-
‘பிரபுக்களை நம்பாதேயுங்கள்’ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
9 நூற்றாண்டுகள் செல்கின்றன. ‘காலம் நிறைவேறும்போது,’ ஷைலோ என்றழைக்கப்படும் கர்த்தராகிய இயேசு கிறிஸ்து உலக அரங்கில் தோன்றுகிறார். (கலாத்தியர் 4:5; எபிரெயர் 1:1, 2) தம் சார்பில் யூதர்களிடம் பேச, தமது மிக நெருங்கிய நண்பனையே யெகோவா அனுப்புகிறார். தம்முடைய ஜனங்கள் மீது அவர் எந்தளவு அன்பு வைத்திருக்கிறார் என்பதை இது காட்டுகிறது. யெகோவாவின் சார்பாக பேசுவதில் இயேசு எப்படிப்பட்டவராக திகழ்கிறார்? தலைசிறந்தவராக திகழ்கிறார்! கடவுள் சார்பாக பேசும் பிரதிநிதியாக மாத்திரமல்ல, மிகச் சிறந்த போதகராகவும் விளங்குகிறார். இதில் ஆச்சரியப்பட ஏதுமே இல்லை. ஏனென்றால் அவருடைய போதகர் வேறு யாருமல்ல, மகத்தான போதகராகிய யெகோவா தேவனே. (யோவான் 5:30; 6:45; 7:15, 16, 46; 8:26) ஏசாயா மூலம் இயேசு தீர்க்கதரிசனமாக உரைக்கும் வார்த்தைகள் இதை உறுதிப்படுத்துகின்றன: “இளைப்படைந்தவனுக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை சொல்ல நான் அறியும்படிக்கு, கர்த்தராகிய ஆண்டவர் [“யெகோவா,” NW] எனக்குக் கல்விமானின் நாவைத் தந்தருளினார்; காலைதோறும் என்னை எழுப்புகிறார்; கற்றுக்கொள்ளுகிறவர்களைப்போல, நான் கேட்கும்படி என் செவியைக் கவனிக்கச் செய்கிறார்.”—ஏசாயா 50:4.b
10 இயேசு பூமிக்கு வருவதற்கு முன், பரலோகத்தில் தம் தகப்பனோடு வேலை செய்துவந்தார். தகப்பனுக்கும் மகனுக்கும் இடையிலான பாசப்பிணைப்பை நீதிமொழிகள் 8:30 (NW) கவிதை நடையில் விவரிக்கிறது: “நான் [யெகோவா] அருகே தேர்ச்சிபெற்ற வேலையாளாக இருந்தேன், . . . எப்பொழுதும் அவர் முன்பாக மகிழ்ந்திருந்தேன்.” தம் தகப்பனின் போதகத்தைக் கேட்டது இயேசுவுக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. ‘மனுஷ குமாரர்கள்’ மீது தம் தகப்பன் காட்டிய அதே அன்பை அவரும் காட்டினார். (நீதிமொழிகள் 8:31, NW) இயேசு பூமிக்கு வருகையில், ‘இளைப்படைந்தோருக்கு சமயத்திற்கேற்ற வார்த்தை’ பேசுகிறார். ஏசாயா தீர்க்கதரிசனத்திலிருந்து ஆறுதல் அளிக்கும் ஒரு பகுதியை வாசித்து தம் ஊழியத்தை ஆரம்பிக்கிறார்: “கர்த்தருடைய [“யெகோவாவுடைய,” NW] ஆவி என் மேலிருக்கிறது; தரித்திரருக்குச் சுவிசேஷத்தைப் பிரசங்கிக்க அவர் என்னை அபிஷேகம் பண்ணினாரே. . . . நொறுங்குண்டவர்களை விடுதலையாக்கவும் . . . என்னை அனுப்பினார்.” (லூக்கா 4:18; ஏசாயா 61:1; தி.மொ.) இது ஏழைகளுக்கு நற்செய்தி! சோர்வுற்றோருக்கு புத்துணர்ச்சி! அந்த அறிவிப்பை ஜனங்கள் கேட்டு எவ்வளவு மனம் குளிர வேண்டும்! சிலர் உண்மையிலேயே களிகூருகின்றனர்; ஆனால் எல்லாருமல்ல. இயேசு, யெகோவாவால் போதிக்கப்பட்டவர் என்ற சான்றுகளை அநேகர் ஏற்க மறுக்கின்றனர்.
11 இருந்தாலும், சிலர் அவரிடம் அதிகம் கற்றுக்கொள்ள ஆவலாய் இருக்கின்றனர். இயேசுவின் இதயங்கனிந்த இந்த அழைப்பை அவர்கள் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்கின்றனர்: “வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன். நான் சாந்தமும் மனத்தாழ்மையுமாய் இருக்கிறேன்; என் நுகத்தை உங்கள்மேல் ஏற்றுக்கொண்டு, என்னிடத்தில் கற்றுக்கொள்ளுங்கள்; அப்பொழுது, உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் [“புத்துணர்ச்சி,” NW] கிடைக்கும்.” (மத்தேயு 11:28, 29) இயேசுவிடம் நெருங்கி வருபவர்களில் சிலர் அவருடைய அப்போஸ்தலர்கள் ஆகிறார்கள். இயேசுவின் நுகத்தை ஏற்றுக்கொள்வதென்பது கடின உழைப்பை உட்படுத்தும் என்பதை அவர்கள் அறிவர். மற்ற காரியங்களோடு, பூமியின் கடைமுனை மட்டும் ராஜ்யத்தின் நற்செய்தியை பிரசங்கிப்பதையும் அது குறிக்கிறது. (மத்தேயு 24:14) இந்த பிரசங்கிப்பு வேலையில் அப்போஸ்தலர்களும் மற்ற சீஷர்களும் ஈடுபடுகையில், அது தங்களுக்கு உண்மையிலேயே புத்துணர்ச்சி அளிப்பதை உணருகின்றனர். இன்றும், உண்மையுள்ள கிறிஸ்தவர்களால் அதே வேலை செய்யப்பட்டு வருகிறது. இயேசுவின் சீஷர்கள் அனுபவித்ததுபோன்ற சந்தோஷத்தையே இவர்களும் பெறுகின்றனர்.
-
-
‘பிரபுக்களை நம்பாதேயுங்கள்’ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
b நான்காம் வசனத்திலிருந்து இந்த அதிகாரத்தின் கடைசி வசனம் வரை, எழுத்தாளர் தன்னைக் குறித்து சொல்வதுபோல இருக்கிறது. இந்த வசனங்களில் சொல்லப்பட்டுள்ள சோதனைகளில் சிலவற்றை ஒருவேளை ஏசாயா அனுபவித்திருக்கலாம். என்றாலும், முழுமையான அர்த்தத்தில், இந்த தீர்க்கதரிசனம் இயேசு கிறிஸ்துவில் நிறைவேறுகிறது.
-