உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸ் கடவுளை மகிமைப்படுத்துகிறது
    காவற்கோபுரம்—1990 | ஏப்ரல் 1
    • 1, 2. (எ) தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம் கடவுள் பூமியைக் குறித்து முன்னறிவித்தது என்ன? (பி) எதிர்காலத்தில் ஓர் ஆயிரம் ஆண்டுகள் நோக்கிட, நாம் பார்ப்பது என்ன?

      யெகோவா இந்தப் பூமியைத் தம்முடைய பாதத்தின்கீழ் ஒரு கோளமாக, அடையாளப்பூர்வமான தம்முடைய பாதபடியாகப் படைத்தார். தம்முடைய தீர்க்கதரிசியாகிய ஏசாயாவின் மூலம், கடவுள் தம்முடைய ‘பாதஸ்தானத்தை மகிமைப்படுத்துவதாக’ முன்னறிவித்தார். (ஏசாயா 60:13) பரிசுத்த ஆவியினால் ஏவப்பட்ட பைபிளின் துணைகொண்டு, நாம் ஒரு சக்திவாய்ந்த தொலைநோக்காடியைக் கொண்டு பார்ப்பது போல், மனிதனின் எதிர்காலத்தில் ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பார்க்க முடியும். என்னே ஒரு கவர்ச்சியான காட்சி நம்முடைய கண்களை வரவேற்கிறது! இந்தப் பூமி முழுவதுமே சர்வலோகத்திலும் மிகச் சிறந்த தோட்டக் கலைஞரால் உண்டாக்கப்பட்ட குறையற்ற எழில் கொண்டு ஒளிருகிறது. மனிதவர்க்கத்துக்குப் பரதீஸ் பூமிமுழுவதுமாகத் திரும்ப நிலைநாட்டப்பட்டிருக்கும்!

  • திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸ் கடவுளை மகிமைப்படுத்துகிறது
    காவற்கோபுரம்—1990 | ஏப்ரல் 1
    • 3, 4. (எ) வானமும் பூமியும் என்ன விதத்தில் ஒன்றுக்கொன்று இணையாக இருக்கும்? (பி) பூமியில் பரதீஸ் திரும்ப நிலைநாட்டப்படுகையில் தேவ தூதர்கள் எவ்விதம் பிரதிபலிப்பார்கள்?

      3 ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு, கடவுள் தம்முடைய ஆட்சிப்பகுதியைக் குறித்து தாம் தெரிந்துகொண்ட மக்களிடம் பின்வரும் வார்த்தைகளைக் கூறினார்: “வானம் எனக்குச் சிங்காசனம், பூமி எனக்குப் பாதபடி.” (ஏசாயா 66:1) அவருடைய “பாதபடியின்,” பரதீஸ் பூமியின் மகிமைதானே, காணக்கூடாத உயரத்தில் அமைந்திருக்கும் அவருடைய சிங்காசனத்தின் மகிமைக்குப் பொருத்தமாக இருக்க வேண்டும்.

  • திரும்ப நிலைநாட்டப்பட்ட பரதீஸ் கடவுளை மகிமைப்படுத்துகிறது
    காவற்கோபுரம்—1990 | ஏப்ரல் 1
    • 6. அர்மகெதோனுக்குப் பின்பு பூமி எவ்விதம் நிரப்பப்படும்?

      6 அர்மகெதோனைத் தப்பிப்பிழைப்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருப்பார்கள் என்றாலும், இந்தப் பூமி முழுவதையும் அவர்கள் பிள்ளைப்பேற்றால் மாத்திரமே நிரப்புகிறவர்களாக இருக்க மாட்டார்கள். ஞாபகார்த்த கல்லறையிலுள்ளவர்களும் கிறிஸ்துவின் மீட்கும் கிரய பலியின் நன்மைகளுக்குள் வருகிறவர்களுமாகிய ஆட்களை மீண்டும் ஜீவனுக்குக் கொண்டுவருவதன் மூலமும் யெகோவா ‘தம்முடைய பாதபடியை மகிமைப்படுத்துவார்.’ இவர்கள் நம்முடைய பூமிக் கோளத்தை ஓர் அருமையான அழகிய பரதீஸாக மாற்றும் அந்த மகிழ்ச்சியுள்ள வேலையில் பங்கு கொள்வதற்கான வாய்ப்பை உடையவர்களாயிருப்பார்கள்.—அப்போஸ்தலர் 24:15.

தமிழ் பிரசுரங்கள் (1971-2026)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2026 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்