வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
சங்கீதம் 37:29 “நீதிமான்கள் அந்த தேசத்தை சுதந்தரித்து அங்கே என்றென்றும் வாழ்வார்கள்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருப்பதன் காரணமாக, இஸ்ரவேலர்கள் வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தில் நிரந்தரமாக குடியிருக்கும் காரியத்தையே இது வெறுமென குறிக்கிறதா?
இல்லை, அப்படிப்பட்ட வியாக்கியானம் பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட வாக்குறுதியை ஆதாரமின்றி வரப்பெறுவதாயிருக்கும். சங்கீதம் 37-ல் நமது பூமியின் மீது என்றுமாக வாழும் எதிர்பார்ப்பை நீதிமான்களுக்கு முன்பாக வைக்கிறது.
சங்கீதம் 37:29-ன் மேற் சொன்ன வசனம் கிங் ஜேம்ஸ் ஆங்கில மொழிபெயர்ப்பிலிருந்து எடுக்கப்பட்டிருக்கிறது. மற்ற அநேக மொழிபெயர்ப்புகளிலும் அது அவ்வாறே இருக்கிறது. அது ஈ ரெட்ஸ் என்ற எபிரேய வார்த்தையை “தேசம்” என்று குறிப்பிடுகிறது. ஈரெட்ஸ் என்பது ஒரு தனிப்பட்ட நிலப்பரப்பையும் அல்லது ஒரு இனத்தவரின் பிராந்தியத்தையும் குறித்து காட்டக்கூடும் உதாரணமாக “சிநேயார் தேசம் அல்லது “எகிப்து தேசம்”—ஆதியாகமம் 10:10, 11; 21:21; சங்கீதம் 78:12; எரேமியா 25:20.
எனவே, சங்கீதம் 37:11, 29, அந்த இஸ்ரவேலர்கள் வாக்குபண்ணப்பட்ட தேசத்தின் குடிமக்களாக நிரந்தரமாக இருந்திருக்கக்கூடும் அல்லது இருந்திருக்க வேண்டும் என்பதை காட்டக்கூடும். ஆபிரகாமுடன் செய்யப்பட்ட கடவுளுடைய உடன்படிக்கைக்கு இசைவாக கடவுள் அவர்களுக்கு கொடுத்த அந்த பிராந்தியத்தில் அவருடைய ஆசீர்வாதத்தை அனுபவித்து மகிழ்பவர்களாக அவர்கள் தலைமுறை தலைமுறையாக அங்கே நிலைத்திருந்திருக்கக்கூடும். என்றபோதிலும் அது அவ்வாறு செயல்படவில்லை. ஏனெனில் இஸ்ரவேலர் கடவுளுக்கு அவிசுவாசமுள்ளவர்களானார்கள்.—ஆதியாகமம் 15:18-21; 17:8; உபாகமம் 7:12-16, 22; 28:7-14; 31:7; யோசுவா 21:43-45.
என்றபோதிலும் சங்கீதம் 37:11, 29-ல் காணப்படும் ஈ ரெட்ஸ் என்ற வார்த்தையை வெறுமென இஸ்ரவேலருக்கு கொடுக்கப்பட்ட அந்த தேசத்தோடு மட்டுப்படுத்திக் கொள்வதற்கு வேதப்பூர்வமான காரணங்கள் ஏதுமில்லை.
எபிரேயு மற்றும் ஆங்கில லெக்சிக்கன் ஆப் தி ஓல்ட் டெஸ்டமென்ட் பிரகாரம் (ஜெசினிஸ், ப்ரௌன், ட்ரைவர், மற்றும் ப்ரிக்ஸ், 1951) ஈரெட்ஸ் என்பது “1. ஏ. பூமி முழு பூமி (ஒரு பகுதிக்கு [எதிரிடையானது]) பி. பூமி பரலோகம், வாகனம் ஆகியவற்றிற்கு [எதிரிடையானது]. சி. பூமி பூமியின் குடிமக்கள். 2 தேசம் ஏ. நாடு, பிராந்தியம். . .பி. மாவட்டம், நிலப்பரப்பு. . . 3. எ. நிலம், நிலத்தின் மேற் பரப்பு பி. மண், வளமுள்ளதாக” பழைய ஏற்பாட்டு சொல் ஆய்வு (Old Testament World Studies) என்ற வில்லியம் வில்சன் என்பவர் எழுதியது ஈரெட்ஸ்பற்றி சொல்வதாவது: பூமி என்பதும் பெரிதளவான கருத்தில் குடியேற்றப்பட்ட பகுதி மற்றும் குடியில்லா பகுதி ஆகிய இரண்டையும் குறிக்கிறது; அவற்றில் சில வரம்புக்குட்பட்ட வார்த்தையுடன் சேர்ந்து வருகிறது. அது பூமியின் நிலப்பரப்பினுடைய, ஒரு தேசம் அல்லது நாட்டினுடைய சில பகுதிகளுக்காக பயன்படுத்தப்படுகிறது” எனவே அந்த எபிரேய வார்த்தை முதன்மையான பிரதான அர்த்தம் நமது கிரகம் அல்லது பூகோளம், இந்தப் பூமி.
தெளிவாகவே, சங்கீதம் 37:11,29 செப்டுவஜின்ட்டில் கிரேக்கு மொழியில் மொழிபெயர்க்கப்பட்டபோது அந்த எபிரேய வார்த்தையான ஈ ரெட்ஸ் கிரேக்கு மொழியில் ஜீ (ge) என்று வழங்கப்பட்டிருக்கிறது. அது பூமியை சாகுபடி நிலமாக அல்லது மண்ணாக குறிப்பிடுகிறது” மத்தேயு 5:5-ல் “சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் பூமியை சுதந்தரித்துக் கொள்வார்கள்” என்ற இயேசுவின் குறிப்பிடத்தக்க தீர்க்கதரிசனத்தின்போது ஜீ (GE) என்ற வார்த்தையே பயன்படுத்தப்பட்டிருக்கிறது.
சங்கீதம் 37:11-ல் உள்ள வாக்குறுதியை இயேசு மேற்கோள்காட்டிக் கொண்டிருந்தபோது வெறுமென வாக்குப்பண்ணப்பட்ட தேசத்தை குறித்து அவர் பேசிக்கொண்டில்லை. இந்த முழு பூமியின் கோளத்தின்மீதும் ஆட்சி அதிகாரத்தை செலுத்துவதில் பங்குகொள்வதற்கு அவருடைய அபிஷேகம் பண்ணப்பட்ட சீஷர்கள் அவரோடு அரசரும் ஆசாரியர்களுமாவார்கள். (வெளிப்படுத்தினவிசேஷம் 5:10) அதே விதமாக, மனிதர்களாக நித்திய ஜீவனை அடையக்கூடிய சாந்தகுணமுள்ளவர்கள் இந்த பூமி முழுவதையும் பரதீசாக நிலைநாட்டுவதற்கு உழைப்பார்கள் (வெளிப்படுத்தினவிசேஷம் 21:4); ஆதியாகமம் 1:28) இவ்வாறாக நாம் அனைவரும் அந்த வாக்குறுதியின் மகத்தான எதிர்கால நிறைவேற்றத்துக்காக காத்திருக்கலாம்: “நல்லவர்கள் இந்த பூமியை உரிமையாக்கிக் கொள்வார்கள் மேலும் அதன் மீது என்றென்றும் வாசஞ் செய்வார்கள்.”—சங்கீதம் 37:29, ஃபென்டன்.—W86 1/1