இளைஞர் கேட்கின்றனர் . . .
‘ஜாலியாக இருப்பதில் என்ன தவறு இருக்கிறது?’
வெள்ளிக்கிழமை மாலை வேளைகளில் பாலீன் (இது அவளுடைய உண்மையான பெயர் அல்ல) கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் சென்றுவிடுவது வழக்கம். ஆனால் அவள் அங்கு கலந்தாலோசிப்புகளை அனுபவித்ததுபோல, அந்த நேரத்தில் அவளுடைய பள்ளிப் பிள்ளைகள் விருந்துகளிலும், நடனங்களிலும் இருப்பார்கள் என்பதை அவள் அறிந்திருந்தாள்.
சபை கூட்டம் முடிந்து, வீட்டிற்குத் திரும்பும்போது, உள்ளூரிலுள்ள ஒரு இளைஞர் மன்றம் வழியாக அவள் வருவதுண்டு. “சப்தமான இசையாலும் ஜொலிக்கும் விளக்குகளாலும் கவர்ச்சிக்கப்பட்டதால், அந்தப் பக்கமாக கடந்து செல்லும்போது நான் ஜன்னல் வழியாக பார்ப்பேன், அவர்கள் ஜாலியாக இருப்பதைக் கற்பனை செய்துகொள்வேன்.” காலப்போக்கில், நண்பர்களோடு சேர்ந்து இன்பமாக இருப்பதே அவளுடைய வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெற்றது.
‘நான் இழந்து விடுகிறேனா?’
ஜாலியான சமயங்களைக் கொண்டிருப்பது உனக்கு அவ்வளவு முக்கியமானதாக இருக்கிறதா? ஒருவேளை இருக்காது. ஆனால், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் பாலீன் போல் ஏதோவொன்றை இழந்துவிட்டதாக உணரலாம். உன்னுடைய நண்பர்களும் பள்ளித் தோழர்களும் ஜாலியான சமயங்களைக் கொண்டிருப்பதாகத் தெரிகிறது. உன்னைப் பற்றியதென்ன? பள்ளிக்கூடம், வீட்டுப் பாடங்கள் மற்றும் வீட்டு வேலைகள் போன்ற அனுதின வேலைகளில் மாட்டிக் கொண்டிருக்கிறாய். உன்னுடைய பெற்றோர் கிறிஸ்தவர்களாய் இருந்து, பைபிள் நியமங்களைப் பின்பற்றுவதை வலியுறுத்தும்போது, வாழ்க்கை இன்னும் அதிக கட்டுப்படுத்தப்பட்ட ஒன்றாக உனக்குத் தோன்றலாம். மற்றவர்கள் பரவலாகப் பேசிக்கொள்ளும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை நீ காண விரும்பலாம், ஆனால் உன்னுடைய பெற்றோர், அது அதிக வன்முறையானது என்று சொல்லுகிறார்கள். உன்னுடைய சில பள்ளித் தோழர்களுடன் நீ செல்ல விரும்புகிறாய், ஆனால் அவர்கள் அதைக் கெட்ட சகவாசம் என்று அழைக்கிறார்கள். (1 கொரிந்தியர் 15:33) சில நண்பர்கள் ஒன்று சேர்ந்து நேரம் செலவழிக்க விரும்புகிறார்கள், ஆனால் அப்பாவும் அம்மாவும் அதைக் கண்காணிக்க வேண்டுமென்று வலியுறுத்துகின்றனர்.
