறைந்த, அருவருப்பை ஏற்படுத்தும், இழிவான பிணியிலிருந்து விடுதலையை அளிக்கமுடியவில்லை. யெகோவா மாத்திரமே யோபுவை குணப்படுத்த முடியும். கடவுளுடைய ஓர் ஊழியராகிய நீங்கள் நோயுற்றிருந்தால், சகித்திருக்க கடவுள் உங்களுக்கு உதவிசெய்து நோயிலிருந்து விடுபட்ட புதிய ஓர் உலகில் உங்களுக்கு ஜீவனை அளிக்கமுடியும் என்பதை ஒருபோதும் மறந்துவிடாதீர்கள்.—சங்கீதம் 41:1-3; ஏசாயா 33:24.
15. யோபுவின் மனைவி என்ன செய்யும்படியாக அவரை துரிதப்படுத்தினாள், அவருடைய பதில் என்னவாக இருந்தது?
15 கடைசியாக, யோபுவின் மனைவி இவ்விதமாகச் சொன்னாள்: “நீர் இன்னும் உம்முடைய உத்தமத்தில் உறுதியாய் நிற்கிறீரோ? தேவனைத் தூஷித்து ஜீவனைவிடும்.” “உத்தமம்” என்பது குற்றமற்ற பக்தியை குறிப்பிடுகிறது, யோபு கடவுளைத் தூஷிக்கச்செய்வதற்கு அவள் கேலியாகப் பேசியிருக்கலாம். ஆனால் அவர் இவ்வாறு பதிலளித்தார்: “நீ பயித்தியக்காரி பேசுகிறதுபோலப் பேசுகிறாய்; தேவன் கையிலே நன்மையைப் பெற்ற நாம் தீமையையும் பெறவேண்டாமோ?” சாத்தானுடைய இந்தத் திட்டமும்கூட விரும்பிய விளைவை உண்டுபண்ணவில்லை, ஏனென்றால் நாம் இவ்வாறு சொல்லப்படுகிறோம்: “இவைகள் எல்லாவற்றிலும் யோபு தன் உதடுகளினால் பாவஞ்செய்யவில்லை.” (யோபு 2:9, 10) எதிர்க்கின்ற குடும்ப அங்கத்தினர்கள், நாம் கிறிஸ்தவ வேலைகளில் நம்மை அதிகமாக ஈடுபடுத்திக்கொண்டு முட்டாள்தனமாக நம்மைநாமே வருத்திக்கொள்கிறோம் என்று சொல்வதாக வைத்துக்கொள்வோம். யோபுவைப் போல, நாம் இப்படிப்பட்ட ஒரு சோதனையைச் சகித்திருக்க முடியும், ஏனென்றால் நாம் யெகோவாவை நேசிக்கிறோம், அவருடைய பரிசுத்த பெயரைத் துதிக்க வாஞ்சையாக இருக்கிறோம்.—சங்கீதம் 145:1, 2; எபிரெயர் 13:15.
கர்வமுள்ள மூன்று வஞ்சகர்கள்
16. யோபுவைத் தேற்றுவதற்கு வருவதாக பாவனை செய்துகொண்டு வந்தது யார், ஆனால் சாத்தான் அவர்களை எவ்வாறு பயன்படுத்தினான்?
16 மூன்று ‘சிநேகிதர்’ யோபுவை தேற்றுவதற்கு வருவதாக பாவனை செய்துகொண்டு வந்தது சாத்தானின் மற்றொரு சதியாக அமைந்தது. ஏசாவின் மூலமாக ஆபிரகாமின் சந்ததியில் வந்த எலிப்பாஸ் அவர்களில் ஒருவன். பேசுவதற்கு எலிப்பாஸ் முதல் உரிமையைப் பெற்றிருந்த காரணத்தால் அவனே மூத்தவனாக இருக்கவேண்டும். கேத்தூராளின் மூலமாக ஆபிரகாமுக்குப் பிறந்த சூவாகையின் சந்ததியானாகிய பில்தாதும் அங்கிருந்தான். மூன்றாவது மனிதன் சோப்பார், அவனுடைய குடும்பம் அல்லது வாழ்ந்த இடத்தை—ஒருவேளை வடமேற்கு அரேபியாவை—அடையாளம் கண்டுகொள்வதற்காக அவன் நாகமாத்தியன் என்றழைக்கப்பட்டான். (யோபு 2:11; ஆதியாகமம் 25:1, 2; 36:4, 11) கடவுளை மறுதலிக்கும்படியாக இன்று யெகோவாவின் சாட்சிகளை செய்விக்க முயற்சிக்கும் ஆட்களைப் போலவே, இந்த மூவரும், யோபுவை பொய்க் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டு தன்னுடைய உத்தமத்தை கைவிடும்படிச் செய்யவைக்கும் முயற்சியில் சாத்தானால் பயன்படுத்தப்பட்டனர்.
