எருசலேமும் சாலொமோன் ஆலயமும்
‘எ ழிலின் நிறைவு’ என்றும் “மகாராஜாவின் நகரம்” என்றும் எருசலேம் அழைக்கப்பட்டது. (சங் 48:2; 50:2, பொ.மொ.; புல 2:15, பொ.மொ.) அது கடவுளுடைய தேசத்தின் தலைநகராய் விளங்கியது. (சங் 76:2) தாவீது இந்நகரை எபூசியரிடமிருந்து கைப்பற்றிய பிறகு அதைத் தன் தலைநகராக்கினார்; அது ‘தாவீதின் நகரம்’ அல்லது வெறுமனே “சீயோன்” என அழைக்கப்பட்டது.—2சா 5:7.
ராணுவ கண்ணோட்டத்தில் எருசலேம் சிறந்த ஓர் இடத்தில் அமையாதிருந்தாலும், கடவுள் தம் பெயரை அங்கு விளங்கச் செய்ததால் அது பேரும் புகழும் பெற்றது. (உபா 26:2) அத்தேசத்திற்கு மத ரீதியிலும் நிர்வாக ரீதியிலும் மையமாக விளங்கியது.
2,500 அடி உயரத்தில் யூதேயாவின் மத்திப மலைகளில் எருசலேம் வீற்றிருந்தது. அது ‘உயர்ந்தோங்கி’ இருந்ததாகவும், அங்கே செல்ல வணக்கத்தார் ‘மேலே ஏறிப்போன’தாகவும் மூல பாஷையில் பைபிள் குறிப்பிடுகிறது. (சங் 48:2, NW; 122:3, 4, NW) அந்தப் பூர்வகால பட்டணத்தைச் சுற்றிலும் பள்ளத்தாக்குகள் இருந்தன: மேற்கிலும் தெற்கிலும் இன்னோம் பள்ளத்தாக்கு இருந்தது, கிழக்கே கீதரோன் பள்ளத்தாக்கு இருந்தது. (2இரா 23:10; எரே 31:40, NW) கீதரோன் பள்ளத்தாக்கிலிருந்த கீகோன் நீரூற்றிலிருந்தும்,a தெற்கே இருந்த என்ரொகேலிலிருந்தும் சுத்தமான தண்ணீர் கிடைத்தது. முக்கியமாக, எதிரிகள் தாக்குதல் நடத்துகையில் இந்தத் தண்ணீர் மிகவும் அவசியமாக இருந்தது.—2சா 17:17.
பக்கம் 21-ல் உள்ள விளக்கப் படத்தில், தாவீதின் நகரம் சிவப்பு நிறத்தில் காண்பிக்கப்பட்டுள்ளது. தாவீது மற்றும் சாலொமோனின் ஆட்சி காலத்தில், இந்நகரம் வடக்கு நோக்கி ஓபேல் (பச்சை நிறம்) மற்றும் மோரியா மலை (நீல நிறம்) வரை விரிந்திருந்தது. (2சா 5:7-9; 24:16-25) மோரியா மலை முகட்டில், யெகோவாவுக்கு சாலொமோன் பிரமாண்டமான ஓர் ஆலயத்தைக் கட்டினார். வருடாந்தர பண்டிகைகளுக்காக ‘யெகோவாவின் மலைக்கு’ ஜனங்கள் திரண்டு செல்வதைக் கற்பனை செய்து பாருங்கள்! (சக 8:3, NW) பக்கம் 17-ல் காண்பிக்கப்பட்டுள்ள சாலைகள் இத்தகைய பயணத்திற்கு பேருதவி புரிந்தன.
பொன்னினாலும் விலையேறப்பெற்ற கற்களாலும் அலங்கரிக்கப்பட்ட சாலொமோனின் ஆலயம் இதுவரை கட்டப்பட்டதிலேயே மிகுந்த பொருட்செலவில் கட்டப்பட்ட கட்டடமாக விளங்கியது. அதற்குரிய கட்டட வரைபடத்தை யெகோவாவே தந்தது குறிப்பிடத்தக்கது. ஓவியத்தில் நீங்கள் காண்கிறபடி, ஆலயத்தின் அருகே பெரிய பிராகாரங்களும் நிர்வாக கட்டடங்களும் இருந்தன. இந்த விவரங்களை ஆராய்வதற்கு நீங்கள் நேரம் ஒதுக்குவது மிகவும் பயனுள்ளது.—1இரா 6:1–7:51; 1நா 28:11-19; எபி 9:23, 24.