ஆனால் உன்னுடைய பள்ளித் தோழர்களோ அவ்விதமான கட்டுப்பாடுகளைக் கொண்டிராமல் இருக்கலாம். அவர்களுடைய பெற்றோர்கள் தங்களுடைய பிள்ளைகள் மாரியுவானாவை புகைப்பதையும், மோசமான ராக் இசை நிகழ்ச்சிகளுக்குச் செல்லுவதையும் முறைகேடான பாலுறவில் ஈடுபடுவதையுங்கூட அனுமதிக்கின்றனர்—அல்லது கண்டு காணாமல் இருந்துவிடுகின்றனர். இந்தக் கெட்ட காரியங்களை நீ செய்ய வேண்டுமென்பதல்ல. ஆனால் தாங்கள் செய்ய விரும்புவதைச் செய்வதற்குத் தங்களுக்கு இருக்கும் சுதந்தரத்தைப் பார்த்து நீங்கள் பொறாமைக் கொள்ளக்கூடும். ‘எப்பொழுதாவது ஒருமுறை ஜாலியான சமயத்தைக் கொண்டிருப்பதில் என்ன தவறு இருக்கிறது என்று நீ கேட்கக்கூடும்.
மனிதன்—வாழ்க்கையை மகிழ்ச்சியுடன் அனுபவிக்க உண்டாக்கப்பட்டான்!
நம்முடைய கடவுளாகிய சிருஷ்டிகரை பொருத்தவரையில் எப்போதாவது ஒரு முறை சந்தோஷமான சமயங்களைக் கொண்டிருப்பதில் எந்தவித தவறும் இல்லை. இதற்கு சிருஷ்டிப்பு அத்தாட்சி பகர்கிறது. சிறிய உருவங் கொண்ட பளபளப்பான கண்களையுடைய நீர்நாய், தான் கட்டின மண் வீட்டில் சறுக்கிச் செல்வதை கற்பனை செய்து பாருங்கள். அது தலையை முன்வைத்து பனிச் சறுக்கில் மீண்டும் மீண்டும் சறுக்குகிறது—வெறுமென விளையாடுகிறது. அந்தச் சிறிய பிராணி களிகூரும் விளையாட்டில் களைப்படைவதில்லை. இந்த விளையாட்டுத்தனமான பிராணியை உண்டாக்கினவரின் தன்மையைக் குறித்து இது உங்களுக்கு எதையோ தெரிவிப்பதாக இல்லையா?
யெகோவா ஒரு “நித்தியானந்த தேவன்.” (1 தீமோத்தேயு 1:11) தம்முடைய சிருஷ்டிப்புகள் வெறுமென வாழ்வது மட்டுமல்லாமல் அதில் மகிழ்ச்சியையும் காண வேண்டுமென்று விரும்புகிறார். நிச்சயமாக இது, கடவுளுடைய அதே சாயலில் உண்டாக்கப்பட்டிருக்கும் மனிதர்களைக் குறித்தும் உண்மையாக இருக்கிறது.—ஆதியாகமம் 1:26, 27.
முதல் மனிதனாகிய ஆதாமுக்கு மகிழ்ச்சியாக இருக்கும் திறனைக் கடவுள் கொடுத்திருந்தார். அவன் ஒரு இயந்திர மனிதன் அல்ல. படிப்பது மட்டும், அல்லது வேலை செய்வது மட்டும் போன்ற ஒரே மாதிரியான காரியங்களைக் கொண்டவனாக இல்லை. வாழ்வதற்கு உண்மையில் ஆர்வம் கொண்டவனாக இருந்தான். எனவேதான், ஆதாம் உணரவும், அனுபவிக்கவும் வித்தியாசமான காட்சிகள், சுவைகள், சப்தங்கள், மற்றும் நறுமணங்கள் ஆகியவற்றைக் கொடுத்தார். ஆதாம் கூட்டுறவு கொள்வதற்கான தேவையை உணர்ந்து, ஒரு பரிபூரண துணையையும் கொடுத்தார்.—ஆதியாகமம் 2:18, 23.
எனவே வாலிபர்கள் நேரத்தை மகிழ்ச்சியாக செலவழிக்கும் காரியத்தை அவர் மறுக்கவில்லை. ஞானியாகிய சாலொமோனின் மூலம் அவர் பின்வருமாறு சொல்லுகிறார்: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நட.”—பிரசங்கி 11:9.
