இளைஞர் கேட்கின்றனர் . . .
நாங்கள் வெறுமென நண்பர்களாக இருக்கக்கூடாதா?
“எங்களுக்கு இடையில் எதுவும் நடந்துக்கொண்டில்லை” என்று உரிமை பாரட்டினான் மாரிa “நாங்கள் வெறுமனே உரையாடுகிறோம். ஒவ்வொருவரையும் காமக்கண்ணோடு பார்க்க துவங்கினால் இந்த உலகம் எதில் முடிவடையும்? அதோடு நீ ஒரு கூண்டுகிளியாகவே வாழ்ந்து விடலாமே!” என்றால் மாரி தன் வயதுள்ள ஒரு பையனோடு காரில் அவள் தனிமையில் இருந்து நேரம் செலவிட்டதன் காரணமாக அதன் அபாயத்தை குறித்து யாரோ ஒருவர் அவளை எச்சரித்தப்போது இந்த பலமான எதிர்வாதம் மாரியிடமிருந்து வந்தது. வெளிப்படையாகவே அவள் இந்த எச்சரிக்கையை மதித்துணரவில்லை. அவள் நினைப்பது என்னவெனில்: ‘வெறும் நண்பர்களாக இருப்பதில் என்ன சாத்தியமான தீங்கு இருக்கக்கூடும்’?
மைக்கெல் ஓரளவிற்கு இப்பொழுது அறிவுத்தெளிவுள்ள கருத்தை கொண்டிருக்கிறான். முக்கியமாய் தனக்கு அடுத்த வீட்டு அயலகத்தாள் லூயிஸாவுடன் ஏற்பட்ட ஒரு அனுபவத்துக்குப் பின்பு அப்படி உணருகிறான். அந்த இளைஞன் விளக்குவதாவது: நாங்கள் அதிக நெருக்கமான உறவை கொண்டிருந்தோம். ஆனால் திருமணஞ்செய்துக்கொள்ளவேண்டும் என்ற எண்ணமே கிடையாது. என்றபோதிலும், விரைவில் நான் ஒரு பெருங் குழப்பத்தினுள் சிக்கியிருப்பதைக் கண்டேன்.—லூயிஸாவை என் மனதிலிருந்து என்னால் அகற்றவே முடியவில்லை. என்னுடைய உணர்ச்சிகள் கட்டுக்கடங்காமற் போய்விட்டன! எனவே ஒரு மாலைப்பொழுதன்று என்னுடைய பிரச்சினையை நான் ஒரு நண்பனிடம் சொன்னேன் அதே மாலையன்று என்னை சீரான நிலைக்கு கொண்டுவர அவன் ஆலோசனை கொடுத்தான். ‘அபாய எல்லையிலிருந்து’ அகற்றப்பட்டவனாய் தன்னுடைய நட்புரவு எங்கே அவனை வழிநடத்திக் கொண்டிருந்தது என்பதை குறித்து மைக்கெல் சற்று தெளிவாக சிந்திக்க முடிந்தது.
தி லேடீஸ் ஹோம் ஜர்னல் பெண்களின் வீட்டு இதழ் என்பதில் பல ஆண்டுகளுக்கு முன்பாக டாக்டர் மாரியன்ஷில்வார்ட் குறிப்பிட்டதைப் போன்று இருந்தது. “மணிக்கு பத்து மைல் வேகத்தில் பயணஞ் செய்துக்கொண்டிருக்கும் ஒரு எளிதான தோழமையுணர்ச்சி, எச்சரிக்கை குறி ஏதுமில்லாமல் மணிக்கு நூறு மைல் வேகத்தில் செல்லக்கூடிய குருடாக்கும் காம உணர்ச்சிக்கு வழிநடத்திவிடக்கூடும்.”
