-
பணத்தைக் குறித்த ஞானமான கண்ணோட்டம் என்ன?விழித்தெழு!—2007 | ஜூன்
-
-
பைபிளின் கருத்து
பணத்தைக் குறித்த ஞானமான கண்ணோட்டம் என்ன?
‘திரவியம் கேடகம்,’ அதாவது, பணம் பாதுகாப்பு தரும் என்று பைபிள் சொல்கிறது. (பிரசங்கி 7:12) உணவு, உடை, உறைவிடத்தைப் பெற பணம் தேவைப்படுவதால், வறுமையோடு கைகோர்த்து வருகிற கஷ்டநஷ்டங்களிலிருந்து அது பாதுகாப்பு தருகிறது. சொல்லப்போனால், பணத்தை வைத்து எந்தப் பொருளை வேண்டுமானாலும் வாங்கிவிடலாம். அது “எல்லாவற்றிற்கும் உதவும்” என்று பிரசங்கி 10:19 சொல்கிறது.
-
-
பணத்தைக் குறித்த ஞானமான கண்ணோட்டம் என்ன?விழித்தெழு!—2007 | ஜூன்
-
-
பணத்தைக் காட்டிலும் சிறந்த ஒன்று
பணம் பாதுகாப்பைத் தருகிறது என்று சாலொமோன் ராஜா சொன்னதோடு, “ஞானம் கேடகம்” என்றும் குறிப்பிட்டார். ஏனென்றால், “அது தன்னை உடையவர்களுக்கு ஜீவனைத் தரும்” என்று விளக்கினார். (பிரசங்கி 7:12) அவர் எதை அர்த்தப்படுத்தினார்? பைபிளைப் பற்றிய திருத்தமான அறிவையும் கடவுள்மீதுள்ள பயபக்தியையும் அடிப்படையாகக் கொண்ட ஞானத்தையே அவர் அர்த்தப்படுத்தினார். இத்தகைய தெய்வீக ஞானம் பணத்தைவிட மேம்பட்டது; ஏராளமான படுகுழிகளிலிருந்தும் அகால மரணத்திலிருந்தும்கூட ஒருவரைப் பாதுகாக்க வல்லது. ஒரு கிரீடத்தைப்போல, மெய்யான ஞானம் அதை உடையவர்களை மேன்மைப்படுத்துகிறது; இன்னும், மதிப்பு மரியாதையையும் பெற்றுத் தருகிறது. (நீதிமொழிகள் 2:10-22; 4:5-9) மேலுமாக, கடவுளுடைய அங்கீகாரத்தைப் பெற அது வழிவகுப்பதால், “ஜீவவிருட்சம்” என்று அழைக்கப்பட்டிருக்கிறது.—நீதிமொழிகள் 3:18.
அத்தகைய ஞானத்தைப் பெற மனதார விரும்புகிறவர்களும் அதோடு அதைத் தேடிக் கண்டுபிடிக்க மனமுள்ளவர்களும் அது எளிதாகக் கிடைப்பதை அறிந்து கொள்கிறார்கள். “என் மகனே, நீ . . . ஞானத்தை வா என்று கூப்பிட்டு, புத்தியைச் சத்தமிட்டு அழைத்து, அதை வெள்ளியைப்போல் நாடி, புதையல்களைத் தேடுகிறதுபோல் தேடுவாயாகில், அப்பொழுது கர்த்தருக்குப் பயப்படுதல் இன்னதென்று நீ உணர்ந்து, தேவனை அறியும் அறிவைக் கண்டடைவாய். கர்த்தர் ஞானத்தைத் தருகிறார்; அவர் வாயினின்று அறிவும் புத்தியும் வரும்.”—நீதிமொழிகள் 2:1-6.
-