கடவுளுக்கும் உங்களுக்குமிடையே காரியங்களைச் சரி செய்து கொள்ளுதல்
“உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப் போல் வெண்மையாகும்.” ஏசாயா 1:18.
ஏதோ ஒரு கடந்த கால தவறான அல்லது தயவற்ற செயலால் உங்களுக்கும் இன்னொருவருக்கும் இடையே உறவில் முறிவு ஏற்பட்டிருக்குமானால் “வழக்காடுவோம், வாருங்கள்” என்ற வார்த்தைகளுக்கு நீங்கள் எப்படிப் பிரதிபலிப்பீர்கள்? ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொள்ளக்கூடிய மற்றும் ஒத்துப்போகக்கூடிய சலுகைகளுடன் விட்டுக்கொடுக்ககூடிய ஓர் அமர்வுக்கு அது ஓர் அழைப்பாக இருக்கக்கூடும். ஒவ்வொருவரும் தன்னுடைய கருத்தை சமர்ப்பித்து பின்பு ஒவ்வொரு குறைகளை அல்லது மனஸ்தாபங்களை ஓரளவுக்கு ஒப்புக்கொள்ளக்கூடும்.
2. இந்தக் கருத்தில் ஏசாயா 1:18-ல் பலமொழிபெயர்ப்புகள் மொழிபெயர்த்திருக்கிறபடி, வழக்காடுவோம் வாருங்கள்” என்று சிருஷ்டிகர் வேண்டிக்கொள்வதை நீங்கள் கற்பனை செய்ய முடிகிறதா? நிச்சயமாகவே முடியாது. நம்முடைய கருத்தை நாம் “வாதிட்டு நிலைநிறுத்த” முடியாது. (தி நியு இங்கிலீஷ் பைபிள்) அல்லது அவர் குற்றத்தை ஏற்றுக்கொண்டு ஒத்துப்போக வேண்டும் என்பதுபோல் யெகோவாவுடன் விட்டுக்கொடுப்பவர்களாயிருக்கும் நிலையை எதிர்பார்க்க முடியாது. என்றபோதிலும் கடவுளோடு நாம் சமாதானத்தைக் காத்துக்கொள்ள விரும்பினான் ஏசாயா 1:8 எதைத் தேவைப்படுத்துகிறது?
3. “வழக்காடுவோம்” என்ற வார்த்தைக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கும் எபிரேயு வார்த்தை “தீர்மானி, நியாயங்கூறு, நிரூபி என்ற அடிப்படை அர்த்தத்தைக் கொண்டிருக்கிறது. அது சட்டம் சார்ந்த கருத்தை ஏற்கிறது, இருவர் ஒன்றாக சேர்ந்து நியாய விவாதம் செய்வதைவிட அதிகத்தைக் குறிக்கிறது. ஒரு தீர்மானமான முடிவு உட்பட்டிருந்தது.a (ஆதியாகமம் 31:37, 42,; யோபு 9:33; சங்கீதம் 50:21; ஏசாயா 2:4) வில்சனின் பழைய ஏற்பாட்டு வார்த்தை ஆய்வுகள் அளிக்கும் அர்த்தம்: “சரியாக இருத்தல்; சரி மற்றும் உண்மை எது என்று நியாய நிதானிப்பு செய்தல், விளக்கிக் காட்டுதல்.” கடவுளுடைய கட்டளை: “வாருங்கள், நாம் காரியங்களை சரிசெய்து கொள்ளலாம்.” (தி நியு அமெரிக்கன் பைபிள்) அல்லது “நாம் காரியங்களை சீர் செய்து கொள்ளலாம்.”
4. இந்தப் பலமான செய்தியை அளிப்பதற்கு யெகோவா தேவன் ஏசாயா தீர்க்கதரிசியைப் பயன்படுத்தினார். ஏசாயா யார்? அவனுடைய செய்தி ஏன் அவன் வாழ்ந்த காலத்தில் அதிக பொருத்தமான செய்தியாயிருந்தது? மேலும் அதிலிருந்து நாம் எப்படி நன்மை அடையலாம்?
5. “தீர்க்கதரிசி” என்று சொன்ன உடனேயே, உண்மை நிலை குறித்து தெளிவற்ற கருத்துக்களை அறிவித்துக் கொண்டிருக்கும் ஓர் இளம் துறவியின் நினைவுதான் இன்று பலருக்கு வரக்கூடும். மற்றவர்கள் இன்றைய நிலைமைகளின் பேரில் தீர்ப்பளிப்பவனாய்த் தன்னை அமைத்துக்கொள்ளும் ஓர் வயது சென்ற தனிப்போக்குடைய ஒருவரை நினைத்துப்பார்க்கக்கூடும். சமநிலையுடைய பகுத்தறிவுள்ள மனிதனாகிய ஏசாயா அவர்களிலிருந்து எவ்வளவு வித்தியாசப்பட்டவனாயிருந்தான். யெகோவா தேவன் அவனுடைய பேர்கொண்ட பைபிள் புத்தகத்தை எழுத அவனை பயன்படுத்தினார்.