17. பார்க்க வந்த மூவர் என்ன செய்தார்கள், இரவும் பகலும் ஏழு நாட்கள் அவர்கள் என்ன செய்யவில்லை?
17 அந்த மூவரும் அழுது, தங்கள் சால்வையைக் கிழித்து, தலைகளின்மேல் புழுதியைத் தூற்றிக்கொண்டு தங்கள் அனுதாபத்தை ஆரவாரத்தோடு வெளிக்காட்டினர். பின்னர் அவர்கள் யோபுவோடுகூட இரவும் பகலும் ஏழு நாட்கள் ஒரு வார்த்தையும் பேசாமல் உட்கார்ந்திருந்தார்கள்! (யோபு 2:12, 13; லூக்கா 18:10-14) கர்வமுள்ள இந்த மூன்று வஞ்சகர்களும் ஆவிக்குரியத்தன்மையை அவ்வளவாக இழந்திருந்தபடியால் யெகோவாவைப் பற்றியும் அவருடைய வாக்குறுதிகளைப் பற்றியும் ஆறுதலாக எதையும் சொல்ல முடியாதவர்களாக இருந்தார்கள். இருந்தபோதிலும், தவறான முடிவுகளுக்கு வந்து சம்பிரதாயப்படி வெளிப்படையாக துக்கம் அனுசரித்து முடித்த உடனே, யோபுவுக்கு எதிராக அவற்றைப் பயன்படுத்துவதற்கு தயாராகிக்கொண்டிருந்தார்கள். அக்கறையூட்டும்விதமாக, ஏழு நாள் மெளனம் முடிந்தவுடனே, இளம் வயதினரான எலிகூ சம்பாஷணையை கேட்கும் தொலைவில் வந்து உட்கார்ந்துகொண்டார்.
18. யோபு ஏன் மரணத்தில் நிம்மதியைத் தேடினார்?
18 யோபு கடைசியாக மெளனத்தைக் கலைத்தார். பார்க்க வந்த மூவரிடமிருந்து எந்த ஆறுதலையும் பெற்றுக்கொள்ளாதபடியால், அவர் தான் பிறந்த அந்த நாளை சபித்து, தன்னுடைய துயரமான வாழ்நாட் காலம் ஏன் நீட்டிக்கப்படுகிறது என்பதாக யோசித்தார். அவர் இப்பொழுது ஆதரவற்றவராக, துக்கமடைந்தவராக, மிகவும் மோசமாக நோயுற்றிருந்த காரணத்தால், மரிப்பதற்கு முன்பாக ஒருபோதும் உண்மையான சந்தோஷத்தை மறுபடியுமாக கொண்டிருக்க முடியும் என்பதைக் கற்பனையும் செய்துபார்க்க முடியாதவராய் அவர் மரணத்தில் நிம்மதியை தேடினார். ஆனால் மரிக்கும் அளவுக்கு யோபுவுக்கு தீங்குசெய்யப்பட கடவுள் அனுமதிக்கப்போவதில்லை.—யோபு 3:1-26.
யோபுவை குற்றஞ்சாட்டுகிறவர்கள் தாக்குகின்றனர்
19. என்ன விதங்களில், எலிப்பாஸ் யோபுவை பொய்யாய் குற்றஞ்சாட்டினான்?
