பாடம் 05
பைபிள்—கடவுள் சொல்லும் செய்தி
யெகோவா நமக்குக் கொடுத்த அருமையான பரிசுதான் பைபிள். அதில் 66 புத்தகங்கள் இருக்கின்றன. ஆனால், ‘பைபிளை உண்மையிலேயே கடவுள்தான் கொடுத்தாரா?’ என்று நீங்கள் யோசிக்கலாம். அதைப் பற்றிப் பார்க்கலாம்.
1. கடவுள்தான் பைபிளின் ஆசிரியர் என்று எப்படிச் சொல்லலாம்?
கிட்டத்தட்ட 40 பேர் பைபிளை எழுதினார்கள். அதை எழுதி முடிக்க சுமார் 1600 வருஷங்கள் எடுத்தன (கி.மு. 1513 - சுமார் கி.பி. 98). வேறுவேறு ஆட்கள் பைபிளை எழுதியிருந்தாலும், அதில் இருக்கும் எல்லாமே ஒன்றுக்கொன்று ஒத்துப்போகின்றன. ஏனென்றால், கடவுள்தான் பைபிளின் ஆசிரியர். (1 தெசலோனிக்கேயர் 2:13-ஐ வாசியுங்கள்.) பைபிளை எழுதியவர்கள் சொந்தமாக எதையும் எழுதவில்லை. “கடவுளுடைய வார்த்தைகளை அவருடைய சக்தியால் தூண்டப்பட்டுதான் சொன்னார்கள்.” (2 பேதுரு 1:21) அதாவது, கடவுள் தன்னுடைய சக்தியை அவர்களுக்குக் கொடுத்து, தன் மனதில் இருப்பதை எழுத வைத்தார்.—2 தீமோத்தேயு 3:16.
2. பைபிள் யாருக்கெல்லாம் பிரயோஜனமாக இருக்கும்?
பைபிளில் இருக்கிற செய்தி “எல்லா தேசத்தினருக்கும் கோத்திரத்தினருக்கும் மொழியினருக்கும் இனத்தினருக்கும்” பிரயோஜனமாக இருக்கும். (வெளிப்படுத்துதல் 14:6-ஐ வாசியுங்கள்.) அதனால், பைபிள் ஆயிரக்கணக்கான மொழிகளில் கிடைக்கும்படி கடவுள் பார்த்துக்கொண்டார். இதுவரைக்கும் வேறு எந்தப் புத்தகமும் இவ்வளவு மொழிகளில் கிடைத்தது இல்லை. இன்று மக்கள் எங்கு வாழ்ந்தாலும் சரி, எந்த மொழியைப் பேசினாலும் சரி, கிட்டத்தட்ட எல்லாராலும் பைபிளைப் படிக்க முடியும்.
3. பைபிள் அழியாதபடி யெகோவா எப்படிப் பார்த்துக்கொண்டார்?
விலங்குகளின் தோலினாலும் நாணற்புல்லினாலும் செய்த சுருள்களில்தான் பைபிளை முதலில் எழுதினார்கள். ஆனால், அந்தப் பொருள்கள் காலப்போக்கில் அழிந்துவிடும் என்பதால், பைபிளை நேசித்தவர்கள் அதை நகல் எடுத்தார்கள். சுருள்களில் இருப்பதைப் பார்த்துப் பார்த்து வேறு சுருள்களில் கைப்பட எழுதினார்கள். அதிகாரத்தில் இருந்தவர்கள் பைபிளை அழிக்க முயற்சி செய்தபோதும், நிறைய பேர் அதைப் பாதுகாப்பதற்காகத் தங்களுடைய உயிரையே பணயம் வைத்தார்கள். யெகோவா பைபிள் மூலமாக நம்மிடம் பேசுவதால், அதைத் தடுக்க எதையுமே அல்லது யாரையுமே அவர் விடவில்லை. “நம் கடவுளின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்திருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது.—ஏசாயா 40:8.
ஆராய்ந்து பார்க்கலாம்!
கடவுள் எப்படி மனிதர்களைப் பயன்படுத்தி பைபிளை எழுதினார்? அதை எப்படிப் பாதுகாத்தார்? அது எல்லாருக்கும் கிடைப்பதற்காக என்ன செய்திருக்கிறார்? விவரமாகப் பார்க்கலாம்.
4. பைபிளின் ஆசிரியர் யார் என்று பைபிளே சொல்கிறது
வீடியோவைப் பாருங்கள். பிறகு, 2 தீமோத்தேயு 3:16-ஐப் படித்துவிட்டு, கீழே இருக்கிற கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்.
பைபிளை மனிதர்கள் எழுதியிருந்தாலும் அது கடவுள் தந்த புத்தகம் என்று எப்படிச் சொல்லலாம்?
கடவுள் தன் மனதில் இருப்பதை மனிதர்களுக்குத் தெரியப்படுத்தி அதை எழுத வைத்திருக்கிறார். உங்களால் இதை நம்ப முடிகிறதா?