உணர்ச்சி சம்பந்தமான விளைவுகள்
இளைஞருக்கு பைபிள் அளிக்கும் ஊக்குவிப்பானது முதிர்வயதுள்ள ஸ்திரிகளைத் தாய்களைப் போலவும், பாலியஸ்திரிகளை எல்லாக் கற்புடன் சகோதரிகளைப் போலவும், பாவிக்கவேண்டும் என்பதே. (1 தீமோத்தேயு 5:2) இந்த நியமத்தை அநேகர் வெற்றிகரமாய் பொருத்திப் பிரயோகித்திருக்கின்றனர். மேலும் அதன் பயனாக, எதிர் பாலருடன் சுத்தமும் ஆரோக்கியமுமான நட்புரவை அனுபவித்து மகிழ்ந்திருக்கின்றனர். அவர்கள் தங்கள் தொடர்புகளை ஒரு நியாயமான எல்லைக்குள்ளாக வைத்துக் கொள்ளுவதில் கவனமுள்ளவர்களாக இருந்திருக்கின்றனர். ஆனால் இப்படிப்பட்ட ஒரு நட்புரவு கட்டுப்பாட்டை மீறிவிடுகையில் என்ன நடக்கிறது? ஒரு முந்தைய கட்டுரை இதனால் ஏற்படும் ஒழுக்க சம்பந்தமான பின் விளைவுகளை குறித்து எச்சரிப்பு கொடுத்தது.b
ஒரு 14-வயது பெண்ணுடன் தனது தொடர்பை வளர்த்துக் கொண்டப்பின்பு மிக்கி என்ற பதினாறு வயது சிறுவன் இதை கற்றுக்கொண்டான்: “முதலில், நாங்கள் நண்பர்களாக மட்டுமே இருக்க விரும்பினோம் ஆனால் விரைவிலேயே நான் கண்டுணர்ந்துக்கொண்டபடி, இரண்டு நபர்கள் தன்னந்தனியாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்கள் வெறும் நன்பர்களாகமட்டுமே நிலைத்திருக்க முடியாது எங்களுடைய தொடர்பு அதிகமதிகமாய் வளர்ந்து கொண்டேயிருந்தது. விரைவில் நாங்கள் ஒருவர்பேரிலொருவர் விசேஷ உணர்ச்சிகளை கொண்டிருக்கலானோம். இன்னமும் கொண்டிருக்கிறோம்.” அவர்களில் ஒருவர்கூட திருமணத்தை நாடும் நிலையில் இல்லாதிருப்பதன் காரணமாக, அந்த உணர்ச்சிகள் பெரும் மனமுறிவிற்குரிய ஒன்றாக இருக்கும். மிக்கி பின்வருமாறு கேட்பதில் எவ்வித ஆச்சரியமுமில்லை “அதை முறித்துக்கொள்வதற்கு நான் முயலவேண்டுமா?”
‘ஆனால் என்னுடைய நட்பை பொறுத்ததில் நான் அப்படியொன்றும் உணருவதில்லை’ என்று ஒரு சிலர் எதிர்வாதம் செய்யக்கூடும். ‘அவனால் [அல்லது அவளால்] நான் கவரப்படுவது இல்லை மேலும் நான் ஒருபோதும் அவனுடன் காதல் உணர்ச்சிகளில் ஈடுப்படமாட்டேன்’ என்று சொல்லக்கூடும். ஒருவேளை அப்படியிருக்கலாம் என்றபோதிலும் நீதிமொழிகள் எச்சரிப்பதாவது: “தன் இருதயத்தை நம்புகிறவன் மூடன்” (நீதிமொழிகள் 28:26) நமது இருதயம் மகாகேடுள்ளது வஞ்சிக்கும் தன்மையுள்ளது நமது உண்மையான உள்நோக்கங்களுக்கு அது நம்மை குருடாக்கக்கூடும்.
தீர்க்கதரிசியாகிய எரேமியாவின் மூலம் கடவுள் இதை நமக்கு எச்சரிக்கிறார்: “எல்லாவற்றைப்பார்க்கிலும் இருதயமே திருக்குள்ளதும் மகா கேடுள்ளதுமாயிருக்கிறது அதை அறியத்தக்கவன் யார்? யெகோவாவாகிய நானே ஒவ்வொருவனுக்கும், அவனவன் வழிகளுக்கும் செய்கைகளின் பலன்களுக்கும் தக்கதைக் கொடுக்கும்படிக்கும், இருதயத்தை ஆராய்கிறவரும் உள்ளிந்திரியங்களைச் சோதித்தறிகிறவருமாயிருக்கிறேன்.”—எரேமியா 17:9, 10.
உதாரணமாக, ஒரு இளம் கிறிஸ்தவ பெண் பள்ளியில் ஒரு இளைஞனுடன் அதிக நட்புள்ளவளானாள். பைபிளிலுள்ள சில கருத்துக்களை அவனோடு பரிமாரிக்கொள்வதற்கு இது சிறந்ததாக இருக்கிறது என்று அவள் நியாய விவாதம் செய்தாள். ஆனால் பைபிளைப்பற்றி பேசுவதைக்காட்டிலும் வேறு காரியத்தில் பையன் அக்கறையுள்ளவனாக இருந்தான் என்பது தெளிவாக தெரியலாயிற்று. “என் காரியத்தில் எந்த ஒரு தவறுமில்லாமலேயே அவன் என்னிடம் அதிகமதிகமாய் நெருக்கமுள்ளவனாக ஆனான்” என்று அவள் உரிமை பாராட்டுகிறாள். என்றபோதிலும் அவளை பொருத்தமட்டில், அந்த உணர்ச்சிகள் பரஸ்பரமானதல்ல.