எதுவும் சரியா?
ஆனால், பொழுதுபோக்கை குறித்த விஷயத்தில் எதுவும் சரியாக இருக்க முடியுமா? இல்லை. மேலே சொல்லப்பட்ட வார்த்தைகளுக்குப் பிறகு, சாலொமோன் பின்வருமாறு எச்சரிக்கிறான்: “கடவுள் இவை நிமித்தம் எல்லாம் உன்னை நியாயம் விசாரிப்பார்.” (தி.மொ.) உண்மையில், வாழ்க்கையை முழுவதுமாக அனுபவிக்க வேண்டுமென்று கடவுள் விரும்புகிறார். ஆனால் அதே சமயத்தில் நீ செய்யும் காரியங்களுக்கு உத்தரவாதமுள்ளவனாக இருக்கிறாய். “நீ உன் இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும், உன் மாம்சத்திலிருந்து தீங்கையும் நீக்கிப்போடு; இளவயதும் வாலிபமும் மாயையே,” என்று சாலொமோன் தொடருகிறான்.”—பிரசங்கி 11:10.
மகிழ்ச்சியான சமயத்தைக் கொண்டிருப்பதற்குப் பைபிள் நியமங்களை விட்டுவிடக்கூடாது. இன்றைய “விளையாட்டு” நாளை வினையாகக்கூடும். உதாரணமாக, இளைஞர் சிலர் மாரியுவானா புகைப்பது விளையாட்டாக இருக்கிறது என்று சொல்லலாம். ஆனால் நுரையீரல் புற்றுநோய் அல்லது மூளை மற்றும் பிறப்பு உறுப்புகளில் சேதம் ஏற்படுவது விளையாட்டாக இருப்பதில்லை; இன ஒழுக்கக்கேட்டின் விளைவுகளும் அவ்வாறு இருப்பதில்லை—கருவுறுவதும் பாலுறுப்புகளின் மூலம் கடத்தப்படும் வியாதிகளும்—விளையாட்டல்ல. என்றபோதிலும், இதை மறந்து சில இளைஞர்கள் அனுபவிக்கும் சுயாதீனத்தின் பேரில் பொறாமைப்பட ஆரம்பிப்பது எளிதாக இருக்கக்கூடும்.
சங்கீதக்காரன் ஒரு முறை இவ்வாறாக உணர்ந்தான். “துன்மார்க்கரின் வாழ்வை நான் காண்கையில், வீம்புக்காரராகிய அவர்கள் மேல் பொறாமைகொண்டேன்” என்று அவன் ஒப்புக்கொண்டான். நீதியான நியமங்களுக்கேற்ப வாழ்வதன் மதிப்பைக் குறித்தும் அவன் சந்தேகப்பட்டான். “நான் விருதாவாகவே என் இருதயத்தைச் சுத்தம்பண்ணி, குற்றமில்லாமையிலே என் கைகளைக் கழுவினேன்,” என்று அவன் சொன்னான். ஆனால் அப்போதுதானே ஒரு ஆழ்ந்த உள்நோக்கு அவனுக்கு ஏற்பட்டது. துன்மார்க்க ஜனங்கள் உண்மையில் “சறுக்கலான இடங்களில்”—அழிவின் வாயிலில் இருக்கிறார்கள்! (சங்கீதம் 73:3, 13, 18) தெய்வீக நியமங்களை மீறியதற்கு அவர்கள் அதன் பலனை அடைந்தே தீர வேண்டும்.
