மகிழ்ச்சி நிரம்பியிருங்கள்
“சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.”—அப்போஸ்தலர் 13:52.
1. (எ) மகிழ்ச்சி என்ன வகையான கனி? (பி) என்ன மகிழ்ச்சிதரும் ஏற்பாட்டுக்காகக் கடவுளுக்கு மகிமை செலுத்தவேண்டும்?
மகிழ்ச்சி! இந்தக் கிறிஸ்தவ பண்பு, ஆவியின் கனிகளைப்பற்றி பவுல் விவரிப்பதில் அன்புக்கு மாத்திரமே இரண்டாவதாக வரிசைப்படுத்தியிருக்கிறது. (கலாத்தியர் 5:22-25) எது மகிழ்ச்சி தருகிறது? 1,900-த்துக்கு மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னால் தாழ்மையுள்ள மேய்ப்பர்களுக்குக் கடவுளுடைய தூதன் அறிவித்த பின்வரும் இந்த நற்செய்தியேயாகும்: “இதோ, எல்லா ஜனத்துக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கிறேன். இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்குத் தாவீதின் ஊரிலே பிறந்திருக்கிறார்.” அப்பொழுது தேவதூதர் சேனை தோன்றி அந்தத் தேவதூதனோடு பின்வருமாறு கூறி மகிழ்ச்சியுடன் கடவுளைத் துதிப்பதில் சேர்ந்துகொண்டார்கள்: “மேலே உன்னதங்களில் கடவுளுக்கு மகிமை, பூமியின்மேல் நற்பிரிய மனிதருக்குள் சமாதானம்.” (NW)—லூக்கா 2:10-14.
2, 3. (எ) கடவுள் தம்முடைய முதற்பேறான குமாரனை மனிதவர்க்கத்தின் மீட்பராகும்படி அனுப்பினது ஏன் பொருத்தமாயிருந்தது? (பி) இயேசு பூமியிலிருக்கையில் வேறு என்ன வழிகளில் கடவுளுடைய நோக்கங்களைச் சேவித்தார்?
2 மனிதரிடம் யெகோவாவின் நற்பிரியம் கர்த்தராகிய கிறிஸ்துவின்மூலம் இரட்சிப்பை ஏற்பாடுசெய்வதில் வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. கடவுளுடைய இந்த முதற்பேறான குமாரன் உண்மையான ஞானத்தின் ஆளுருவகமாயிருக்கிறார் மேலும் சிருஷ்டிப்பின் சமயத்தின்போது தம்முடைய பிதாவைக் குறித்துப் பின்வருமாறு சொன்னதாக விவரிக்கப்பட்டிருக்கிறார்: “அப்பொழுது நான் அவரருகில் உறுதியும் நிச்சயமுமான வேலையாளனானேன், அப்பொழுது நான் நாள்தோறும் அகமகிழ்ச்சியால் நிரம்பினவனானேன், ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்முன் களிகூர்ந்தேன்; அவருடைய பூமியின் பலன்தரும் நிலப்பரப்பில் களிகூர்ந்தேன், ஆம் என் அகமகிழ்ச்சியின் நிறைவு மனிதக்குமாரருடன் இருந்தது.”—நீதிமொழிகள் 8:30, 31, ரோதர்ஹாம்.
3 ஆகையால், மனிதக் குமாரரில் இத்தகைய அகமகிழ்ச்சியைக் கண்டவராகிய, இந்தக் குமாரனை, மனிதவர்க்கத்தின் மீட்பராயிருக்கும்படி யெகோவா அனுப்பினது பொருத்தமாயிருந்தது. இது கடவுளுக்கு எவ்வாறு மகிமையைக் கொண்டுவரும்? நீதியுள்ள மற்றும் சமாதானத்தை-நேசிக்கும் மனிதரால் பூமியை நிரப்பும்படியான தம்முடைய மகத்தான நோக்கத்தை அவர் நிறைவேற்றுவதற்கு இது வழியைத் திறக்கும். (ஆதியாகமம் 1:28) மேலும், பூமியில் இருக்கையில், இந்தக் குமாரனாகிய இயேசு, உச்ச அளவில் கடுமையான சோதனையின்கீழ் பரிபூரண மனிதன், ஈடற்றப் பேரரசரான கர்த்தராகிய யெகோவாவுக்கு உண்மைத்தவறாமல் கீழ்ப்படிய முடியும் எனக் காட்டி, இவ்வாறு தம்முடைய சிருஷ்டிப்பின்மீது தம்முடைய பிதாவின் நேர்மையுள்ள அரசாட்சியை சரியென முழுமையாய் நிரூபிப்பார். (எபிரெயர் 4:15; 5:8, 9) மேலும் இயேசுவின் உத்தமத்தைக்-காத்தப் போக்கு அவருடைய அடிச்சுவடுகளைக் கவனமாய்ப் பின்பற்றும்படி உண்மையான கிறிஸ்தவர்கள் எல்லாருக்கும் மாதிரியை வைத்தது.—1 பேதுரு 2:21.
4. இயேசு பொறுமையோடு சகித்தது என்ன பெரும் மகிழ்ச்சியில் பலன்தருகிறது, இது நம்மை எவ்வாறு ஊக்குவிக்கவேண்டும்?