6. “ஆமோச்சின் குமாரனாகிய ஏசாயா” யூதாவில் வாழ்ந்து வந்தான். “யூதாவின் ராஜாக்களாகிய உசியா, யோதாம், ஆகாஸ், எசேக்கியா என்பவர்களின் நாட்களில்”—40 ஆண்டுகளுக்கு மேலாக யெகோவாவை வைராக்கியத்துடன் சேவித்து வந்தான். அடக்கமான பண்புடையவனாய் ஏசாயா தன்னைக்குறித்து அதிகமான தகவல்களைக் கொடுக்கவில்லை. அவன் யூதாவின் ராஜ குடும்பத்து உறவினனாக இருந்தான் என்று பாரம்பரியம் கூறுகிறது. அவன் ஒரு குடும்பத்தை உடையவனாயிருந்தான், அவனுடைய மனைவி அவனுக்கு இரண்டு குமாரர்களைக் கொண்டிருந்தாள் என்பது நமக்கு நிச்யமாய்த் தெரியும். அவள் மரித்த பின்பு ஒருவேளை மறுவிவாகம் செய்து தீர்க்கதரிசனமாக இம்மானுவேல் என்று பெயரிடப்பட்ட இன்னொரு மகனுக்குத் தகப்பனாயிருந்திருக்கக்கூடும்.—ஏசாயா 1:1; 7::3, 14; 8:3, 18.
7 ஏசாயாவின் காலத்திற்கும் நம்முடைய காலத்திற்கும் இடையே ஒத்திருக்கும் காரியங்கள் உண்டு நாம் போர்கள் அல்லது அச்சுறுத்தல்கள் கொண்ட சர்வதேச அழுத்தம் மிகுந்த காலங்களில் வாழ்கிறோம். கடவுளை வணங்குவதாக உரிமைபாராட்டும் மதத் தலைவர்களும் அரசியல் தலைவர்களும் மற்றவர்களுக்கு முன்மாதிரிகளாக இருப்பதாய்த் தங்களை முன்வைத்தாலும் அவர்களுடைய ஒழுக்கம் மற்றும் பணம் சம்பந்தமான ஊழல் செய்திகளை செய்தி மூலங்களின் வழியாய் இடைவிடாமல் வாசிக்கிறோம். அப்படிப்பட்ட தலைவர்களை விசேஷமாக கிறிஸ்தவ மண்டலத்தோடு சேர்ந்தவர்களைக் கடவுள் எப்படி நோக்குகிறார்? அவர்களுக்கும் அவர்களைப் பின்பற்றுகிறவர்களுக்கும் முன்னால் என்ன இருக்கிறது? இப்படிப்பட்ட காரியங்களுக்கு நெருங்கிய சம்பந்தமுடைய தெய்வீக குறிப்புகளை ஏசாயா புத்தகத்தில் காண்கிறோம். தனிப்பட்டவிதத்தில் கடவுளை சேவிக்க முற்படும் நாம் ஒவ்வொருவரும் நமக்கு வேண்டிய பாடங்களைக் காண்கிறோம்.
குற்றமுள்ள தேசத்துக்கு ஒர் தீர்க்கதரிசி
8. ஏசாயா புத்தகத்தை வாசிக்கும் போது யூதா மற்றும் எருசலேமின் குற்றம் சம்பந்தப்பட்ட செய்திகளையும் எதிரிகளின் முற்றுகைகள் சம்பந்தப்பட்ட சரித்திரப்பூர்வமான விவரங்களையும் சுற்றுப்புற தேசங்கள் பாழ்க்கடிப்புக்குள்ளாகுதில் சம்பந்தப்பட்ட கடவுளுடைய தீர்ப்புகளையும், இஸ்ரவேல் திரும்ப நிலைநாட்டப்படுதல் மீட்கப்படுதல் சம்பந்தப்பட்ட உற்சாகமான வாக்குவாதங்களையும் நீங்கள் காண்பீர்கள். இது விவரமான அக்கறை தூண்டிடும் நடைமுறையில் எழுதப்பட்டிருக்கிறது. டாக்டர் I. ஸ்லாட்கி பின்வருமாறு சொல்லுகிறார்: “ஏசாயாவின் கற்பனைக்கூர்மையையும். சித்தரிக்கும் தன்மையையும், உருவகம் படுத்துதலையும் எதுகை மோனை அமைப்பையும் வாக்கியங்களின் சமநிலையான ஒட்டத்தையும் கண்டு பேரறிஞர்கள் அவற்றை முழு மனதாய்ப் புகழ்ந்திருக்கிறார்கள்.” நாம் விசேஷமாக ஏசாயாவின் துவக்க செய்தியை ஆராய்வோமாக—அது முதல் அதிகாரத்தில் காணப்படுகிறது.