பாலீன் இதை உணர்ந்துகொண்டாள்—கடினமான முறையில். ஜாலியான சமயங்களைக் கொண்டிருக்க வேண்டுமென்ற அவளுடைய ஆசை அவளை ஆதிக்கம் செய்துவிட்டது. எனவே அவள் கிறிஸ்தவ கூட்டங்களுக்குச் செல்வதை நிறுத்திவிட்டு, சுகபோகத்தை விரும்பும் இளைஞர்களை நண்பர்களாக்கினாள். அங்கிருந்து ஒரே சரிவுதான். “தவறென்று எச்சரிக்கப்பட்ட காரியங்களை எல்லாம் நான் செய்து வந்தேன்.” வழிவிலகிச் செல்லும் அவளுடைய நடத்தை, அவள் கைது செய்யப்பட்டு, வழிவிலகிச் செல்லும் பெண்களுக்கான பள்ளிக்கூடத்திற்கு அனுப்பப்படுவதில் முடிவடைந்தது. என்றாலும் சாலொமோனின் எச்சரிப்பின்படி தீங்கை நீக்கியிருந்தால் அவள் இந்த மனவேதனையைத் தவிர்த்திருக்கலாம்.
சமநிலையைக் கண்டடைதல்
இதன் காரணமாகவே உன்னுடைய பெற்றோர் உன்மீது கட்டுப்பாடுகளை வைக்கிறார்கள். நீ நல்ல மகிழ்ச்சியாக இருப்பதை அவர்கள் எடுத்துப்போட முயற்சி செய்வதில்லை. அதற்குப் பதிலாக உன் “இருதயத்திலிருந்து சஞ்சலத்தையும் நீக்கி” வினைமையான பிரச்னைகளிலிருந்து உன்னைக் காத்துக்கொள்ள விரும்புகிறார்கள். என்றாலும், ‘சஞ்சலத்தை நீக்குவது’ என்பது வெறுமென தவறான பழக்கங்களைத் தவிர்ப்பதை மட்டும் குறிக்காது. முக்கியமான காரியங்களை ஒழுங்குபடுத்திக் கொள்வதையும் குறிக்கிறது. சாலொமோன் பின்வருமாறு கூறுகிறான்: “ஒவ்வொன்றிற்கும் ஒவ்வொரு காலமுண்டு . . . அழ ஒரு காலமுண்டு, நகைக்க ஒரு காலமுண்டு, புலம்ப ஒரு காலமுண்டு, நடனம்பண்ண ஒரு காலமுண்டு.”—பிரசங்கி 3:1, 4.
நாம் வாழ்ந்திருக்கும் உலகம், சிற்றின்பத்திற்கு முக்கிய ஸ்தனத்தைக் கொடுக்கிறது. வியாபார தந்திரம் என்ற ஒரு புத்தகத்தில் சிற்றின்பத்தின் புதிய கொள்கை என்று தான் அழைக்கும் காரியத்தைப் பின்வருமாறு விளக்குகிறது: “எதிர்காலத்திற்காக இல்லாமல் தற்காலத்திற்காகவே வாழும் முக்கியமான ஒரு போக்கு இருக்கிறது. பிறகு இல்லாமல் மக்கள் இப்போது தானே தமாஷாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். மக்கள் இப்பொழுது தானே வாழ விரும்புகின்றனர், இதை செய்வதற்குத் தங்களுக்கு வேண்டிய பொருட்களையும் சேவைகளையும் அளிக்கும் கம்பெனிகள் சொல்லர்த்தமாகவே, குறிப்பிடத்தக்க வெற்றியைக் கண்டடைந்திருக்கின்றன. இன்றுள்ள ஜனங்கள் “சுகபோகப் பிரியர்களாக இருப்பார்கள்” என்று பைபிள் முன்னறிவித்தது.—2 தீமோத்தேயு 3:1, 4.