4 இவ்வாறு தம்முடைய பிதாவின் சித்தத்தைச் செய்வதிலும், அதனால் அப்போஸ்தலன் பவுல் எபிரெயர் 12:1, 2-ல் குறித்துக் காட்டுகிறபடி, இன்னும் மேலான மகிழ்ச்சியை எதிர்பார்ப்பதிலும் இயேசு மிக மேம்பட்ட மகிழ்ச்சியைக் கண்டார்: “விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்; அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் [வாதனைக்குரிய கழுமரத்தை, NW] சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” இந்த மகிழ்ச்சி என்ன? இது, தம்முடைய பிதாவின் பெயரைப் பரிசுத்தப்படுத்துவதிலும் மனிதவர்க்கத்தை மரணத்திலிருந்து மீட்பதிலும் இயேசுவுக்கு இருக்கும் இந்த மகிழ்ச்சிமட்டுமல்லாமல், கீழ்ப்படிதலுள்ள மனிதரை பரதீஸ் பூமியில் முடிவற்ற வாழ்க்கைக்குத் திரும்பக் கொண்டுவருபவராய் அரசராகவும் பிரதான ஆசாரியராகவும் ஆட்சி செய்வதிலும் அவருக்கு இருக்கும் மகிழ்ச்சியாகும்.—மத்தேயு 6:9; 20:28; எபிரெயர் 7:23-26.
5. இயேசுவின் “சகோதரர்,” யாவர், இவர்கள் என்ன தனித்தன்மைவாய்ந்த மகிழ்ச்சியில் பங்குகொள்கின்றனர்?
5 ஆம், மனிதவர்க்கத்துக்கு சேவை செய்வதில் கடவுளுடைய குமாரன் எப்பொழுதும் மகிழ்ச்சியைக் கண்டார். மேலும் தம்முடைய “சகோதரர்” என அவர் அழைப்போரும் அவர்களுடைய மரணத்தின்போது பரலோகத்துக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறவர்களுமான உத்தமத்தைக்-காக்கும் அந்தத் தொகுதி மனிதரைத் தேர்ந்தெடுப்பதில் தம்முடைய பிதாவுடன் சேவை செய்வதிலும் அவர் மகிழ்ச்சியடைந்திருக்கிறார். இவர்கள் இயேசுவுடன் தனித்தன்மைவாய்ந்த மகிழ்ச்சிக்குள் பிரவேசிக்கின்றனர். இவர்கள், “பாக்கியவானும் [சந்தோஷமுள்ளவனும், NW] பரிசுத்தவானும்” என்று தீர்க்கப்படுகிறார்கள். “இவர்கள் தேவனுக்கும் கிறிஸ்துவுக்கும் முன்பாக ஆசாரியராயிருந்து, அவரோடேகூட ஆயிரம் வருஷம் அரசாளுவார்கள்.”—எபிரெயர் 2:11; வெளிப்படுத்துதல் 14:1, 4; 20:6.
6. (எ) அரசர் தம்முடைய “மற்றச் செம்மறியாடுகளுக்கு” என்ன மகிழ்ச்சியுள்ள அழைப்பைத் தருகிறார்? (பி) இந்தச் செம்மறியாடுகளில் பலர் என்ன சிலாக்கியங்களை இன்று அனுபவித்து மகிழ்கின்றனர்?
6 மேலும், ஆட்சிசெய்யும் அரசர் தம்முடைய அங்கீகாரத்துக்குரிய வலதுபக்கத்தில் பிரித்து வைக்கும், “மற்றச் செம்மறியாடுகளின்” ஒரு திரள் கூட்டத்தார் அவருடைய பின்வரும் அழைப்பைப் பெறுகின்றனர்: “வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.” (யோவான் 10:16; மத்தேயு 25:34) எத்தகைய மகிழ்ச்சிக்குரிய சிலாக்கியம்! ராஜ்யத்தின் பூமிக்குரிய ஆட்சி எல்லையைச் சுதந்தரிக்கிற இவர்களில் பலர், யெகோவா பின்வருமாறு முன்னறிவித்தபடி, இப்பொழுதேயும் அபிஷேகஞ்செய்யப்பட்டவர்களோடுகூட பொறுப்புள்ள வேலை நியமிப்புகளை ஏற்கின்றனர்: “புறஜாதியார் வந்து நின்று உங்கள் மந்தைகளை மேய்ப்பார்கள், அந்நியர் உங்கள் வயல்களிலும் உங்கள் திராட்சத் தோட்டங்களிலும் வேலைசெய்வார்கள். நீங்களோ யெகோவாவின் ஆசாரியரெனப்படுவீர்கள்; நமது கடவுளின் பணிவிடைக்காரரெனப் பேர்பெறுவீர்கள்.” இவர்களெல்லாரும் கடவுளுடைய தீர்க்கதரிசியுடன் பின்வருமாறு சொல்வதில் சேர்ந்துகொள்கிறார்கள்: “யெகோவாவுக்குள் மிகவும் மகிழுகிறேன், என் கடவுளுக்குள் என் ஆத்துமா களிகூருகிறது, . . . அவர் இரட்சணியம் என்னும் வஸ்திரத்தை எனக்கு உடுத்தி”வித்தார்.—ஏசாயா 61:5, 6, 10, தி.மொ.
7. 1914 முதற்கொண்டுள்ள இந்த “நாள்” ஏன் மிக விசேஷித்தது?