9. இந்த அதிகாரத்தைத் தான் எப்பொழுது எழுதினான் என்பதைத் தீர்க்கதரிசி திட்டவட்டமாகக் குறிப்பிடவில்லை. ஏசாயா 6:1-13 உசியா அரசன் மரித்த ஆண்டைத் தொடர்ந்து தேதிகளை உள்ளடக்கியிருக்கிறது. எனவே ஏசாயா தன்னுடைய ஆரம்ப அதிகாரங்களை அதற்கு முன்னால் பதிவு செய்திருந்தானென்றால் அவை உசியாவின் அரசாட்சியின்போது மறைந்திருந்த நிலைமையை எடுத்துக்காட்டுவதாயிருக்கும் அடிப்படையில் உசியா (பொ.ச.மு 829-777) “யெகோவாவின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தான்,” எனவே கடவுள் அவனுடைய ஆட்சியை செழிக்க செய்து ஆசீர்வதித்தார். என்றாலும் எல்லாம் நன்றாக இருக்கவில்லை என்பதை நாம் அறிவோம். ஏனென்றால், “ஜனங்கள் இன்னும் மேடைகள் மேல் பலியிட்டுத் தூபங்காட்டி வந்தார்கள்.” மேட்டிமையோடு ஆலயத்தில் தூபங்காட்டியதற்குக் கடவுள் உசியாவை (அல்லது அசரியாவை) குஷ்டரோகத்தினால் தண்டிப்பதற்கு முன்பு அப்படிச் செய்து வந்தார்கள். (2 நாளாகமம் 26:1-5, 16-23; 2 இராஜாக்கள் 15:1-5) உசியாவின் காலத்தில் அடிப்படையாக இருந்துவந்த தீமை, அவனுடைய பேரன் ஆகாஸ் அரசனை உட்படுத்திய பொல்லாத விளைச்சலுக்கு வழிநடத்தியிருக்கக்ககூடும். (பொ.ச.மு 762-745) இவை ஏசாயா விவரித்த காரியங்களாகவும் இருக்கக்கூடும். ஆனால் அதிகாரம் 1-க்கான திட்டவட்டமான தேதியைவிட மிக முக்கியமான ஒன்றுதான் கடவுளைப் பின்வரும் வார்த்தைகளைச் சொல்லும்படி செய்தது: “நமக்கிடையே காரியங்களைச் சரிசெய்து கொள்வோமாக.”
10. ஏசாயா ஒளிவுமறைவின்றி பின்வரும் அறிவித்தான்: “பாவமுள்ள ஜாதிக்கு ஐயோ, கேடாம்! அது அக்கிரமம் பாரஞ்சுமந்த ஜனம், துர்ச்செய்கைக்காரர் சந்ததி, தீங்கு செய்யும் மக்கள், அவர்கள் யெகோவாவை விட்டுவிட்டார்கள், இஸ்ரவேலின் பரிசுத்தரை அசட்டை செய்தார்கள், பின் திரும்பிப்போய்விட்டார்கள் . . .தலையெல்லாம் வியாதி, இதயமெல்லாம் தளர்ந்ததே: உள்ளங்கால் தொடங்கி உச்சந்தலைமட்டும் அதில் சுகமேயில்லை.” (ஏசாயா 1:4-6) அரசனாகிய ஆகாஸின் 16-ம் ஆண்டு ஆட்சி காலம் விக்கிரகாராதனைக்குப் பேர்பெற்றதாயிருந்தது. அவன் “ஜாதிகளினுடைய அருவருப்புகளின்படியே தன் குமாரரையும் அக்கினியிலிட்டான். கோவில் மேடைகளிலும் குன்றுகளின்மேலும் பச்சையான சகல மரங்களின்கீழும் பலியிட்டு தூபங்காட்டி வந்தான்.” (2 நாளாகமம் 28:’1-4; 2 இராஜாக்கள் 16:3, 4) அநீதி, லஞ்சம், ஒழுக்கக்கேடு ஆகிய காரியங்கள் பிரபுக்களிடையே மிகுந்து காணப்பட்டது. அவர்கள் பூர்வ சோதோமில் ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் (ஏசாயா 1:10, 21-23; ஆதியாகமம் 18:20, 21) கடவுள் நிச்சயமாகவே அவர்களை அங்கீகரிக்க முடியாது. அப்படிப்பட்ட தலைவர்களைக் கொண்ட அந்த மக்கள் எப்படி இருப்பார்கள்?
