-
‘ஒரு புதிய பெயர்’ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
“யெகோவா உன்னில் பிரியமானார்”
9 பூமிக்குரிய பிள்ளைகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படும் பரலோக சீயோனுக்குப் புதிய பெயர் கொடுக்கப்படுவது அதன் விரும்பத்தக்க மாற்றங்களுள் ஒன்று. நாம் வாசிக்கிறோம்: “இனி நீ கைவிடப்பட்டவள் என்னப்பட மாட்டாய், இனி உன் தேசம் பாழான தேசம் என்னப்படாது; நீ, எனக்குப் பிரியமானவள் என்றும் உன் தேசம், கணவனையுடையாள் என்றும் சொல்லப்படுவாய்; யெகோவா உன்னில் பிரியமானார், உன் தேசம் கணவனைப் பெறும்.” (ஏசாயா 62:4, தி.மொ.) பூமிக்குரிய சீயோன், பொ.ச.மு. 607-ல் அழிக்கப்பட்டதிலிருந்து பாழாய்க் கிடக்கிறது. என்றாலும், அந்தத் தேசத்தை மீண்டும் நிலைநாட்டி, குடியேற்றுவதாக யெகோவா உறுதியளிக்கிறார். ஒரு சமயம் பாழாக்கப்பட்ட சீயோன் இனிமேலும் கைவிடப்பட்ட ஸ்திரீபோல் இருப்பதில்லை. இனியும் அந்தத் தேசம் பாழாய் கிடக்கும்படி விடப்படாது. பொ.ச.மு. 537-ல், எருசலேம் மீண்டும் நிலைநாட்டப்படுகிறது. அதன் முந்தைய பாழான நிலையை ஒப்பிடுகையில் அது முற்றிலும் ஒரு புதிய நிலையை குறிக்கிறது. சீயோன் “எனக்குப் பிரியமானவள்” என்றும், அதன் தேசம் “கணவனையுடையாள்” என்றும் அழைக்கப்படும் என யெகோவா அறிவிக்கிறார்.—ஏசாயா 54:1, 5, 6; 66:8; எரேமியா 23:5-8; 30:17; கலாத்தியர் 4:27-31.
10 இதே விதமான மாற்றத்தை 1919 முதல் தேவனுடைய இஸ்ரவேல் அனுபவித்தது. முதல் உலக யுத்தத்தின்போது, அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களை கடவுள் கைவிட்டுவிட்டது போலவே தோன்றியது. ஆனால் 1919-ல் கடவுளுடைய தயவிற்குள் அவர்கள் மீண்டும் வந்தனர்; அவர்களுடைய வணக்கமும் சுத்திகரிக்கப்பட்டது. இது, அவர்களுடைய போதனைகளையும் அமைப்பையும் வேலையையும் பாதித்தது. தேவனுடைய இஸ்ரவேல் அதன் செயல்படும் எல்லைக்குள் அல்லது ஆவிக்குரிய ‘தேசத்திற்குள்’ வந்தது.—ஏசாயா 66:7, 8, 20-22.
-
-
‘ஒரு புதிய பெயர்’ஏசாயா தீர்க்கதரிசனம் மனிதகுலத்திற்கு ஒளிவிளக்கு தொகுதி II
-
-
[பக்கம் 339-ன் படம்]
பரலோக சீயோனை புதிய பெயரால் யெகோவா அழைப்பார்
-