7 நாம் இப்பொழுது மிகவும் விசேஷித்த ஒரு நாளில் வாழ்கிறோம். 1914 முதற்கொண்டு பரலோக அரசராகக் கிறிஸ்து ஆட்சி செய்யும் நாளாக இருந்திருக்கிறது, சங்கீதம் 118:24, 25-ல் (தி.மொ.) பின்வருமாறு விவரித்துள்ளது: “இது யெகோவா உண்டுபண்ணின நாள், இதிலே களிகூர்ந்து மகிழ்வோம். யெகோவாவே, ரட்சித்தருளும்; யெகோவாவே, சித்திபெறச் செய்தருளும்.” இது, யெகோவா பாபிலோனிய மதத்தின்பேரில் மரணத்தீர்ப்பை நிறைவேற்றி 1,44,000 சகோதரர்களாலாகிய கிறிஸ்துவின் மணவாட்டியை அவர்களுடைய பரலோக அரசருடன் ஒன்றிணைக்கையில், உச்சநிலையை எட்டும் அந்த நாள். கடவுளுடைய ஜனங்கள் எல்லாரும் இதன்பேரில் “சந்தோஷப்பட்டுக் களிகூரு”வார்கள். மேலும் தங்கள் மேசியானிய அரசர் தம்முடைய உண்மைத்தவறாத ஜனத்தைத் தம்முடைய நீதியுள்ள புதிய உலகத்துக்குள் காப்பாற்றிவைப்பதற்கு அர்மகெதோனில் போரிடுகையிலும் அவர்கள் மகிழ்ந்துகளிகூருவார்கள். (வெளிப்படுத்துதல் 19:1-7, 11-16) இந்த மகிழ்ச்சியுள்ள நம்பிக்கையைத் தம்முடைய ஜனங்கள் அறிவிக்கையில் யெகோவா சித்திபெறச் செய்கிறாரா? பின்வரும் இந்த அறிக்கை விளக்கும்.
உலகமுழுமையான பெருக்கம்
8. (எ) பரிசுத்த ஆவியுடன்கூடிய மகிழ்ச்சி எவ்வாறு யெகோவாவின் சாட்சிகளின் 1991-ன் வருடாந்தர புத்தகத்திலுள்ள ஊழிய அறிக்கையில் பிரதிபலித்திருக்கிறது? (பி) இந்த விவர அறிவிப்பின் சிறப்புவாய்ந்தக் குறிப்புகள் சில யாவை?
8 யெகோவாவின் தற்கால சாட்சிகள் “பரிசுத்த ஆவியின் பலத்தினாலே நம்பிக்கை பெருகி”யுள்ளோராய் இருக்கின்றனர். (ரோமர் 15:13) இது யெகோவாவின் சாட்சிகளின் 1991-ன் வருடாந்தர புத்தகத்திலுள்ள விவர அட்டவணையில் பிரதிபலிக்கிறது, அதில் 1990-ல் உலகமுழுமையிலும் நிறைவேற்றப்பட்ட ராஜ்ய ஊழியத்தின் அறிவிப்பு நுட்பவிவரமாய் குறிப்பிடப்பட்டுள்ளது. வெளி-ஊழியத்தில் சுறுசுறுப்பாய்ச் செயல்பட்டவர்களின் ஒரு புதிய உச்சநிலை 40,17,213 எனக் காண்பதில் நாம் எவ்வளவாய் மகிழ்ந்துகளிகூருகிறோம்! இது, உலக முழுவதிலும் 212 நாடுகளில் செம்மறியாடுகளைக் கூட்டிச்சேர்ப்பது விரைவாக முன்னேறுகையில், கடந்த பத்து ஆண்டுகளின்போது 77 சதவீத அதிகரிப்பைக் குறிக்கிறது. 15 ஆண்டுகளுக்குப் பின் முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கை எல்லாக் காலத்துக்குமான உச்சநிலையாக—3,01,518-ஐ மறுபடியும் எட்டினது! பல மாநாடுகளில், முக்கியமாய் கிழக்கு ஐரோப்பாவிலிருந்து வந்த சாட்சிகள் ஆஜராயிருந்தவற்றில், முழுக்காட்டப்பட்டவர்களின் எண்ணிக்கைகள் தனிச் சிறப்பு வாய்ந்த முறையில் உயர்ந்தவையாயிருந்தன. இவர்களுக்குள் பல இளைஞர் இருந்தனர், இது, முதிர்வயதான மக்களோடு மதம் ஒழிந்துபோகுமென்ற பொதுவுடைமை கோட்பாட்டாளரின் உரிமைபாராட்டலைப் பொய்யென நிரூபித்தது.
9. (எ) இளம் வயதில் பெற்றோர் அளிக்கும் பயிற்றுவிப்பு என்ன மகிழ்ச்சியுள்ள பலனைக் கொண்டுவருகிறது? (பி) உள்ளூரிலுள்ள அல்லது மற்ற எந்த அனுபவங்கள் இதை மெய்ப்பித்துக் காட்டுகின்றன?