11. விக்கிரகங்களுக்குப் பலிகளையும் புறமத தெய்வங்களுக்குத் தூபங்காட்டுவதையும் செய்து வந்த புனித மரங்களையும் தோப்புகளையும் கொண்ட இடங்களைக் குறிப்பிடுவதன் மூலம் ஏசாயா தீர்க்கதரிசி அந்த மக்கள் ஆழ்ந்திருந்த அருவருக்கத்தக்க நிலைகுறித்து விளக்கினான். இந்தக் “கர்வாலி மரங்கள்” நாணமடைவதற்குக் காரணமாக இருக்கும். (ஏசாயா 1:29; 65:3) அந்த விக்கிரக சாயல்களை விக்கிரகாராதனைக்காரருக்கே மாற்றிப் பொருத்துகிறவனாய் ஏசாயா பின்வருமாறு எழுதினான்: “இலையுதிர்ந்த கர்வாலி மரத்தைப்போலவும் தண்ணீரில்லாத தோப்பைப் போலவும் இருப்பீர்கள்.” (ஏசாயா 1:30) ஆம், யெகோவாவை விட்டுவிடும் ஆட்கள் “நொறுங்குண்டு போவார்கள்” அவர்கள் சணற்கூளம் போலவும் (எரிந்து போகும் சணல் கயிறுகள் போலவும்) அவர்களுடைய விக்கிரகங்கள் அக்கினிப் பொறியாகவும் தீ-க்கு இறையாகிவிடும்.—ஏசாயா 1:29, 31.
12. இப்பொழுது அதை இன்றைய நிலையுடன் ஒப்பிட்டுப் பாருங்கள். ஒரு மாத காலத்திற்குள்ளாக ஐக்கியமாகாணங்களிலுள்ள செய்தி நிறுவனங்கள் பின்வரும் அறிக்கையைக் கொண்டிருந்தன: “ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிட்ட ஒரு வேட்பாளர் பட்டியலிலிருந்து விலகிக் கொண்டான்; விபச்சாரம் செய்ததாக ஒப்புக்கொண்டவரும், ஓரினப் புணர்ச்சி, மனைவி மாற்றம் மற்றும் தன் விவகாரங்களை இரகசியமாக வைத்துக்கொள்ளச் செய்வதற்குப் பணத்தைத் தவறாக பிரயோகித்தல் போன்று குற்றஞ்சாட்டப்பட்டவருமான ஒரு பிரபல பாதிரி மாற்றப்பட்டார். (அவர் 1884-முதல் ஈட்டுத் தொகையாக $46 இலட்சம் எடுக்கிறார்.” டைம் மே 11, 1987) ஆஸ்திரியாவின் கடந்த ஆண்டு, ரெய்ன் மடத் தலைமைக்குரு வேட்டை விடுதிகளிலும் முன்னாள் ஆட்சி செய்த குடும்பத்துக்கு விருந்துகள் ஏற்பாடு செய்வதிலும், அவர்களைவிட குறைந்த பின்னணியுடைய இளம்பெண்களிலும் $ 60 இலட்சம் விரயம் செய்தார்,’ இப்படிப்பட்ட தலைவர்கள் குறித்து கூடுதலாக மற்ற உதாரணங்களை நீங்கள் நீங்கள் கொடுக்கக்கூடும். அவர்களைக் கடவுள் எவ்வாறு நோக்குகிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
13. பொதுவாக மக்களைக் குறித்ததில் மத கருத்துக்களில் இரு முனைப்பட்டவர்களாக இருக்கின்றனர். சிலர் வெறுப்புற்ற நிலையில் மதத்தை விட்டுவிடுகிறார்கள். உதாரணமாக, இங்கிலாந்தின் மக்கள் தொகையில் 3 சதவிகிதத்தினர் மட்டுமே ஸ்தாபிக்கப்பட்ட சர்ச்சுகளுக்குச் செல்கிறார்கள். மறுமுனையில் அளவு கடந்த மத பக்தியைக் காண்கிறோம். “இரட்சிக்கப்படுகிறதற்கு உணர்ச்சிவசப்பட்ட தூண்டுதலும், பல பாஷைபேசுதலும் அல்லது நோயாளிகள் “சுகமடைவதைக் காண்பதுமான காரியங்களுடன் கூடிய கரிஸ்மாட்டிக் சர்ச்சுகளில் இது வெகுவாகக் காணப்படுகிறது. அற்புதங்களை நம்பி திரளான மக்கள் புனித ஸ்தலங்களுக்குக் கூட்டங்கூட்டமாகச் செல்கிறார்கள். மற்றவர்கள் “விசுவாச” கிரியைகளாக தியாகங்களை மேற்கொள்கின்றனர், உதாரணமாக [மெக்ஸிகோ நகரில்] குவாடிலோப் கன்னியைப் பார்ப்பதற்கு இரத்தங் கொட்ட கொட்ட முழங்காலில் நடப்பது போன்ற காரியங்களில் ஈடுபடுகின்றனர், ஒரு செய்தித்தாள் பின்வருமாறு குறிப்பிட்டது: அவள் இருப்பதும் பக்தியுடன் வணங்கப்படுவதும் மற்றவர்களுடைய பார்வையில் கிறிஸ்தவம் மற்றும் புறமதத்தின் கலப்பாகக் காணப்பட்டாலும் மெக்ஸிகோவில் வாழும் கத்தோலிக்கருக்கு அந்தக் கன்னி மிக முக்கியமான உருவாக அமைகிறாள்.”