அவ்வாறாயினும், அக்கறைக்குரிய ஒரு காரியமென்னவெனில், நான் அவனில் மயங்கி விட்டேன் என்றுதான் நம்புவதில் என்தாய் பிடிவாதமாய் இருக்கிறாள்” என்று அந்தப்பெண் ஒப்புக்கொள்கிறாள். ஆம், தாய்மார்கள் ஊடுருவிக்காண்பவர்கள். தன் மகள் தன்னைத்தானே வஞ்சித்துக்கொள்கிறாள் என்பதை இந்த தாய் எவ்வித சந்தேகமின்றி காண்கிறாள். அவள் அப்படி உணர்ச்சிபூர்வமாய் உட்படவில்லை என்றால் தன்னுடைய தொடர்பை காத்துக்கொள்வதில் அந்தப்பெண் ஏன் அவ்வளவு பிடிவாதமாக இருக்கவேண்டும்? ஒருவேளை தன்னுடைய இளம் நண்பனுக்கு உதவ வேண்டும் என்ற அவளுடைய மனமார்ந்த அக்கறைக்கு இடமளித்தாலும்கூட அவன் இவள்மீது கொண்டிருக்கக்கூடிய அந்த பலமான உணர்ச்சிக்கு என் காரியத்தில் எந்த ஒரு தவறுமில்லை என்று அவள் சொல்லக்கூடுமா? குடும்பம் சமுதாயம் மற்றும் தனி நபர்கள் என்ற (ஆங்கில) புத்தகம் “அதிக தீவிரமாய் கவர்ந்திழுக்கப்படுவது ஆண்மகனே” என்று சொல்லுகிறது அப்பாவித்தனமாய் அழகை காண்பிப்பதும்கூட ஒரு ஆண்மகனை எளிதில்—உணர்ச்சிபூர்வமாயும், பால்சம்பந்தமாயும் தூண்டிவிடக்கூடும்.
ஒரு இளம் பெண்ணிடமாக, ஒரு இளைஞன் முக்கிய கவனத்தை செலுத்துகையில் அதே காரியம் ஏற்படுகிறது. எதிர்பாலரிடமிருந்து வரும் கவனயீர்ப்புக்கு ஒரு ஆண்மகனை காட்டிலும் ஒரு பெண் வெகுதாமதமாக பிரதிபலிக்கும்போது எழுப்பப்படும் உணர்ச்சிகள் பெரும்பாலும் வெகு ஆழமானதாக ஆகிவிடும். எனவே, எதிர்பாலினத்தவரோடு அதிக நெருக்கமான நிலைக்கு செல்வதற்கு தன் நட்பை அனுமதிக்கக்கூடியவன் யாராக இருந்தாலும் அவன் தன்னைத்தானே முட்டாளாக்கிக்கொள்கிறான். இதில் ஒருவேளை ஒரு நபரின் உணர்ச்சிகள் தூண்டப்படாவிட்டாலும் மற்ற நபரின் உணர்ச்சிகள் தூண்டப்படக்கூடும்.
‘நாம் நண்பர்களாக மட்டும் இருப்போம்’ என்று சொல்வதானது பெரும்பாலும் அடக்கிவைக்கப்பட்ட பாச உணர்ச்சியின் வேதனையை நீடிக்கச் செய்வதாயிருக்கிறது. உன் இளமை அதை மிக நன்றாய்ப் பயன்படுத்துதல் என்ற பிரசுரம் விவரிப்பதாவது: “பொதுவாய், ஆண் தானே, அந்தப் பெண்ணில் அக்கறையை வெளிப்படுத்துவதன்மூலம் காதலை தொடங்குகிறான். அவன் அதைப்பற்றி நேர்மையுள்ளவனாகவும் உண்மையில் கருத்துள்ளவனாகவும் இருக்கிறானென்றால் அவன் திருமணஞ்செய்ய எண்ணுகிறான் என்றாவது நம்ப அந்த பெண்ணுக்கு உரிமை இருக்கிறது.”c தொடர்ச்சியான தோழமை எளிதில் திருமணத்தை கருத்தில்கொண்ட காதலை குறிக்கிறதென்ற தவறான எண்ணத்தை உண்டுப்பண்ணிவிடக்கூடும்.