9 திரளான இளைஞர்கள் சங்கீதம் 32:11-லுள்ள பின்வரும் அழைப்புக்கு இணங்கிநடக்கின்றனர்: “நீதிமான்களே, யெகோவாவில் மகிழ்ந்து களிகூருங்கள்; நேர்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்த முழக்கமிடுங்கள்.” (தி.மொ.) பெற்றோர் பலர், தங்கள் சிறுவர்களைக் “குழந்தைப்பருவத்திலிருந்து” பயிற்றுவிக்கும்படியான அறிவுரையைப் பொருத்திப் பயன்படுத்துகிறார்களெனத் தெரிகிறது. (1 தீமோத்தேயு 3:15, NW) இளம் வயதினருக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள புத்தகங்களையும் காசட் டேப்புகளையும் நல்லமுறையில் பயன்படுத்துகின்றனர். இந்தச் சிறுவர்கள் பள்ளிக்குச் செல்லத்தொடங்குகையில், அவர்கள் சீக்கிரத்தில் நல்ல சாட்சி கொடுக்கின்றனர், உதாரணமாக, பின்வருமாறு அறிவித்த எட்டு வயது ஜப்பானிய சிறுமி அவ்வாறு செய்கிறாள்: “வேனிற்கால விடுமுறைக்குப் பின், நான் என் ஆசிரியையிடம் அணுகி: ‘விடுமுறையின்போது நீங்கள் உங்கள் தகப்பனின் கல்லறைக்குச் சென்றீர்களா?’ என்று அவர்களைக் கேட்டேன். அவர்கள்: ‘ஆம், என் தகப்பன் மிகக் கனிவுள்ளவராயிருந்தார், அவருடைய கல்லறையை நான் ஒவ்வொரு ஆண்டும் சென்று பார்ப்பேன்’ எனப் பதிலுரைத்தார்கள். நான் சொன்னேன்: ‘நீங்கள் பைபிளைப் படித்து கடவுளுடைய போதகங்களைப் பின்பற்றினால், நீங்கள் உங்கள் அன்புள்ள தகப்பனை பூமிக்குரிய ஒரு பரதீஸில் பார்க்க முடியும்.” பின்பு நான் அவர்களுக்கு என்னுடைய பைபிள் கதை புத்தகம் ஒன்றைக் கொடுத்தேன். இப்பொழுது எங்கள் ஆசிரியை ஒவ்வொரு வாரமும் பகலுணவுக்குரிய நேரத்தில் இந்தப் புத்தகத்திலிருந்து ஓர் அதிகாரத்தை முழு வகுப்புக்கும் வாசிக்கிறார்கள்.”
10. இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகம் என்ன நல்ல நோக்கத்தைச் சேவிக்கிறது, சில உதாரணங்கள் யாவை?
10 பருவ வயதினரான இளைஞர்கள், இளைஞர் கேட்கும் கேள்விகள்—பலன்தரும் விடைகள் என்ற புத்தகத்தை, சொந்தப் படிப்புக்கும் மற்ற இளைஞருக்குச் சாட்சிகொடுப்பதிலும் நன்றாய்ப் பயன்படுத்தியுள்ளனர். பெற்றோருங்கூட இந்தப் புத்தகத்தை மதித்துப் போற்றியிருக்கின்றனர். ஸ்விட்ஸர்லாந்தில் ஒரு சகோதரி, துணைப்பயனியராகப் பெயர் பதிவுசெய்தாள். தன் பிள்ளையின் பள்ளித்தோழர்களுடைய பெற்றோரைப் போய்ச் சந்திக்கத் தீர்மானித்தாள். இது பல பெற்றோருடன் கலந்துபேசும் நல்ல உரையாடல்களுக்கு வழிதிறந்தது, 20 புத்தகங்களும் (பெரும்பாலும் இளைஞர் கேட்கும் கேள்விகள்) 27 பத்திரிகைகளும் அவர்களிடம் விடப்பட்டன. டிரினிதாதில் ஒரு பள்ளிச் சிறுமி இந்தப் புத்தகத்தைத் தன் ஆசிரியைக்குக் கொடுத்தபோது அவளுடைய தாய் அதைப் பின்தொடர்ந்து மறுசந்திப்பு செய்து அங்கு வேலைசெய்யும் 36 ஆட்களுக்குள் 25 பிரதிகளை அளித்தாள். இவள் அடுத்த மாதமும் தொடர்ந்து தான் நேரில் அறிந்துள்ள பெற்றோருக்குத் தனிப்பட்ட கவனத்தை செலுத்தி, மற்றும் 92 புத்தகங்களை அளித்து புதிய பைபிள் படிப்புகளைத் தொடங்கினாள். கொரியாவில் நடுத்தரப்பள்ளி ஆசிரியர் ஒருவர் இளைஞர் கேட்கும் கேள்விகள் புத்தகத்தை, “என் தேர்ச்சி மதிப்பெண்களை நான் முன்னேற்றுவிப்பது எவ்வாறு?” மற்றும் “என் ஆசிரியரோடு நான் ஒத்துப்போவது எவ்வாறு?” போன்ற இத்தகைய பேச்சுப் பொருள்களின்பேரில் சுருக்கமான பிரசங்கங்கள் கொடுப்பதற்குப் பயன்படுத்தி, பின்பு புத்தகத்தை அளித்தார். மாணாக்கர்கள் 39 புத்தகங்களை ஏற்றப்பின், சில பெற்றோர் முறையிடத் தொடங்கினர். ஆனால் தலைமை ஆசிரியர் ஒரு பிரதியைச் சோதித்துப் பார்த்து, அதை “அதிசயமானது,” என அறிவித்து, தன் சொந்த மகளுக்காக ஒரு பிரதியைக் கொண்டுவரும்படி கேட்டார்.
மிக மேன்மையான கல்விப்பயிற்சி
11, 12. உவாட்ச் டவர் சொஸையிட்டியின் பிரசுரங்கள் மிக மேன்மையான கல்விப்பயிற்சியை அளிக்கின்றன என்ற உண்மைக்கு சில சாட்சியங்கள் யாவை?