அவருடைய தயவை நீங்கள் எப்படிப் பெறலாம்
14. தம்முடைய பக்கமாக இருப்பதாய் உரிமைபாராட்டிக் கொண்டு, ஆனால் “பிதாவை ஆவியோடும் உண்மையோடும் தொழுதுகொள்ளாதவர்களை” தாம் எப்படி நோக்குகிறார் என்பதை யெகோவா தேவன் தெளிவாக தெரியப்படுத்துகிறார். (யோவான் 4:23) ஒரு தேசமோ, ஒரு மதத் தொகுதியோ அல்லது ஓர் ஆளோ கடவுள் வெளிப்படுத்தியிருக்கிற தராதரங்களின்படி நடக்காவிட்டால் எந்தவித மத செயல்களும் அர்த்தமற்றவையாயிருக்கிறது. உதாரணமாக, பூர்வ இல்ரவேலில் மத ஆசரிப்புகளும் பலிகளும் உண்மை வணக்கத்தின் ஒரு பாகமாக இருந்தது. (லேவியராகமம், அதிகாரங்கள் 1-7, 23) இருந்தாலும் ஏசாயா கடவுளுடைய நோக்கு நிலையை வெளிப்படுத்துகிறான்—அந்த ஆசரிப்புகளை ஆசரித்த விசுவாசமற்றுப்போன யூதர்களில் அவர் பிரியம் கொள்ளவில்லை. கடவுள் சொன்னார்: நீங்கள் உங்கள் கைகளை விரித்தாலும், என் கண்களை உங்களைவிட்டு மறைக்கிறேன்; நீங்கள் மிகுதியாய் ஜெபம் பண்ணினாலும் கேளேன்.” இது இன்று உண்மையாயிருக்கிறது. மத ஆசாரங்கள் அல்லது மனப்பாடம் செய்யப்பட்ட ஜெபங்களுக்கு மாறாக இருதயத்திலிருந்து வரும் ஜெபங்களையும் சரியான செயல்களையுமே கடவுள் விரும்புகிறார்.
15. அதை நாம் அறிந்திருப்பது நம் நம்பிக்கைக்கு ஆதாரத்தை அளிக்கிறது. மனிதர்கள் கடவுளுடைய தயவைப் பெற்றுக்கொள்ள முடியும். எப்படி? ஏசாயா பின்வருமாறு கூறுகிறான்: “உங்களைக் கழுவிச் சுத்திகரியுங்கள்; உங்கள் கிரியைகளின் பொல்லாப்பை என் கண்களுக்கு மறைவாக அகற்றிவிட்டு, தீமை செய்தலை விட்டு ஓயுங்கள். நன்மைசெய்யப் படியுங்கள். நியாயத்தைத் தேடுங்கள்.” இந்த இடத்தில் தான் ஏசாயா கடவுளுடைய கட்டளையை அறிமுகப்படுத்துகிறான்: “ஜனங்களே, வாருங்கள், நமக்கிடையே காரியங்கள் சரிசெய்து கொள்ளலாம்.” எனவே யெகோவா தேவன் இங்கு சமமானவர்கள் உட்கார்ந்து ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் பேசும் ஒரு பேச்சு வார்த்தைக்காக அழைப்பு கொடுக்கவில்லை. எது சரி, எது சீரானது என்பது கடவுளுக்குத் தெரியும். அவருடைய தீர்ப்பு: என்ன மாற்றங்கள் தேவையோ, அவற்றை மனிதர்கள் செய்திருக்க வேண்டும், அவர்கள் தாமே அவருடைய நீதியான, நேர்மையான தராதரங்களுக்குத் தங்களை அழைத்துக் கொண்டிருக்க வேண்டும். இன்றும் அது உண்மையாயிருக்கிறது. மாற்றம் கூடிய காரியம், இது அவருடைய தயவைப் பெற்றுக்கொள்ளச் செய்கிறது. மிக மோசமான வாழ்க்கைப் போக்கைக் கொண்டிருக்கும் ஒருவரும் மாறலாம். ஏசாயா பின்வருமாறு எழுதினான்: “உங்கள் பாவங்கள் சிவேரென்றிருந்தாலும் உறைந்த மழையைப்போல் வெண்மையாகும்.”—ஏசாயா 1:16-18.