என்றபோதிலும், ஒரு கிறிஸ்தவன் சமநிலையைக் காத்துக்கொள்ள விரும்புகிறான். பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் சுவையூட்டும் வாசனை திரவியங்களைப் போன்றிருக்கிறது. அவை நிச்சயமாகவே ஒரு உணவை அருந்துவதற்கான பசியார்வத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் அதையே முக்கிய உணவாக நீங்கள் எடுத்துக்கொள்வீர்களா? (நீதிமொழிகள் 24:13 மற்றும் 27:27-ஐ ஒப்பிட்டுப் பாருங்கள்) என்றாலும், இளைஞர்கள், ஒரு பொழுதுபோக்கிலிருந்து இன்னொன்றிற்கு மாறியபடி வாழ்கிறார்கள். இது ஆழமற்ற ஆனந்தமாக இருப்பதால் அது அவர்களை வெறுமையாகவும் வெறுப்படையவும் செய்கிறது. சாலொமோன் பின்வருமாறு கூறினான்: “என் கண்கள் இச்சித்தவைகளில் ஒன்றையும் நான் அவைகளுக்குத் தடை பண்ணவில்லை; என் இருதயத்துக்கு ஒரு சந்தோஷத்தையும் நான் வேண்டாமென்று விலக்கவில்லை. . . . இதோ, எல்லாம் மாயையும், சூரியனுக்குக் கீழே பலன் ஒன்றுமில்லை.”—பிரசங்கி 2:10, 11.
இல்லை, பொழுதுபோக்குச் செயல்கள்தானே வாழ்க்கை அல்ல. இயேசு கிறிஸ்து பொழுதுபோக்கை அதற்குரிய இடத்தில்தான் வைத்தார். கானாவில் ஒரு கலியாண விருந்திற்குச் சென்றார் என்று பைபிள் கூறுகிறது. அப்படிப்பட்ட விருந்துகள் உணவு, இசை, நடனம் மற்றும் கட்டியெழுப்பும் கூட்டுறவையும் உட்படுத்தின. அற்புத விதமாக திராட்சரசத்தை அளித்ததன் மூலம், கலியாண விருந்தின் வெற்றிக்குக் காரணமாகவும் இருந்தார். (யோவான் 2:3-11) ஒரு மகிழ்ச்சியான சமயத்தைக் கொண்டிருப்பது எப்படி என்று அவர் அறிந்திருந்தார்.
ஆனால் இயேசுவின் வாழ்க்கை விருந்துகளுக்கு மட்டும் செல்லும் ஒரு வாழ்க்கையாக இருக்கவில்லை. அவர் அதிகமான நேரத்தை ஆவிக்குரிய காரியங்களை நாடுவதிலும், மக்களுக்குக் கடவுளுடைய சித்தத்தைக் கற்பிப்பதிலும் செலவழித்தார். அவர் சொன்னார்: “நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது.” (யோவான் 4:34) இயேசு கடவுளுடைய சித்தத்தைச் செய்ததானது இயேசுவுக்குச் சிறிது தற்காலிக மாற்றத்தைக் கொடுப்பதற்குப் பதிலாக அதிக நீடித்த மகிழ்ச்சியைக் கொடுத்தது.
அவளுடைய உலகப்பிரகாரமான வாழ்க்கைக்குப் பின்பு, பாலீன் தன்னுடைய வாழ்க்கையில் தீவிரமான மாற்றங்களைச் செய்தாள். அவளும் முழுவதுமாக கடவுளுடைய சித்தத்தைச் செய்வதிலிருக்கும் மகிழ்ச்சியைக் கற்றறிந்தாள். அவள் இப்போது பொழுதுபோக்கை அதன் இடத்தில் வைக்க முற்படுகிறாள். ஆனால் பொழுதுபோக்கு தேவையாக இருக்கும்போதும், சரியானதாக இருக்கும்போதும் எப்படி? அந்த நேரங்களை நிறைவு செய்வதற்கான சில காரியங்கள் என்ன? பின்னால் வரும் ஒரு கட்டுரை இதை விளக்கும். (g86 10/22)
[பக்கம் 12-ன் படம்]
பைபிள் நியமங்களைப் பின்பற்றும் இளைஞர்கள் ஜாலியாக இருப்பதை உண்மையிலேயே இழந்தவர்களாக இருக்கிறார்களா?