11 நம்முடைய பத்திரிகைகளின் கல்விபயிற்றுவிப்புக்குரிய மதிப்பையும் பலர் மதித்துப் போற்றியுள்ளனர், உதாரணமாக, அமெரிக்க ஐக்கிய மாகாண பள்ளி ஒன்று அதன் வகுப்புகளில் பயன்படுத்த (வெடி போதை துர்ப்பழக்கத்தை வெளிப்படுத்தும்) ஜூலை 22, 1990, அவேக்! வெளியீட்டின் 1,200 பிரதிகள் வேண்டுமென கேட்டது. மேலும், பள்ளியில், யெகோவாவின் சாட்சிகளின் பிள்ளைகளுடைய முன்மாதிரியான நடத்தை நல்ல எண்ணப்பதிவைத் தொடர்ந்து உண்டாக்கிவருகிறது. தாய்லாந்தில் கூச்சல்மிகுந்த ஒரு வகுப்பறையில், ஆசிரியை 11-வயது ராச்சாவை வகுப்புக்கு முன்னிலையில் வரும்படி அழைத்து அவனுடைய நடத்தையின்பேரில் அவனை மெச்சிக்கொண்டு, பின்வருமாறு கூறினாள்: “நீங்களெல்லாரும் ஏன் அவனை முன்மாதிரியாக ஏற்று நடக்கக்கூடாது? தன் படிப்புகளில் அவன் ஊக்கமாய் உழைக்கிறான் நல்லமுறையில் நடந்துகொள்கிறான்.” பின்பு அவள் மேலும் தொடர்ந்து: “உங்கள் நடத்தையை முன்னேற்றுவிக்க நீங்களும் ராச்சாவைப்போல் யெகோவாவின் சாட்சிகளாகவேண்டுமென்று நான் நினைக்கிறேன்,” என்று கூறினாள்.—நீதிமொழிகள் 1:8; 23:22, 23-ஐ ஒத்துப் பாருங்கள்.
12 டொமினிக்கன் குடியரசில் இருக்கும் ஓர் இளம் சகோதரி பின்வருமாறு எழுதுகிறாள்: “நான் நான்கு வயதாகத்தானே இருக்கையில், வாசிக்கவும் எழுதவும் நான் கற்ற, ஓர் ஆயத்தப்பள்ளி மத வகுப்பிலிருந்து தேர்ச்சிபெறவிருந்தேன். என் ஆசிரியையாகவிருந்த கன்னிமடப் பெண்ணுக்கு, பரிசாக நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் என்ற புத்தகத்தைப் பின்வரும் செய்தியுடன் கொடுத்தேன்: ‘நீங்கள் எனக்கு வாசிக்கவும் எழுதவும் கற்றுக்கொடுத்ததற்காக நான் மிகவும் நன்றியுடனிருக்கிறேன். நீங்களும் என் விசுவாசத்தை புரிந்துகொண்டு இந்தப் பூமி பரதீஸாகையில் அதில் என்றென்றும் வாழும் என் நம்பிக்கையை உடையவராகும்படி நான் விரும்புகிறேன்.’ இதற்காக நான் பள்ளியிலிருந்து வெளியேற்றப்பட்டேன். எட்டு ஆண்டுகளுக்குப் பின் நான் மறுபடியும் இந்த ஆசிரியைச் சந்தித்தேன். அவள், மதகுருவினிடமிருந்து வந்த மிகுந்த எதிர்ப்பையும் சமாளித்து அந்தப் புத்தகத்தைத் தான் வாசித்ததைப்பற்றி விவரித்துக் கூறினாள். அவள் ஒரு சாட்சியுடன் தான் பைபிளைப் படிக்கக்கூடும்படி தான் தங்குமிடத்தைத் தலைநகருக்கு மாற்றிக்கொண்டாள். “சுத்தமான பாஷை” மாவட்ட மாநாட்டில் என்னோடு அவளும் முழுக்காட்டப்பட்டாள். தீர்க்கதரிசனம் உரைத்துள்ளபடி, ஞானம் “குழந்தைகள் வாயி”லிருந்தும் வரலாம்!—மத்தேயு 21:16; சங்கீதம் 8:1, 2.
13. பருவ வயதினரான இளைஞர்கள் சாலொமோனின் அறிவுரைக்கு எவ்வாறு செவிகொடுக்கின்றனர், இது முழு உலக ஊழிய அறிக்கையில் எவ்வாறு பிரதிபலித்திருக்கிறது?
13 சாலொமோன் பின்வரும் ஊக்கமூட்டும் அறிவுரையைக் கொடுத்தான்: “வாலிபனே! உன் இளமையிலே சந்தோஷப்படு, உன் வாலிப நாட்களிலே உன் இருதயம் உன்னைப் பூரிப்பாக்கட்டும்; உன் நெஞ்சின் வழிகளிலும், . . . நட.” (பிரசங்கி 11:9) யெகோவாவின் சாட்சிகளின் பிள்ளைகள் மிகப் பலர் இந்த வார்த்தைகளைப் பொருத்திப் பயன்படுத்தி, தங்கள் பருவ வயதில் யெகோவாவுக்கு முழுநேர ஊழியஞ்செய்யும் ஒரு வாழ்க்கைக்காக ஆயத்தஞ்செய்வதும், பள்ளியிலிருந்து தாங்கள் தேர்ச்சிப்பெற்று வெளியேறுகையில், வாழ்க்கைத்தொழில்கள் எல்லாவற்றையும் பார்க்கிலும் மிகச் சிறந்த இதை ஏற்று செய்வதையும் காண்பது மிகுந்த மனமகிழ்ச்சியைத் தருகிறது. பயனியர் அணிவரிசை விரைவாய்த் தொடர்ந்து பெருகுகிறது, இந்த ஆண்டின்போது 8,21,108 பேர்கள் அறிவிப்புசெய்திருக்கின்றனர். பெத்தேலில் சேவைசெய்யும் 11,092 சகோதரரும் சகோதரிகளும் உட்பட, இது மொத்தப் பிரஸ்தாபிகளின் எண்ணிக்கையில் 21 சதவீதத்தைக் குறிக்கிறது!