19 யோபுவின் உத்தமத்தை மேலுமாக சோதித்த மூன்று சுற்று விவாதத்தில் முதலாவதாக எலிப்பாஸ் பேசினான். தன்னுடைய முதலாவது பேச்சில் எலிப்பாஸ் இவ்விதமாக கேட்டான்: “சன்மார்க்கன் அதம்பண்ணப்பட்டது எப்போ?” யோபு கடவுளுடைய தண்டனையைப் பெற்றுக்கொள்வதற்கு தீவினையைச் செய்திருக்க வேண்டும் என்று அவன் முடிவுசெய்தான். (யோபு 4, 5-ம் அதிகாரங்கள்) தன்னுடைய இரண்டாவது பேச்சில் எலிப்பாஸ் யோபுவின் ஞானத்தை பரிகசித்து பின்வருமாறு கேட்டான்: “நாங்கள் அறியாத எந்தக் காரியத்தை நீர் அறிந்திருக்கிறீர்?” யோபு சர்வ வல்லவரிடம் தன்னைத்தானே உயர்ந்தவராக காண்பித்துக்கொள்ள முயற்சி செய்வதாக எலிப்பாஸ் மறைமுகமாக சொன்னான். தன்னுடைய இரண்டாவது தாக்குதலை முடிப்பவனாய், அவன் யோபுவை விசுவாசத்துரோகம், பரிதானம் மற்றும் வஞ்சனை செய்த குற்றமுள்ளவராக விவரித்தான். (யோபு 15-ம் அதிகாரம்) தன்னுடைய கடைசிப் பேச்சில், யோபு அநேக குற்றங்களை—அநியாயமாக பணம் பறித்து, தேவையிலிருப்பவர்களுக்கு ஆகாரத்தையும் நீரையும் கொடாமல், விதவைகளையும் அநாதைகளையும் ஒடுக்கிய குற்றங்களை—செய்ததாக அவரை பொய்யாய் குற்றஞ்சாட்டினான்.—யோபு 22-ம் அதிகாரம்.
20. யோபுவின் மீது பில்தாதுவினுடைய தாக்குதல்களின் இயல்பு என்னவாக இருந்தது?
20 மூன்று சுற்று விவாதத்தின் ஒவ்வொரு சுற்றிலும் இரண்டாவதாக பேசுகிறவனாய், பில்தாது பொதுவாக எலிப்பாஸ் துவக்கி வைத்த அதே பொதுவான பொருளில் பேசினான். பில்தாதுவின் பேச்சுக்கள் சுருக்கமானவையாக ஆனால் அதிக புண்படுத்துவதாக இருந்தன. யோபுவின் பிள்ளைகள் தவறு செய்துவிட்டதாகவும் இதன் காரணமாக மரிக்க தகுதியானவர்களெனவும்கூட குற்றஞ்சாட்சினான். தவறாக விவாதித்து இந்த உதாரணத்தைப் பயன்படுத்தினான்: நாணலும் கோரைப்புல்லும் தண்ணீரில்லாமல் காய்ந்து அழிந்துபோவதுபோலவே “தேவனை மறக்கிற எல்லாருடைய” வழிகளும் இருக்கும். அந்தக் கூற்று உண்மையாயிருந்தாலும் அது யோபுவுக்கு பொருந்துவதில்லை. (யோபு 8-ம் அதிகாரம்) பில்தாது யோபுவுக்கு வந்த இன்னல்களைப் பொல்லாதவர்கள் மீது வருபவையாக வகைப்படுத்தினான். (யோபு 18-ம் அதிகாரம்) தன்னுடைய சுருக்கமான மூன்றாவது பேச்சில், மனிதன் “புழு”வாகவும் “பூச்சா”கவும் கடவுளுக்கு முன்பாக அசுத்தமாக இருக்கிறான் என்று பில்தாது விவாதித்தான்.—யோபு 25-ம் அதிகாரம்.
21. சோப்பார் யோபுவை எதற்காக குற்றஞ்சாட்டினான்?
