-
மெய் வணக்கம் உலகளாவ விஸ்தரிக்கிறதுஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
13 இருள் சூழ்ந்த இந்த உலகில் யெகோவாவின் “ஸ்திரீ” ஒளி வீசத் துவங்கியதிலிருந்து உலகம் முழுவதிலும் ஏற்பட்டுள்ள அதிகரிப்பை ஏசாயா 60:4-9 வரையுள்ள வசனங்கள் எவ்வளவு தத்ரூபமாக வர்ணிக்கின்றன! முதலாவதாக, பரலோக சீயோனின் ‘குமாரரும்’ ‘குமாரத்திகளுமாகிய’ அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்கள் கூட்டிச் சேர்க்கப்பட்டனர். 1931-ல், இவர்கள் தங்களை யெகோவாவின் சாட்சிகளாக பகிரங்கமாக அடையாளப்படுத்திக் கொண்டனர். பிறகு, ‘ஜாதியாரின் செல்வமும்’ ‘சமுத்திரத்தின் ஐஸ்வரியமுமான’ மேகம் போன்ற திரளான சாந்தகுணமுள்ளவர்கள், கிறிஸ்துவின் சகோதரர்களில் மீதியானோரை சேர்ந்துகொள்ள விரைந்தனர்.b இன்று உலகின் நான்கு மூலைகளிலிருந்தும் பலவிதமான வாழ்க்கைப் பின்னணிகளிலிருந்தும் வரும் யெகோவாவின் இந்த ஊழியர்கள் அனைவரும் தேவனுடைய இஸ்ரவேலோடு ஒன்று சேர்கின்றனர். சர்வவல்ல தேவனாகிய யெகோவாவை துதிப்பதிலும் பிரபஞ்சத்திலேயே அவருடைய பெயரே மிகவும் மகத்தானது என்று புகழ்ந்து போற்றுவதிலும் அவர்களோடு சேர்ந்துகொள்கின்றனர்.
-
-
மெய் வணக்கம் உலகளாவ விஸ்தரிக்கிறதுஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
b 1930-க்கு முன்னரே, பூமிக்குரிய நம்பிக்கையுடைய சுறுசுறுப்பும் வைராக்கியமும் மிக்க கிறிஸ்தவர்கள் தேவனுடைய இஸ்ரவேலோடு கூட்டுறவு கொண்டிருந்தனர். என்றாலும், 1930-களிலேயே அவர்களுடைய எண்ணிக்கை கிடுகிடுவென உயர ஆரம்பித்தது.
-