14. நம்முடைய சகோதரிகள் தங்கள் பங்கில் என்ன செய்கிறார்கள், அவர்கள் என்ன போற்றுதலுக்குத் தகுதியுள்ளவர்கள்?
14 ஐக்கிய மாகாணங்களைப்போல், பல நாடுகளில், பயனியர் பிரஸ்தாபிகள் எல்லாரிலும் ஏறக்குறைய 75 சதவீதம் சகோதரிகளாயிருப்பது கவனத்தைக் கவருகிறது, இது சங்கீதம் 68:11-லுள்ள பின்வரும் வார்த்தைகளை உறுதிப்படுத்துகிறது: “யெகோவாதாமே இந்தச் செய்தியைக் கொடுக்கிறார்; இந்த நற்செய்தியை அறிவிக்கும் பெண்கள் ஒரு பெரும் சேனை.” (NW) நம்முடைய சகோதரிகள் வெளி ஊழியத்தில் பெரும் பாகத்தைச் செய்வதால் அவர்கள் போற்றப்படவேண்டும். வீடுகளில் நடத்தும் பைபிள் படிப்புகளில் அவர்கள் திறம்பட கற்பிப்பது பல ஆட்களைச் சத்தியத்துக்கு வழிநடத்துகிறது. மேலும் சபை வேலைகள் பலவற்றைக் கொண்டுள்ள தங்கள் கணவர்களுக்குப் பற்றுறுதியுடன் ஆதரவைத் தரும் மணஞ்செய்த சகோதரிகளும் அன்புடன் போற்றப்படவேண்டும்.—நீதிமொழிகள் 31:10-12; எபேசியர் 5:21-25, 33.
பைபிள் பயிற்றுவிப்பு சிறப்பாய் முன்னேறுகிறது
15. (எ) முழு உலக அறிக்கையில் வரிசைப்படுத்தியுள்ள சில நாடுகள் வீட்டு பைபிள்-படிப்பு ஊழியத்தில் எவ்வாறு மேம்பட்டிருக்கின்றனர்? (பி) பைபிள் படிப்புகள் எவ்வளவு மிக பயனுள்ளவையாக இருக்க முடியுமெனக் காட்டும் என்ன அனுபவங்களை நீங்கள் சொல்லக்கூடும்?
15 பைபிள் பயிற்றுவிப்பு ஊழியம் சிறப்பாய் முன்னேறுகிறது, உலகமுழுவதிலும் சராசரி ஒவ்வொரு மாதமும் 36,24,091 இடங்களில் படிப்புகள் நடத்தப்படுகின்றன. நியுஜிலாந்துவிலிருந்து வந்த ஓர் அறிக்கை காட்டுகிறபடி, பைபிள் சத்தியம் ஒருவரின் சுபாவ நடத்தைப்போக்குகளை மாற்ற முடியும். 1987-ன் தொடக்கத்தில், ஒரு மனிதன் களவுசெய்ததற்காகவும் கள்ளப் பத்திரம் எழுதினதற்காகவும் 25-மாத சிறைத் தண்டனையை அனுபவித்தப் பின் ஆஸ்திரேலியாவிலிருந்து நியுஜிலாந்துக்கு நாடுகடத்தப்பட்டான். அவன் போதைப்பொருட்கள் துர்ப்பழக்கத்துக்கு அடிமையாயிருந்தான் மேலும் அவற்றை 17 ஆண்டுகளுக்குமேல் சட்டவிரோதமாய் விற்றும் வந்திருந்தான். அதற்கு அடுத்த ஆண்டில் அவனுடைய மனைவி யெகோவாவின் சாட்சிகளோடு பைபிள் படிக்கத் தொடங்கினாள், அவளுடைய அறிவு வளருகையில், அவளுடைய நடத்தையில் குறிப்பிடத்தக்க ஒரு மாற்றத்தை அவன் கவனித்தான். அவள் மேம்பட்ட மனைவியும் தாயும் ஆனாள். தன்னுடைய மனைவியின் தூண்டுதலின்பேரில், அவன் ஜூன் 1989-ல் ஒரு வட்டார மாநாட்டுக்கு வந்தான். இப்பொழுது அவன் வீட்டு பைபிள் படிப்பை ஏற்றுக்கொண்டான், அவனுடைய தோற்றத்திலும் வாழ்க்கைப்போக்கிலும் பெரிய மாற்றங்கள் காணப்படத் தொடங்கின. குடும்ப உறுப்பினர் ஏழுபேரும் கூட்டங்களுக்கு வரத் தொடங்கினார்கள். அவன், எபேசியர் 4:17-24-லுள்ள பவுலின் மிகச் சிறந்த அறிவுரையைப் பின்பற்றினவனாக ஜனவரி 1990-ல் முழுக்காட்டப்பட்டான்.
16. (எ) 1990-ன் நினைவுகூரும் விழாவின் விவர அறிக்கைகள் எவ்வாறு மகிழ்ச்சிக்குரிய காரணமாயுள்ளன? (பி) என்ன அவசரத் தேவை கவனிக்கப்படவேண்டும், உதவிசெய்ய நாம் என்ன முயற்சி செய்யவேண்டும்?