16. என்றபோதிலும், அப்படிப்பட்ட ஆலோசனையைக் கவனிக்கும்போது அது மற்றவர்களுக்குத்தான் பொருந்துகிறது என்று நினைக்கும் ஒரு சுபாவம் உண்டு ஏசாயாவின் நாட்களில் அநேகர் அப்படி நினைத்தனர் என்பது தெளிவாய்த் தெரிகிறது. உண்மையில் ஒவ்வொரு தனிப்பட்ட நபரும் தன்னைத்தானே சோதித்துப் பார்க்கவேண்டும். ஒரு கிறிஸ்தவன் வினைமையான பாவத்தை செய்த குற்றமுள்ளவனாயிருபானானால், அது பொய் சொல்லுதல், ஏமாற்றுதல், ஒழுக்கக்கேடான நடத்தை, அல்லது மற்ற வகையான வினைமையான தவறுகளாயிருந்தால், மனந்திரும்புதலும், மனந்திருப்புதலுக்கேதுவான கிரியைகளும் முக்கியம். (அப்போஸ்தலர் 26:20) போற்றுதற்குரிய விதத்தில் சிலர் ‘தங்களுக்கும் யெகோவாவுக்கும் இடையே காரியங்களைச் சரிசெய்திருக்கின்றனர்.’ உதாரணமாக ஏப்ரல் 15 1985 ஆங்கில காவற்கோபுரம் வெளியாட்களுக்கு இரகசியமாக இருக்கக்கூடிய, ஆனால் கடவுள் கவனித்திருக்கக்கூடிய தவறுகளைச் சரிசெய்துகொள்ளவேண்டிய காரியத்தைச் சிந்தித்து. (மத்தேயு 6:6; பிலிப்பியர் 4:13) கவனத்திற்கு கொள்ளவேண்டிய மூன்று அம்சங்கள் குறிப்பிடப்பட்டன: இரகசியமாக இரத்தமேற்றிக்கொள்ளுதல், சுயபுணர்ச்சி மற்றும் மதுபான துர்பிரயோகம். இவை சம்பந்தமான குறிப்புகளை அதில் வாசித்து சிந்தித்த அநேக வாசகர்கள் போற்றுதல் கடிதங்களை எழுதினார்கள்; இந்தத் தவறுகளைத் தாங்கள் செய்துவந்தார்கள் என்பதையும் ஆனால் தாங்கள் மனந்திரும்பும் மாற்றத்தைச் செய்யவும் தூண்டப்பட்டிருக்கிறார்கள் என்பதை ஒப்புக்கொண்டார்கள்.
17. உண்மைதான், இந்தக் காரியங்களைக் குறித்து சிந்திக்கும் அநேக கிறிஸ்தவர்கள் வினைமையான நடத்தைக் குறித்து குற்றமுள்ளவர்களாயில்லை. என்றபோதிலும், ஏசாயாவின் செய்தி இருதயப்பூர்வமான பரிசோதனையைச் செய்ய நம்மைத் தூண்டிட வேண்டும். கடவுளோடு சில காரியங்களைச் சரிசெய்து கொள்ளவேண்டிய அவசியம் இருக்கிறதா? ஜெபத்தைக் குறித்து ஒருவர் பின்வருமாறு கேட்டுக்கொள்ளலாம்: ‘என்னுடைய ஜெபங்கள் இருதயப் பூர்வமானதாயிருக்கின்றனவா? என்னால் முடிந்தளவுக்கு என்னுடைய செயல்கள் என் ஜெபங்களுக்கு இசைவாக இருக்கின்றனவா? அப்படிப்பட்ட பரிசோதனையை செய்த சிலர் முன்னேறுவதற்கு வாய்ப்பு இருந்திருப்பதைக் கண்டிருக்கின்றனர். அவர்கள் கடவுளுடைய சித்தத்தின்பேரில் கூடுதலான அறிவுக்காக ஜெபித்துக் கொண்டிருந்தனர், என்றபோதிலும் அவர்கள் பைபிளையும் கிறிஸ்தவ பிரசுரங்களையும் படிப்பதற்கு குறைந்த நேரமே செலவழித்தனர். மற்றவர்கள் ஊழியத்தில் அதிக பங்கைக் கொண்டிருப்பதற்காக ஜெபித்திருக்கின்றனர், ஆனால் தங்களுடைய வேலை நேரத்தைக் குறைத்துக் கொள்வதன் மூலம் தங்களுடைய வருமானத்தில் எந்தக் குறைவையும் அனுமதிக்காத ஒரு வாழ்க்கை பாணியைத் தொடர்ந்திருக்கின்றனர் அல்லது நீங்கள் செய்யும் சீஷராக்கும் வேலையைக் கடவுள் ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஜெபித்தீர்களா? மற்றும் இன்னொருவரோடு ஓர் ஒழுங்கான பைபிள் படிப்பை நடத்துவதற்கு நேரத்தை ஒதுக்குவதற்கு மனமுள்ளவர்களாக இருக்கிறீர்களா? உங்களுடைய ஜெபத்திற்கு செவிகொடுக்க வேண்டுமென்று உண்மையிலேயே விரும்புகிறீர்கள் என்பதைக் காண்பிக்கும்.
