-
‘ஒரு புதிய பெயர்’ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
யெகோவா கொடுத்த ‘ஒரு புதிய பெயர்’
6 பூர்வ எருசலேம் பிரதிநிதித்துவம் செய்த பரலோக ‘ஸ்திரீயாகிய’ சீயோனுக்காக யெகோவா என்ன செய்யப் போகிறார்? அவர் சொல்கிறார்: “ஸ்திரீயே, தேசங்கள் உன் நீதியையும், ராஜாக்கள் அனைவரும் உன் மகிமையையும் நிச்சயம் காண்பார்கள்; யெகோவா தம் வாயால் சொல்லும் ஒரு புதிய பெயரால் நீ அழைக்கப்படுவாய்.” (ஏசாயா 62:2, NW) இஸ்ரவேல் தேசத்தார் நீதியாக செயல்படுவதை மற்ற தேசங்கள் கூர்ந்து கவனிக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது. யெகோவா எருசலேமை பயன்படுத்துகிறார் என்பதை ராஜாக்களும் ஒத்துக்கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு வருகின்றனர். அதுமட்டுமல்ல, யெகோவாவின் ராஜ்யத்தோடு ஒப்பிட, தங்கள் ஆட்சி எதுவுமே பயனற்றது என்பதையும் அவர்கள் ஒத்துக்கொள்ள வேண்டும்.—ஏசாயா 49:23.
7 சீயோனுக்கு புதிய பெயரைக் கொடுப்பதால் அதன் நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தை யெகோவா இப்போது உறுதி செய்கிறார். பொ.ச.மு. 537 முதல் சீயோனின் பூமிக்குரிய பிள்ளைகள் அனுபவித்த ஆசீர்வதிக்கப்பட்ட, மகிமையான ஸ்தானத்தை அந்தப் புதிய பெயர் குறிக்கிறது.a சீயோன் தமக்குரியது என யெகோவா ஒப்புக்கொள்வதையும் இது காட்டுகிறது. இன்று, தேவனுடைய இஸ்ரவேலர் யெகோவாவின் ஆனந்தத்திற்கு இவ்விதத்தில் காரணமாக இருப்பதைக் குறித்து மகிழ்ச்சியடைகின்றனர். அவர்களோடு சேர்ந்து வேறே ஆடுகளும் களிகூருகின்றனர்.
-
-
‘ஒரு புதிய பெயர்’ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
a பைபிள் தீர்க்கதரிசனத்தில், புதிய ஸ்தானத்தையோ அல்லது சிலாக்கியத்தையோ ‘புதிய பெயர்’ அர்த்தப்படுத்தலாம்.—வெளிப்படுத்துதல் 2:17; 3:12.
-