பாடம் 01
கடவுள் தந்த வேதம் உங்களுக்கு எப்படி உதவும்?
வாழ்க்கையையும் எதிர்காலத்தையும் பற்றி நம் எல்லாருக்குமே நிறைய கேள்விகள் இருக்கின்றன. அதோடு, பணப் பிரச்சினையையும் குடும்பப் பிரச்சினையையும் நாம் சமாளிக்க வேண்டியிருக்கிறது. கடவுள் தந்த வேதமான பைபிள்a நம் கேள்விகளுக்குப் பதில் கொடுப்பது மட்டுமல்லாமல், அன்றாடப் பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும் உதவுகிறது. இதை நிறைய பேர் அனுபவத்தில் பார்த்திருக்கிறார்கள். சொல்லப்போனால், பைபிள் நம் எல்லாருக்குமே உதவும்.
1. கடவுள் தந்த வேதம் என்னென்ன கேள்விகளுக்குப் பதில் தருகிறது?
இந்த உலகத்தில் உயிர் எப்படி உருவானது? நாம் எதற்காக வாழ்கிறோம்? அப்பாவி ஜனங்கள் ஏன் கஷ்டப்படுகிறார்கள்? ஒருவர் இறந்த பிறகு அவருடைய உயிர் எங்கேயாவது போகிறதா? எல்லாரும் சமாதானத்தை விரும்பும்போது, ஏன் நாட்டுக்கு நாடு சண்டை நடக்கிறது? இந்தப் பூமி அழிந்துவிடுமா? இந்த எல்லா கேள்விகளுக்கும் பைபிள் பதில் தருகிறது. அந்தப் பதில்கள் ரொம்பத் திருப்தியாக இருப்பதாக லட்சக்கணக்கான மக்கள் சொல்லியிருக்கிறார்கள். நீங்களும்கூட அந்தப் பதில்களைத் தெரிந்துகொள்ளலாம்.
2. அன்றாட வாழ்க்கைக்கு வேதம் எப்படி உதவி செய்யும்?
பைபிள் நல்ல நல்ல ஆலோசனைகளைக் கொடுக்கிறது. குடும்பம் சந்தோஷமாக இருப்பதற்கு என்ன செய்ய வேண்டுமென்று அது சொல்கிறது. கவலையை எப்படிச் சமாளிப்பது என்றும், வேலையில் வரும் பிரச்சினைகளை எப்படி சமாளிப்பது என்றும் அது சொல்கிறது. இந்தப் புத்தகத்தை நாம் படிக்கும்போது இதுபோல நிறைய விஷயங்களை நீங்களே தெரிந்துகொள்வீர்கள். அப்போது, ‘வேதவசனங்கள் எல்லாம் [அதாவது, பைபிளில் இருக்கிற எல்லாமே] . . . பிரயோஜனமுள்ளதுதான்’ என்று புரிந்துகொள்வீர்கள்.—2 தீமோத்தேயு 3:16.
பைபிளை நீங்களே ஆராய்ச்சி செய்து படிப்பதற்கு உதவி செய்வதுதான் இந்தப் புத்தகத்தின் நோக்கம். அதனால், இங்கு கொடுத்திருக்கும் வசனங்களை பைபிளில் எடுத்துப் பாருங்கள். படிக்கும் விஷயங்களோடு அவை எப்படிச் சம்பந்தப்பட்டிருக்கின்றன என்று பாருங்கள்.
ஆராய்ந்து பார்க்கலாம்!
கடவுள் தந்திருக்கும் வேதம் மற்றவர்களுக்கு எப்படி உதவி செய்திருக்கிறது? அதை நீங்கள் எப்படிப் படித்துப் பயன் அடையலாம்? வேதத்தைப் புரிந்துகொள்வதற்கு மற்றவர்களுடைய உதவி ஏன் தேவை? இதைப் பற்றியெல்லாம் இப்போது தெரிந்துகொள்ளலாம்.
3. வேதம் நமக்கு வழிகாட்டும்
வேத புத்தகமான பைபிள் டார்ச்லைட்டைப் போன்றது. நாம் போக வேண்டிய சரியான வழியை அது காட்டும். தூரத்தில் என்ன இருக்கிறது என்றும் அது காட்டும். அதாவது, எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்றும் காட்டும்.
சங்கீதம் 119:105-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
இந்த வார்த்தைகளை எழுதியவர் பைபிளைப் பற்றி என்ன நினைத்தார்?
பைபிளைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
4. வேத புத்தகம் நம் கேள்விகளுக்குப் பதில் கொடுக்கும்
ரொம்ப வருஷங்களாக ஒரு பெண்ணின் மனதில் சில கேள்விகள் இருந்தன. அதற்கெல்லாம் வேத புத்தகமான பைபிளில் அவருக்குப் பதில் கிடைத்தது. வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
வீடியோவில் வந்த பெண்ணுக்கு என்னென்ன கேள்விகள் இருந்தன?
பைபிளைப் படித்தது அவருக்கு எப்படி உதவி செய்தது?
கேள்விகள் கேட்பது ரொம்ப நல்லது என்று பைபிள் சொல்கிறது. மத்தேயு 7:7-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
என்னென்ன கேள்விகளுக்கு பைபிளில் பதில் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்கள்?
5. நீங்களும் படித்துப் பயன் அடையலாம்
நிறைய பேர் பைபிளை விரும்பிப் படிக்கிறார்கள், அதனால் அவர்களுக்கு நிறைய நன்மைகள் கிடைத்திருக்கின்றன. வீடியோவைப் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
வீடியோவில் நாம் பார்த்த இளைஞர்களுக்கு பொதுவாக படிப்பது என்றாலே ஏன் பிடிக்கவில்லை?
ஆனால், இப்போது பைபிளை வாசிப்பது ஏன் அவர்களுக்குப் பிடித்திருக்கிறது?
பைபிள் தருகிற அறிவுரை நமக்கு ஆறுதலையும் நம்பிக்கையையும் கொடுக்கும். ரோமர் 15:4-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பைபிள் தரும் ஆறுதலையும் நம்பிக்கையையும் பற்றி அதிகமாகத் தெரிந்துகொள்ள நீங்கள் விரும்புகிறீர்களா?
6. வேத புத்தகத்தைப் புரிந்துகொள்ள மற்றவர்களுடைய உதவி தேவை
பைபிளை நீங்களாகவே படிப்பது நல்லதுதான். ஆனால், இன்னொருவர் அதைச் சொல்லித்தரும்போது இன்னும் நன்றாகப் புரிந்துகொள்ள முடிவதாக நிறைய பேர் சொல்கிறார்கள். அப்போஸ்தலர் 8:26-31-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பைபிளை நாம் எப்படி நன்றாகப் புரிந்துகொள்ள முடியும்?—வசனங்கள் 30, 31-ஐப் பாருங்கள்.
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “பைபிள் படிக்கிறதுனால டைம்தான் வேஸ்ட்.”
நீங்கள் என்ன சொல்வீர்கள்? ஏன் அப்படிச் சொல்வீர்கள்?
சுருக்கம்
கடவுள் தந்த வேதம் நம் அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஆலோசனைகளைக் கொடுக்கிறது. நமக்கு இருக்கிற முக்கியமான கேள்விகளுக்குப் பதில் சொல்கிறது. ஆறுதலையும் நம்பிக்கையையும் தருகிறது.
ஞாபகம் வருகிறதா?
வேத புத்தகமான பைபிளில் என்னென்ன ஆலோசனைகள் இருக்கின்றன?
அது என்னென்ன கேள்விகளுக்குப் பதில் தருகிறது?
கடவுள் தந்த வேதத்திலிருந்து எதைப் பற்றித் தெரிந்துகொள்ள உங்களுக்கு ஆசையாக இருக்கிறது?
அலசிப் பாருங்கள்
கடவுள் தந்த வேதத்தில் இருக்கும் ஆலோசனைகள் நம் காலத்துக்கு எப்படி ஒத்துவரும் என்று தெரிந்துகொள்ளுங்கள்.
“பைபிள் ஆலோசனைகள்—காலத்தால் அழியாத ஞானம்” (காவற்கோபுரம் எண் 1 2018)
சின்ன வயதிலிருந்து பல கவலைகளோடு ஒருவர் போராடிக்கொண்டிருந்தார். அவருக்கு பைபிள் எப்படி உதவி செய்தது என்று பாருங்கள்.
குடும்ப வாழ்க்கைக்குக் கடவுள் தருகிற அருமையான ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ளுங்கள்.
“குடும்ப வாழ்க்கையின் வெற்றிக்கு 12 ரகசியங்கள்” (விழித்தெழு! எண் 2 2018)
இந்த உலகத்தை ஆட்சி செய்வது யார் என்பதைப் பற்றி பைபிள் சொல்லும் உண்மையைத் தெரிந்துகொள்ளுங்கள்.
a பைபிளை உண்மையிலேயே கடவுள்தான் தந்திருக்கிறாரா என்று நீங்கள் யோசிக்கலாம். இதைப் பற்றி இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி! என்ற புத்தகத்தின் 5-வது பாடத்தில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.