பைபிளில் இருக்கும் புதையல்கள் | ஏசாயா 52-57
கிறிஸ்து நமக்காக பாடுகள் பட்டார்
“ஜனங்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார். . . . நாமோ கடவுள்தான் அவருக்குத் தண்டனையையும் [வியாதியையும்], அடியையும், வேதனையையும் கொடுத்ததாக நினைத்தோம்”
இயேசுவை மக்கள் வெறுத்தார்கள். அவர் கடவுளை பழித்து பேசினதாக சொன்னார்கள். பயங்கரமான வியாதியைக் கொடுத்து தண்டிப்பது போல கடவுள் அவரை தண்டித்தார் என்றும் சிலர் நினைத்தார்கள்
“அவரை வேதனைகளால் நொறுக்க யெகோவா முடிவுசெய்தார். . . . அவர் மூலமாக யெகோவாவின் விருப்பம் நிறைவேறும்”
இயேசு மரிப்பதை பார்த்து யெகோவாவுக்கு நிச்சயம் வேதனையாக இருந்திருக்கும். ஆனால், இயேசு கடைசிவரை உண்மையாக இருந்ததை பார்த்து யெகோவா ரொம்பவே சந்தோஷப்பட்டார். மனிதர்களால் கடவுளுக்கு உண்மையாக இருக்க முடியாதென்று சாத்தான் சொன்னான். அது பொய் என்று இயேசுவின் மரணம் நிரூபித்தது. அதோடு, மனந்திரும்பும் மக்கள் இயேசுவின் மரணத்தின் மூலமாக நிறைய ஆசீர்வாதங்களை அனுபவிக்கிறார்கள். இந்த விதங்களில், ‘யெகோவாவின் விருப்பத்தை’ இயேசுவின் மரணம் நிறைவேற்றியது