[அடிக்குறிப்பு]
a எசேக்கியா அரசன் இந்த நீரூற்றை மூடிவிட்டு, அதன் தண்ணீர் மேற்கு பகுதியிலிருந்த குளத்திற்கு செல்லும்படி ஒரு கால்வாய் வெட்டினார். —2நா 32:4, 30.
[பக்கம் 21-ன் பெட்டி]
காலப்போக்கில், எருசலேம் மேற்கு நோக்கியும் வடக்கு நோக்கியும் விரிவடைந்தது. சாலொமோனுக்குப் பிறகு வந்த யூதேய அரசர்கள் மதிற்சுவர்களையும் வாயில்களையும் கட்டினர். தொடர்ந்து நடத்தப்பட்டு வரும் தொல்லியல் ஆராய்ச்சி, இந்த மதிற்சுவர்கள் சிலவற்றின் சரியான இடத்தையும் நீளத்தையும் பற்றி தெரியப்படுத்தலாம். இந்நகரம் பொ.ச.மு. 607-ல் அழிக்கப்பட்டு 70 வருடங்கள் பாழாய் கிடந்தது. யூதர்கள் திரும்பிவந்து சுமார் 80 வருடங்களுக்குப்பின் எருசலேமின் மதிற்சுவர்களைத் திரும்பக் கட்டும் மாபெரும் வேலையில் நெகேமியா இறங்கினார்.
[பக்கம் 21-ன் படங்கள்]
சாலொமோன் காலத்து ஆலயப் பகுதி
ஆலயத்தின் அம்சங்கள்
1.மகா பரிசுத்த ஸ்தலம்
2.பரிசுத்த ஸ்தலம்
3.மண்டபம்
4.போவாஸ்
5.யாகீன்
6.வெண்கலப் பலிபீடம்
7.வெண்கலக் கடல்
8.சக்கர ஆதாரங்கள்
9.பக்க அறைகள்
10.உணவு பரிமாறும் அறைகள்
11.உட்பிராகாரம்
ஆலய பகுதி
மோரியா மலை
உணவு பரிமாறும் அறைகள்
சக்கர ஆதாரங்கள்
பக்க அறைகள்
மகா பரிசுத்த போவாஸ்
ஸ்தலம் பரிசுத்த மண்டபம் வெண்கலப் உட்பிராகாரம்
ஸ்தலம் யாகீன் பலிபீடம்
சக்கர வெண்கலக்
ஆதாரங்கள் கடல்
ஓபேல்
பொது சதுக்கம்?
தண்ணீர் வாசல்?
தாவீதின் நகரம்
சீயோன் மலை
தாவீதின் அரண்மனை
ஊருணி வாசல்
மனாசேயின் மதில்?
அனானெயேலின் கோபுரம்
மேயா கோபுரம்
ஆட்டு வாசல்
காவல்வீட்டு வாசல்
விசாரிப்பு வாசல்
குதிரை வாசல்
கீதரோன் பள்ளத்தாக்கு
கீழ் மதில்?
கீகோன்
பிற்காலத்து கால்வாய்
டைரோப்பியன் பள்ளத்தாக்கு
குப்பை மேட்டு வாசல் (மண்கல உடைசல்களின் வாசல்) (சாண வாசல்)
என்ரொகேல்
பள்ளத்தாக்கு வாசல்
இன்னோம் பள்ளத்தாக்கு
மூலை வாசல்
சூளைகளின் கோபுரம்
அகலமான மதில்
எப்பிராயீம் வாசல்
பொது சதுக்கம்
பழைய நகரத்தின் வாசல்
ஆரம்ப கால வடக்கு மதில்
இரண்டாம் வகுப்பு
மீன் வாசல்
[படம்]
ஓபேல்
பார்வோன் குமாரத்தியின் மாளிகை
சாலொமோனின் அரண்மனை
லீபனோன் வனம் என்னும் மாளிகை
தூண் மண்டபம்
நியாயவிசாரணை மண்டபம்
மோரியா மலை
பெரிய பிராகாரம்
ஆலயம்
[பக்கம் 20-ன் படம்]
முன்பகுதியில் ‘தாவீதின் நகரம்’ வீற்றிருந்தது. சமதள பகுதியில் (பின்பகுதியில்) ஆலயம் இருந்தது
[பக்கம் 20-ன் படம்]
பூர்வகால ‘தாவீதின் நகரம்’ மற்றும் சாலொமோன் ஆலயத்தின் கம்ப்யூட்டர் வரைபடம்