5. தாக்குதல்களைத் தாக்குப்பிடித்தது பைபிள்
பைபிளைக் கடவுள் கொடுத்திருக்கிறார் என்றால் அதை அவர் பாதுகாக்கவும் வேண்டும், இல்லையா? இதுவரை, அதிகாரத்தில் இருந்த எத்தனையோ பேர் பைபிளை அழிக்க முயற்சி செய்திருக்கிறார்கள். மக்கள் கையில் பைபிள் கிடைக்கக் கூடாது என்று மதத் தலைவர்களும் நினைத்தார்கள். ஆனால், எவ்வளவோ எதிர்ப்புகளும் கொலை மிரட்டல்களும் வந்தபோதுகூட நிறைய பேர் பைபிளைப் பாதுகாப்பதற்காகத் தங்களுடைய உயிரையே பணயம் வைத்தார்கள். அப்படிப்பட்ட ஒருவரைப் பற்றி வீடியோவில் பார்த்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
வீடியோவைப் பார்த்த பிறகு பைபிளைப் படிக்க வேண்டுமென்ற ஆசை உங்களுக்கு அதிகமாகி இருக்கிறதா? ஏன்?
சங்கீதம் 119:97-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்வியைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பைபிளை மொழிபெயர்க்கவும் வினியோகிக்கவும் ஏன் நிறைய பேர் உயிரையே பணயம் வைத்தார்கள்?
6. எல்லாருக்காகவும் கடவுள் தந்த புத்தகம்
இதுவரை வேறு எந்தப் புத்தகமும் பைபிள் அளவுக்கு மொழிபெயர்க்கப்படவோ வினியோகிக்கப்படவோ இல்லை. அப்போஸ்தலர் 10:34, 35-ஐப் படித்துவிட்டு, இந்தக் கேள்விகளைப் பற்றிக் கலந்துபேசுங்கள்:
பைபிள் இவ்வளவு மொழிகளில், இவ்வளவு அதிகமாகக் கிடைக்க வேண்டும் என்று கடவுள் ஏன் விரும்பினார்?
பைபிளைப் பற்றி இவ்வளவு நேரம் பேசியதில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது?
உலகில் கிட்டத்தட்ட
100%
மக்களால்
அவர்களுக்குத் தெரிந்த மொழியில் பைபிளைப் படிக்க முடியும்
முழுமையாகவோ பகுதியாகவோ
3000
மொழிகளுக்கும்
அதிகமாகக் கிடைக்கிறது
500,00,00,000
பிரதிகள் அச்சடிக்கப்பட்டுள்ளது
இது வேறெந்தப் புத்தகமும் எட்ட முடியாத எண்ணிக்கை
சிலர் இப்படிச் சொல்கிறார்கள்: “பைபிள் அந்த காலத்து புத்தகம், அத மனுஷங்கதான் எழுதுனாங்க.”
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
கடவுள் தந்த புத்தகம்தான் பைபிள் என்று எப்படி உறுதியாகச் சொல்லலாம்?
சுருக்கம்
கடவுள் தந்திருக்கிற புத்தகம்தான் பைபிள். அது எல்லாருக்குமே கிடைக்கும்படி அவர் செய்திருக்கிறார்.
ஞாபகம் வருகிறதா?
கடவுள் எப்படி மனிதர்களைப் பயன்படுத்தி பைபிளை எழுதியிருக்கிறார்?
பைபிளைப் பற்றி நாம் படித்த விஷயங்களில் உங்களுக்கு எது ரொம்பப் பிடித்திருக்கிறது?
உங்களிடம் பேசுவதற்காகக் கடவுள் இவ்வளவு செய்திருக்கிறார் என்று தெரிந்துகொள்ளும்போது உங்களுக்கு எப்படி இருக்கிறது?
அலசிப் பாருங்கள்
அன்றிலிருந்து இன்றுவரை பைபிள் கடந்துவந்திருக்கும் பாதையைப் படித்துப் பாருங்கள்.
“இன்றுவரை பைபிள் எவ்வாறு நிலைத்திருக்கிறது?” (விழித்தெழு!, நவம்பர் 2007)
பைபிள் எப்படி மூன்று பெரிய தாக்குதல்களைத் தாக்குப்பிடித்தது என்று தெரிந்துகொள்ளுங்கள்.
சிலர் எப்படி உயிரைப் பணயம் வைத்து பைபிளை மொழிபெயர்த்தார்கள் என்று பாருங்கள்.
பைபிள் நிறைய தடவை நகல் எடுக்கப்பட்டும் மொழிபெயர்க்கப்பட்டும் இருக்கிறது. ஆனாலும், அது இன்றுவரை மாறவே இல்லை என்று எப்படிச் சொல்லலாம்?
“பைபிளில் மாற்றமோ கலப்படமோ செய்யப்பட்டிருக்கிறதா?” (ஆன்லைன் கட்டுரை)