16 செவ்வாய்க்கிழமை, ஏப்ரல் 10, 1990-ல் வைக்கப்பட்ட நினைவுகூரும் கொண்டாட்டத்திற்கு வந்திருந்தவர்களின் உச்ச எண்ணிக்கையான 99,50,058, இந்த ஆண்டு அறிக்கையின் கவனிக்கவேண்டிய ஓர் அம்சமாகும். 212 நாடுகளில் 70-க்கு மேற்பட்டவை, தங்கள் பிரஸ்தாபி உச்சநிலைக்கு மூன்றுமடங்குகள் மேற்பட்ட ஆஜர் எண்ணிக்கையை அறிக்கை செய்தன! உதாரணமாக, ஒன்றுசேர மொத்தம் 62,712 பிரஸ்தாபிகளை உச்சநிலையாகக் கொண்ட ஏழு ஆப்பிரிக்க நாடுகள் தடைக்கட்டுப்பாடுகளின் மத்தியிலும் நினைவுகூரும் விழாவுக்கு வந்திருந்தவர்களின் எண்ணிக்கை 2,04,356 என அறிக்கை செய்தன. போரால் தாக்கப்பட்டுள்ள லைபீரியாவின் 1,914 பிரஸ்தாபிகள் நினைவுகூருதல் விழாவின்போது 7,811 பேர் வந்திருந்ததைக் குறித்துக் களிகூர்ந்தார்கள். 6,427 பேர்களைப் பிரஸ்தாபிகளின் உச்சநிலையாகக் கொண்ட ஹேய்ட்டி, 36,551 எண்ணிக்கையை அறிக்கைசெய்தது. மைக்ரோனேஸியாவின் சிதறியுள்ள தீவுகளிலுள்ள 886 பிரஸ்தாபிகள் 3,958 பேர்களை ஆஜராகக் கொண்டிருந்தனர். ஸ்ரீ லங்க்காவின் 1,298 பிரஸ்தாபிகள் 4,521 பேர்களை அறிக்கை செய்தனர், 73,729 பிரஸ்தாபிகளைக் கொண்ட ஸாம்பியா, 3,26,991-ஐ நினைவுகூருதல் விழாவின் ஆஜராகக் கொண்டிருந்தது, இது ஸாம்பியாவின் ஜனத்தொகையில் 25-க்கு ஒருவர் என்ற வீதமாகும். உண்மை மனமுள்ள லட்சக்கணக்கான ஆட்கள் செம்மறியாட்டுத் தொழுவத்துக்குள் கூட்டிச் சேர்க்கப்பட காத்துக்கொண்டிருக்கின்றனரென உலகமுழுமையுமான அறிக்கை மறுபடியும் வெளிப்படுத்துகிறது. ஆனால் உண்மையான மனமார்ந்தநிலை போதுமானதல்ல. நாம் நம்முடைய வீட்டு பைபிள் படிப்பு ஊழியத்தின் தன்மையை அதிகரித்து மற்றும் முன்னேற்றுவித்து, நினைவுகூரும் விழாவுக்கு வந்த இன்னும் அதிகமானபேர்களில் உறுதியான விசுவாசத்தைக் கட்டியமைப்பதற்கு உதவிசெய்ய முடியுமா? யெகோவாவைத் துதிப்பதில் அவர்கள் நம்முடைய சுறுசுறுப்பாய்ச் செயல்படும் தோழர்களாகும்படி நாம் விரும்புகிறோம். இது அவர்களுடைய உயிரைத்தானே குறிக்கிறது!—சங்கீதம் 148:12, 13; யோவான் 17:3; 1 யோவான் 2:15-17.
மகிழ்ச்சியின் நிறைவு
17. முதல் நூற்றாண்டு என்ன முன்மாதிரிகள், நம்முடைய மகிழ்ச்சியை விடாமல் காத்துவைத்துக்கொள்ளும்படியான நம் தீர்மானத்தைப் பலப்படுத்த, உதவிசெய்ய வேண்டும்?
17 நாம் எதிர்ப்படும் சோதனைகள் என்னவாயினும், நம்முடைய மகிழ்ச்சியை விடாமல் உறுதியாய்ப் பற்றியிருக்கும்படி நாம் தீர்மானித்திருப்போமாக. ஒருவேளை ஸ்தேவான் அனுபவித்ததைப்போல் அவ்வளவு கடினமான அனுபவத்தினூடே நாம் செல்லவேண்டியிராது, எனினும் அவனுடைய முன்மாதிரி நம்மைப் பலப்படுத்த முடியும். பொய்க் குற்றச்சாட்டப்படுகையிலும் அவன் தன் மகிழ்ச்சியுள்ள அமைதிநிலையைக் காத்துக்கொள்ள முடிந்தது. அவனுடைய சத்துருக்கள் “அவன் முகம் தேவதூதன் முகம்போலிருக்கக் கண்டார்கள்.” அவனுடைய கடுஞ்சோதனையின்போது கடவுள் அவனருகில் நின்றார். “பரிசுத்த ஆவியினாலே நிறைந்தவனாய்” அவன், இரத்தச் சாட்சியாக மரிக்கும் தன் மரணம் வரையிலும் தைரியமாய்ச் சாட்சிபகர்ந்தான். பவுலும் பர்னபாவும் யூதரைவிட்டு தங்கள் பிரசங்க ஊழியத்தைப் புறஜாதிகளிடம் செய்யத்தொடங்கினபோது, புறஜாதிகளும் “களிகூர்ந்து யெகோவாவின் வார்த்தையை மகிமைப்படுத்தத் தொடங்கினார்கள்.” (NW) துன்புறுத்தல் எழும்பினது. ஆனால் அது விசுவாசித்தவர்களை ஊக்கமிழக்கச் செய்யவில்லை. “சீஷர்கள் சந்தோஷத்தினாலும் பரிசுத்த ஆவியினாலும் நிரப்பப்பட்டார்கள்.” (அப்போஸ்தலர் 6:15; 7:55; 13:48-52) நம்முடைய சத்துருக்கள் நமக்கு என்ன செய்தாலும், வாழ்க்கையில் நம்முடைய அனுதின சோதனைகள் என்னவாயினும், பரிசுத்த ஆவியினாலுண்டாகும் நம் மகிழ்ச்சி சோர்வுற நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. “எதிர்பார்க்கும் நம்பிக்கையில் சந்தோஷமாயிருங்கள்; உபத்திரவத்தில் பொறுமையாயிருங்கள், ஜெபத்தில் தரித்திருங்கள்,” என்று பவுல் அறிவுரை கூறுகிறான்.—ரோமர் 12:12, தி.மொ.
