உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யெகோவாவுடன் நெருங்கிய நட்பு மலர
    காவற்கோபுரம்—2000 | ஜனவரி 15
    • ஞானியான அரசன் தொடர்ந்து சொல்கிறதாவது: “உன் சுயபுத்தியின்மேல் சாயாமல், உன் முழு இருதயத்தோடும் கர்த்தரில் நம்பிக்கையாயிருந்து, உன் வழிகளிலெல்லாம் அவரை நினைத்துக்கொள்; அப்பொழுது அவர் உன் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்.”​—⁠நீதிமொழிகள் 3:5, 6.

  • யெகோவாவுடன் நெருங்கிய நட்பு மலர
    காவற்கோபுரம்—2000 | ஜனவரி 15
    • நாம் எவ்வாறு நம் ‘வழிகளிலெல்லாம் யெகோவாவை நினைத்துக்கொள்ளலாம்’? தேவாவியால் ஏவப்பட்ட சங்கீதக்காரர் சொல்கிறார்: “உம்முடைய கிரியைகளையெல்லாம் தியானித்து, உம்முடைய செயல்களை யோசிப்பேன்.” (சங்கீதம் 77:12) கடவுளைப் பார்க்க முடியாது; இருப்பினும், அவருடன் அன்னியோன்யமாக இருக்க, அவருடைய செயல்களையும், தம் ஜனங்களிடமான அவருடைய நடவடிக்கைகளையும் குறித்து மனதில் அசைபோடுவது மிக முக்கியம்.

      யெகோவாவை நினைக்க உதவும் மற்றொரு முக்கிய வழி ஜெபம். அரசனாகிய தாவீது, “நாளெல்லாம்” யெகோவாவை நோக்கி இடைவிடாமல் வேண்டினார். (சங்கீதம் 86:3, தி.மொ.) தாவீது, வனாந்தரத்தில் நாடோடிபோல் அலைந்து திரிந்த காலத்தில் அடிக்கடி இரவு முழுவதும் ஜெபித்தார். (சங்கீதம் 63:​6, 7) “எந்தச் சமயத்திலும் . . . ஆவியினாலே ஜெபம்பண்ணி . . . விழித்துக்கொண்டிருங்கள்” என்று அப்போஸ்தலன் பவுல் அறிவுரை கூறினார். (எபேசியர் 6:​18) நாம் எந்தளவுக்கு அடிக்கடி ஜெபிக்கிறோம்? கடவுளுடன் தனிப்பட்ட விதத்தில் இருதயப்பூர்வமாக தொடர்புகொள்வதில் மகிழ்ச்சியடைகிறோமா? கடும் நெருக்கடிகளை எதிர்ப்படுகையில், உதவிக்காக அவரிடம் வேண்டுகிறோமா? முக்கிய தீர்மானங்கள் எடுப்பதற்கு முன் ஜெபத்தில் அவருடைய வழிநடத்துதலை நாடுகிறோமா? இதயத்திலுள்ளதை எல்லாம் கொட்டி யெகோவாவிடம் நாம் செய்யும் ஜெபங்கள், அவரிடம் நம் அன்னியோன்யத்தை கூட்டுகின்றன. மேலும், அவர் நம் ஜெபங்களுக்குச் செவிசாய்த்து, ‘நம் பாதைகளைச் செவ்வைப்படுத்துவார்’ என்ற உறுதியும் நமக்கு உள்ளது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்