உண்மைதான், காதல் ஏக்கமுற்ற தோழன் அல்லது தோழியிடம் அவனுடைய அல்லது அவளுடைய உணர்ச்சிகள் பரிமாரப்படாததாயிருக்கிறது என்று தெரியப்படுத்துவது உணர்ச்சி சம்பந்தமான ஒரு நாசத்தை ஏற்படுத்தக்கூடும். தொடர்பை தொடருவது பழிதீர்க்கும் நாளை தாமதப்படுத்துகிறது. பைபிள் சொல்லுவதாவது: “கொள்ளிகளையும் அம்புகளையும் சாவுக்கேதுவானவைகளையும் எறிகிற பைத்தியக்காரன் எப்படியிருக்கிறானோ, அப்படியே, தனக்கடுத்தவனை வஞ்சித்து நான் விளையாட்டுக்கல்லவோ செய்தேன்” என்று சொல்லுவான். (நீதிமொழிகள் 26:18, 19) இதனுடைய மூல எபிரேய வார்த்தையும்கூட ‘வஞ்சித்தல்’ “ஏமாற்றுதல்” என்ற கருத்தையே கொடுக்கிறது. எந்தவித பொறுப்போ அல்லது உத்தரவாதமோ இல்லாமல் வெறுமனே ஒரு நல்ல நேரத்தை அனுபவித்து மகிழ வேண்டும் என்ற சுயநல தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளும் ஒன்றாக நட்புரவு இருக்குமானால் இது ஏமாற்றுவதாக இல்லையா? திருமணம் செய்துக்கொள்ளும் எந்த ஒரு எண்ணமுமில்லாமல் யாராவது ஒருவர் எதிர்பாலினத்தவர் ஒருவர்மீது மட்டுக்கு மீறிய கவனம் செலுத்துகிறார் என்றால் இது வஞ்சனையாக இல்லையா? எந்த கெடுதல் நோக்கும் அதில் உட்பட்டில்லாமலிருக்கக்கூடும் என்பது மெய்தான். ஆனால் அது ஓரளவான சுயநலத்தையும் மற்ற நபர்களினுடைய உணர்ச்சிகளுக்கு அக்கறையில்லாமையையும் வெளிக்காட்டுகிறதல்லவா? ‘ஆனால் நாங்கள் வெறுமனே நண்பர்களாகவே இருந்தோம்’ அல்லது ‘நான் எதையும் வாக்கு கொடுக்கவில்லையே’ என்று சொல்வதன்மூலம் இந்த பிரச்சினையை தட்டிக்கழிக்க முயலுவது நீங்கள் ஒதுக்கிவிட்டவருக்கு பெரும்பாலும் ஒவ்வாது.
பிரச்சினைகளை தவிர்த்தல்
நீதிமொழிகள் 2:7 ‘மெய்ஞானத்தை’ சேமித்து வைத்துக்கொள்ளும்படி இளைஞர்களுக்கு அறிவுரை கொடுக்கிறது. எனவே ஞானமுள்ள இளைஞர்கள்—தாங்கள் திருமணத்துக்கு ஆயத்தமாக இருக்கும் வரையில்—எதிர் பாலினத்தவரோடு அதிக நெருக்கமான நட்புரவு வளர்ப்பதை தவிர்க்கின்றனர். இந்த காதலுணர்ச்சி உருவாகக்கூடும். மற்றொரு பாதுகாப்பான காரியமானது தொகுதி நடவடிக்கைகளில் ஓரிரண்டு வயதானவர்களை உட்படுத்திக்கொள்வதாகும்.
