-
‘என் மக்களை தேற்றுங்கள்’ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
-
-
17 கடவுள் சர்வ வல்லமையும் சர்வ ஞானமும் படைத்தவராக இருப்பதால், மீண்டும் நிலைநாட்டும் அவருடைய வாக்குறுதியை கைதிகளாக இருக்கும் யூதர்கள் உறுதியாய் நம்பலாம். ஏசாயா சொல்கிறார்: “தண்ணீர்களைத் தமது கைப்பிடியால் அளந்து, வானங்களை ஜாணளவாய்ப் பிரமாணித்து, பூமியின் மண்ணை மரக்காலில் அடக்கி, பர்வதங்களைத் துலாக்கோலாலும், மலைகளைத் தராசாலும் நிறுத்தவர் யார்? கர்த்தருடைய ஆவியை அளவிட்டு, அவருக்கு ஆலோசனைக்காரனாயிருந்து, அவருக்குப் போதித்தவன் யார்? தமக்கு அறிவை உணர்த்தவும், தம்மை நியாயவழியிலே உபதேசிக்கவும், தமக்கு ஞானத்தைக் கற்றுக்கொடுக்கவும், தமக்கு விவேகத்தின் வழியை அறிவிக்கவும், அவர் யாரோடே ஆலோசனைபண்ணினார்?”—ஏசாயா 40:12-14.
18 கைதிகளாக இருக்கும் யூதர்கள் ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய கேள்விகள் இவை. பொங்கிவரும் கடல் அலைகளை மனிதன் அணை போட்டு தடுத்து நிறுத்த முடியுமா? முடியாது! ஆனால் யெகோவாவின் பார்வையில், நிலத்தை சூழ்ந்திருக்கும் கடல்நீர், உள்ளங்கையிலுள்ள ஒரு துளித் தண்ணீருக்கு சமம்.b கோடிக்கணக்கான நட்சத்திரங்களை அள்ளி தெளித்தாற்போல இருக்கும் பரந்த வானத்தை அற்ப மனிதன் அளக்க முடியுமா? அல்லது பூமியின் மலைகளையும் குன்றுகளையும் எடை போட முடியுமா? முடியாதே. என்றாலும், மனிதன் கையால் ஜாண்போட்டு ஒரு பொருளை அளப்பதுபோல, மிக எளிதாக யெகோவா வானங்களை அளக்கிறார். கையை விரித்து வைத்தால், கட்டைவிரலுக்கும் சுண்டு விரலுக்கும் இடையே உள்ள தூரமே ஜாண். சொல்லப்போனால், மலைகளையும் குன்றுகளையும் தராசில் எடைபோடுவது போல கடவுளால் அளக்க முடியும். இன்றைய சூழ்நிலையில் என்ன செய்ய வேண்டும் என்பதையோ அல்லது எதிர்காலத்தில் என்ன செய்யலாம் என்பதையோ, அதிபுத்திசாலியான எந்த மனிதனாவது கடவுளுக்கு சொல்ல முடியுமா? நிச்சயமாகவே முடியாது!
-
-
‘என் மக்களை தேற்றுங்கள்’ஏசாயா தீர்க்கதரிசனம்—மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு I
-
-
b “சமுத்திரத்தின் மொத்த நிறை கிட்டத்தட்ட 13,500,00,00,000,00,00,000 (1.35×1018) மெட்ரிக் டன் அல்லது பூமியின் மொத்த நிறையில் சுமார் 1/4400 ஆகும்.”—என்கார்ட்டா 97 என்ஸைக்ளோப்பீடியா.
-