18. (எ) புதிய எருசலேம் எது, கடவுளுடைய ஜனங்கள் ஏன் அவளோடு மகிழ்ந்து களிகூரவேண்டும்? (பி) “புதிய வானங்களும் ஒரு புதிய பூமியும்” (NW) எவ்வாறு மனிதவர்க்கத்தை ஆசீர்வதிக்கும்?
18 அந்த நம்பிக்கை எவ்வளவு அதிசயமானது! தம்முடைய ஜனங்கள் எல்லாருக்கும் யெகோவா பின்வருமாறு அறிவிக்கிறார்: “இதோ, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் சிருஷ்டிக்கிறேன், முந்தினவை இனி நினைக்கப்படுவதுமில்லை, மனதிலே தோன்றுவதுமில்லை, நான் சிருஷ்டிப்பவற்றிலே நீங்கள் என்றைக்கும் மகிழ்ந்து களிகூர்ந்திருங்கள்.” கர்த்தராகிய கிறிஸ்து (கடவுளுடைய பரலோக அமைப்பாகிய, “மேலான எருசலே”மின் தலைநகராக இப்பொழுது இருக்கிற) “புதிய எருசலே”முடனும் பூமியிலுள்ள புதிய உலக சங்கத்துடனும் நிரம்பிப்பொங்கும் மிகுந்த மகிழ்ச்சியை மனிதவர்க்கத்துக்குக் கொண்டுவருவார். (கலாத்தியர் 4:26) மரித்த மனிதரின் உயிர்த்தெழுதல், கீழ்ப்படிதலுள்ள எல்லாரையும் மனித பரிபூரணத்தில் நித்திய ஜீவனுக்கு உயர்த்துதல், பரதீஸான பூமியில் பயனுள்ள, ஊக்கச் சுறுசுறுப்பான நித்திய வாழ்க்கை—இது எத்தகைய சிறப்புவாய்ந்த நம்பிக்கை மற்றும் மகிழ்ந்து களிகூருவதற்குக் காரணம்! யெகோவாதாமே ‘எருசலேமில் களிகூர்ந்து, தம்முடைய ஜனத்தின்மேல் மகிழ்ச்சியைக்’ கண்டடைவதால் அவருடைய தீர்க்கதரிசி கடவுளுடைய ஜனங்களுக்கு மேலுமான அழைப்பைக் கொடுக்கிறான்: “எருசலேமை நேசிக்கிற நீங்களெல்லாரும் அவளோடேகூடச் சந்தோஷப்பட்டு, அவளைக்குறித்துக் களிகூருங்கள்; அவளோடேகூட மிகவும் மகிழுங்கள்.” (ஏசாயா 65:17-19, NW; 66:10; வெளிப்படுத்துதல் 14:1; 20:12, 13; 21:2-4) அப்போஸ்தலன் பவுலின் பின்வரும் அறிவுரைக்கு நாம் செவிகொடுக்கையில் நாம் என்றென்றும் மகிழ்ச்சியாலும் பரிசுத்த ஆவியாலும் நிரம்பியிருப்போமாக: “கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்லுகிறேன்.”—பிலிப்பியர் 4:4. (w91 1⁄1)
நம்முடைய மகிழ்ச்சியைத் தொகுத்துக் கூறுதல்:
◻ மகிழ்ச்சியுடன் சகிப்பதன் என்ன மாதிரியை இயேசு நமக்கு விட்டுச் சென்றார்?
◻ ஒப்புக்கொடுத்த இரண்டு வகுப்பாருக்கும் களிகூருவதற்கு என்ன காரணங்கள் இருக்கின்றன?
◻ இன்று இளைஞரும் முதியோரும் எவ்வாறு சத்தியத்தில் மகிழ்ந்து களிகூருகின்றனர்?
◻ 1990-ன் ஊழிய அறிக்கையைப் பார்வையிடுவது, “யெகோவாவே சித்திபெறச் செய்தருளும்” என்ற ஜெபத்துக்கு என்ன விடை இப்பொழுது கொடுக்கப்பட்டுவருவதைக் காட்டுகிறது?
◻ மகிழ்ச்சியின் நிறைவை எப்பொழுது, எவ்வாறு அடையப்பெறலாம்?
[பக்கம் 16-ன் படம்]
யெகோவாவின் தூதன், கர்த்தராகிய கிறிஸ்துவின் பிறப்பை “மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தி” என அறிவித்தான்