இத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுத்தபோதிலும் நீ பகிர்ந்து கொள்ளாத காதலுணர்ச்சியை யாராவது ஒருவர் உன்னிடமாக வளர்க்கிறார் என்று உனக்கு தோன்றுமானால் கூடியமட்டும் காரியத்தை சீக்கிரமாக பேசி தெளிவுப்படுத்திவிடு அப்பொழுது உங்கள் இருவருடைய நிலை என்ன என்பதை நீங்கள் அறிந்தவர்களாக இருப்பீர்கள் ‘அவனவன் பிறனுடனே மெய்யை பேசக்கடவன்’ என்று பைபிள் சிபாரிசு செய்கிறது. (எபேசியர் 4:25) நீ உன்னுடைய உணர்ச்சிகளைப்பற்றி வெளிப்படையாக எடுத்துச் சொல்லியும்கூட அது காரியத்தை சரிப்படுத்தவில்லையெனில் இந்த நபரிடமிருந்து நீ உன்னை சற்று தூர விலக்கி வைத்துக்கொள்வது சிறந்ததாக இருக்கும். நான் காரியத்தை வெளிப்படையாக எடுத்துப் பேசிவிட்டேன் எனவே அந்த காரியம் முடிவடைந்துவிட்டதாக நாம் கருதலாம். நாம் நல்ல நண்பர்களாக மட்டும் இருப்பதில் நம்மை எதுவும் தடை செய்கிறதில்லை என்று நியாய விவாதம் செய்யாதே. ஏனெனில் இந்த காதலுணர்ச்சி தீயானது தொடர்ந்து உள்ளுக்குள்ளாகவே புகைந்துக் கொண்டிருக்கும். அவனோ அல்லது அவளோ தன் மனதை மாற்றிக்கொள்ளமாட்டார்களா என்று நம்பி காத்திருக்கும்படி செய்யும்.
இந்த ஆலோசனைகளை பின்பற்றுவது ஒருவேளை சுலபமானதாக இருக்காது. ஆனால் ஒன்றை நினைவில்கொள்: எதிர்பாலினத்தவரோடு நெருக்கமான உறவு விவாகமானவர்களுக்கு மட்டுமே ஒதுக்கிவைக்கப்பட்டிருப்பதாக சிருஷ்டிகர் கட்டளையிட்டிருக்கிறார். “தேவனாகிய யெகோவா: மனுஷன் தனிமையாயிருப்பது நல்லதல்ல, ஏற்ற துணையை அவனுக்கு உண்டாக்குவேன். இதினிமித்தம் புருஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் ஒரே மாம்சமாயிருப்பார்கள். இயேசு இந்த வார்த்தைகளை மேற்கோள் காட்டி விவாகத்தின் பொறுப்புணர்ச்சி வாய்ந்த தன்மையை வலியுறுத்தினார்: “ஆகையால், தேவன் இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன்.”—ஆதியாகமம் 2:18, 24; மத்தேயு 19:5, 6.
ஆகவே எதிர்பாலினத்ததவரோடு நட்புரவை நியாயமான எல்லைக்குள்ளாக வைத்துக்கொள். மிகுதியான சஞ்சலத்தையும் மற்றும் இருதய வேதனையும் தவிர்த்துவிடு.
[அடிக்குறிப்புகள்]
a இந்த அடிக்குறிப்பு தமிழில் இல்லை
b தயவு செய்து “வெறும் நண்பர்களாக” இருப்பதில் என்ன தவறு இருக்கிறது? என்ற கட்டுரையை பார்க்கவும். இது மார்ச் 8, 1986 விழித்தெழு! இதழில் காணப்படுகிறது.
c காவற்கோபுரம், பைபிள் மற்றும் துண்டுபிரதி சங்கத்தால் 1976-ல் பிரசங்கிக்கப்பட்டது.
என் மகனே, கேள். என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்; அப்பொழுது உன் ஆயுசின் வருஷங்கள் அதிகமாகும். ஞானமார்க்கத்தை நான் உனக்குப் போதித்தேன்; செவ்வையான பாதைகளிலே உன்னை நடத்தினேன். நீ அவைகளில் நடக்கும்போது உன் நடைகளில் இடுக்கண் உண்டாவதில்லை; நீ அவைகளில் ஓடினாலும் இடறமாட்டாய் புத்திமதியை உறுதியாய்ப் பற்றிக்கொள், அதை விட்டுவிடாதே; அதைக் காத்துக்கொள், அதுவே உனக்கு ஜீவன்.”—நீதிமொழிகள் 4:10-13.
[பக்கம் 25-ன் சிறு குறிப்பு]
தன்னுடைய உணர்ச்சிகள் பகிர்ந்துக்கொள்ளப்படவில்லை என்பதை ஒருவர் அறி வருகையில் அது உணர்ச்சிகளை நாசப்படுத்தும் பேரிடியாக இருக்கக்கூடும்.
[பக்கம் 24-ன் சிறு குறிப்பு]
இரண்டு நண்பர்கள் தன்னந்தனியாக ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டிருக்கையில் அவர்கள் வெறும் நண்பர்களாக மட்டும் நிலைத்திருக்க முடியாது.