வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கு தயாரிக்க தேவையான தகவல்கள்
பிப்ரவரி 6-12
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(ஏசாயா 50:1) யெகோவா சொல்வது இதுதான்: “உங்கள் தாயை அனுப்பியபோது நான் விவாகரத்து பத்திரம் கொடுத்தா அனுப்பினேன்? ஏதோ கடனை அடைப்பதற்காகவா உங்களை விற்றுப்போட்டேன்? நீங்கள் பாவம் செய்ததால்தானே உங்கள் தாயை அனுப்பிவிட்டேன்? நீங்கள் குற்றம் செய்ததால்தானே உங்களை விற்றுப்போட்டேன்?”
it -1-E 643 ¶4-5
விவாகரத்து
அடையாள அர்த்தத்தில் விவாகரத்து. பைபிள், திருமண பந்தத்தைப் பற்றி சொல்லும்போது சில இடங்களில் அதை அடையாள அர்த்தத்தில் சொல்கிறது. (ஏசா 54:1, 5, 6; 62:1-6) விவாகரத்து செய்வது... மனைவியை திருப்பி அனுப்புவதுகூட சில இடங்களில் அடையாள அர்த்தத்தில் சொல்லப்படுகிறது.—எரே 3:8.
கி.மு. 607-ல் எருசலேம் அழிக்கப்பட்டது. யூத ராஜ்யம் கவிழ்க்கப்பட்டது. அங்கிருந்த எல்லாரும் பாபிலோனுக்கு அடிமைகளாக கொண்டுபோகப்பட்டார்கள். அப்படி அடிமைகளாக கொண்டுபோகப்படவிருந்த யூதர்களிடம் யெகோவா முன்பே இப்படிக் கேட்டார்: “உங்கள் தாயை அனுப்பியபோது நான் விவாகரத்து பத்திரம் கொடுத்தா அனுப்பினேன்?” (ஏசா 50:1) இங்கு அவர்களுடைய ‘தாய்’ என்று சொல்வது அந்த முழு தேசத்தையும் குறிக்கிறது. அந்த தேசத்துக்கு ஏன் இந்த நிலைமை வந்தது? யெகோவா அவர்களோடு செய்திருந்த ஒப்பந்தத்தை முறித்ததாலோ அல்லது அடையாள அர்த்தத்தில் அவர்களை விவாகரத்து செய்ததாலோ இந்த நிலைமை அவர்களுக்கு வரவில்லை. அவர்கள் திருச்சட்ட ஒப்பந்தத்தை மீறியதால்தான் இந்த நிலைமை வந்தது. ஆனால், சில இஸ்ரவேலர்கள் மனந்திரும்பினார்கள். ஒரு கணவரைப் போல, யெகோவா முன்பு காட்டி அதே அன்பை திரும்பவும் காட்ட வேண்டும் என்று வேண்டிக்கொண்டார்கள். யெகோவா அவருடைய பெயருக்காக அந்த மக்களை மன்னித்து மறுபடியும் அவர்களை எருசலேமில் வாழ வைத்தார். அவர் ஏற்கெனவே சொல்லியிருந்தபடி, எருசலேம் அழிக்கப்பட்டு 70 வருஷங்களுக்கு பிறகு, அதாவது கி.மு. 537-ல் அவர்கள் சொந்த நாட்டுக்கே திரும்பி வந்தார்கள்.—சங் 137:1-9.