-
பரிசுத்த இரகசியத்தை வெளிப்படுத்துதல்வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
2. (அ) என்ன பட்டப்பெயரோடு இயேசு தம்மை அறிமுகப்படுத்துகிறார்? (ஆ) “நான் முந்தினவரும் கடைசியானவரும்” என்று யெகோவா சொல்லும்போது அது எதை அர்த்தப்படுத்துகிறது? (இ) “முதலானவரும் கடைசியானவரும்” என்ற இயேசுவின் பட்டப்பெயர் எதற்கு கவனத்தை அழைக்கிறது?
2 இருந்தபோதிலும், நமக்கிருக்கும் அச்சம் ஆரோக்கியமற்ற பயத்தைக் கொண்டிருப்பதற்கு இடங்கொடுக்க வேண்டியதில்லை. அப்போஸ்தலன் அடுத்து விவரிக்கிறவிதமாக, யோவானிடமிருந்த பயத்தை நீக்க இயேசு உறுதியளித்தார். “அப்பொழுது அவர் தம்முடைய வலது கரத்தை என்மேல் வைத்து, என்னை நோக்கி: பயப்படாதே, நான் முதலானவரும் கடைசியானவரும், உயிருள்ளவருமாயிருக்கிறேன்.” (வெளிப்படுத்துதல் 1:17ஆ, NW) ஏசாயா 44:6-ல், யெகோவா, அவர் ஒருவரே சர்வவல்லமையுள்ள கடவுளாக வகிக்கிற ஸ்தானத்தைக் குறித்து இவ்வாறு சரியாகவே விவரித்து சொல்கிறார்: “நான் முந்தினவரும், நான் பிந்தினவருந்தானே; என்னைத் தவிர தேவன் இல்லை.”a இயேசு தம்மை “முதலானவரும் கடைசியானவரும்” என்ற பட்டப்பெயரைக்கொண்டு அறிமுகப்படுத்தும்போது, மகத்தான சிருஷ்டிகராகிய யெகோவாவுக்கு சரிசமமானவராக இருப்பதாக உரிமைபாராட்டுகிறதில்லை. கடவுளால் அவருக்கு தகுதியாகவே அளிக்கப்பட்ட பட்டப்பெயரை அவர் பயன்படுத்துகிறார். ஏசாயாவில், மெய் கடவுளாக, தம்முடைய ஒப்பற்ற நிலையைப் பற்றி யெகோவா சொல்லிக்கொண்டிருந்தார். அவரே நித்தியத்துக்கும் கடவுள், நிச்சயமாகவே, அவரைத் தவிர வேறே கடவுள் இல்லை. (1 தீமோத்தேயு 1:17) வெளிப்படுத்துதலில், அவருடைய நிகரற்ற உயிர்த்தெழுதலிடமாக கவனத்தைத் திருப்புகிறவராக, தமக்குக் கொடுக்கப்பட்ட பட்டப்பெயரைக் குறித்து இயேசு பேசிக்கொண்டிருக்கிறார்.
-
-
பரிசுத்த இரகசியத்தை வெளிப்படுத்துதல்வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
-
-
a ஏசாயா 44:6-ல் மூல எபிரெயுவில் “முதலானவரும்” “கடைசியானவரும்” என்ற வார்த்தைகளுடன் திட்டமான சுட்டிடைச் சொல் இல்லை, ஆனால் வெளிப்படுத்துதல் 1:17-ல் இயேசு தம்மைப் பற்றி விவரித்த இடத்தில் மூல கிரேக்கில் திட்டமான சுட்டிடைச்சொல் காணப்படுகிறது. எனவே, வெளிப்படுத்துதல் 1:17-ல் இலக்கணரீதியில் ஒரு பட்டப்பெயரைக் குறிப்பிடுகிறது, என்றாலும் ஏசாயா 44:6 யெகோவாவின் தேவத்துவத்தை விவரிக்கிறது.
-