18. நாம் ஒவ்வொருவரும் நம்முடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களையும் நம்முடைய சிருஷ்டிகராகிய நம் கடவுளோடு ‘சரி செய்துகொள்வது’ தகுதியானதே. இந்தக் கருத்தில் ஏசாயா எப்படி விவாதித்தான் என்பதைத் கவனியுங்கள்: “மாடு தன் எஜமானையும், கழுதை தன் ஆண்டவனின் முன்னனையையும் அறியும்; இஸ்ரவேலோ அறிவில்லாமலும், என் ஜனம் உணர்வில்லாமலும் இருக்கிறது” (ஏசாயா 1:3) ஒரு மாட்டை அல்லது கழுதையை விட குறைந்த அறிவை அல்லது போற்றுதலையுடையவர்களாக குறிப்பிடப்பட நம்மில் ஒருவரும் விரும்பமாட்டோம். என்றாலும் நமக்கு உயிரளித்திருப்பவரைப் பற்றியும் அவருடைய தகுதிகளைப் பற்றியும் கற்றுக்கொள்ள வேண்டியதில்லை என்றும் அவற்றின்படி வாழ முயற்சி செய்யவேண்டியதில்லை என்றும் உணருவோமானால், அந்த விளக்கம் நமக்குப் பொருந்துவதாயிருக்கும்.
19. தன்னுடைய மக்கள் நம்பிக்கை கொள்வதற்கான காரணத்தை ஏசாயா அவர்களுக்கு அளித்தான், யெகோவாவுக்கு முன்பாக அவர்களுடைய நிலை நிற்கை சுத்தமான ஒன்றாக மாற்றப்படக்கூடும் என்று அவன் சொன்னான். இரத்தாம்பரச் சிவப்புத் துணியைப் போலிருந்தாலும் பஞ்சைப்போலவும் எர்மோன் மலையுச்சியின் மீதான உறைந்த மழை அல்லது பனிப்போர்வையைப் போலவும் வெண்மையாக மாறும். (ஏசாயா 1:18; சங்கீதம் 51:7; தானியேல் 7:9; வெளிப்படுத்துதல் 19:8) பெரும்பான்மையினர் பிரதிபலிக்காவிட்டாலும், இதனால் தேசம் பட்டயத்துக்கும் சிறைபிடிக்கப்படுவதற்கும் ஒப்படைக்கப்பட்டபோதிலும், உண்மையுள்ள மீதியானோர் திரும்பமுடிந்தது. அதுபோன்று நாமும் ஒருவேளை சபையில் அன்பான ‘நியாயாதிபதிகளாகவும் ஆலோசகர்களாகவும் ‘சேவிக்கும் மனச்சாட்சியுடன் பணியாற்றும் கண்காணிகளின் உதவியுடன் யெகோவாவின் தயவைப்பெற்றிட முடியும். (ஏசாயா 1:20, 24-27; 1 பேதுரு 5:2-4; கலாத்தியர் 6:1, 2) எனவே நீங்கள் கடவுளுக்கும் உங்களுக்குமிடைய காரியங்களை சரிசெய்து கொள்ளலாம் என்பதில் சந்தேகம் வேண்டாம், அல்லது கடவுளுடைய தயவு உங்களுக்கு ஏற்கெனவே இருக்கிறது என்றால், அவரோடு உங்களுடைய விசுவாசத்தை பலப்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு முயற்சியும் பலனுள்ளதாய் நிரூபிக்கும். (W87 10/15)
[அடிக்குறிப்பு]
a டாக்டர் E. H. ப்ளம்ப்டர் பின்வருமாறு விளக்குகிறார்: “[கிங் ஜேம்ஸ் மொழிபெயர்ப்பில் பயன்படுத்தப்பட்டிருக்கும் வார்த்தைகள் சரிசமமான ஆட்களிடையே கலந்தாலோசிப்பைக் குறிப்பதாயிருக்கிறது. எபிரேயு வார்த்தைகள் ஒரு நீதிபதி குற்றவாளிக்குச் சொல்வது போன்று அதிகாரப்பூர்வமான முடிவைத் தெரிவிக்கும் ஒருவரின் தொனியைக் குறிப்பிடுவதாயிருக்கிறது.