21 சோப்பார் விவாதத்தில் மூன்றாவதாக பேசுகிறவனாக இருந்தான். பொதுவாக, அவனுடைய விவாதம் வெகுவாக எலிப்பாஸ் மற்றும் பில்தாதுவினுடையதைப் போன்றே இருந்தது. சோப்பார் யோபுவை பொல்லாப்பு செய்ததாக குற்றஞ்சாட்டி அவருடைய பாவமுள்ள பழக்கங்களை ஒழித்துவிடும்படியாக துரிதப்படுத்தினான். (யோபு 11, 20-ம் அதிகாரங்கள்) இரண்டு சுற்றுகளுக்குப் பிறகு சோப்பார் பேசுவதை நிறுத்திவிட்டான். மூன்றாவது சுற்றில் கூடுதலாகச் சொல்வதற்கு அவனுக்கு எதுவுமிருக்கவில்லை. என்றபோதிலும், விவாதம் முழுவதிலுமாக, யோபு தன்னைக் குற்றஞ்சாட்டியவர்களுக்கு தைரியமாக பதிலளித்தார். உதாரணமாக ஒரு கட்டத்தில் அவர் இவ்வாறு சொன்னார்: “நீங்கள் எல்லாரும் அலட்டுண்டாக்குகிற தேற்றரவாளர். காற்றைப்போன்ற வார்த்தைகளுக்கு முடிவிராதோ?”—யோபு 16:2, 3.
நாம் சகித்திருக்க முடியும்
22, 23. (அ) யோபுவின் விஷயத்தில் இருந்தது போல, யெகோவா தேவனுக்கு நம்முடைய உத்தமத்தை முறித்துப்போடும் முயற்சியில் பிசாசு என்ன செய்ய முயலக்கூடும்? (ஆ) யோபு பல்வேறு சோதனைகளைச் சகித்துக்கொண்டிருந்த போதிலும் அவருடைய மனநிலையைப் பற்றி நாம் என்ன கேட்கக்கூடும்?
22 யோபுவைப் போலவே, நாம் ஒரே சமயத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட சோதனைகளை எதிர்ப்படலாம், நம்முடைய உத்தமத்தை முறித்துப்போடும் தன்னுடைய முயற்சியில் சாத்தான் சோர்வை அல்லது மற்ற காரியங்களைப் பயன்படுத்தலாம். நமக்குப் பொருளாதார பிரச்சினைகள் இருக்கிறதென்றால் யெகோவாவுக்கு எதிராக நம்மைத் திருப்ப அவன் முயற்சிசெய்யலாம். அன்பான ஒருவர் மரித்துப்போனால் அல்லது நாம் உடல் நலக்கேட்டை அனுபவித்தால், கடவுளைக் குற்றப்படுத்தும்படியாக நம்மைத் தூண்ட சாத்தான் முயற்சிசெய்யலாம். யோபுவின் தோழர்களைப் போலவே, நம்மை எவராவது பொய்யாக குற்றப்படுத்தவும் கூடும். சகோதரர் மேக்மில்லன் குறிப்பிட்டபடியே, சாத்தான் ‘நம்மைப் பிடிக்க பின்தொடரக்கூடும்.’ ஆனால் நாம் சகித்திருக்க முடியும்.
23 நாம் இதுவரையாக கவனித்தபடி, யோபு தன்னுடைய பல்வேறு சோதனைகளைச் சகித்துக்கொண்டிருந்தார். இருந்தபோதிலும், அவர் வெறுமனே சகித்துக்கொண்டிருந்தாரா? உண்மையில் அவர் நொறுங்கின ஆவியை உடையவராக இருந்தாரா? யோபு உண்மையில் எல்லா நம்பிக்கையையும் இழந்துவிட்டிருந்தாரா என்று நாம் பார்க்கலாம்.
நீங்கள் எவ்வாறு பதிலளிப்பீர்கள்?
◻ யோபுவின் நாளில் சாத்தான் என்ன பெரிய விவாதத்தை எழுப்பினான்?
◻ எதன் மூலமாக யோபு உச்ச அளவு வரையாக சோதிக்கப்பட்டார்?
◻ யோபுவின் மூன்று “தோழர்கள்” அவர் பேரில் என்ன குற்றஞ்சாட்டினார்கள்?
◻ யோபுவின் விஷயத்தில் இருந்தது போலவே, சாத்தான் எவ்வாறு யெகோவாவிடமாக நம்முடைய உத்தமத்தை முறித்துப்போட முயற்சிசெய்யலாம்?
[பக்கம் 10-ன் படம்]
A. H. மேக்மில்லன்