உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • “யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
    • 17, 18. (அ) தரிசனத்தைக் கண்ட ஏசாயா ஆரம்பத்தில் எப்படி உணர்ந்தார்? (ஆ) யெகோவா எவ்வாறு ஒரு சேராபீனை பயன்படுத்தி ஏசாயாவுக்கு ஆறுதல் அளித்தார், சேராபீனுடைய செயலின் முக்கியத்துவம் என்ன?

      17 என்றாலும், கடவுளுடன் ஒப்பிட நாம் தாழ்ந்தவர்கள் என்ற உணர்ச்சியை அவருடைய பரிசுத்தத்தன்மை ஏற்படுத்த வேண்டுமா? ஆம், கண்டிப்பாக ஏற்படுத்த வேண்டும். நாம் யெகோவாவைவிட நிச்சயமாகவே தாழ்ந்தவர்கள், இப்படி சொல்வதும் உண்மையை மிக மிக குறைத்துக் கூறுவதாகத்தான் இருக்கும். இதை அறிவது அவரிடமிருந்து நம்மை அந்நியப்படுத்த வேண்டுமா? யெகோவாவின் பரிசுத்தத்தைப் பற்றி சேராபீன்கள் அறிவித்ததைக் கேட்ட ஏசாயாவின் உணர்ச்சிகளை சிந்தித்துப் பாருங்கள்: “அப்போது நான், ‘ஐயோ, என் கதி அவ்வளவுதான்! நான் செத்தவனைப் போல ஆகிவிட்டேன். ஏனென்றால், ராஜாவாகிய பரலோகப் படைகளின் யெகோவாவைப் பார்த்துவிட்டேன். அதுமட்டுமல்ல, என் உதடுகள் அசுத்தமாக இருக்கின்றன. அசுத்தமான உதடுகள் உள்ள ஜனங்களோடு நான் வாழ்கிறேன்’ என்று சொன்னேன்.” (ஏசாயா 6:5) யெகோவாவின் எல்லையற்ற பரிசுத்தம், தான் எந்தளவு பாவியாகவும் அபூரணமாகவும் இருந்தார் என்பதை ஏசாயாவுக்கு நினைவூட்டின. அதனால் விசுவாசமுள்ள ஏசாயா ஆரம்பத்தில் மனமொடிந்து போனார். ஆனால் யெகோவா அவரை அப்படியே விட்டுவிடவில்லை.

      18 சேராபீன்களில் ஒருவர் உடனடியாக தீர்க்கதரிசிக்கு ஆறுதல் அளித்தார். எப்படி? அவர் பலிபீடத்திற்கு பறந்து சென்று, அதிலிருந்து ஒரு நெருப்புத்தழலை எடுத்து, ஏசாயாவின் உதடுகளை தொட்டார். இது ஆறுதலளிப்பதற்கு பதிலாக வேதனையளித்திருக்குமே என நாம் யோசிக்கலாம். ஆனால், இது அடையாள அர்த்தம் பொதிந்த ஒரு தரிசனம் என்பதை ஞாபகம் வையுங்கள். விசுவாசமுள்ள யூதரான ஏசாயா, பாவங்களுக்கு நிவாரணமாக ஆலயத்தின் பலிபீடத்தில் தினமும் பலிகள் செலுத்தப்பட்டு வந்ததை நன்கு அறிந்திருந்தார். மேலும், அவர் உண்மையில் “அசுத்தமான உதடுகள் உள்ள” அபூரணராக இருந்தாலும் கடவுளுக்கு முன் சுத்தமான நிலைநிற்கையை பெற முடியும் என்பதை அந்த சேராபீன் அவருக்கு அன்பாக நினைப்பூட்டினார்.a அபூரணமான, பாவமுள்ள மனிதனாகிய அவரை சம்பந்தப்பட்ட விதத்திலாவது பரிசுத்தமானவனாக பார்ப்பதற்கு யெகோவா மனமுள்ளவராக இருந்தார்.—ஏசாயா 6:6, 7.

  • “யெகோவா பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர், பரிசுத்தமானவர்”
    யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள்
    • a “அசுத்தமான உதடுகள்” என்ற பதம் பொருத்தமானது, ஏனெனில் பேச்சை அல்லது மொழியை குறிப்பதற்காக பைபிள் அடிக்கடி உதடுகளை அடையாளப்பூர்வமாக பயன்படுத்துகிறது. அபூரண மனிதர்கள் அனைவர் விஷயத்திலும், பெருமளவு பாவங்கள் அவர்கள் பேச்சுத்திறனை பயன்படுத்தும் விதத்தையே சார்ந்திருக்கின்றன.—நீதிமொழிகள் 10:19; யாக்கோபு 3:2, 6.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்