விமர்சன குறிப்புகள்
◻ ‘வந்து கடவுளோடு காரியங்களைச் சரிசெய்து கொள்ளுங்கள்’ என்ற கட்டளையின் அர்த்தம் என்ன?
◻ ஏசாயாவின் காலம் எப்படி நம்முடைய காலத்துக்கு ஒப்பாயிருக்கிறது?
◻ கடவுளுடைய தயவைப் பெறுவதற்கு தனிப்பட்ட ஆட்களின் பாகத்தில் என்ன தேவைப்படுகிறது என்று ஏசாயா காண்பித்தான்?
◻ வினைமையான பாவங்களைத் தவிர, வேறு எந்த அம்சங்களிலும் நமக்கும் கடவுளுக்குமிடையே காரியங்களைச் சரிசெய்து கொள்ள வேண்டியதாய் இருக்கலாம்?
[கேள்விகள்]
1, 2. (எ) ஒருவர் உங்களிடம், “வழக்காடுவோம் வாருங்கள்,” என்று சொன்னால் நீங்கள் எதைக் கற்பனை செய்யக்கூடும்? (பி) நாம் கடவுளோடு விட்டுக்கொடுக்கும் நிலையிலிருக்க எதிர்பார்ப்பது ஏன் கூடாத காரியம்?
3. ஏசாயா 1:18-ல் “வழக்காடுவோம்” என்று மொழிபெயர்க்கப்பட்டிருக்கும் எபிரேயு வார்த்தையின் சரியான கருத்து என்ன?
4-6. ஏசாயா என்பவன் யார்? அவன் எப்பொழுது ஒரு தீர்க்கதரிசியாக பணியாற்றினான்?
7. ஏசாயாவின் தீர்க்கதரிசனத்தில் நாம் ஏன் அக்கறை காண்பிக்கவேண்டும்?
8. ஏசாயா புத்தகத்தில் என்ன அடங்கியிருக்கிறது? அது என்ன நடையில் எழுதப்பட்டது?
9. ஏசாயா அதிகாரம் 1 எழுதப்பட்ட காலம் மற்றும் சூழ்நிலை குறித்து நமக்கு என்ன தெரியும்?
10. அரசனாகிய ஆகாஸின் ஆட்சி காலத்திலே யூதாவின் விசேஷமாக தலைவர்களிடையே என்ன நிலைமை நிலவியது?
11. ஏசாயா 1:29, 30-ஐ நாம் எப்படிப் புரிந்துகொள்ள வேண்டும்?
12, 13. நம்முடைய காலத்திற்கும் ஏசாயாவின் காலத்திற்குமிடைய ஒத்திருக்கும் என்ன காரியங்களைக் காணலாம்?
14. தம்மைத் தொழுதுகொள்வதாக உரிமைபாராட்டும் எல்லாரையும் அவர் ஏற்றுக் கொள்வதில்லை என்பதை யெகோவா எப்படித் தெளிவுபடுத்தினார்?
15. ஏசாயா 1:18 ஏன் நமக்கு நம்பிக்கைக்குக் காரணத்தை அளிக்கிறது? “வாருங்கள் நமக்கிடையே காரியங்களை சரிசெய்து கொள்ளலாம்” என்ற வார்த்தைகளின் அர்த்தம் என்ன?
16. தவறான செயல்கள் குறித்த பைபிள் அடிப்படையான புத்திமதிக்குச் சிலர் எவ்வாறு பிரதிபலிக்கின்றனர்?
17. நாம் வினைமையான தவறுகளைச் செய்யாதவர்களாயிருப்பினும் ஏசாயா 1:18 நமக்கு எப்படிப் பொருந்தவும் உதவவும் கூடும்?
18. நமக்கும் கடவுளுக்குமிடையே காரியங்களைச் சரிசெய்துகொள்ளுதலுக்கு நாம் ஏன் கவனம் செலுத்த வேண்டும்?
19. கடவுளோடு காரியங்களைச் சரிசெய்துகொள்கிறவர்களுக்கு ஏசாயா என்ன எதிர்பார்ப்புகளை முன்வைக்கிறான்? இது நமக்கு எதை அர்த்தப்படுத்துகிறது?
[பக்கம் 10-ன் படம்]
மேல் யோர்தான் பள்ளத்தாக்கின் குறுக்கே கலிலேயா மலைகளை நோக்கியவாறு அமைத்திருக்கும் எர்மோன் மலைப் பனிச் சரிவுகள்
[படத்திற்கான நன்றி]
Photos, pages 10, 31: Pictorial Archive (Near Eastern History) Est.
[பக்கம் 13-ன் படம்]
‘கழுதை தன் ஆண்டவனின் முன்னணையை அறியும்’ என்றான் ஏசாயா, இதில் நமக்கு என்ன பாடம் அடங்கியிருக்கிறது?